கூடலூர் - பந்தலூர், கூடலூர் - நாடுகானி கூடலூர் - தேவர்சோலை வழித்தடங்களில் நகர பேருந்து இயக்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

                                பொது மேலாளர் அவர்கள்

                        தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்உதகை மண்டலம்.

                        உதகை.

 

பொருள் :     கூடலூர் - பந்தலூர், கூடலூர் - நாடுகானி கூடலூர் - தேவர்சோலை

வழித்தடங்களில் நகர பேருந்து இயக்க கேட்டல் சார்பாக.

 

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேவர்சோலை, பாடந்தொரை, 1ம் மைல்ஸ் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் நந்தட்டி, கோழிப்பாலம், மரப்பாலம், நாடுகானி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள்  மருத்துவம், வேலை, துணிகள் வாங்க மளிகை பொருட்கள் வாங்க என  பல்வேறு தேவைகளுக்கு கூடலூர் சென்று வர வேண்டிய நிலையே உள்ளது.  

 

இப்பகுதியில் செல்லும் மக்கள் அதிக அளவு தனியார் வாகணங்களில் சென்று வரும் நிலையில் அதிக கட்டணம் செலுத்தி பாதிக்கும் நிலை அதிகமாக உள்ளது. கூடலூர் முதல் பந்தலூர் வரையில் தனியாக பேருந்துகள் இல்லாமல் இதர வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகின்றது.  தேவாலா நாடுகானி மற்றும் அதையொட்டிய மக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வழித்தட பேருந்துகளில் பயணம் செய்யும் போது வழித்தட பேருந்துகள் செல்லும் பயணிகள் பெரும்பாலும் பாதிக்கின்றனர்.  

 

கூடலூர் – பந்தலூர் வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயக்கும் போது வழித்தட பயணிகள் பாதிக்காமல் செல்லவும், உள்ளுர் மக்கள் எளிதில் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பாகவும் அமையும்.    அதுபோல  கூடலூர் பாடாந்தொரை மற்றும் தேவர்சோலை வரையிலும்,  கூடலூர் மரப்பாலம் நாடுகானி வரையிலும் ஒரே பேருந்தினை நாடுகானி கூடலூர் தேவா்சோலை என இயக்கினால் பல தரப்பட்ட மக்களும் தங்களின் தேவைக்கு எளிதில் சென்று வர இயலும்.  

 

இதனால் உள்ளூர் மக்கள் பெரிதும் எளிய செலவில் சென்று வருவார்கள்.  எனவே கூடலூர் பந்தலூர் வழித்தடத்திலும்,கூடலூர் நாடுகானி கூடலூர் தேவர்சோலை வழித்தடத்திலும் நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு

 

            சி. காளிமுத்து                                                                                          சு. சிவசுப்பிரமணியம்

            தலைவர்                                                                                                        பொது செயலாளர்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...