CCHEP_NLG

Gudalur Consumer Human Resources and Environment Protection Center The Nilgirs

cchep youtube vedios cchpe programmes

ஏறத்தாழ 804 முடிவுகள் (0.90 நொடிகள்) 

தேடல் முடிவுகள்



    cchep ganthi jeyanthi 2.10.2015 காந்தி ... - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 1:37
    https://www.youtube.com/watch?v=R6HMLm-F8XM
    2 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP-NLG Niligiris ... Published on Oct 2, 2015. I created this video with the YouTube Slideshow Creator ...

    கூடலூர் நுகர்வோர் ... - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 4:21
    https://www.youtube.com/watch?v=WJNyTu016YY
    16 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP-NLG Niligiris ... Published on Oct 16, 2015. I created this video with the YouTube Slideshow Creator ...

    CCHEP Nilgiris SAMRAJ SCHOOL ... - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 1:56
    www.youtube.com/watch?v=ulHxMg5OMXA
    18 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP Nilgiris SAMRAJ SCHOOL PROGRAMME FOOD DAY.CCHEP-NLG Niligiris ...

    CCHEP NLG YOUTH DEVELOPMENT ... - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 2:41
    www.youtube.com/watch?v=x-0wqtj8Ats
    20 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP NLG YOUTH DEVELOPMENT AWARENESS GDR.CCHEP-NLG Niligiris ...

    cchep nlg iodine awarness programme mss ... - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 1:41
    www.youtube.com/watch?v=hgML3Bz99e0
    20 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP-NLG Niligiris ... Published on Oct 20, 2015. I created this video with the YouTube Slideshow Creator ...

    CCHEP Inbasekar IAS GTR programme - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 2:04
    https://www.youtube.com/watch?v=1fgCs25tK24
    12 ஆக., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP Inbasekar IAS GTR programme. CCHEP-NLG Niligiris ... video with the YouTube Slideshow ...

    CCHEP FOOD EXPO ccc Pandalur 30/10/2015 3 - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 2:01
    https://www.youtube.com/watch?v=Hpqy01laOb8
    31 அக்., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    CCHEP-NLG Niligiris ... Published on Oct 31, 2015. I created this video with the YouTube Slideshow Creator ...

    cchep inbasekar IAS programme 3 - YouTube

    https://www.youtube.com//CCHEP-NLG Niligiris க்கான வீடியோ▶ 1:52
    https://www.youtube.com/watch?v=t3sjMja6hEo
    11 ஆக., 2015 - பதிவேற்றியது CCHEP-NLG Niligiris
    cchep inbasekar IAS programme 3. CCHEP-NLG Niligiris ... this video with the YouTube Slideshow ...
By CCHEP Nilgirs at December 11, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

cchep Cherangodu Eye camp 6.12.2015

By CCHEP Nilgirs at December 11, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

  1. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
  2. செயற்பாடுகள்
  3. புகார்கள் அனுப்புவது
  4. புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை
  5. ஏற்கப்படாத புகார்கள்
  6. ஆய்வு
  7. அழைப்பாணை
  8. புலன் விசாரணை
  9. மனித உரிமை நீதிமன்றங்கள்
  10. மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்
  11. பெண்கள் உரிமை
  12. பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்
  13. பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்
  14. குழந்தைகள் உரிமை
  15. குழந்தைகள் சட்டம்
  16. குழந்தைத் தொழிலாளர்கள் நிலை
  17. குழந்தை தொழிலாளர்கள்
  18. ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு
  19. குற்றச்சாட்டுகள்
  20. பிரதான பாதுகாவலர்
  21. இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள்
  22. ஐ.நா வின் மனித உரிமை விதிகள்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்

செயற்பாடுகள்

மாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சி) பிரிவு 12 ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன.  தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்
(அ) தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
(ஆ) நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
(இ) அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.
(ஈ) மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
(உ) வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
(ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
(எ) மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
(ஏ) மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள், ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
(ஐ)மனித உரிமை போன்ற துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.
(ஒ) மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.

புகார்கள் அனுப்புவது

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
  • புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
  • ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
  • தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.

புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை

புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்
  1. பெயர்
  2. இருப்பிட முகவரி
  3. புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
  4. நாள் மற்றும் நிகழ்வின் காலம்
  5. மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
  6. எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
  7. நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
  8. இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
குறிப்பு
ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.

ஏற்கப்படாத புகார்கள்

கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.
  • தெளிவற்ற புகார்.
  • தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.
  • மிகச் சிறிய அளவிலான புகார்.
  • பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
  • சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
  • பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
  • மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.
  • தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
  • ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.
  • புகார்களைப் பெறுதல்
  • புகார்களை ஆணையம் பெற்றபின் அவைகளை துறை வாரியாக பிரிக்க்ப்பட்டு அவைகளை நாட்குறிப்பில் பதிவு செய்தபின் அந்தந்த சட்டப்பிரிவுக்கு அனுப்ப படுகின்றது.
  • அவசரப் புகார்களை அந்த துறை சட்டப் பதிவாளரின் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டபின், பதிவாளர் அதற்குத் தேவயான கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
  • புகார்கள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில் இல்லாதபொழுது அவற்றை உடனடியாக மொழிபெயர்த்து ஆணையத்தின் முன் வைக்கப்படும். (தேசிய ஆணையத்தில் இம்முறை கையாளப்படுகின்றது) அவசரத்தன்மைக்கேற்ப புகார்கள் சுருக்கமான உரைகளாக ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றன (இதுவே போதுமானதாக கருதப்படுகின்ற நேரத்தில்)

ஆய்வு

ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[2] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
  • காலவரை
  • புகாரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்
  • ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்
  • தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

அழைப்பாணை

  1. புகார் மனுவில் கூற்ப்பட்டுள்ள நபருக்கு ஆணையம், அவர் குறித்து விசாரணை தேவையென்க் கருதினால் அவருக்கு அழைப்பாணைகள் (சம்மன்ஸ்) அனுப்பி ஆணையத்துக்கு வர ஆணையம் பணிக்கின்றது.
  2. புகார்தாரர் அல்லது புகார் தாரரின் அதிகாரம் பெற்ற வேறொரு நபர் (வழக்குரைஞர் தான் என்பதில்லை யார் வேண்டுமானாலும் அதிகாரம் பெற்றவராக)ஆணையத்தில் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்.
  3. வழக்கிற்கு தேவையெனக் கருதினால், சாட்சியங்கள் அல்லது மற்றெவரேனும் தேவைப்படீன் ஆணையம் அவர்களுக்கும் அழைப்பாணைகள் (சம்மன்ஸ்)அனுப்பினால் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்

புலன் விசாரணை

ஆணையமானது தனது 14 வது பிரிவின் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவறு அதனுடைய புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநில அரசின் புலனாய்வுக்கு உத்தரவிடும். இதன்படி அமைக்கப்பட் குழுவினர் ஆணையத்திற்காக புலனாய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பர். குறிப்பிட்ட காலவரைக்குள் புலனாய்வை முடிக்கவில்லையெனில் மேற்கொண்டு முடிவுகளுக்காக காரணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கவேண்டும்.

மனித உரிமை நீதிமன்றங்கள்

மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.

மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்

பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி அரசு ஆணை 1465 1466 பொதுமக்கள் (ச&ஒ) துறை, நாள் 20.12.1996 இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்-; மாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

பெண்கள் உரிமை

இந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.
ஒவ்வொரு வருடம் மார்ச் 8 அன்று பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப் படுகின்றது.

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்

  1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
  2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
  4. 1956 ஆம் அண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், இந்து விதவைகள் (கைம்பெண்கள்) மறுமணத்தை அங்கீகரிக்கின்றது.
  5. இந்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம்.
  6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
  7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம்
  • 1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம்
  • 1952 ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சட்டம்
போன்ற சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமை

குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;
  1. மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
  2. பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
  3. இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும் இயல்பான உரிமை.
  4. ஆரோக்கியமான முறையில் வளர வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறும் உரிமை.
  5. ஆளுமையை வளர்க்கக் கல்வி பயிலும் உரிமை.
  6. சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் உரிமை.
  7. தேசியத்தைப் பெறும் உரிமை.
  8. சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.

குழந்தைகள் சட்டம்

1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.
  • குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.
  • பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் நிலை

  • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.
  • உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள், செங்கற் சூலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மை, கல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.

குழந்தை தொழிலாளர்கள்

பெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு

ஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்[5] ஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
  • மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்
  • காவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

  1. சித்ரவதை
  2. சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல்.
  3. பொய் வழக்கு புனைதல்
  4. பாலியியல் கொடுமை
  5. வழக்குகளைப் பதிய மறுத்தல்
  6. எதிர் தாக்கு இறப்புக்கள் (என்கவுன்டர்ட் டெத்)
சிறைத்துறையினர் மீதும் குற்றசாட்டுகளாக சரியாக உண்வு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் (லாக் அப் டெத்), சரியான மருத்துவ சிகிச்சை தராதது போன்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
காவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.
அரசு துறைகளில் ஒப்பிடும் பொழுது காவல் துறையோடு பொதுமக்களுக்கு 10 சதமீதம் மட்டுமே தொடர்பு ஏற்படுகின்றது. ஆனால் அவற்றுக்கெதிராக (காவல்துறைக்கு) எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது

பிரதான பாதுகாவலர்

முன்னாள் தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் உண்மையில் மனிதவுரிமைகளின் பிரதான பாதுகாவலர் காவல்துறை எனலாம். சில களப் பணியாளர்களின் தவறான நடவடிக்கையால் காவல்துறை மனிதவுரிமை மீறல் புகாருக்கு உள்ளாகின்றது. பெரும்பாலன காவல்துறையினர் அதிகாரத் தோரணையோடு பணிபுரிந்தால்தான் மக்கள் மதிப்பர் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். இதனால் காவல்துறையினர் என்றாலே கடுப்புத் துறையினர்; சீறுடையணிந்த சண்டைக்காரர்; கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசுபவர்; அநாகரிகமான சடை உடை பாவணை உடையவர்; வழக்கு என்ற பேரில் கொடுமை படுத்துபவர்; ஊழலில் உழலுபவர் என்ற எண்ணம் மேலோங்குகின்றது.

இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள்

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. பேச்சுரிமை
  4. எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை
  5. ஒன்று படும் உரிமை.
  6. சங்கங்கள் அமைக்கும் உரிமை.
  7. நடமாடும் உரிமை.
  8. குடியேறி வசிக்கும் உரிமை
  9. பணி செய்யும் உரிமை.
  10. சுரண்டலுக்கெதிரான உரிமை
  11. சமய சுதந்திர உரிமைகள்
  12. கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள்.
  13. சொத்துரிமை.
  14. அரசியலமைப்பிற்குட்பட்டு பரிகாரம் பெறும் உரிமை.

ஐ.நா வின் மனித உரிமை விதிகள்

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இதை ஏற்படுத்தும் பொறுப்பு ஐ.நா அவைக்கு ஏற்பட்டது. 1945 இல் டிசம்பர் 24 இல் ஐ.நா அவை ஏற்பட்டவுடன் அமைக்கப்பட்ட குழுவின் முன் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவினரால் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விதிகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பன்னாடுகளுக்கும் பொருந்துவனவாகவும் அமைந்திருந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர் 24 அன்று ஐ.நா தினமாக ஐ.நா உருவான நாளை அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினமாக அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று 30 விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டது அதில் சில முக்கிய விதிகள்
அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சம அந்தஸ்துடனும், சமவுரிமை பெற்றுள்ளனர்.
  1. ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு பெற உரிமை உண்டு.
  2. எவரையும் அடிமைப் படுத்துதல் கூடாது.
  3. சட்டத்தின் முன் அனைவரும் சமம், வேறுபாடின்றி அனைவருக்கும் சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படும்.
  4. எவரையும் காரணமின்றி கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ, நாடு கடத்தவோ கூடாது.
  5. அவரவர் நாட்டு எல்லைக்குள் நடமாடவும் வசிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  6. ஒவ்வொரு நாட்டு குடிமகனுக்கும் குடியுரிமை உண்டு.
  7. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் ஈடுபடும் உரிமை.
  8. சொத்துரிமை
  9. சிந்திக்கும் உரிமை, செயல்படும் உரிமை மற்றும் வழிபாட்டுரிமை.
  10. கருத்து தெரிவிக்கவும், எண்ணங்களை வெளியிடவும் உரிமை.
  11. அமைதியான முறையில் கூட்டம் கூட்டவும், சங்கம் அமைக்கவும் உரிமை.
  12. அவரவர் நாட்டு அரசாங்கத்தில் பங்கெடுக்கும் உரிமை.
  13. வேலை செய்வதற்கான உரிமை.
  14. வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை.
  15. எல்லாக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்பு பெறும் உரிமை.
  16. தாய், சேய் உரிமை.
ஆதாரம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
By CCHEP Nilgirs at December 02, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...

  • காவல் நிலை ஆணைகள்
    ‬:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
  • மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
    மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
  • வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி
    வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி வாடகை ஒப்பந்த பத்திரம் --------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai ...

Contributors

  • CCHEP Nilgiris
  • CCHEP Nilgirs

Blog Archive

  • ►  2025 (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2024 (101)
    • ►  September (13)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (7)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (10)
    • ►  February (28)
    • ►  January (29)
  • ►  2023 (47)
    • ►  December (43)
    • ►  August (3)
    • ►  April (1)
  • ►  2022 (7)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2021 (49)
    • ►  December (10)
    • ►  November (9)
    • ►  October (4)
    • ►  March (20)
    • ►  February (1)
    • ►  January (5)
  • ►  2020 (29)
    • ►  December (3)
    • ►  November (4)
    • ►  October (15)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (3)
    • ►  January (1)
  • ►  2019 (71)
    • ►  June (6)
    • ►  May (17)
    • ►  April (5)
    • ►  March (6)
    • ►  February (31)
    • ►  January (6)
  • ►  2018 (135)
    • ►  December (11)
    • ►  October (5)
    • ►  September (13)
    • ►  August (9)
    • ►  July (12)
    • ►  June (14)
    • ►  May (15)
    • ►  April (16)
    • ►  March (6)
    • ►  February (21)
    • ►  January (13)
  • ►  2017 (173)
    • ►  December (17)
    • ►  November (19)
    • ►  October (33)
    • ►  September (21)
    • ►  August (37)
    • ►  July (33)
    • ►  April (7)
    • ►  February (3)
    • ►  January (3)
  • ►  2016 (30)
    • ►  December (4)
    • ►  November (12)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  March (1)
    • ►  February (4)
  • ▼  2015 (115)
    • ▼  December (3)
      • cchep youtube vedios cchpe programmes
      • cchep Cherangodu Eye camp 6.12.2015
      • தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
    • ►  November (5)
    • ►  October (16)
    • ►  September (12)
    • ►  August (5)
    • ►  July (28)
    • ►  June (11)
    • ►  May (11)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  January (22)
  • ►  2014 (65)
    • ►  December (2)
    • ►  November (2)
    • ►  October (16)
    • ►  September (6)
    • ►  August (7)
    • ►  July (1)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (8)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (12)
  • ►  2013 (173)
    • ►  December (29)
    • ►  November (7)
    • ►  October (24)
    • ►  September (5)
    • ►  August (24)
    • ►  July (11)
    • ►  May (5)
    • ►  April (6)
    • ►  March (21)
    • ►  February (14)
    • ►  January (27)
  • ►  2012 (147)
    • ►  December (18)
    • ►  November (25)
    • ►  October (9)
    • ►  September (21)
    • ►  August (25)
    • ►  July (47)
    • ►  June (2)

Labels

  • act
  • ccc
  • consumer
  • tea

Report Abuse

  • CCHEP_NLG
    நுகர்வோர் தின விழிப்புணர்வு - உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக நுகர்வோர்...
    2 months ago
  • CCONSUMER PROTECTION CENTER
    குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு - நீலகிரி மாவட்ட திசைகாட்டி, குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து கல்லூரியில் திச...
    6 years ago
  • நுகர்வோர் பாதுகாப்பு மையம்
    முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது - (முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது) ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் *அரசன்:* எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்ப...
    8 years ago
  • Ganthi
    CCHEP 2016 EYE CAMP CHERAMBADI 14.02.2016 - பந்தலூர் 2016 பிப் 15 பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. கூடலூர் நுகா்வோர் மனிதவள சுற்ற...
    9 years ago
  • FEDCON
    cchep Cherangodu Eye camp 6.12.2015 -
    9 years ago
  • ganthi 1
    பந்தலூர் வட்டத்தில் செவிலியர் பயிற்சி மையம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, பணிவான வணக்கங்கள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் பல்வேறு தோட்ட தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், கூலி தொழில...
    10 years ago
  • cchep citizen center
    நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் தற்போது தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து, பரா...
    11 years ago
  • CCHEP_NLG மக்கள் மையம்
    -

My Blog List

welcome

welcome
அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - நீலகிரி pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

Followers

Subscribe To http://cchepnlg.blogspot.in/

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
  • Home

Search This Blog

Travel theme. Theme images by hanoded. Powered by Blogger.