நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன சார்பில் கர்ப்பிணிகளுக்கான மனநலன் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
மருத்துவர் தபாசியா, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலைய
மருத்துவ அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி பேசும்போது கர்ப்பிணிகள் நலமுடன் இருக்க முறையான மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனநலன் சமநிலையில் இருக்காது. எனவே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தற்போது காய்ச்சல் அதிகம் தாக்கும் சூழல் உள்ளதால் லேசான காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் தாய் சேய் பாதுகாப்பு பெறலாம் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கர்ப்ப காலத்தில் தாய் சேய் நலம் காக்க மனநிலை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
சோகம், துக்கம், கவலை போன்றவற்றை தவிர்த்து விட்டு எப்போதும் புத்தகம் படித்தல் பாடல் கேட்டல் தோட்டங்களில் சிறு சிறு வேலைகள் செய்தல் போன்றவற்றின் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எளிமையான வேலைகள் செய்வது, உடற்பயிற்சி செய்து கொள்ளுதல் போன்றவை பிரசவ காலத்துக்கு உதவியாக அமையும். உணவுகளை நான்கு வேளையாக பிரித்து உண்ணுதல், காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுதல் உடல் ஆரோக்கியம் தரும் என்றார்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment