விலை வாசி உயர்வு

நீலகிரி மாவட்டம் 

விலைவாசிகள் தானாக உயர்வதை தடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம், 

நீலகிரி மாவட்டத்தில் கொரனா தொற்று காலத்தில் பல இடங்களில் விலைகள் உயர்த்தப்பட்டன.  இவை பெரும்பாலும் குறைக்க பட்டது.  சில இடங்களில் விலை குறைக்க வில்லை .
 
தற்போது  தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்குகின்றது.  

இதனை மையமாக வைத்து பருப்பு பயறு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  வரும் காலங்களில் இன்னும் விலை உயர்த்தி விற்க வாய்ப்பு உள்ளது.

எனவே விலைவாசிகள் உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு விலை உயர்வை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

விலை உயர்வு வேண்டுமென்றே உயர்த்தும் வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் 

பொது மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் விலை பட்டியல் கடைகளில் முன் வைக்க வேண்டும் எனவும்  கேட்டு கொள்கின்றோம்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
பந்தலூர், நீலகிரி மாவட்டம், 643233.

CCHEP Nilgiris

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...