கூடலூர் - பந்தலூர், கூடலூர் - நாடுகானி கூடலூர் - தேவர்சோலை வழித்தடங்களில் நகர பேருந்து இயக்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

                                பொது மேலாளர் அவர்கள்

                        தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்உதகை மண்டலம்.

                        உதகை.

 

பொருள் :     கூடலூர் - பந்தலூர், கூடலூர் - நாடுகானி கூடலூர் - தேவர்சோலை

வழித்தடங்களில் நகர பேருந்து இயக்க கேட்டல் சார்பாக.

 

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேவர்சோலை, பாடந்தொரை, 1ம் மைல்ஸ் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் நந்தட்டி, கோழிப்பாலம், மரப்பாலம், நாடுகானி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள்  மருத்துவம், வேலை, துணிகள் வாங்க மளிகை பொருட்கள் வாங்க என  பல்வேறு தேவைகளுக்கு கூடலூர் சென்று வர வேண்டிய நிலையே உள்ளது.  

 

இப்பகுதியில் செல்லும் மக்கள் அதிக அளவு தனியார் வாகணங்களில் சென்று வரும் நிலையில் அதிக கட்டணம் செலுத்தி பாதிக்கும் நிலை அதிகமாக உள்ளது. கூடலூர் முதல் பந்தலூர் வரையில் தனியாக பேருந்துகள் இல்லாமல் இதர வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகின்றது.  தேவாலா நாடுகானி மற்றும் அதையொட்டிய மக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வழித்தட பேருந்துகளில் பயணம் செய்யும் போது வழித்தட பேருந்துகள் செல்லும் பயணிகள் பெரும்பாலும் பாதிக்கின்றனர்.  

 

கூடலூர் – பந்தலூர் வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயக்கும் போது வழித்தட பயணிகள் பாதிக்காமல் செல்லவும், உள்ளுர் மக்கள் எளிதில் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பாகவும் அமையும்.    அதுபோல  கூடலூர் பாடாந்தொரை மற்றும் தேவர்சோலை வரையிலும்,  கூடலூர் மரப்பாலம் நாடுகானி வரையிலும் ஒரே பேருந்தினை நாடுகானி கூடலூர் தேவா்சோலை என இயக்கினால் பல தரப்பட்ட மக்களும் தங்களின் தேவைக்கு எளிதில் சென்று வர இயலும்.  

 

இதனால் உள்ளூர் மக்கள் பெரிதும் எளிய செலவில் சென்று வருவார்கள்.  எனவே கூடலூர் பந்தலூர் வழித்தடத்திலும்,கூடலூர் நாடுகானி கூடலூர் தேவர்சோலை வழித்தடத்திலும் நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு

 

            சி. காளிமுத்து                                                                                          சு. சிவசுப்பிரமணியம்

            தலைவர்                                                                                                        பொது செயலாளர்

Food safty

MINISTRY OF LAW AND JUSTICE

(Legislative Department)

NEW DELHI, THURSDAY, MAY 5, 2011 / VAISAKHA 15, 1933

FOOD SAFETY AND STANDARDS RULE, 2011

Download the Food Safety and Standards Rule, 2011 Pdf size:( 0.21 MB)

FSS Rule Amendments

நுகர்ச்சி அளவுக்கதிகமானால் ..

 நுகர்ச்சி


உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்? 

மக்கள் தொகைப் பெருக்கம்? 

இல்லை.

over-population அன்று, 

இன்று over-consumption தான் என்கிறார்கள். 

அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 

ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 

இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.

 population is not exactly the issue. consumption is! 

அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.

அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. 

சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 

இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?

 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 'பூஜா kit' விலை 180 ரூபாய்! 

உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!

தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 

ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!

 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 

சமீபத்திய உதாரணம் vegetable wash! 

250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 

பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 

எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.

 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 

எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 

'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!

இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது.

அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். 

நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 

எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 

64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு! 

'selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா? 

இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 

நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!

நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.

இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 

அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். 

எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 

அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. 

அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, 

அந்தத் தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. 

மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forcesகள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.

'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது.

 எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள். 

home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், shit sells!!

ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று தோன்றுகிறது. 

தினமும் 3 GB டேட்டா இலவசம். 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 

'Stop making stupid people famous' என்று சொல்வார்கள். 

அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 

மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers! 

வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 

data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்.

 Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 

விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 

இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!

மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.

 'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்.

 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?

 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.

 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான். 

'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.

 'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்.

 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 

50+...அந்தந்த வயதில் அது அது இனிக்கும். 

ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 

20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 

ஆனால் ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 

அது வெறும் over consumption ஆகவே இருக்கும்.

சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்தால் நான் காதைப் பொத்திக் கொள்வேன்.

பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?

 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?

நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 

நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 

அளவுக்கு மிஞ்சினால்.????

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மூலம்

 ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மூலம் பொருட்கள் விநியோக நடைமுறை படுத்தப்பட்டுள்ள நிலையில்

பல்வேறு பாதிப்புகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பதாக
1. நெறைய கடைகளில் நெட்ஒர்க் கிடைப்பதில்லை.  கடைகள் அமைந்துள்ள இடங்களில் நெட்ஒர்க் இணைப்பு இல்லாமல் ரேகை பதிவாகமல் அவதி படுகின்றனர். 

2. மழை காலம் என்பதால் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் நெட்ஒர்க் சேவையும் பாதிக்கிறது.  அதனால் பொருட்கள் வாங்க இயலாமல் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க இயலாமல் திரும்பி செல்லும் நிலை.

3. பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்ய 4G நெட் சேவை தேவை. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் bsnl நெட்ஒர்க் மட்டுமே பல இடங்களில் வேலை செய்கிறது.  Bsnl 4G சேவை இல்லை. மற்ற நெட்ஒர்க் சேவையிலும் 4G சேவையும் சரியாக கிடைப்பதில்லை.  இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

4. ரேஷன் கடைகளில் சனிடைசர் வழங்கப்பட வில்லை.  ஆனால் சனிடைசர் கொண்டு கைகள் சுத்த படுத்திய பின்தான் பொருட்கள் ரேகை பதிய படுகிறது என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
இதனால் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5. வயதானவர்கள் பலரின் கார்டுகள் உள்ளது. அவர்கள் பொருட்கள் வாங்க வந்து செல்வதில் மிக சிரமம் உள்ளது.  கொரனா தாக்கம் வயதானவர்களை அதிகம் தாக்கும் நிலை மற்றும் அவர்கள் வரும்போது சிக்னல் கிடைக்காமல் போனால் மீண்டும் வந்து முயற்சிக்கும் நிலை.

5. தேயிலை தோட்டங்களில் பனி புரிவோர் பலர் மழை நேரத்தில் கைகள் நனைந்து ஊறி  வருவதால் ரேகை பதியாமல் போகிறது.  பல முறை ரேஷன் கடைகளுக்கு வந்து செல்லும் நிலை.

6. பலர் நீலகிரியில் சொந்த ஊராக உள்ளது. ஆனால் திருப்பூர் கோவை உள்ளிட்ட இடங்களில் வேலைக்கு சென்றுள்ளனர்.  
தற்போது கொரனா காலம் என்பதால் அவர்கள் இங்கு வந்து செல்ல இயலாத நிலையும்  உள்ளது.

இவர்கள் அவர்கள் பனி புரியும் இடத்திற்கு கோவை அல்லது திருப்பூர் பகுதிக்கு ரேஷன் கார்டை மாற்றி கொள்ள வீட்டு முகவரி இல்லாத நிலை உள்ளது.

7. ரேஷன் கடைகளில் ஆயில் பருப்பு ஆகிய பொருட்கள் முழு ஒதுக்கீடு வரவில்லை என்பதால் சிலருக்கு ஆயில் பருப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது
.

விலைவாசிகள் தானாக உயர்வதை தடுக்க கேட்டல் சார்பாக.

 நீலகிரி மாவட்டம் 

விலைவாசிகள் தானாக உயர்வதை தடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம், 

நீலகிரி மாவட்டத்தில் கொரனா தொற்று காலத்தில் பல இடங்களில் விலைகள் உயர்த்தப்பட்டன.  இவை பெரும்பாலும் குறைக்க பட்டது.  சில இடங்களில் விலை குறைக்க வில்லை .
 
தற்போது  தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்குகின்றது.  

இதனை மையமாக வைத்து பருப்பு பயறு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  வரும் காலங்களில் இன்னும் விலை உயர்த்தி விற்க வாய்ப்பு உள்ளது.

எனவே விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு விலை உயர்வை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

விலை உயர்வு வேண்டுமென்றே உயர்த்தும் வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க  என கேட்டு கொள்கின்றோம்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
பந்தலூர், நீலகிரி மாவட்டம், 643233.
CCHEP Nilgiris

உறுப்பினர்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 பெறுனர் 

மாவட்ட ஆட்சியர் அவர்கள்

மாவட்ட ஆட்சியரகம் உதகை.

 

பொருள்       கொரனா பாதிப்பு தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள குடும்பத்தார் உறுப்பினர்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்,


நீலகிரி மாவட்டம் பந்தலூர்  கூடலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொரனா தொற்று அதிகரித்து வருகின்றது.  கொரனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புடையவர்கள் கொரனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள படுகின்றது.  ஆனால் கொரனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு கொரனா தொற்று குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளவதில்லை.


கொரனா தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து அறிவதில்லை,  இதனால் கொரனா பாதிப்பு கண்டறியபடாமல் மக்களிடையே கொரனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.

சமீபத்தில் மேங்கோரெஞ் பகுதியில் கொரனா தொற்று ஏற்பட்டது அதில் கெரனா தொற்று ஏற்பட்டவர் உடன் பணியாற்றியவர்களுடன் மட்டும் கொரனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள படுகின்றது.  பணியாற்றியவர்கள் தொடர்பில் உள்ள குடும்பத்தாருக்கு கொரனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வில்லை.

 

இதனால் பணியாற்றியவர்கள் மூலம் கொரனா தொற்று  அவர்களின் குடும்பத்தாருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது அவர்களை கண்டறியாத பட்சத்தில் கொரனா அதிக நபர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.  எனவே கொரனா தொற்று குறித்து அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளவும்,  

 

கொரனா தொற்று ஏற்படும் போது கொரனா தொற்று  பரிசோதனை மாதிரி எடுக்கப் பட்டுள்ளவர்களை பரிசோதனை முடிவு வரும்வரை  வெளியில் நடமாட தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன் 

கொரணா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம.

  

பெறுனர்

உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்

உதகை

 

              பொருள் :     விழா காலம் – விடுமுறை தினங்களில் அதிக பயணிகள் உள்ளூர் மக்கள் –

                                      அதிகம் வரும் வாய்ப்பு மற்றும் குளிர் காலம் கொரணா தொற்று

அதிகரிக்கும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம.

 

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம்

 

              நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளம் ஆக இருப்பதால் எதிர்வரும் சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விடுமுறைக் காலங்களில் அதிக பயணிகள் சுற்றுலாக் காரணமாக வெளியே இருந்து இங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன நீலகிரியில் சார்ந்தவர்கள் கோவை திருப்பூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் திரும்பி நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது, இவர்கள் வருகை 100% கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது மேலும் குளீர் காலம் தொடங்கியுள்ளதால் கொரனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம். இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் ஆகின்றது.     

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   

 

Ø கூடுதல் மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ள வேண்டும். 

 

Ø அதுபோல வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கொரனா பரிசோதனைகள் முடிவு வரும்வரை வீட்டில் தணிமையாக இருப்பதை கண்காணிப்பதும் அவசியம். 

 

Ø சுற்றுலா வாகணங்கள் மட்டுமின்றி மேட்டுபாளையம்-குன்னூர் , மேட்டுபாளையம்- கோத்தகிரி, கோவை - குந்தா வழித்தடங்கள் மற்றும்  மாவட்ட எல்லை பகுதிகளான கக்கநல்லா சோதனை சாவடி,   கூடலூர்  கீழ் நாடுகாணி,  சோலாடி, பாட்டவயல், தாளூர், நம்பியர்குன்னு,  பூலகுன்னு உள்ளிட்ட எல்லை சோதனை சாவடிகள் அனைத்து வழித்தடத்தில் நீலகிரிக்கு வரும் வாகணங்களில் கொரனா பரிசோதனை மேற்கொள்வதோடு கொரனா மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

Ø மேட்டுபாளையம் குன்னூர் மற்றும் மேட்டுபாளையம் கோத்தகிரி  வழித்தடத்தில் மேட்டுபாளையம் ஒட்டிய சமவெளி பகுதியிலேயே கொரனா  பரிசோதனை முகாம்கள்  அமைக்க வேண்டும் குறைந்த பட்சம்  5 குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொண்டால் விரைவான மாதிரி சேகரிப்பு எளிதாக அமையும். 

 

Ø அதுபோல கோவையில் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்வது எளிதாகவும் விரைவான முடிவுகள் பெறவும் உதவும்.

 

Ø ஊராட்சி மற்றும் நகராட்சி வார்டு பகுதிகளில் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி அவர்கள் மூலம் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கபடுவதால் கொரனா பரவலை கட்டுக்குள் வைக்க உதவும்,

 

Ø நோய் தாக்கம் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர்  மற்றும் ஆர்சனிக் ஆல்பம் மற்றும் அலோபதி மருந்துகள் ஆகியவை வழங்க வேண்டும்.

 

Ø மக்களிடம் நோய் தெற்று குறித்த விழிப்புணர்வை அதிகபடுத்திடவும் சுய கட்டுபாட்டுடன் இருக்கவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,

 

நோய் தாக்கம் அதிகரிக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

இப்படிக்கு

 

 

 

 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் நீலகிரி மாவட்டம். 643233

 

 

 

 

 

 

 

 https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngOTlQRFFGdDRCSU0

பாலம் அமைத்து தர வேண்டும்

பந்தலூர் அருகே அம்மன்காவு கிராமம் சக்கரகுளம் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் ஆதிவாசிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 


இந்த பகுதியில் வசிப்போர் பொன்னானி, குந்தலாடி பகுதிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வரவும், அருகில் உள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்வோரும் அருகில் ஓடும் பொன்னானி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.  இந்நிலையில் சக்கரகுளம் - புலியாடி பகுதிக்கு செல்லும் சாலையில் குறுக்கே ஆற்றை கடக்க 
மரங்களை கொண்டும் மூங்கில் கொண்டும் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலம் சமீபத்தில் பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது.

பொன்னானி ஆறு அகலமாக இருப்பதால் நீண்ட பாலம் மரங்களை கொண்டு அமைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தற்போது இந்த பாலம் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதி படுகின்றனர். 
இந்த பகுதியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல நெலக்கோட்டை ஊராட்சி மானிக்குன்னு மற்றும் சுற்று பகுதியையும், சேரங்கோடு ஊராட்சி எருமகுளம், கல்பரா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றை கடக்கும் வகையில் சிமெண்ட் பாலம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ஏற்கனவே கட்டப்பட்டது.  இதன் ஒருப்பகுதியான மானிக்குன்னு பகுதிக்கு செல்லும் பகுதியில் ஆற்றின் கரைக்கும் பாலத்திற்கும் இடையே உள்ள இணைப்பு பகுதிக்கு தடுப்பு சுவர் முறையாக கட்டப்படாமல் உள்ளதால் பாலத்தின் ஒரு பகுதி ஒற்றை சுவர் மட்டும் உள்ளது.  இதில் தான் தற்போது மக்கள் நடந்து செல்கின்றனர்.
இதில் பள்ளி மாணவர்கள், கூலி தொழிலாளிகள், பொது மக்கள் பலரும் சென்று வருகின்றனர்.
இதனால் தடுமாறி விழுந்தால் ஆற்றில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது.

எனவே இந்த பாலத்தின் இணைப்பு பக்கம் தடுப்பு சுவர் அமைத்து மண் நிரப்பி பாலத்திற்கும் மண் திட்டு பகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்தி மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Residents want Pandalur GH renovated the Hindu news

Residents want Pandalur GH renovated

Staff Reporter?
UDHAGAMANDALAM , SEPTEMBER 14, 2020 22:33 IST



Iinspection ordered to look into the condition of the building: Joint Director of Health Services

The government hospital in Pandalur, Udhagamandalam, has suffered structural damage due to years of neglect.

Leaky roofs, damp walls and damaged structures at the government hospital in Pandalur are a source of concern for local residents, who have called for funds to be sanctioned for repair works.

The hospital, visited on an average by more than 100 patients a day, is the only government healthcare facility in the taluk. Since the buildings were built four decades ago, the intense rains that characterise the region and general neglect of the buildings have led to structural damage.

“This has resulted in water seepage in walls and damaged roofs every time there is heavy rainfall in the taluk,” said S. Sivasubramaniam, secretary of the Gudalur Consumer Protection Centre.

Local residents said that the maternity ward was the most affected part of the hospital during the rain, while the hospital quarters, where doctors and nurses stay, are also damaged and the roofs had to be patched up with tarpaulin sheets.

“Added to the crumbling infrastructure, the facility also lacks enough doctors and technicians, and if anyone needs emergency care, then they will either have to travel to Sultan Bathery in Kerala or to Coimbatore, which is more than 150 km away,” said S. Anish, a resident of Pandalur.

The Gudalur Consumer Protection Centre has called on the government to renovate the hospital and to sanction additional medical facilities.

Joint Director of Health Services, Nilgiris district, S. Palanisamy, said that he was aware of the issues plaguing the Pandalur GH, and said that an inspection has been ordered to look into whether the building can be repaired or it will have to be torn down and rebuilt again.

“Once we get a report on the suitability of the buildings, we will propose a plan accordingly to improve the facilities,” said Dr. Palanisamy.

He added that the problem of water-logging occurred only during spells of heavy rain in the area.

அரசு பேருந்தில் பயணிகள் ஏற்ற

 அரசு பேருந்தில் பயணிகள் ஏற்ற மறுப்பது மக்கள் அவதி குறித்து


நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேருந்துகளில் மூன்றில் 2 பாகம் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதால்

பேருந்து களில் கூடுதல் பயணிகள் ஏற்றாமல் இறக்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம புற பேருந்துகள் அவ்வப்போது ஒரு நடை இயக்கப்படுகிறது.  இதில் குறைந்த அளவே பயணிகள் ஏற்றி செல்வதால் மக்கள் பலரும் பேருந்தில் செல்ல இயலாமல் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் பயணிகளை ஏற்றுவதால் கொரனா பரவும் என்பது வேடிக்கையானதாகவே உள்ளது.

54 பேர் செல்ல வேண்டிய பேருந்தில் 35 பேர் சென்றால் கொரனா பரவாதா? இவர்களும் ஏறும் போதும் இறங்கும் போதும் மற்ற பயணிகளை கடந்து தானே செல்ல வேண்டும்
அப்போது மற்ற பயணிகள் அருகில் செல்லும்போது பரவாதா? 

பயணிகள் படிக்கட்டு கைபிடிகள் தொட்டே ஏறுகின்றனர்.

இதர கம்பிகளை பிடித்தே பயணிக்கின்றனர்.

சீட்டுகளில் அமர்ந்து சென்றால் அவர்கள் சீட்டின் மற்ற இடங்களில் தொடத்தான் செய்கிறார்.
இதில் குறைந்த பயணி என்றாலும் கூடுதல் பயணி என்றாலும் இதே நிலை தான்.

குறைந்த பயணிகளை ஏற்றினால் மட்டும் பயணிகள்  கொரனா தாக்கம் ஏற்படாது என்பது ஏற்புடையதல்ல

கூடுதல் பயணிகளை ஏறினால் அபராதம் என்பதால் 
பயணிகளை நடு வழியில் இறக்கி விடுகின்றனர்.

பேருந்திற்கு காத்திருப்போரை ஏற்றாமல்  செல்கின்றனர்.

இதனால் பொது மக்கள் பாதிக்கபடுகின்றனர்.

தனியார் வாகனங்களில் பன்மடங்கு கட்டணம் செலுத்தி செல்லும் நிலையே உள்ளது.

எனவே இந்த நிலையை மாற்றி இருக்கை அளவுக்கு கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

பயணிகள் பாதுகாப்பிற்கு அவ்வப்போது சனிடைசர் பேருந்துகளுக்கு தெளிக்க வேண்டும்.

ஏற்கனவே
போக்குவரத்து துறை அமைச்சர் சொன்னது போல முக கவசம் அணியாத பயணிகளுக்கு குறைந்த விலையில் மாஸ்க் வழங்கி ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்ட பேருந்துகளில் வருவோரை தனிமை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது போக்குவரத்தை துண்டிக்க வேண்டும்.

என்றும் மக்கள் நலனில்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
பந்தலூர் நீலகிரி மாவட்டம்

விலை வாசி உயர்வு

நீலகிரி மாவட்டம் 

விலைவாசிகள் தானாக உயர்வதை தடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம், 

நீலகிரி மாவட்டத்தில் கொரனா தொற்று காலத்தில் பல இடங்களில் விலைகள் உயர்த்தப்பட்டன.  இவை பெரும்பாலும் குறைக்க பட்டது.  சில இடங்களில் விலை குறைக்க வில்லை .
 
தற்போது  தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்குகின்றது.  

இதனை மையமாக வைத்து பருப்பு பயறு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  வரும் காலங்களில் இன்னும் விலை உயர்த்தி விற்க வாய்ப்பு உள்ளது.

எனவே விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு விலை உயர்வை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

விலை உயர்வு வேண்டுமென்றே உயர்த்தும் வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் 

பொது மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் விலை பட்டியல் கடைகளில் முன் வைக்க வேண்டும் எனவும்  கேட்டு கொள்கின்றோம்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
பந்தலூர், நீலகிரி மாவட்டம், 643233.

CCHEP Nilgiris

விழா காலம் – விடுமுறை தினங்களில் கொரனா பரவலை தடுக்கனும்

பெறுனர்

உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்

உதகை

 

              பொருள் :     விழா காலம் – விடுமுறை தினங்களில் அதிக பயணிகள் உள்ளூர் மக்கள் –

                                      அதிகம் வரும் வாய்ப்பு மற்றும் குளிர் காலம் கொரணா தொற்று

அதிகரிக்கும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம.

 

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம்

 

              நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளம் ஆக இருப்பதால் எதிர்வரும் சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விடுமுறைக் காலங்களில் அதிக பயணிகள் சுற்றுலாக் காரணமாக வெளியே இருந்து இங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன நீலகிரியில் சார்ந்தவர்கள் கோவை திருப்பூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் திரும்பி நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது, இவர்கள் வருகை 100% கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது மேலும் குளீர் காலம் தொடங்கியுள்ளதால் கொரனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம். இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் ஆகின்றது.     

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   

 

Ø கூடுதல் மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ள வேண்டும். 

 

Ø அதுபோல வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கொரனா பரிசோதனைகள் முடிவு வரும்வரை வீட்டில் தணிமையாக இருப்பதை கண்காணிப்பதும் அவசியம். 

 

Ø சுற்றுலா வாகணங்கள் மட்டுமின்றி மேட்டுபாளையம்-குன்னூர் , மேட்டுபாளையம்- கோத்தகிரி, கோவை - குந்தா வழித்தடங்கள் மற்றும்  மாவட்ட எல்லை பகுதிகளான கக்கநல்லா சோதனை சாவடி,   கூடலூர்  கீழ் நாடுகாணி,  சோலாடி, பாட்டவயல், தாளூர், நம்பியர்குன்னு,  பூலகுன்னு உள்ளிட்ட எல்லை சோதனை சாவடிகள் அனைத்து வழித்தடத்தில் நீலகிரிக்கு வரும் வாகணங்களில் கொரனா பரிசோதனை மேற்கொள்வதோடு கொரனா மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

Ø மேட்டுபாளையம் குன்னூர் மற்றும் மேட்டுபாளையம் கோத்தகிரி  வழித்தடத்தில் மேட்டுபாளையம் ஒட்டிய சமவெளி பகுதியிலேயே கொரனா  பரிசோதனை முகாம்கள்  அமைக்க வேண்டும் குறைந்த பட்சம்  5 குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொண்டால் விரைவான மாதிரி சேகரிப்பு எளிதாக அமையும். 

 

Ø அதுபோல கோவையில் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்வது எளிதாகவும் விரைவான முடிவுகள் பெறவும் உதவும்.

 

Ø ஊராட்சி மற்றும் நகராட்சி வார்டு பகுதிகளில் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி அவர்கள் மூலம் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கபடுவதால் கொரனா பரவலை கட்டுக்குள் வைக்க உதவும்,

 

Ø நோய் தாக்கம் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர்  மற்றும் ஆர்சனிக் ஆல்பம் மற்றும் அலோபதி மருந்துகள் ஆகியவை வழங்க வேண்டும்.

 

Ø மக்களிடம் நோய் தெற்று குறித்த விழிப்புணர்வை அதிகபடுத்திடவும் சுய கட்டுபாட்டுடன் இருக்கவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,

 

நோய் தாக்கம் அதிகரிக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

இப்படிக்கு

 

 

 

 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் நீலகிரி மாவட்டம். 643233

பந்தலூர் அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் மேம்படுத்த

 பெறுனர்

            மான்புமிகு  முதல்   அமைச்சர் அவர்கள்

          தமிழ்நாடு அரசு சென்னை.

            மான்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்கள்

            சுகாதார துறை  சென்னை.

 

மான்புமிகு உள்ளாட்சிகள் துறை அமைச்சர் அவர்கள்

சென்னை

 

பொருள் :       பந்தலூர் அரசு மருத்துவமனை  அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தர

கேட்டல் முறையான சிகிச்சை அளிக்க   கேட்டல் மற்றும் தர மேம்பாடு

செய்து தர கேட்டல் சார்பாக.

 

1.                  பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமனம் மற்றும்

செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமித்தல்.

2.                  24 மணி நேரமும் சிகிச்சை அளித்தல் அதற்கேற்ப மருத்துவர்கள் நியமித்தல்

3.                  மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து தர கேட்டல்

4.                  மருத்துவமனையில் இரத்த பரிசோதகர் இதர தொழில் நுட்ப பணியாளர்கள்

நியமிக்க வேண்டும் என கேட்டல்

5.                  நோயாளிகளுக்கு  3 வேளை சத்தான உணவு வழங்குதல்

6.                  டிஜிட்டல்  எக்ஸ்ரே இயந்திரம்  மற்றும் ஸ்கேன்  E G C  இயந்திரங்கள் வழங்க

இரத்த பரிசோதனை கருவிகள்  வழங்க கேட்டல்

7.                  மருத்துவமனையில் பழுதடைந்த கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடங்கள்

அமைத்|து கொடுக்க கேட்டல்

8.                  பிரசவங்கள் பார்க்க உரிய வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் மகபேறு மருத்துவ  நிபுனர் பணியில் நியமித்தல்  தொடர்ந்து பிரசவங்கள் பார்க்க  உரிய நடவடிக்கை     எடுக்க கேட்டல்

 

9.                  டயாலிசீஸ் பிரிவு ஆரம்பிக்க வேண்டும்

10.              புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு ஏற்படுத்துதல்

11.              சிறப்பு  கிசிச்சை பிரிவு  (ஐ சி யு/ I C U ) வார்டு அமைத்து தர கேட்டல்

12.              மாதம் இரு முறை கண், காது, எலும்பு உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்க  மருத்துவர்கள் நியமித்து சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை  எடுக்க கேட்டல்

13.       

அய்யா அவர்களுக்கு

 

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் கடந்த 1998 முதல் தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.  கடந்த 2008 வரை ஒரு மருத்துவர் மருத்துவமனையாக இருந்த இந்த மருத்துவமனை தற்போது 5 ஆங்கில மருத்துவர்கள் பணிபுரிந்து சுழற்சி முறையில் 24 மணி நேர மருத்துவமனயைாக செயல்பட்டு வருகின்றது.  சில மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை தற்போது தரம் இன்றி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது.

பந்தலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தலைவலி தவிர வேறு எந்த நோய்க்கும் சரியான சிகிச்சை அளிப்பதில்லை.  பணி புரியும் மருத்துவர்கள் நோயாளிகளிடம் உரிய பரிசோதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றது.  சாதாரண நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்காத இவர்களால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

பல நோயாளிகள் விபத்தில் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற சென்றால் ஒன்றும் பாதிப்பில்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.  ஆனால் அதன்பின் தனியார் மருத்துவமனை மற்றும் கேரளா மாநிலத்திற்கு சென்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறு அடிதடி அல்லது விபத்து, மருந்து குடித்தவர்கள் என எந்த வித அவசர சிகிச்சையும் இங்கு வழங்கப்படுவதில்லை. இவர்கள் நோயாளியை கொண்டு போனவுடன் ஏதாவது காரணம் கூறி உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனை அல்லது ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துறைக்கின்றனர்.  கேட்டால் எந்தவித வசதியும் இல்லை என்கின்றனர்.

ஒரு மருத்துவர் பணிபுரிந்தபோது கூட தினசரி 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, சிறு அறுவை சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டது. மாதத்திற்கு இரு முறை குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதர சிகிச்சைகளும் நல்லமுறையில் மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பது வேதனை அளிக்கின்றது.  

இப்பகுதியில் தனியார் மருத்துவமனைகள் ஏதும் இல்லாத நிலையில் அருகில்       உள்ள    கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல 108 உள்ளிட்ட வேறு வசதிகளையும் ஏற்படுத்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருகின்றது.

பிரசவம் உட்பட அனைத்து சிகிச்சைக்கும் உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தால் பந்தலூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்கள் எதற்கு என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் அளிக்காமல் அலைகழிப்பதால் பலரும் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.  அதுபோல அவசர சிகிச்சைக்கு வரும்போது உடனடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்துவதல் நோயாளி உட்பட உறவினர்கள் அனைவரும் பதட்டப்படும் நிலையில் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

இதுபோல பல நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் அவதியடைவதும் பெரும் பாதிப்புக்குள்ளாவதும் தொடர்ந்த நிலையே உள்ளது. 

எனவே மீண்டும் இந்நிலை ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் பந்தலூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்திட முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் மருத்துவ மனை கட்டிடங்கள் பழமையானதாக உள்ளது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்கள் தற்போது உடைந்து காணப்படுகின்றது.  பழைய கூரையாக இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகி காணப்படுகின்றது.  மக்கள் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற இயலாத நிலை உள்ளது. அவை எப்போது உடைந்து விழும் என்ற அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை உள்ளது.

மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் குடியிருப்புகள் அனைத்தும் அதே நிலையில் தான் உள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் கூரையின் மேலே பிளாஸ்டிக்போர்த்தி மழை நீர் ஒழுகுவதை தடுத்து அச்சமான நிலையில் வசித்து வருகின்றனர்.  இதனால் இவர்களுக்கு உரிய குடியிருப்புகளை அமைத்து தர வேண்டியதும் அவசியம் ஆகிறது.

குடியிருப்புகளுக்கு பணிபுரிவோரிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்வதால் வேறு இடத்தில் வாடகைக்கு தங்கினாலும் இரு வேற செலவுகள் இருப்பதாக கூறுகின்றனர்.  வெளியில் தங்கும் போது அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலை ஏற்படுகின்றது. எனவே புதிய குடியிருப்பு கட்டிதர வேண்டும்

எனவே மருத்துவ மனையை மேம்படுத்தி தர

Ø அடிப்படை வசதிகள் மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வழங்கி கட்டிடங்கள் இடவசதிகள் ஏற்படுத்தி மருத்துவ தரத்தை மேம்படுத்தி அனைத்து வகையான சிகிச்சைகளும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Ø பந்தலூர் அரசு மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் வழங்கி அதனை செயல்படுத்த வேண்டும். ஸ்கேன் வசதி  ஏற்படுத்தி வாரம் ஒரு முறையேனும் முறையான பயிற்சி பெற்றவர்கள் மூலம் ஸ்கேன் எடுக்க செய்ய வேண்டும்.

 

Ø சிறப்பு மருத்துவர்கள் நியமணம் செய்து அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டும்.

 

Ø உள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு 3 வேளை  சத்துணவு வழங்கிட வேண்டும்.

 

Ø மருந்துகள் மாத்திரைகள் வழங்கும் போது உரிய சீட்டு வழங்குவதில்லை,  மேலும் மாத்திரைகள் அப்படியே வழங்கப்படுகின்றது.  எந்த மாத்திரை எப்போது சாப்பிடுவது என தெரியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே தனி சிறிய கவர்கள் வழங்கி அவற்றில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Ø இரத்த பரிசோதனை, சிறுநீர் மற்றும் இதர பரிசோதனைகள் மருத்துவமனயைிலேயே மேற்க்கொள்ள வேண்டும்.

 

Ø விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முறையான முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும். 

 

Ø பொதுமக்கள் சிகிச்சை பெற 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டிய வகையில் கூடுதல் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

 

Ø நிரந்தரமாக மகளீர்கள் சிகிச்சை பெற உதவியாக பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

 

Ø ஏற்கனவே உள்ள உடைந்த பழுதான மருத்துவமனையை உடைத்து விட்டு இரு மாடி கட்டிடமாக சிறப்பு வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் கட்டி தர வேண்டும்

 

Ø ஏற்கனவே மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளை உடைத்து விட்டு மருத்துவமனை வளாகத்தின் ஒரே பகுதியில் இருமாடி கட்டிடமாக தற்போதைய வசதிகளுக்கு ஏற்ப புதிய குடியிருப்புகள்  கட்டி கொடுக்க வேண்டும்

 

Ø நோயாளிகள் அலைகழிக்க கூடாது.  மருத்துவமனை வளாகம் சுத்தமாக பராமரிக்கவேண்டும்

மேற்கண்ட வசதிகள் செய்து தரமான சிகிச்சை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு பொதுமக்கள் சார்பில்


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்

 


போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...