இலவச கண் சிகிச்சை முகாம் மேங்கோரெஞ் 29 04 2018

 இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர், ஏப்ரல் 29 : பந்தலூர் அருகே மேங்கோரெஞ் மருந்துவமனையில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம், மேங்கோரெஞ் மருத்துவமனை 

ஆகியோர் இணைந்து நடத்திய 
 இலவச கண் சிகிச்சை முகாமிற்கு  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 

உதகை தலைமை மருத்துவமனை முதன்மை கண் மருத்துவரும், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான மருத்துவர் அமராவதிராஜன், முத்துராஜ் உள்ளிட்ட கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்

இதில் 100க்கும் மேறபட்டோர் கலந்துகொண்டு
அனைத்துவித கண்நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். 
10 கண்புரை  இலவச அறுவை சிகிச்சை செய்திட உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த முகாமில் ஷாலோம் சாரிட்டபிள்  டிரஸ்ட் அறங்காவலர் சுப்பிரமணி மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், அம்போத்கார் மக்கள் இயக்க செயலாளர் இந்திரஜித், மேங்கோரெஞ் மருத்துவமனை தலைமை செவிலியர் எலிசபெத், மருந்தாளுனர் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Mangorange Eye Camp 29 04 2018 Photos



















*TNPSC ONLINE* 39 -39

கட்டாயம் படிக்க


http://cchepnlg.blogspot.in/

*TNPSC ONLINE* 39 -39

*கேள்வியும் நானே-பதிலும் நானே*

Q1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன?

A1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.
--------------------------------------------------------------------------------
Q2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்?

A2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
--------------------------------------------------------------------------------
Q3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

A3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களுக்குத்  தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.
--------------------------------------------------------------------------------
Q4: எதற்க்காக தேவைக்கும் அதிகமானோரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு TNPSC அழைத்து அதில் சிலரை திரும்ப அனுப்புகிறது?

A4: சரியான நபர்களை அழைக்கும் பட்சத்தில் அவர்களில் பலர் ஏற்கனவே வேலையில் இருந்து இந்த வாய்ப்பை புறக்கணித்தல் அல்லது தகுதி இல்லாத போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளியேற்றப் படல் போன்ற நிகழ்வுகளால் TNPSC-க்கு மீண்டும் மீண்டும் அனைவரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கால விரயம் மற்றும் வேலைப் பளுவை குறைக்கவே தேவைக்கும் அதிகமானோர் அழைக்கப் படுகிறார்கள்.
--------------------------------------------------------------------------------
Q5: இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடந்து வந்தது?

A5: சென்னை TNPSC அலுவலகத்தில் நடந்து வந்தது. தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வரவேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q6: இனி சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடை பெரும்?

A6: இனி சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட போட்டியாளர்கள் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது மூலச் சான்றிதழ்களை (ஒரிஜினல்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்து  முடித்துக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------
Q7: அப்படியானால் நானே அருகில் உள்ள எனது நண்பன் நடத்தி வரும் கணினி மையத்திற்குச் (Computer center) சென்று எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாமா?

A7: கூடாது. இதற்க்கான வாய்ப்பு, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும்  E-சேவா மையங்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே  E-சேவா மையம் மூலம் அல்லாமல் தன்னிச்சையாக உங்களால்  உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பொது சேவை மையம் மூலமாக மட்டுமே பண்ண முடியும்.
--------------------------------------------------------------------------------
Q8: நான் இப்பொழுது வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பண்ணலாமா?

A8: உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தமிழ் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q9: பொது சேவை மையங்கள் எனது மாவட்டத்தில் எங்குள்ளது என்பதனை எப்படித் தெரிந்து கொள்வது?

A9: TNPSC வெளியிட்டுள்ள பொது சேவை மையங்களின் பட்டியல் மற்றும் அதன் முகவரிகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.

http://www.tnpsc.gov.in/docu/List_of_new_esevai_address_details.pdf
--------------------------------------------------------------------------------
Q10: பொது சேவை மையங்கள் செயல் படும் நேரம் எது?

A10: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
--------------------------------------------------------------------------------
Q11: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என TNPSC நிர்ணயித்துள்ள நாட்கள் எவை?

A11: ஏப்ரல் 23 , 2018, திங்கள் கிழமை முதல் மே 4, 2018, வெள்ளிக்கிழமை வரை. மே 4 க்கு பிறகு உங்களால் உங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது. TNPSC-யால் இதற்குண்டான இணையதளம் முடக்கப்பட்டு விடும்.
--------------------------------------------------------------------------------
Q12: ஏப்ரல் 23--மே 4, இந்த நாட்களில் நான் எந்த நாளில் செல்ல வேண்டும் என்று TNPSCஅறிவுறுத்தி உள்ளதா? நான் அந்த குறிப்பிட்ட நாளில்தான்  சென்று எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?

A12: இல்லை. இந்த நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர உங்களுக்கு தோதான எந்த நாளிலும் சென்று உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியரும் இந்த நாளில் தான் செல்ல வேண்டும் என TNPSC குறிப்பிடவில்லை.
--------------------------------------------------------------------------------
Q13: TNPSC குறிப்பிட்டுள்ள நாட்களில் எனது சான்றிதழ்களை  நான் பதிவேற்றம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

A13: நீங்கள் Gr-2A வேலைக்கான போட்டியில் இருந்து நிரந்தரமாக விலக்கப் படுவீர்கள். மறு வாய்ப்பும் அளிக்கப் படாது.
--------------------------------------------------------------------------------
Q14: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலில் எனது பதிவு எண் உள்ளது. இது தவிர எனக்கு தனிப்பட்ட கடிதத்தினை TNPSC அளிக்குமா?

A14: ஆம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வான போட்டியாளர்களுக்கு TNPSC-யால் வழங்கப்பட்டுள்ள  தனிப்பட்ட கடிதத்தினை கீழ்கண்ட இணைப்பில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.

http://www.tnpsc.gov.in/Resultget-g2a_cv_call2k17.html
--------------------------------------------------------------------------------
Q15: என்ன என்ன சான்றிதழ்களை நான் கொண்டு போக வேண்டும்?

1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. HSC / DIPLOMO/ITI / Teacher Training மதிப் பெண் சான்றிதழ்.
4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ்.
5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.
6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல்  தெரிவித்துள்ளபடி)
7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான  சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).
8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்  (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).
9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).
10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.
11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.  
12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).
--------------------------------------------------------------------------------
Q16: சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மேற்கண்ட சான்றிதழ்களைத் தவிர வேறு என்ன வேண்டும்?

A16: உங்களது நிரந்தர பதிவின் (One Time Registration) பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Pass word) தேவை.
--------------------------------------------------------------------------------
Q17: எனது மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) நன்னடத்தை உள்ளது. நான் தனியாக வாங்க வேண்டுமா?

A17: உங்கள் மாற்றுச் சான்றிதழில் (TC) உங்களது நன்னடத்தை இருப்பின், அதனையே பயன்படுத்தலாம்.
ஆனால், மாற்றுச் சான்றிதழில் "His/Her Conduct and Character is Good" என்ற வார்த்தை முழுவதுமாக இருக்க வேண்டும். His/Her Conduct is Good என்று மட்டும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாற்றுச் சான்றிதழில் உங்களது நன்னடத்தை கொடுக்கப்பட்டு இருந்தாலும், இறுதியாகப் பயின்ற கல்வி நிலையத்தில் சென்று சான்றிதழ் வாங்குவது சிறப்பு. இதனை ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும், அனைத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம்.
--------------------------------------------------------------------------------
Q18: நான் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்றேன். அப்படியானால் நான் எங்கு எனது நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டும்?

A18: நீங்கள் அதற்க்கு முன்னதாக எந்த கல்வி நிறுவனத்தில் ரெகுலரில் படித்தீர்களோ அங்கு இந்த நன்னடத்தைச் சான்றிதழை வாங்க வேண்டும். அதாவது குறைந்தது ஒருவருட கோர்ஸில் படித்து இருக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது மூன்று மாதம்  டிப்ளமோ கோர்ஸ் படித்த நிறுவனங்களில் வாங்கக் கூடாது.

உதாரணமாக நீங்கள் முதுகலை தொலைதூரக் கல்வி முறையில் படித்து இருந்தால், இளநிலை ரெகுலரில் படித்து இருந்தால் அங்கு வாங்கலாம். அல்லது முதுகலைக்கு முன்பு இளங்கலை கல்வியியல் (B.Ed) படித்து இருந்தால் அங்கு வாங்கலாம்.

நீங்கள் இளங்கலை தொலை தூரக் கல்வியில் படித்து இருந்தால், +2 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அங்கு வாங்கலாம்.
--------------------------------------------------------------------------------
Q19: இளங்கலை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்?

A19: ரெகுலரில் படித்தவர்கள் அவர்கள் கல்லூரி முதல்வரிடமும், தொலை தூரக் கல்வியில் படித்தவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமும் வாங்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q20:   தமிழ் வழி சான்றிதழ் கொடுத்துள்ள ஆங்கிலப் படிவத்தில் தான் வாங்க வேண்டுமா?

A20: TNPSC ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் படிவம் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆங்கிலத்தில் வாங்குவது நலம். தமிழில் வாங்கி வைத்து இருப்பவர்கள் அதனை பதிவேற்றம் செய்து விட்டு, முடிந்தால் ஆங்கிலத்தில் ஒன்று வாங்கி கலந்தாய்வின்போது கொண்டு செல்லலாம். இரு சான்றிதழ்களும், தேதி மாறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.
--------------------------------------------------------------------------------
Q21: என்னிடம் தமிழ் வழி  சான்றிதழ் மற்றும் இறுதியாகப் பயின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கக் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்கள் இல்லை. கிடைக்குமா?

A21. கீழ்க் கண்ட இணைப்பின் மூலம், எனது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uRmRYQmNzUy1oTzBQV0dkbUNRMlNVLUNZbXlF
--------------------------------------------------------------------------------
Q22: இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. இதற்க்கு முன்பு குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழை கேட்டர்களே, அது மேற்கண்ட வரிசையில் இல்லையே?

A22: ஆமாம்,  குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து  பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இப்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. அதனை கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.
--------------------------------------------------------------------------------
Q23: நான் தற்சமயம் அரசு அலுவலராக உள்ளேன். நான் எப்பொழுது தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுக்க வேண்டும்? இப்பொழுது அதனை பதிவேற்றம் செய்யலாமா?

A23. அரசு ஊழியர்களுக்கான தடையின்மைச் சான்றிதழை தற்சமயம் பதிவேற்றம் செய்ய சொல்லவில்லை. எனவே இதனையும் கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.  

ஆனால், தடையின்மைச் சான்றிதழ் தற்சமயம் இருக்கும் பட்சத்தில், அதனையும் பதிவேற்றம் செய்யலாம், தவறில்லை என TNPSC-யில் தெரிவித்தார்கள்.
--------------------------------------------------------------------------------
Q24: நான் பட்டப் படிப்பிற்க்கான தகுதிக்கு (Degree Qualification) எனது மதிப்பெண் பட்டியல் (Cumulative Mark Sheet) சான்றிதழ் எண்ணையும், தேதியையும் கொடுத்து விட்டேன். அப்படியானால், நான் எதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்?

A24: நீங்கள், பட்டச் சான்றிதழை (Convocation) பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த, மதிப் பெண் பட்டியலை (Cumulative Mark Sheet) பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.
--------------------------------------------------------------------------------
Q25: எனது சாதிச் சான்றிதழில் தவறு இருப்பதனை நான் தற்போதுதான் கவனித்தேன். அதனைப் பதிவேற்றம் செய்யலாமா?

A25: உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு போன்றவற்றில் தவறு இருப்பின் அது பெரும் பிழையாகக் கருதப்படும். நீங்கள் புதிதாக ஒரு சாதி சான்றிதழை வாங்கி அதனைப் பதிவேற்றம் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Q26: அப்படியானால், நான் ஏற்கனவே விண்ணப்பத்தில் கொடுத்து இருக்கும் பழைய சாதி சான்றிதழுக்கும், தற்போதைய புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் (Certificate Number) வேறுபடுமே?

A26: சான்றிதழ் எண் வேறுபாட்டால் பரவாயில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படும். சாதி சான்றிதழைப் பொறுத்தவரை உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு மிகச் சரியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
--------------------------------------------------------------------------------
Q27: நான் பொதுச் சேவை மையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒரு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படமால் விடுபட்டு விட்டது. அதனை மறு நாள் சென்று பதிவேற்றம் செய்யலாமா?

A27: செய்யலாம். பொது சேவை அலுவலருக்கு தணிக்கை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரால், மே 4 வரை உங்கள் கணக்கில் உள்ள, எந்த ஒரு சான்றிதழையும் சேர்க்க முடியும், நீக்க முடியும்.

இருப்பினும், முதல் முறை பதிவேற்றம் செய்யும் பொழுதே கவனமாக செயல்படுதல் நலம்.
--------------------------------------------------------------------------------
Q28: நான் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் என்னையறியாமல் பெரிய தவறுகள் ஏதும் இருப்பின், அது எப்போது எனக்குத் தெரியப்படுத்தப் படும்?. கலந்தாய்வில் போதுதான் தெரிய படுத்துவார்களா?

A28: இல்லை. நான் இன்று அலுவலகத்தில் நேரில் சென்று கேட்ட பொழுது, பெரிய தவறுகள் உள்ள போட்டியாளர்களுக்கு, கலந்தாய்விற்கு முன்னனதாக தெரியப்படுத்தப் படும் என்று கூறினார்கள்.
--------------------------------------------------------------------------------
Q29: சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மேலும் எனக்கு ஏதும், குறுந்செய்தி அல்லது  மின் அஞ்சல் யிலிருந்து வருமா?

A29: உங்களது சான்றிதழ்களில் எந்த பிரச்சினையும் இல்லாத வரை எதுவும் வராது.
--------------------------------------------------------------------------------
Q30: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படும்  பொழுது, எனது இளங்கலை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது. சான்றிதழ் பதிவேற்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட நாளும் முடிந்து விட்டது. இப்போது என் நிலை என்ன?

A30: அப்படி விடுபட்டுப் போனால், நீங்கள் இளங்கலை பட்டதாரியாக கருதப்பட மாட்டீர்கள். உங்களது கல்வித் தகுதி என்ற +2 அளவிலேயே TNPSC-யால் கணக்கில் கொள்ளப்படும். மேலும், Gr 2A தேர்விற்கு இளங்கலை பட்டம் என்பதே அடிப்படைத் தகுதி என்பதனால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்பட மாட்டீர்கள். எனவே, ஒவ்வொரு சான்றிதழையும் பதிவேற்றம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q31:   நான் விண்ணப்பத்தில் முதுகலை என குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொழுது முதுகலை பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்தால் நான் முதுநிலை பட்டதாரியாக கருதப் பட வாய்ப்பு உண்டா?

A31: நிச்சயமாக இல்லை. நீங்கள் விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகளைக் குறிப்பிடாமல் சான்றிதழை மட்டும் பதிவேற்றம் செய்தால் அதனை TNPSC ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.
--------------------------------------------------------------------------------
Q32: கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்ல முடியுமா?

A32: கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்க்கு உண்டான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை இழப்பீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q33:   பல்வேறு வேலைப் பளுவின் காரணமாக, குறிப்பிட்டுள்ள நாட்களில் (Apr 23 - May 04)  என்னால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே கொடுக்கப்பட்ட தேதி முடிந்த பின்னர் நான் அஞ்சலிலோ அல்லது அலுவலகத்திற்கு நேரிலோ எனது சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் பதிவேற்றம் செய்ய இயலுமா?

A33: கண்டிப்பாக முடியாது. பொது சேவை மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யமால் அதன் பின்னர் அஞ்சலில் அல்லது நேரில் பதிவேற்றம் செய்ய முடியாது. நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.
--------------------------------------------------------------------------------
Q34: நான் இந்த தேர்விற்க்காக TNPSC அறிவுறுத்தியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விட்டேன். நான் அடுத்து வரும் வேறு ஒரு தேர்வில் இதே போன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இதே போன்று மீண்டும் எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா?

A34: ஆமாம். ஒவ்வொரு தேர்விற்கும் நீங்கள் இதே போன்று ஒவ்வொரு முறையும் பொது சேவை மையத்திற்குச் சென்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
--------------------------------------------------------------------------------
Q35: நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். எனவே, எனது உறவினர் அல்லது நண்பர்களிடம் கொண்டு எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா?

A35: உங்களது சான்றிதழ்களை நீங்களே செய்வது தான் சிறப்பு. ஏனெனில் உங்களது விபரங்கள் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தவறு நடந்த பின் மனம் உடைவைத்தாய் விட, என்றும் வருமுன் காப்பது சிறந்தது.
--------------------------------------------------------------------------------
Q36: நான் சான்றிதழை பதிவேற்றம் செய்தமைக்கு பொது சேவை மையத்திலிருந்து, எனக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் கொடுக்கப்படுமா?

A36: ஆமாம், புகைப்படத்தில் உள்ளவாறு எந்த எந்த சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் என்று பொது சேவை மையத்தினால்  ஒப்புதல் சீட்டு தரப்படும்.
--------------------------------------------------------------------------------
Q37. இந்த புதிய வகை ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?

A37: .ஒரு சான்றிதழுக்கு ரூ.5 வீதம் வசூலிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
Q38: இதனை முழுவதுமாகப் படித்த பின்னரும் எனக்கு ஐயம் தீரவில்லை. நான் என்ன செய்வது?

A38: பின் வரும் தொலைபேசி எங்களுக்கு அழைத்து நீங்களே உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். அல்லது, சென்னைக்கு அருகில் இருப்பின் நேரில் சென்று விபரம் கேட்கலாம்.

044-2533 2855
1800 4251 002
--------------------------------------------------------------------------------
Q39: எனக்கு மேற்கண்ட அனைத்தும் நன்றாக புரிந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?.

A39: கூறி இருப்பவற்றை பயன்படுத்தி நல்ல விதமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வாங்கவும்.



நன்றி.

அன்புள்ள

கூடலூர் நுகர்வோர்
பாதுகாப்பு மையம்

பந்தலூர் TNPSC
பயிற்சி மையம்

மகாத்மா காந்தி பொது சேவை மையம்

http://cchepnlg.blogspot.in

மேற்படிப்பு எப்படி தேர்வு செய்வது*

*மேற்படிப்பு எப்படி தேர்வு செய்வது*

ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்து தங்கள் குழந்தைகள் என்ன படிக்கலாம் எனத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.

இவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம்.

“இதுவரை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நெருக்குதலோடு படித்த மாணவர்கள் இனியாவது தங்களுடைய விருப்பத்துக்கும், ஆர்வத்துக்கும் தீனிபோடும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

எல்லோரும் இன்ஜினீயரிங், மருத்துவம் என நாடிச் செல்லாமல் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து ஆராய்ந்து எதிர்காலப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கல்லூரிப் படிப்பை ஒரு முறைதான் படிக்கப் போகிறோம்.

அதனால், சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும்.

சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது உங்களின் வெற்றி வாய்ப்பும் கூடும்.

சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன.

இதில் 75 தேர்வுகள் ப்ளஸ் டூ மதிப்பெண்ணைக் கண்டுகொள்வதில்லை என்பதால் 75 வாய்ப்புகள் இருக்கின்றன.

 நுழைவுத்தேர்வுகள் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பழைய கேள்வித்தாள்களிலிருந்து எந்தெந்தப் பாடத்தில் இருந்தும், எந்தப் பிரிவில் இருந்தும் எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

கடன் வாங்கித் தரமற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

 பெற்றோர்கள் தங்களுடைய பொருளாதாரத் திறனை மீறிக் கல்லூரியைத் தேர்வு செய்யக் கூடாது.

 முடிந்தளவுக்கு அரசுக் கல்லூரியில் அதிக பணம் செலவழிக்காமல் சேர்ப்பது நல்லது”

 என்று ஆலோசனை வழங்கிய நெடுஞ்செழியன்,

 ப்ளஸ் டூ-க்குப் பின்னர் என்னென்ன படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்? என்று வரிசைப்படுத்தினார்.


``ப்ளஸ் டூ முடித்தவுடனே B.S - M.S என்ற ஆராய்ச்சிப் படிப்பை மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

இதற்காக முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாயும், அதன் பின்பு இரண்டு வருடங்களுக்கு மாதம் ஏழாயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகை பெறலாம்.

கோவையில் நூறாண்டுகளுக்கும் மேலாக  செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் எட்டு பி.டெக். படிப்புகள் உள்ளன.

இதில் ஏதேனும் ஒரு படிப்பில் படித்தாலும் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-யில் படிக்கலாம்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லையே, பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

குறைந்த கட்டணத்தில் மருத்துவம் சார்ந்த நிறைய படிப்புகள் இருக்கின்றன.

பாராமெடிக்கல் படிப்புகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம்.

இதைத்தவிர, மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சொல்லித்தரப்படும் சான்றிதழ் படிப்புகளிலும் சேரலாம். இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படுகின்றன.

பொறியியல் கல்வி பயிலும் ஆர்வம் உள்ள மாணவர்கள் கல்லூரியைத் தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த ஆண்டு 44 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கலை மற்றும் அறிவியல் படிப்பில் படிப்பவர்களுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் பாடங்களைப் படித்தால் முதுநிலை படிப்பை ஐ.ஐ.டி-ல் படிக்கலாம். இதற்குப் போட்டிகள் மிகவும் குறைவு.

ப்ளஸ் டூ-வில் வணிகவியல், பொருளியல், வரலாறு பாடங்கள் படித்தவர்கள், வணிகவியல் சார்ந்த படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளாக CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், சட்டப்படிப்பு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இதற்கு அடுத்து, பி.காம், பி.பி.ஏ, பி.பி.எம், எக்னாமிக்ஸ் போன்ற பாடங்களைப் படிக்கலாம்.

எந்தப் பிரிவைப்படித்தாலும் அந்தத் துறை சார்ந்த விஷயங்கள் குறித்த தேடல் இருக்க வேண்டும்”என்றார் நெடுஞ்செழியன்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
நீலகிரி

குளிர்பானம், பழச்சாறு

CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in/?m=1


குளிர்பானம், பழச்சாறு விற்பனையாளர்கள்
 சுகாதாரத்தை கடைப்பிடிக்க  அறிவுறுத்தல்

by SENTHIL

குளிர்பானங்கள், பழச்சாறு தயாரிப்பில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என.  அறிவுறுத்தியுள்ளது.


தற்போது கோடைக் காலம் துவங்கி உள்ள நிலையில் தாகம் தணிப்பதற்கும், உடலுக்குக் குளிர்ச்சியூட்டவும் பொதுமக்கள் அதிகமானோர் குளிர்பானங்கள், பழச்சாறு, குடிநீர், ஐஸ்கிரீம், கரும்புச்சாறு, கம்மங்கூழ், மோர் ஆகியவற்றைப் பருகி வருகின்றனர்.

 இந்நிலையில், இவற்றை விற்பனை செய்யும் வணிகர்கள்

தங்களது தயாரிப்பில் கலப்படமில்லாத சுத்தமான, தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து உணவுப் பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்று விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட குளிர்பானங்களைத் தயாரிப்பவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குளிர்பானங்களைத் தயாரிக்கும் இடமும் சுகாதரத்துடன், ஈ , எறும்புகள் இடையூறு இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், குளிர்பானம் தயாரிப்பில் ஈடுபடும் நபர்களும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:

ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்க வேண்டும்.

மேற்கண்ட குளிர்பானங்கள் தயாரிக்கப் பயன்படும் மிக்சி, ஜுஸர், வடிகட்டி , இதர உபகரணங்களைத் துருப்பிடிக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அழுகிய பழங்களை சாறு தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது.

குளிர்சாதனப் பெட்டியை தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குளிர்பானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணச் சாறுகளைப் பயன்படுத்தக் கூடாது.

செய்கை முறையில் ரசாயனப் பொருள்கள் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தவிர்த்து இயற்கையான முறையில் பழுத்த தரமான பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு தயாரிக்க வேண்டும்.

 *தரச்சான்றும், உரிமமும் அவசியம்:*

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஎஸ்ஐ தரச் சான்றிதழும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து முறையான லேபிள் விவரங்களுடன் பேக் செய்து குடிநீர் விற்பனை செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வோர் குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, பேட்ச் எண், குடிநீரில் உள்ள சத்துகளின் அளவு ஆகிய விவரங்களுடன் தயாரிப்பாளாரின் முழு முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், 20 லிட்டர் கேன்களை ஒவ்வோர் முறையும் சுத்தமாக சோப் பவுடர் மூலம் சுத்தம் செய்து உலர வைத்து குடிநீர் நிரப்பி உரிய லேபிள் விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

 *கண்காணிப்புக்குழு அமைப்பு:*

 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு குளிர்பானம் தயாரிப்பு, விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வழிமுறைகளைப் பின்பற்றாமல் தரமற்ற குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யும் வணிகர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,

இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 94440-42322 என்ற கட்செவி (வாட்ஸ் அப்) எண்ணிலோ அல்லது

 மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா?*_

_*பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா?*_

_23 Apr. 2018_


பாரத ஸ்டேட் வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

நாட்டில் உள்ள அரசுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 300 இடங்களும், பழங்குடியினருக்கு 150 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது, கல்லூரியில் கடைசி வருடம் படித்துவரும் மாணவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-4-1988-க்கு முன்னதாகவோ அல்லது 1-4-1997க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு.

*எப்படி தேர்வு செய்கிறார்கள்?*
முதல்கட்டமாக, Preliminary தேர்வு இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அப்ஜெக்ட்டிவ் முறையில் Preliminary தேர்வு ஆன்லைனில் நடைபெறும். Preliminary தேர்வுக்கு 100 மதிப்பெண்கள். இதில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 35 மதிப்பெண்களும், ரீசனிங் எபிலிட்டி பிரிவுக்கு 35 மதிப்பெண்களும் உள்ளன. தேர்வுக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வு ஜூலை 1, 7, 8 தேதிகளில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களை, அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மெயின் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் தேர்வு மற்றும் விரிவாக விடை எழுதும் தேர்வு (Descriptive) என இரண்டு பிரிவுகளின் கீழ் தேர்வுகள் இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், Descriptive தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் உள்ளன. அப்ஜெக்ட்டிவ் தேர்வில் இங்கிலீஷ் லாங்க்வேஜ் (கிராமர், வெகாபுலரி, காம்ப்ரிஹென்சன்), ஜெனரல்/ பேங்கிங் அவேர்னெஸ், டேட்டா அனாலிசிஸ் அண்ட் இன்டர்பிரட்டேஷன், ரீசனிங் & ஆப்டிட்யூட் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், விடையளிக்க மொத்தம் மூன்று மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறும்.
விரிவாக விடை எழுதும் தேர்வுக்கு (டிஸ்கிரிப்டிவ் டெஸ்ட்) 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க அறை மணி நேரம் வழங்கப்படும்.

https://chat.whatsapp.com/DEdyOWe3Ef2FRQdXISIIxj
இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப் டிஸ்கஷன் பிரிவுக்கு 20 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் உள்ளன. ஆன்லைன் தேர்வில் 75க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அத்துடன், குரூப் டிஸ்கஷனிலும் இண்டர்வியூவிலும் பெற்ற மதிப்பெண்கள் 25-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி புரபேஷனரி அதிகாரிகள் பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வை எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

*விண்ணப்பிப்பது எப்படி?*
பொதுப் பிரிவினருக்கும், மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. இந்த வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அடுத்த நிலையில் பணிக்கு உயர்த்தப்படுவார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

*தேர்வுக்கு முன் பயிற்சி:*


தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினருக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இத்தேர்வுப் பயிற்சி நடைபெறலாம். ஜூன் 18 லிருந்து 23 வரை இப்பயிற்சி நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
*ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி:* 13.5.2018

*ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி:* 13.5.2018

*விவரங்களுக்கு:* https://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf

CCHEP - நிர்வாக குழு / செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள்


பெறுனர்

திருமிகு. ஆணையாளர் அவர்கள்  
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் 
நுகர்வோர் பாதுகாப்பு துறை சென்னை.  

முதலமைச்சா் தனிப்பிரிவு
தலைமைச்செயலகம்
சென்னை

பொருள்  CCHEP  -  நிர்வாக குழு /  செயற்குழு கூட்டம்  தீர்மாணங்கள்  அனுப்புதல் சார்பாக

அய்யா ,அம்மையீர்  அவர்களுக்கு வணக்கம்,

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாக குழு மற்றும்  செயற்குழு கூட்டம் பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள்  
       
தீர்மாணம் 12/2018        1. நன்றி தெரிவித்தல்         

இதுவரை ஆதரவு தந்து அமைப்பின் வளர்ச்சிக்கு உதவும் அரசு துறைகள், பத்திரிக்கை நன்பர்கள்,  தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சிகள் நடத்திட ஆதரவு தரும் கல்வி நிலையங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுதல்

அமைப்பின் வளர்ச்சிக்கு ஊக்கமாக சட்ட உதவிகள் பெறும் பொருட்டு இளம் வழக்கறிஞர்கள் திரு. அரிபிரசாத் உதகை, 
திரு. ரா. கனேசன்  பந்தலூர்,  
திருமதி நஜிமாபாய் நசிர் அவர்களையும் அமைப்பில் இணைத்துக்கொள்வது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அனைத்து வட்டங்கள் மற்றும் ஊராட்சி அளவில் அமைப்பு நிர்வாகிகள் நியமித்து கிளைகள் உருவாக்குதல் எனவும் தீர்மாண.


தீர்மாணங்கள் துறை சார்ந்து பிரித்து அனுப்புதல்                                                                                         
தீர்மாணம் 13/2018  2 

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான தீர்மாணங்கள்
நுகர்வோர் தினங்களான உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 மற்றும் தேசிய நுகர்வோர் தினமான டிசம்பர் 24 ஆகிய நாட்களில் அனைத்து  மாவட்டத்திலும் விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அந்நாளில் நடத்துவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்ல இயலும்.

பள்ளிகளில் நடைப்பெறும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குறித்து பள்ளி கல்வி துறை சார்பில் வெளியிடும் கையேட்டில் தகவல் இடம்பெற செய்ய வேண்டும்.  

இதனால் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் எளிதான கட்டாய செயல்பாட்டிற்கு உதவும்.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு வழங்கப்படும் நிதியானது சிறப்பாக செயல்படும் பள்ளிகளை மட்டும் தோ்வு செய்து 

அதாவது பத்திரிக்கை செய்தி புகைப்படம், தீர்மாண புத்தக நகல், மாணவர்களின் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகள் குறித்து தகவல் சேகரித்து அதன் அடிப்படையில் நிதி வழங்க வேண்டும். 

பல பள்ளிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டு எந்தவித விழிப்புணர்வு பணிகளும் மேற்க்கொள்ளாமல் வீனடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

நுகர்வோர் அமைப்பு களை முகவரி பட்டியலில் சேர்க்க பல மாவட்டங்களில் அலைகழிக்கப்படுகின்றனர். 

இதனால் தன்னார்வ அடிப்படையில் எந்தவித நிதி ஆதாராமும் இல்லாமல் சொந்த முயற்சியில் சிறப்பாக செயல்படும் நுகர்வோர் அமைப்புகள் கூட அலைகழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். 


நுகர்வோர் சார்ந்த பிரச்சனைகளை சுட்டிகாட்டினால் அவர்களை சேர்ப்பதில்லை. 

ஆனால் எந்தவித நுகர்வோர் சேவையும் செய்யாமல் பெயரளவிற்கு இருப்பவர்களை முகவரி பட்டியலில் சேர்த்து கொள்கின்றனர் என்பதும் வேதனையானது.

இதனால் மாவட்ட நிர்வாகம் நுகர்வோர் அமைப்புகள் இடையே இணக்கமான போக்கு இருப்பதில்லை.  

பெயரளவிற்கு மட்டுமே நுகர்வோர் கூட்டங்கள் நடத்தப்பட்டு நுகர்வோர் பிரச்சனைகள் களையபடாமல்  உள்ளது  வேதனை  அளிக்கின்றது.

எனவே நுகர்வோர் அமைப்புகளின் சேவை அடிப்படையில் சிறப்பான சேவை செய்யும் நுகர்வோர் அமைப்புகளை முகவரி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

நீலகிரி மாவட்டத்தில் மன்ணென்னை அதிக அளவு தேவைப்படுகின்றது.  எரிவாயு சிலிண்டர்களும் முறையாக கிடைப்பதில்லை.  

விறகு வெட்டவும் வனத்துறை தடைவிதித்துள்ளது. 

இதனால் பணிகாலம், மழைகாலங்களில் அதிக எரிபொருள் தேவைக்கு பொதுமக்கள் சிரம்மப்படும் நிலை உள்ளது. 

எனவே நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மண்ணென்னை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்


காவல்துறை

காவல்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகண தணிக்கை செய்யப்படுகின்றது.  

இதில் அபராதம் விதிக்கும்போது சரியா ன ரசீதுகளை வழங்குவதில்லை .   

இதனால்  காவல்துறை சார்பில் எடுக்கும் நடவடிக்கை விதிக்கும் அபராதங்கள் தவறான முறையில் சித்தரிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றது. 

இதனால் காவல் துறை சார்பில் வாகண விதிமீறல்களுக்கான அபராதங்கள் குறித்த தகவல் பலகை  மக்கள் மற்றும் வாகண ஓட்டிகள்  அறியும் வகையில் வைக்க வேண்டும்

அபராதம் விதிக்கும் நிலைக்கு கணினி ரசீதுகள் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வாளர்தான் ரசீதுகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிலைபாட்டை தவிர்த்து யார்  அபராதம் விதிக்கின்றாரோ அவரே அதற்கு பொறுப்பு என்ற நிலைபாட்டை எடுத்து   அதன் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறை சார்பானவை நடவடிக்கை எடுக்க

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்ட தீர்மாணம்  சுகாதாரத்துறை சார்பானவை நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.
தீர்மாணம் 15.2018    4,  அரசு மருத்துவமனையில்  சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் உதகை சேட் மருத்துவமனையில் பந்தலூர் கூடலூர் மற்றும் உதகை கோத்தகிரி குன்னூர் குந்தா உள்ளிட்ட வட்ட அளவிலான மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க இயலாதவர்களை உதகைக்கு அனுப்புகின்றனர். 
ஆனால் உதகையில் பார்க்க முடியவில்லை என்று கோவைக்கு அதுவும் 6 மணிக்கு மேல் அனுப்புகின்றனர்.  இ்தனால் பலர் பெருமளவு பாதிக்கின்றனர்.  எனவே மேற்படி சேட் மருத்துவமனையில் மேம்பட்ட சிகிச்சை அளிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் . 
மாவட்டத்தின் தலைமையகத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அரசை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.  இதனை விரைவு படுத்த வேண்டும்,
108 எனும் அவசர சேவைக்கு வழங்கப்பட்டுள்ள வாகணங்கள் பெறும்பாலும் பழையனவாக உள்ளது.  இதனால் இவை பல நேரங்களில் பழுதாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.  பல வாகணங்கள் முறையான வேகத்தில் செல்ல முடிவதில்லை என்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் 108 வாகணங்கள் மாற்றி தரமான வாகணங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இந்தாண்டு நோயாளிகள் தினம் அனுசரிக்கப் படவில்லை.  அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் உறவு மேம்பட இந்த தினம் முக்கியமானதாக அமைகிறது.  இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளை முறையாக பரிசோதிப்பதில்லை என்ற குற்றசாட்டு உள்ளது.  அதனால் சரியான  பரிசோதனை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
பந்தலூர் அரசு மருத்துவமனை வளாகம் மிகவும் மோசமாக உள்ளது தார் சாலை கற்கள் பெயர்ந்து வாகணங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது.  அதனை சரிசெய்ய வேண்டும்
மருத்துவமனகைளில் இரவு நேர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
     நன்றி                                                                                      இப்படிக்கு

                                                                                            சு. சிவசுப்பிரமணியம்                                                                                                                              பொதுச்செயலாளர்  

கல்வித்துறை சார்பானவை நடவடிக்கை எடுக்க


 **கூடலூர்* *நுகர்வோர்* *பாதுகாப்பு* *மையத்தின்* *செயற்குழு* *மற்றும்* **நிர்வாக குழு கூட்ட தீர்மாணம்*  

 *கல்வித்துறை* சார்பானவை நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

தீர்மாணம் எண் 14.2018          3. 

கல்வி உரிமை சட்டப்படி  தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,  

சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பணம் பெற்று இலவச ஒதுக்கீட்டில் சேர்த்து கொள்வதாகவும் 

பணம் அரசு தந்தவுடன் திருப்பி தருவதாக கூறியும் மாணவர்களை சேர்க்கின்றனர்.  

இது சட்டப்படி தவறான செயலாகும் இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

கல்வி உரிமை சட்டப்படி தகுதியான ஆசிரியர்கள் நியமணம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் பல பள்ளிகளில்  தகுதியான ஆசிரியர்கள்  நியமனம் செய்யப்படவில்லை.  

அரசு அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தவர்களை தனியார் பள்ளிகளில் பணிக்கு நியமனம் செய்துள்ளனர்.  

இதனால் சிறிய குழந்தகைள் சரியான பராமரிப்பு இன்றி பாதிக்கும் நிலையும் உள்ளது. 

தக்க ஆய்வும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

அதுபோல அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் குறித்த பட்டியலை இப்போதே *ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் வாரத்தில்* வெளியிடவேண்டும்.  

இதனால் பெற்றோர் மாணவர்களை சேர்ப்பது இப்போதே  தடுக்கப்படும்.  

பின்னர் குழந்தைகளை காட்டி அங்கீகாரம் கேட்கும் நிலை ஏற்படாது.

அரசு பள்ளிகளில் கழிப்பிடங்கள் விடுமுறை காலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.  

இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.  மாணவர்கள் நலன் காக்கப்படும்.


அரசு பள்ளி சீருடைகள் சில தனியார் அமைப்புகள் மூலம் மகளீரை வைத்து தைக்கப்படுகின்றது.  

ஆனால் மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி சீருடைகள் தைப்பதில்லை.  

இதனால் மாணவர்களுக்கான சீருடை சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  

பலரும் அரசின் சீருடையை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.  

எனவே மாணவர்களுக்கு தக்க வகையில் சீருடை தைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெற்றோர்களுக்கு சீருடை தையல் கூலி வழங்க வேண்டும்.


பள்ளிகளில்  செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை சிறப்பாக செயல்படுத்த கல்வி துறைசார்பான ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் நியமணம் செய்யவேண்டும்.

அல்லது தற்காலிக ஆசிரியர்களை அரசு ரூபாய் 10,000 மதிப்பூதியம் கொடுத்து நியமனம் செய்யவேண்டும்.

இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வழிவகுக்கும்,  

ஆசிரியர் பற்றாக்குறையை காரணம் காட்டி
 *அரசு பள்ளிகளில்* பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படாது  

தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்.

தறியார் பள்ளிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விவரம் பள்ளிகளில் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.  

இதர கட்டணம் என சில பள்ளிகளில் கூடுதலாக வாங்குவதை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதிணொன்றாம் வகுப்புகளில் சில மாணவர்களை கட்டாயமாக மாற்றுசான்று கொடுத்து அனுப்பும் தனியார் பள்ளிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் விளையாட உரிய அடிப்படை வசதிகள் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத பள்ளிகளில் LKG UKG PKG சேர்ப்பதை தடைசெய்ய வேண்டும்.

அல்லது அங்கீகாரம் நிறுத்து வைத்து  உரிய உபகரணங்கள் வாங்க காலக்கெடு கொடுப்பதோடு  குழந்தைகள் விளையாட ஒதுக்கிய நேரங்கள் குறித்தும் தகவல் பலகையில் தகவல் வெளியிட வேண்டும்.

அரசு பள்ளிகள் உட்பட
அனைத்து பள்ளிகளிலும்   மாணவர்கள் குடிக்க சுகாதாரமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


நன்றி            

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் 
பொதுச்செயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
நீலகிரி 

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் பிணைவிடா குற்றம் – பிணைவிடு குற்றம் எவை?



இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் பிணைவிடா குற்றம் – பிணைவிடு குற்றம் எவை?

பகுதி 5 உடந்தையாய் இருத்தல் பற்றி (107 – 120)

பிணை விடா குற்றம் 115, 118, 119 (குற்றம் முடிவுறாதிருத்தல் பிணைவிடு குற்றமாகும்) குற்றச் செயலைப் பொருத்து உடந்தையாய் இருப்பவர் பிணைவிடு – விடாக்குற்றம் என முடிவு செய்யப்படும் பிரிவுகள் 109 -114, 117, 119,120

பிடியாணை வேண்டும் குற்றமா – வேண்டாகுற்றமா என குற்றச் செயல் எதுவோ அதைப் பொருத்து அமையும்.

பகுதி 5 அ. குற்றமுறுசதி (120 அ, 120 ஆ)

பிணைவிடு – விடா குற்றமா, பிடியாணை வேண்டும் – வேண்டா குற்றமா என குற்றச் செயலைப் பொருத்தே அமையும்.

பகுதி 6 அரசுக்கு எதிரான குற்றங்கள் (121 – 130)

பிணைவிடு குற்றம் – 129 பிணைவிடா குற்றம் 121 -128, 130 இதில் அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்.

பகுதி 7 தரைப் படை – கடற்படை – வான் படை சம்பந்தமான குற்றங்கள் (131 – 140)

பிணைவிடுகுற்றம் : 135 – 138, 140 பிணைவிடா குற்றம் 131 – 134 பிடியாணை வேண்டும் குற்றம் 137 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றங்கள்)

பகுதி 8 பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் (141 – 160)

பிணைவிடு குற்றம் – 143-145, 147, 148, 151-158, 160

விடாகுற்றம் : 153 அ, 153 அஅ, 153ஆ (பிரிவு 149, 150 குற்றச் செயலை பொருத்து அமையும்)

பிடியாணை வேண்டும் குற்றம் 154 – 156 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்)

பகுதி 9 பொது ஊழியரால் செய்யப்படும் அல்லது அவர் சம்பந்தமான குற்றங்கள் பற்றி (161 – 171)

பிணைவிடு குற்றம் 166 – 169, 171 பிணைவிடா குற்றம் 161 – 165அ, 170 பிடியாணை வேண்டாக் குற்றம் 166, 168 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

பகுதி – அ தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி (171அ – 171ஐ)

பிணைவிடுகுற்றம் : அனைத்துப் பிரிவுகளும் (171உ – 171ஐ)

பிடியாணை வேண்டா குற்றம் 171 ஊ, மற்றவை பிடியாணை வேண்டும் குற்றமாகும்)

பகுதி 10 பொது ஊழியர்களின் சட்ட பூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றி (171 – 190)

பிணைவிடு குற்றம் 172 – 190

பிணை விடாகுற்றம் : 174 அ

பிடியாணை வேண்டும் குற்றம் 172 – 187, 189, 190 வேண்டாக்குற்றம் 174அ, 188

பகுதி 11 பொய் சாட்சியமும் பொது நீதிக்கு எதிரான குற்றங்களும் (191 – 229)

பிணைவிடு 193, 195, 197-221, 223,224, 225அ, ஆ, 228

பிணைவிடா : 194, 195அ, 222, 225, 227

பிடியாணை வேண்டும் குற்றம் : 193-221, 224, 217, 219, 220,223,225அ, 228 (மற்றவை பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 12 நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் தொடர்பான குற்றங்கள் : (230-263அ)

பிணைவிடு : 259-263அ, பிணைவிடா குற்றம் : 231-258

பிடியாணை வேண்டாகுற்றம் அனைத்துப் பிரிவுகளும்

பகுதி 13 எடைகள் அளவைகள் தொடர்பான குற்றங்கள் (264-267)

பிணைவிடுகுற்றம் : 264-266, பிணைவிடா குற்றம் 267

பிடியாணை வேண்டும் 264-266, வேண்டா குற்றம் 267

பகுதி 14 பொது மக்களின் சுகாதாரம், பாதுக்காப்பு, வசதி. பண்பு நலன் மற்றும் ஒழுக்கம் இவற்றபப் பாதிக்கின்ற குற்றங்கள் (268-294 9(அ)

பிணைவிடு : அனைத்துப் பிரிவுகளும்

பிடியாணை வேண்டும் குற்றம் : 271-276, 278, 287, 288, 290, 292அ-294அ (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 15 – மதம் தொடர்பான குற்றங்கள் (295-298)

பிணைவிடு : 296, பிணைவிடா குற்றம் : 295, 295அ, 297, 298

பிடியாணை வேண்டும் குற்றம் : 298 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக்குற்றம்)

பகுதி 16 மனித உடலை பாதிக்கும் குற்றங்கள் பற்றி ( 299-377)

உயிரை பாதிக்கும் குற்றங்கள் – 299-311

பிணைவிடு : 304அ, 309, பிணைவிடா குற்றம் : 302-304, 304ஆ, 305-308, 311

அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றம்

கருச்சிதைவித்தல், பிறக்காத குழந்தைகளுக்குக் கேடு செய்தல், கைக்குழந்தைகளை பாதுகாப்பு இன்றி விடுதல், பிறப்பை மறைத்தல் (312 – 318)

பிணைவிடு : 312, 317, பிணைவிடா குற்றம் : 313-316, 318

பிடியாணை வேண்டும் குற்றம் – 312 (மற்றவை பிடி கட்டளை வேண்டாக்குற்றம்)

காயம் ஏற்படுத்தல் பற்றி (319-338)

பிணைவிடு : 318, 323, 325, 330, 334-338

பிணைவிடா : 324, 326-329, 331-333

பிடியாணை வேண்டும் குற்றம் : 323, 334 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

சட்ட விரோதமாக தடுத்துவைப்பதும் அடைத்து வைத்தலும் (339-348)

பிணைவிடு : 314 – 348 (அனைத்துப் பிரிவுகளும்)

அனைத்து பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு வன்முறையும் தாக்குதலும் (349-358)

பிணைவிடு அனைத்துப் பிரிவுகளும்

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 352, 355, 358 (மற்றவை வேண்டாக்குற்றம்)

பிள்ளை பிடித்தல், ஆட்கடத்தல், அடிமை நிலை மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் (359-374)

பிணைவிடு : 363, 370, 374

பிணைவிடா : 363ஹ - 369, 371-373

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 370 (மற்ற பிரிவுகள் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்)

வன்புணர்ச்சி பற்றி (375-376) இயற்கைக்கு மாறான குற்றங்கள் 377

பிணைவிடுக்குற்றம் 376அ – 376ஈ பிணைவிடாக்குற்றம் 367, 377

சொத்து தொடர்பான குற்றங்கள் – திருட்டு பற்றி (378 – 389) பிணைவிடுக்குற்றம் – 385, 388, 389 பிணைவிடா குற்றம் 379 – 384, 386, 387

அனைத்துப் பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்.

கொள்கையும் கூட்டுக் கொள்ளையும் பற்றி (390-402)

அனைத்துப் பிரிவுகளும் பிணைவிடா குற்றம் – பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு சொத்துக் கையாடல் (403, 404) குற்றமுறு நம்பிக்கை மோசடி (405-409)

பிணைவிடுக்குற்றம் : 403-405, பிணைவிடா குற்றம் – 406-409

பிடிகட்டளை வேண்டும் குற்றம : 403-405, வேண்டாகுற்றம் 406-409.

திருட்டு சொத்தை பெற்றுக் கொள்ளுதல் (410-414) ஏமாற்றுதல் 415-420)

பிணைவிடுக்குற்றம் – 417-419, பிணைவிடாக்குற்றம் 411-414, 420

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 417, 418 (மற்றவை பிடிகட்டளை வேண்டாகுற்றம்)

மோசடியான சொத்து விற்பனை – சொத்துக்கு தீங்கு (412-440)

பிணைவிடுக்குற்றம் – 421 – 435, 440 பிணைவிடாக்குற்றம் 436-439

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 421 – 427, 434

குற்றமுறு அத்துமீறல் (441-462)

பிணைவிடுக்குற்றம் – 447-448, 451, 462

 பிணைவிடாக்குற்றம் 449, 450, 452-461 (451 இன்படி திருட்டாக இருத்தல்)

அனைத்துப் பிரிவுகளும் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்.

சொத்து ஆவணங்கள், அடையாளக் குறிகள் தொடர்பான குற்றங்கள் (463-477அ)

பிணைவிடுக்குற்றம் – 465, 469-477அ

பிணைவிடாக்குற்றம் 466-468, 476, 477

சொத்தையும் மற்ற அடையாளக்குறிகள் பற்றி (478-489) நாணயம் வங்கித்தாள் பற்றிய குற்றம் 489 அ-உ)

பிணைவிடுக்குற்றம் – 482-489, 489 இ,உ

 பிணைவிடாக்குற்றம் 489 அ, ஆ, ஈ

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 482-489, 489உ

குற்றமுறு ஊதிய ஒப்பந்த மீறுதல் (491) மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் (493-498) பெண்ணைக் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தல் 498அ

பிணைவிடுகுற்றம் 491-494-498

பிணைவிடாகுற்றம் 491-498, கு.பி.அ. வேண்டாகுற்றம் 498அ

அவதூறு (499-502) குற்றமுறு மிரட்டல், அவமதித்தல், தொந்தரவு செய்தல் பற்றி (503-510) குற்றங்கள் செய்ய முயற்சி (511)

பிணைவிடுகுற்றம் 500-504, 506-510

பிணைவிடாக்குற்றம் : 505 (511 குற்றத்தைப் பொறுத்து மாறுபடும்)

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 509-505, 511 ஆகியவை குற்றங்களைப் பொறுத்து)

இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர மற்ற சட்டங்களைப் பொருத்தவரை நடைமுறை : 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை (அ) தண்டனைத் தொகை, வழங்கக் கூடிய குற்றம் எனில் அது பிணைவிடு குற்றமாகவும் பிடிக்கட்டளை வேண்டும் குற்றமாகவும் கொள்ளப்படும்

நீரின்றி அமையாது இவ்வுலகு

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது நமக்கு இயற்கையாக வந்துள்ள ஐம்பூதங்கள் இவற்றிற்கு முதன்மையானது நீர்

இந்த நீருக்கு ஆகாயம் காற்று சூடு நிலம் மற்றும் வெளிச்சத்தால் தானே இயக்கம் என்ற ஒன்றும் தன்னை சுத்திகரித்து தூய்மையாக புனிதமாக என்றும் நமக்காக நிலைத்திருக்க உள்ள உயரிய வாழ்க்கை.

நாம் என்றாலும் நீர் எனலாம் நமக்கும் மூலம் இந்த ஐம்பூதங்கள் தானே இவற்றைக்கொண்டு நன்முறையில் பயன்படுத்தி தன்னை சுத்திகரித்து தூய்மையாக புனிதமாக என்றும் நமக்காக நிலைத்திருக்க உள்ள உயரிய வாழ்க்கை என எப்போது வாழ உள்ளோமோ அப்போது உலக மண்நாள் என்ற ஒன்றே நம் உலகத்தோடு ஒட்டி உறவாட என்ற மணநாள்.

பூமி தினம் என்றால் அதன் வளத்தைக்காத்தேன் காக்கிறேன் இனிமேலும் காப்பேன் என்ற வகையில் கொண்டாட வேண்டும்.

ஆனால் இக்காலத்தில் எப்பொழுதும் பூமியின் வளத்தை அழிக்கும் செயற்கை முறைகளைக்கொண்டு உரம் நெகிழி மணல் மற்றும் கனிமவளங்களை விற்று மரங்களை விளைநிலங்களை ஆக்கிரமித்து அழித்து ....

இவ்வளவையும் செய்வதை நிறுத்தாமல் உலக வெப்பமயமாக்கல் நீர் காற்று மற்றும் நில மாசடைவதற்கு என்றே நாம் நமக்கென்று வாழும்வரை மண் தினம் கொண்டாடுவது ஒரு வெட்கம் மானம் சூடு சொரணையற்ற செயல் தானே!

அம்மாவை அல்லது இவ்வுலத்துக்கே தாய் என்ற மண்ணை கூறு போட்டு விற்றுக்கொண்டு தாயுக்கு மரியாதை என்று எந்த நாளைக்கொண்டடினாலும் அவள் மகிழந்து வரம் தருவாளா? சாபம் பெற்ற பாவிகளுக்கு பாவவிமோசனம் பரிகாரம் என்பது விரைவில் அத்தாயின் மண்ணுள் அடக்கமாகிவிடுவது என்ற ஒற்றைச்செயல் தானே?

அடக்கமாகிவிடு அல்லது அடங்கிவிடு. இம் மண் உனக்கு மட்டுமே சொந்தமல்ல வருங்காலம் செழிக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். ஆனாலும் அவர்களையும் மதிக்காமல்

அறிவியல் வளர்ச்சி என்று முன்னோருக்கும் நமக்கு உண்ண உணவும் உறங்க வீடும் உடுக்க உடையும் தந்த மண்ணுக்கு செய்நன்றியில்லாத மனிதர்கள் என்றும் மண்ணுக்கு

துரோகிகள் எதிரிகள் கோழைகள் பலமற்று வாழ வழியின்றித்தன் உடல் பாகங்களை விற்றுப்பிழைக்கும் ஈனர்கள் முடமான வெற்றுப்பிண்டங்கள் என்றால் மிகையில்லை.

மனிதன் தன் சக மனிதனை மதிப்பதைவிட மறிதர்களுக்குப்பொதுவாக உள்ள ஐம்பூதங்களை மதித்து அவற்றை சீராக்க செம்மைப்படுத்தி பண்பட்ட ஒன்றாக இருக்க தன்னை அளிக்கவேண்டும் என்ற வாழ்வே நாம் வாழ்வதற்கான பொருள்.

இதுவே நம் கடமை குறிக்கோள் என்றில்லாமல் பணம் வேண்டும் என்ற ஒன்றுக்காக இயற்கையை அழிப்பது கயமை. ஈனர் வீணர் கயவர் என எதைக்கொண்டு நம்மை நம்மண்ணெனும் தாய் நம்மை அழைத்தாலும் அதற்கும் மேலான கெட்ட மனம் கொண்டவர்கள் தானே நாம்.

கல்விக் கடன் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் : உயர்நீதிமன்றம் உத்தரவு.

[பதிவு – 1,417]

கல்விக் கடன் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் : உயர்நீதிமன்றம் உத்தரவு.
--------------------------------------------------------------------------------------
மதுரை: கல்விக் கடனை வங்கிமறுப்பதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதுவிளாங்குடி ஹரிகரசுதன்,'பி.எல்.,படிக்க கல்விக் கடன் கோரி மதுரை புதுவிளாங்குடி இந்தியன் வங்கி கிளையில்விண்ணப்பித்தேன். உரிய நேரத்தில் வங்கி பரிசீலிக்கவில்லை. கடன் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். வங்கி நிர்வாகம்,'மனுதாரர் 2016 ல் பிளஸ்2 முடித்துள்ளார். தாமதமாக 2017ல் பி.எல்.,சேர்ந்துள்ளார்.இதற்கு தகுந்தகாரணங்களை தெளிவுபடுத்தவில்லை. மனுதாரரின் தந்தை பற்றிய கடன் அறிக்கையானது (சிபில் ரிப்போர்ட்), சாதகமாகஇல்லை,' என தெரிவித்தது.நீதிபதி: சாதாரண வலுவற்ற காரணங்களைக்கூறி, கல்விக் கடன் மறுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பலவழக்குகளில்தெளிவுபடுத்தியுள்ளது. அதை மீறி நிராகரிப்பது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மேற்கண்டகாரணங்களைக்கூறி கல்விக் கடன் மனுவைநிராகரிக்கக்கூடாது என தனது அனைத்து கிளைகளுக்கும் இந்தியன் வங்கி சென்னைதலைமை அலுவலகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் மனுவை சாதகமாக பரிசீலித்து, கடன் வழங்க கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Source: dinamalar ஏப் 21, 2018
-------------------------------------------------------------------------------------
கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் :Chennai: Bank fined Rs 25,000 for denying education loan
https://www.facebook.com/trduraikamaraj/posts/1307504002726814
------------------------------------------------------------------------
கல்வி கடன் வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்,
https://www.facebook.com/trduraikamaraj/posts/1230255773784971
-----------------------------------------------------------------------------
கல்வி சார்பான எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1215353938608488
--------------------------------------------------------------
என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு
https://www.facebook.com/trduraikamaraj/posts/1220044361472779

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...