எரிவாயு வினியோக குறைகள் விவாத பொருள் அனுப்புதல் சார்பாக.


பெறுனர்

                உயர்திரு. ஆணையாளர் அவர்கள்
                உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
                எழிலகம், சேப்பாக்கம் சென்னை.

பொருள்:       மாநில நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் /
எரிவாயு வினியோக குறைகள்  விவாத பொருள் அனுப்புதல் சார்பாக.

பார்வை ;           ஆணையாளர் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களின் கடிதம் எண் ந. க. எண். நு.பா.2/001691/2019  நாள் ; 07.02.2019

அம்மையீர், அய்யா அவர்களுக்கு வணக்கம்,

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி சார்பில் கீழ்கண்ட விவாத பொருட்கள் மாநில நுகர்வோர் காலாண்டு கூட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றோம்.  தக்க நடவடிக்கை எடுத்து குறைகளை களைய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்.

விவாத பொருள் 1

எரிவாயு வினியோகம் செய்யும் பலருக்கு அரசின் மானியம் முறையாக கிடைப்பதில்லை.  மானியம் வங்கியில் செலுத்தப்படுவதாக கூறுகின்றனர்.  ஆனால் வங்கியில் வரவில்லை என்கின்றனர்.  ஆன்லைன் மூலம் புகார் அளித்தாலும் சரியான பதில் கிடைப்பதில்லை.  மக்கள் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.  இதன் மாற்றாக  வங்கி கணக்கு புத்தகம் மற்றும் எரிவாயு இணைப்பு குறித்த தகவல்களை வங்கியில் மானியம் கிடைக்கவில்லை என புகார் தெரிவிப்போருக்கு சரிபார்த்து தர ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
               
விவாத பொருள் 2

எரிவாயு வினியோகத்திற்கு போக்குவரத்து கட்டணம் என தனியாக வசூலிக்கின்றனர். வீடுகளில் வினியோகம் அதற்கான தொகை ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 50 வீதம் எரிவாயு நிறுவணங்கள் தருவதை போதும் என்ற அடிப்படையிலேயே உரிமம் பெற்ற இவர்கள்  தனியாக போக்குவரத்து கட்டணம் வசூலிப்பது எந்தவகையில் நியாயம்.  அதற்கு உரிய ரசீதும் தருவதில்லை.  இதனால் எரிவாயு நுகர்வோர்களிடம் பல லட்சம் ரூபாய் தினசரி ஏமாற்றி பறிக்கும் நிலை உள்ளது.  இதனை வரன்முறைபடுத்த வேண்டும்.

அதுபோல இன்சூரண்ஸ் என்ற பெயரில் ரூபாய் 177 வீதம் பலரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது.  எரிவாயு சிலிண்டர் வாங்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு செலுத்தும் தொகையில் இன்சூரண்ஸ் பிடித்தம் செய்யும்போது  தனியாக எதற்காக இன்சூரண்ஸ் வாங்கப்படுகின்றது.  எனவே மேற்படி ரூபாய் 177 வீதம் வசூலித்த பணத்தை சம்பந்தபட்ட ஏஜென்சிகள் மூலம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலையில் முரன்பாடுகள் வருகின்றன.  எரிவாயு தேவைக்கு பதிவு செய்யும்போது வரும் விலை, வாங்கும்போது வரும் விலை என இருவேறு விலைகள் வாங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றது.  வினியோகம் செய்யும் போது உள்ள விலை மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்த வேண்டும்.

விவாத பொருள் 3.

தற்போது வழங்கப்பட்டு வரும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு பதிவு செய்வதில்  முறைகேடு எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.  பலருக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை எனவும் சிலருக்கு உடனே கிடைக்கிறது எனவும்,  இதனால் ஏஜென்சிகள் பணம் பெற்றுக்கொண்டு இணைப்பு வழங்குகின்றது என்ற குற்றசாட்டும் உள்ளது. 



அதனை சரி செய்து அனைத்து நியாய விலை கடைகள் அருகில் சூழற்சி முறையில் முகாமிட்டு தேவை உள்ளவர்களுக்கு லேப்டாப் மூலம் அங்கேயே இணையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கு எளிதில் எரிவாயு இணைப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.  அதுபோல எரிவாயு இணைப்பு பெற்றது குறித்த தகவல் ரேசன் கடைகளுக்கும் பதிவாகும்,  மக்களும் அலைகழிக்கப்படாமல் எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவாத பொருள் 4
.
எரிவாயு சிலிண்டர் எடையை பரிசோதித்து பெற எடையளவு கருவி வாகணத்தில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  எடையை பரிசோதித்து தரப்படும் எனவும் கூறப்பட்டாலும் வாகணங்களில் எடையளவு கருவி உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது.  அதுபோல எடையிட்டு கொடுப்பதில்லை. கேட்டால் மறுப்பு தெரிவிக்கின்றனர். 

அதுபோல வழங்கும் சிலிண்டர்கள் வாகணங்களில் இருந்து தூக்கி போடுவதாலும்,  பழையனவாகியதாலும்,  அடிப்பக்கம் சிறிய ஓட்டைகள் ஏற்பட்டு கசிவு ஏற்படும் நிலை உள்ளது.  பழைய சிலிண்டர்கள் மாற்றிடவும், சரியான எடையளவுடன் சிலிண்டர்கள் வினியோகிககவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவாத பொருள்.5

எரிவாயு காலாண்டு கூட்டம் வட்டஅளவில் முறையாக நடத்தப்படுவதில்லை.  வருவாய் கோட்டாட்சியர் கூட சில நேரங்களில் கூட்டத்திற்கு வருவதேயில்லை.  இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எரிவாயு கூட்டம் நடைபெறுவதாக செய்திதாள்களில் முதல் நாள் அறிவிப்பு வரும் கூட்டம் நடக்கும் வட்டாசியர் அலுவகத்தில் கூட்டம் நடக்கும் தகவல் தெரியவில்லை என்று கூறி அனுப்பிவிடுகின்றனர்.  சரியான தகவல் தெரிவிப்பதில்லை. 

எரிவாயு கூட்டம் முறையாக அனைத்து வட்டத்திலும் மாதம் ஒரு வட்டம் வீதம் நடத்தவும்,  கூட்டம் நடத்தும்போது வருவாய் கோட்டாட்சியர்  அல்லது துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கூட்டத்தில் தலைமையேற்று நடத்தவும், எரிவாயு வினியோக மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடத்தப்படவேண்டும்.  அதில் எண்ணை நிறுவண மண்டல மேலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டியது அவசியம்                இது 6 மாதத்திற்கு ஒரு முறையேனும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

எரிவாயு சேமிப்பு மற்றும் எரிவாயு சிக்கணம், எரிவாயு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை எல்லா மக்களும் பயன்படும் வகையில் அடிக்கடி நடத்திடவும் எரிவாயு நிறுவணங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

 மேற்கொண்ட விவாதபொருட்கள் குறித்து தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இப்படிக்கு

சட்ட விழிப்புணர்வு முகாம் கூடலூர்

கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப் பெற்றது.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் கலை அறிவியல் கல்லூரி, கூடலூர் சட்ட பணிகள் ஆணைக்குழு ஆகியன சார்பில்  சமூக நீதி தினம் மற்றும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வே. சுரேஷ் தலைமை தாங்கினார். 

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திக் வரவேற்றார்.   

கூடலூர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது

சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டம் எனக்கு தெரியாது என கூறுவதே சட்டப்படி தவறு ஆகும்.  சட்டப்படி வாழவேண்டியது நம் கடமையாகும்.

 சட்டங்கள் மக்களை நெறிபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டவையாகும்,  சட்சிகள், ஆவணங்கள் மூலம் குற்றம் செய்வது நிருபணமானால் தண்டிக்கப்படுகிறது.  

தண்டிக்க வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கமல்ல, தவறுகளை திருத்திகொள்ள வேண்டும் என்பதே  நோக்கம் ஆகும்.  சட்டங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதன்மூலமே நமக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் பெற முடியும்,  சட்டம் தெரியாது என்றாலோ சட்டம் சம்பந்தமான விளக்கம் தேவைப்பட்டாலோ  சட்ட உதவிகளை செய்ய சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகின்றது. 

அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் செயல்படும் சட்ட பணிகள் ஆணைக்குழுவை நாடி பயன்படுத்தி கொள்ளலாம்.  ஆண்டுக்கு 1 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் வழக்குகளில் வாதாட இலவச வழக்கறிஞர் உதவி வழங்கப்படும். 

மாணவர்கள் இருசக்கரங்களில் செல்லும்போது கட்டாயம் தலைகவசம் அணிவதோடு, பாதுகாப்பாகவும், குறைந்த வேகத்திலும் வாகணங்களை இயக்க வேண்டும்.

  லைசென்ஸ் இல்லாமல் வாகணம் ஓட்டினால் அதற்கான இழப்பீடு எதுவும் பெற முடியாது.  சட்டங்களை சரியாக பயன்படுத்தினால் நாம் யாருக்கும் பயப்படதேவையில்லை. 

வழக்கறிஞர்கள் தான் சட்டம் படிக்கவேண்டும் என்பதில்லை. மாணவர்களும் சட்டங்களை படித்து எழை எளியோருக்கு உதவு முன்வரவேண்டும் என்றார்.  

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  சட்ட பணிகள் ஆணைக்குழு பொறுப்பாளர் மகேஷ், சமூக ஆர்வலர் மேபீல்டு மோகன், கல்லூரி பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.  

கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார். 

பொன்னானி ஆறு தடுப்பணைகள் அமைக்க வேண்டும்

பெறுனர்
                                            
உயர்திரு.  மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்.

பொருள் :    பந்தலூர் பொன்னானி ஆறு தடுப்பணைகள் அமைக்க வேண்டும் 
நீர் வீனாவை தடுக்க கேட்டல் சார்பாக..

அம்மையீர் வணக்கம்,

            நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூவமூலா பகுதியில் உற்பத்தியாகி  அத்திக்குன்னா வாளவயல், பொன்னானி பாலவயல், வழியாக கேரளா எல்லையில் நுழைந்து மீண்டும் கர்நாடாகா மாநிலம் காவிரி ஆற்றில் கலக்கும்பொன்னானி ஆறு  சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தமிழ்நாட்டிற்குள் ஓடுகின்றது.

எப்போதும் வற்றாத நீர் வரத்து உடைய இந்த ஆற்றில் கடந்த 2014,ல் பொன்னானி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் விதமாகவும், கேரளாவிற்கு செல்லும் நீரை சேமிக்கும் விதமாகவும் ஆற்றின் குறுக்கே 2 அடி உயரத்திற்கு மட்டும் தடுப்பனை கட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம்,  

அதன் அடிப்படையில் 17 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஆற்றில் மக்கள் பயன்பெறும் வகையில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்பனை அதாவது ஒரு கிலோ மீட்டார் தூரத்திற்கு 2 தடுப்பனைகள் வீதம் 34 தடுப்பனைகள் கட்ட நடவடிக்கை எடுப்படும் என்று பொதுபணி துறை மூலம் உறுதியளிக்கப்பட்டது.

கடந்த 2018 ம் ஆண்டு பந்தலூர் அருகே கூவமூலா மற்றும் அத்திக்குன்னா பகுதிகளில் சில தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது.  இதனால் இந்த பகுதி மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு பயணடைந்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை.

இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் சிரம்மப்படுகின்றனர்.  ஆறு தூர் வாரப்பட்டு அகலப்படுத்தபட்ட மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு குறைந்தது.  தற்போது சில இடங்களில் மண் சரிந்து  மீண்டும் ஆறு குறுகலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது வெயில் காலம் ஆனதால் பந்தலூர் உப்பட்டி நெல்லியாளம், பொன்னானி, பாலவயல்  மற்றும் இந்த ஆறு செல்லும் பல்வேறு  பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை  ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

துணிகள் துவைக்கவும், குளிக்கவும், கால்நடைகள் பராமரிக்கவும் தண்ணீர் தேவைக்கு தற்போது இந்த ஆற்றையே நம்பியுள்ளனர் . 

அதனால் இந்த ஆற்றினை மீதமுள்ள பகுதிகளில் விரைவில் தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
                                                                                              

சு. சிவசுப்பிரமணியம்

                                                                                                பொது செயலாளர்.  CCHEP. Nilgiris

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரி
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
காவல்துறை ஆகியன இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மேப்பில்டு மோகன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் கல்லூரி முதல்வர் சுரேஷ் , போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வளர் காசி விஸ்வநாத், காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில் கல்லூரி கண்காணிப்பாளர் ஜார்ஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கர், போக்குவரத்து காவல்துறை சத்யன், மற்றும் காவலர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி காந்தி சிலை, புதிய பேருந்து நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நாந்தட்டி வழியாக கோழிபாலம் கல்லூரியை அடைந்தது

பேருந்துகள் குறைப்பு மாணவர்கள் மக்கள் தவிப்பு

அரசு பேருந்துகள் முறையாக இயக்காததினால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  கல்லூரி மாணவர்கள் படிகட்டுகளில் தொங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பல வெளி மாவட்டங்களுக்கு வழித்தடம் நீட்டித்து இயக்கபடுகின்றது.  இதனால் உள்ளூர் கிராம பகுதிகளுக்கு இயக்கும் பேருந்துகள் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்தி்ற்கு பெரிதும் பாதிக்கப்பட்டள்ளனர்.

பந்தலூர் கூடலூர் இடையே தனியார் வாகணங்கள் இயக்குவதை தடை செய்து அரசு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்தது  அதன்படி போக்குவரத்து கழகம் இயக்கிய பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல கள்ளிக்கோட்டை, வைத்திரி, பத்தேரி உள்ளிட்ட  பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

 இதனால்  பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் தங்கள் தேவைக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் கிடைக்கும் பேருந்துகளில் அடித்து பிடித்து ஏறி செல்கின்றனர்.  

இதில் கல்லூரி மாணவர்களை முறையாக நிறுத்தி ஏற்றி செல்வதில்லை என்று புகாரும் தெரிவிக்கின்றனர்.  சிலர் மரியாதை குறைவாகவும் நடத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் நிற்கும் கோழிபாலம், மரபாலம், ஆமைக்குளம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் பேருந்துகளில்  எறிகொண்டிருக்கும் போதே பேருந்துகளை நகர்த்துவதால் மாணவர்கள் தொங்கி கொண்டே செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மாணவர்கள் தவறி விழுந்தால் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே சேரம்படி செல்லும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்தபோது தேவாலா கைத்தக்கொல்லி பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் இரு மாணவர்கள் அடிப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசு இலவச பயணத்திற்கான அடையாள அட்டை வழங்கியும், கல்லூரி பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி  பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என்று பலமுறை அறிவுறுத்தியும்,  சிலர் டிக்கெட் வாங்க செல்லி கண்டிப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அரசின் திட்டத்தில் மாணவர்கள் பயண்பெற இயலாத நிலையே தொடர்கிறது என்பது வேதனையானது.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து துறை, காவல் துறைக்கு விபத்து நடக்காமல் இருக்க  பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


நடத்தை விதிகள் என்றால் என்ன

*நடத்தை விதிகள் என்றால் என்ன*?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.
✳இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.
✳தந்தை / வளர்ப்பு தந்தை
தாய் / வளர்ப்பு தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய் மற்றும் தந்தை
கணவரின் தாய் மற்றும் தந்தை
சகோதரனின் மனைவி
சகோதரியின் கணவர்
மகளின் கணவர்
மகனின் மனைவி
இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.
✳உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :
தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.
✳அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.
அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.
✳*தனியாக வகுப்பு நடத்துதல்*
எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).
✳விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :
அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).
🌻அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :
அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).
🌻அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).
🌻மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).
அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).
இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).
*வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).*
Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).
கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.
A Group Employees may Purchase upto Rs. 80,000/-
B Group Employees may Purchase upto Rs. 60,000/-
C Group Employees may Purchase upto Rs. 40,000/-
D Group Employees may Purchase upto Rs. 20,000/-
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).
*அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :*
அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).
*அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).*
♻♻♻♻♻♻♻♻

நூலக அடையாள அட்டை வழங்கும் விழா

பந்தலூர் புனித சேவியர் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

பந்தலூர் கிளை நூலகம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோ. ஜாஸ்மின் தலைமை தாங்கினார்.  

பள்ளி தாளாளர் சகோ. செலின்   மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், பொருளாளர் செந்தாமரை, நுகர்வோர் மைய இணை செயலர் கணேசன் நிர்வாகி ராஜா, நூலக உதவியாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவாலா காவல் உதவி ஆய்வாளர் ஸ்டிபென்சன் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன் ஆகியோர் நூலகம் குறித்தும், புத்தகம் வாசிப்பின் பயன்கள், மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் விதங்கள், போட்டி தேர்வுகள் பொது அறிவு வளர்ச்சி போன்றவை குறித்து பேசினார்கள். தொடர்ந்து பள்ளியில் 5.ம் வகுப்பு படிக்கும் 104 மானாக்கர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் அமலா நன்றி கூறினார்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு !!

தமிழ்நாடு  மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு !!
வடக்கு கோட்டை சாலை,
நுழைவாயில் எண் :6,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை -600 104
தொலைபேசி :044 25342834
சட்ட உதவிக்கு :044 25342441
கட்டணம் இல்லா தொலைபேசி :1800 425 2441.
************************************************
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு!!
இந்த குழு எதற்காக செயல் படுகிறது ?
இப்படி ஒரு குழு செயல் படுவது இன்னும் பொது மக்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. !
தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டுங்கள்!
இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் ? யார்?
சட்ட உதவி பெறுபவர்களுடைய முக்கிய தகுதிகள் என்ன.?
வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்,
அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.
பெண்கள் அல்லது குழந்தைகள்.
1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.
பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.
தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.
சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.
பிரிவு 12 (எச்) இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம் 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் உள்ளவர்கள்.
மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இலவச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சேவைகள் என்னென்ன?
சிவில் வழக்குகள் சம்பந்தமாக.
குடும்பநல வழக்குகள் சம்பந்தமாக.
வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.
குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.
வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.
மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு பெற .
மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.
காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகிய வற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.
தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.
பொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம்
வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ,
அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்
இப்படி ஒரு இலவச சேவை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.?
உங்களது பிச்சனைகளை இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்.
தீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.
வழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும் .
கவலையை விடுங்கள்! வழக்கில் ஜெயிங்கள்!
மேலும்,இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.
************************************************
லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "

கர்ப்பினி உதவித்தொகை வழங்காமை. பிரசவ உதவித்தொகை வழங்க கேட்டல் சார்பாக


பெறுனர்

உயர்திரு. துணை இயக்குனர்   
பொது சுகாதார  துறை,
உதகை.

பொருள் :      அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இக்கட்டான சூழலில் மருத்துவர்கள்
பரிந்துறையின் பேரில்  வெளியில் பிரசவம் பார்ப்போருக்கு,  கர்ப்பினி
உதவித்தொகை வழங்காமை.  பிரசவ உதவித்தொகை வழங்க கேட்டல்             சார்பாக

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்

கூடலூர் பந்தலூர் பகுதியில் நகர சுகாதார நிலையங்கள் இரண்டு உட்பட 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் தலைமையில் செயல்படுகின்றது.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்பதற்கு   செவிலியர்களும் மருத்துவர்களும் பாடுபாட்டு கொண்டிருக்கின்றனர்.  மாதம் தோறும் 15 முதல் 20 வரை பிரசவங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.  இருப்பினும்,

சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க இயலாமல் போகின்றது.  கடைசி நேரத்தில் வேறு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கும் நிலை ஏற்படுகின்றது.

பந்தலூர் அரசு மருத்துவமனை மற்றும் கூடலூர் அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆவதில் சிக்கல் இருப்பின் அவசர நிலையில் சிசேரியன் செய்வதற்கான வசதிகள் முறையாக இல்லை. அதனால் பிரசவத்திற்கு மேல் சிகிச்சை என்றால் தற்போது உதகை சேட் மருத்துவமனைக்கே பரிந்துரைக்க வேண்டிய நிலை உள்ளது.  உதகை பந்தலூர் பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளதால் அவசர சிகிச்சைக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகின்றது.

அதனால் அருகில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள பத்தேரி அரசு மருத்துவமனைஅல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பினிகள் பிரசவத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்க முடியாமல் தான் வெளியில் அனுப்புகின்றனர். 

ஆனால் வெளி மாநிலத்தில் பிரசவம் பார்த்தால் அரசின் உதவித்தொகை பெற இயலாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு இரண்டாம் தவனை மற்றும் மூன்றாம் தவனை பணம் வழங்கபடுவதில்லை சிலருக்கு முதல் தவனையாக 4000 ரூபாய் கூட பலருக்கு வழங்கப்படுவதில்லை. என்ற குற்றசாட்டு உள்ளது.

இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கயில் கைவிடப்பட்டு அதன் பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு செல்வது  கர்ப்பினியின் குடும்பத்தார் விருப்பம் அல்ல. மாறாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் கவணிப்பில் ஏற்பட்ட குறையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க இயலாத சூழலில் அருகில் உள்ள கேரளா மாநில சிகிச்சைக்கு செல்வோர்  விரும்பி செல்வதில்லை.  மாறாக உயிரை காக்கும் பொருட்டு கேரளா மாநிலம் பத்தேரி அரசு மருத்துவமனை அல்லது  தனியார் மருத்துவமனையை  நாடும் நிலை ஏற்படுகின்றது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மாதமும் முறையாக பிரசவ முன் கவணிப்பிற்கு வந்து சரியான கிசிச்சை கிடைக்கும் என்று கடைசிவரை நம்பி இருந்தபின்.  கடைசியில் வெளியே வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவிடும் நிலையில் தான் தனியார் மருத்துவமனைக்கோ கேரளா மாநிலத்திற்கோ பிரசவத்திற்கு செல்கின்றனர்.

மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாட்டிற்கு பொறுப்பேற்று பயனாளிக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகையை வழங்க வேண்டியது அவசியம் கூட,

உதவித்தொகை அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்ப்பவர்களுக்கு வழங்ககுவது சரியானது. ஆனால் மேற்படி சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவர்களால் வேறு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கும் போது  பயனாளியின் குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து 

பயனாளிக்கு முழு உதவித்தொகையும் பிரசவத்திற்கு பின் வழங்கப்படும் அம்மா பரிசு தொகுப்பினையும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
நகல்: வட்டார மருத்துவ அலுவலர்
           நெலாக்கோட்டை                                                               


   


அபார்ட்மெண்ட் மேசன் விதிமுறைகள் `கள் விடுதி ஒப்பந்தம்

உங்கள் முன்பதிவு, இந்த நிலைமைகள் நேரத்தில் நடைமுறையில் இருக்கின்றன ஒப்பந்தம் வடிவம், அபார்ட்மெண்ட் மேசன் பகுதியாக (பின்வரும்: சுற்றுலா விடுதி) முடிவு ஒப்பந்தம், தனிப்பட்ட ஏற்பாடுகள் விலகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது வரை.
எனவே நீங்கள் கேட்கலாம், கவனமாக படிக்க வேண்டும் பின்வரும் நிபந்தனைகளை.
1. ஒப்பந்த மற்றும் கட்சிகள்
1.1 இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விருந்தினர்கள் தங்கும் அறைகள் வாடகை விடுதி வழங்குநர் ஒப்பந்தங்கள் அத்துடன் விடுதி வசதி வழங்கப்படும் சேவைகள் முடித்தார் ஒப்பந்தங்கள் விண்ணப்பிக்க.
1.2 வாடிக்கையாளர் இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு விண்ணப்பிக்க மட்டும், முன்கூட்டியே ஒப்பு என்றால்.
1.3 முன்பதிவு மூலம், வாய்வழி, எழுத்து, தொலைபேசி, தொலைஃபேக்ஸ ஒன்றுக்கு, இணையம் வழியாக அல்லது மின்னஞ்சல் வழியாக செய்ய முடியும், விடுதி வழங்குநர் மீது பிணைப்பு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது விருந்தினர் வழங்குகிறது.
1.4 விடுதி வழங்குநர் ஒப்பந்த தங்கும் ஆபரேட்டர் விருந்தினர் கோரிக்கையை ஏற்று மூலம் வருகிறது. சுற்றுலா விடுதி இலவச இருக்கும், எழுத்து அறை ஒதுக்கீடு உறுதி. விடுதி ஒரு மாற்றம் மையம் மூலம் ஒப்பந்தம் முடிவுக்கு இருக்க முடியும் (z.B. உள்ளூர் சுற்றுலா தகவல்) குறிப்பிடப்படுகின்றன.
1.5 ஆஃபர் உள்ளடக்கங்களை உறுதிப்படுத்தல் உள்ளடக்கங்களை இருந்து விலகியவர்கள், எனவே விருந்தினராக புக்கர் ஒரு புதிய வாய்ப்பை புக்கிங் உறுதிப்படுத்தல் உள்ளது, இந்த ஒரு காலத்தில் உள்ள 10 நாட்கள் விடுதி வழங்குநர் அல்லது அவரது பிரதிநிதி முழுவதும் எடுத்து செல்ல முடியும். இந்த காலகட்டத்தில், கூட்டு அல்லது அவரது பிரதிநிதிகள் இந்த புதிய சலுகை அடிப்படையில் மூலம் செய்பவர்கள். ஏற்று எக்ஸ்பிரஸ் அல்லது உறுதியான நடவடிக்கை இருக்கலாம் (z.B. மொத்த அளவு கொடுப்பனவு) கூட்டு அல்லது அவரது பிரதிநிதி செய்யப்படும்.
1. ஒப்பந்ததாரர்கள் புரவலன் மற்றும் சுற்றுலா விடுதி இருக்கின்றன. என்றால் பல மக்கள் ஒரு விருந்தினர் அல்லது ஒரு மூன்றாம் தரப்பு, எனவே முன்பதிவு ஆகிறது, அவர் எக்ஸ்பிரஸ் மற்றும் தனி அறிவிப்பு மூலம் இந்த பொறுப்பு ஏற்றுள்ளது என்றால், அவரது சொந்த ஒரு போன்ற தங்களது ஒப்பந்த கடப்பாடுகளை ஐந்து.
2. சேவைகள் மற்றும் திசைகள், விலை, கடமைகளை
2.1 சுற்றுலா விடுதி செயல்திறன் கடமைகளை
விடுதி தேவைப்படுகிறது, ஒப்பு தேதி மற்றும் ஒப்பு காலம் பதிவு விடுதி வழங்க உடன்பட்டது சேவைகளை வழங்க. சுற்றுலா விடுதி மூலம் எழுத்து உறுதி செய்யப்படவில்லை குறிப்பிட்ட அறைகள் வழங்கப்படும், விருந்தினர் பகுதி குறிப்பிட்ட அறைகள் வழங்கப்படும் உரிமை கிடையாது.
விடுதி கொள்கையளவில் வருகையை சேவை வழங்குநர் மூலம் முன்பதிவு 18.00 வைத்து இலவச கடிகாரம். விருந்தினர் தேவைப்படுகிறது, ஒரு எதிர்பார்க்கப்படுகிறது பின்னர் நேரம் பற்றி சேவை வழங்குநர் தெரிவிக்க.
ஏற்கனவே விருந்தினர் ஒரு வைப்பு அல்லது முழு கட்டணம் செலுத்தி வருகிறது அல்லது புக்கிங் போது கடன் அட்டை எண் குறிப்பிடப்பட்டிருந்தால், எனவே சொத்து இந்த நேரத்தை தாண்டி கிடைக்கும் நடைபெற்றது.
2.2 விருந்தினர் செயல்திறன் கடமைகளை
விருந்தினர் தேவைப்படுகிறது, பதிவு விடுதி ஏற்று பொருந்தும் அல்லது ஒப்பு ஹோட்டல் விலை கொடுக்க. இது மூன்றாம் உறைவிடம் ஸ்தாபனத்தின் விருந்தினர் கோரிக்கை தலைமையில் சேவைகள் மற்றும் செலவுகள் பொருந்தும்.
புறப்படும் ஒப்பு நாள் அறைகள் இல்லை பின்னர் விட 12:00 கடிகாரம் வழங்கும் அழிக்கப்படும். பிறகு அது ஏற்படும் சேதம் சுற்றுலா விடுதி இதனால் தினசரி அறை விகிதம் விதிக்கப்படும் அறையில் கூடுதல் வழங்க முடியும். விருந்தினர் இலவச ஆகிறது, விடுதி விலை நிரூபிக்க, இந்த குறைவான பாதிப்பு ஏற்படும் அல்லது இல்லை என்று.
2.3 விலைகள் மற்றும் விலை சரிசெய்தல்
அந்தந்த விலை அந்தந்த தீர்வைகள் மற்றும் சேவை விளக்கங்கள் பட்டியல் அல்லது தீர்மானகரமான. ஒப்பந்த உடன்படிக்கை. மேலும், சேவைகள் மற்றும் கட்டணங்கள் மாற்ற உட்பட்டவை.
ஒப்பு விலை சில அந்தந்த சட்டரீதியான மதிப்பு கூட்டப்பட்ட வரி உள்ளிட்டவை.
சுற்றுலா விடுதி என்ற தலைப்பில், ஒப்பந்தம் விலை, ஆனால் இல்லை 10 சதவீதம் சம்பள உயர்வு, விலை பொதுவாக ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்த இடையே விடுதி வசதி மற்றும் விலை போன்ற சேவைகளை இலவசமாக என்றால் விட 4 மாதங்கள் ஆகும்.
விலை ஹோட்டல் மாற்ற முடியும், விருந்தினர் பின்னர் முன்பதிவு அறைகள் / விருந்தினர்கள் எண்ணிக்கை மாற்றுகிறது, சுற்றுலா விடுதி அல்லது விருந்தினர்கள் கால மற்றும் விடுதி வழங்குநர் நன்மைகளை ஒப்புக்கொள்கிறார்.
2.4 விருந்தினர் பிற ஒப்பந்த கடமைகளை மற்றும் கடமைகளை
விருந்தினர் நோக்கம் மற்றும் கிடைக்கும் என்றால் ஒரு பயன்பாடு அல்லது ஹவுஸ் ரூல்ஸ் விதிகள் ஏற்ப, பாதுகாப்பு அறைகள் மற்றும் தளபாடங்கள் பயன்படுத்த வேண்டும் மட்டுமே பதிவு விடுதி பயன்படுத்த முடியும்.
இல்லையெனில் உடன்பட்டால் தவிர, மட்டுமே விருந்தினர் மற்றும் ஏனைய இருந்து சொத்து, மக்கள் கூறுகின்றனர் விளைவாக புக்கிங் உறுதிப்படுத்தல் இருந்து எடுக்கப்பட்ட. ஒரு மற்றவர்கள் பயன்படுத்த, குறிப்பாக subletting சுற்றுலா விடுதி முன் எழுதப்பட்ட ஒப்புதல் தேவை.
பயணி கட்டாயம் உள்ளது, எந்த குறைபாடுகளும், பயன்பாட்டில் விடுதி தொந்தரவுகள் மற்றும் கோளாறுகளை இடத்தில் மற்றும் தீர்வு கேட்டு உடனடியாக அறிக்கை. விருந்தினர் கூற்றுக்கள் கணக்குகள் மட்டும், விருந்தினர் கூற்று தவறு இல்லாமல் இருந்தால்.
ஒரு குறைபாடு அல்லது கடுமையான கோளாறு விளைவாக குடியிருப்பு, விருந்தினர் விடுதி வழங்குநர் தீர்வு ஒரு நியாயமான நேரம் வைக்க வேண்டும். விருந்தினர் இல்லாமல் நேரம் கழிந்தும் என்ற தலைப்பில் பிறகு, அசாதாரண உடனடியாக ஒப்பந்தத்தை முறித்து கொள்ள. மாற்று நடவடிக்கை இல்லை காலம் தேவைப்படுகிறது, சுற்றுலா விடுதி தீர்வு தீவிரமாக இறுதியாக மறுத்தால், தீர்வு சாத்தியமற்றது அல்லது விருந்தினர் அறையில் தொடர்ந்து நியாயமற்ற அல்லது. விருந்தினர் அசாதாரண முடிக்கப்படும் சிறப்பு வட்டி ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா விடுதி உள்ளது.
செல்லப்பிராணிகளை விடுதி வழங்குநர் ஒரு முன் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. இந்த செல்ல வகை மற்றும் அளவு மேலும் விலங்குகள் அவற்றின் எண்கள் குறிப்பிட. விருந்தினர் கீப்பர் பொறுப்பு விதிகள் சேர்த்து கொண்டு விலங்குகள் பொறுப்பு.
3. செலுத்துதல், மொத்தமாக்குதல் மற்றும் இணை
3.1 முதிர்வு விடுதி விலை மற்றும் பணம் கீழே
துணை உட்பட இனஅழிப்பு, விடுதி சேவைகள்,, Verbrauchsund இதர கட்டணங்கள் (z.B. மினி பொருட்டல்ல, தொலைபேசி, வீடியோ) விடுதி வழங்குநர் நேரடியாக புறப்படும் நாள் செலுத்த வேண்டும்.
விடுதி முன் வழங்குநர் உடன்பாடு உரிமை கூட இல்லாமல், விருந்தினர் அளவு ஒரு வைப்பு 10 செய்ய 30 மொத்த அளவு சதவீதம் கோரி. அவர் உரிமை, காரணமாக மற்றும் ஒரு இடைக்கால விலைப்பட்டியல் வெளியிட்டு விருந்தினர் பெறவேண்டியவைகளின் தங்கிய லாபம் தேவையற்ற தாமதம் இல்லாமல் பணம் கொடுத்தவர்கள்.
சுற்றுலா விடுதி கணக்கீடுகள் துப்பறியும் இல்லாமல் உடனடியாக பெறப்பட்ட செலுத்த வேண்டும். விருந்தினர் இயல்புநிலை சமீபத்திய, அவர் உள்ள இல்லை என்றால் 30 உத்தரவாதம் நாட்கள் ஒரு விலைப்பட்டியல் கட்டணம் காரணமாக தேதி மற்றும் ரசீது பின்னர். விருந்தினர் நுகர்வோர் ஆகிறது என்றால், இந்த மட்டுமே பொருந்தும், போது குறிப்பாக மசோதா இந்த விளைவுகளை ஈர்த்தது.
இயல்புநிலை வழக்கில் விடுதி உரிமை, அளவு நுகர்வோர் நலனுக்கு எதிராக 5% அளவு வணிகங்கள் இயல்புநிலை வட்டி இடையே அடிப்படை விகிதம் மற்றும் பரிமாற்றங்கள் மேலே 8% அடிப்படை வட்டி விகிதத்தை மீது வலியுறுத்தினார் வேண்டும்.
சுற்றுலா விடுதி அதிக சேதம் நிரூபிக்கும்.
இயல்புநிலை ஒவ்வொரு நினைவூட்டல், விடுதி வழங்குநர் ஒரு நினைவூட்டல் கட்டணம் வசூலிக்கலாம் 5,00 € உயர்த்த.
3.2 கடன், காசோலைகள் மற்றும் பிற செலுத்தும் முறைகள்
இது இலவச ஒவ்வொரு வழக்கில் தங்கும் இடம், அவர் வழங்கல் மீது ஏற்று என்பதை இது கடன் அட்டை. இது பொருந்தும், கடன் அட்டைகள் ஒரு அடிப்படை ஏற்பு அறிவிப்பு பலகைகள் அல்லது மூலம் காட்டப்படும் போது ஊழியர்கள் வழங்கிய தகவல்.
கடன் அட்டைகளை ஏற்று, காசோலைகள் அல்லது பணம் மற்ற வழிமுறையாக மட்டுமே செயலாக்க ஆகின்றன.
3.3 இனிய
விருந்தினர் மட்டுமே சுற்றுலா விடுதி ஒரு கூற்று எதிராக எந்த மறுக்காத அல்லது சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள கூற்றுக்கள் ஈடு அல்லது குறைக்கும்.
3.4 துணைமையான
இல்லை அல்லது சரியான நேரத்தில் ஒப்பு மொத்த அளவு ஒரு விருந்தினர் பணம், அதனால் விடுதி விருந்தினர் மூலம் செலவுகள் உட்பட, வழங்கப்பட்ட சேவை அதன் வரவுகள் பாதுகாக்க ஒரு உரிமை கொண்டு. அவர் இவ்வாறு உரிமை, கொடுப்பனவு வரை தேவைப்பட்டால் உரிமை விஷயங்களை நிறுத்தி. சட்டரீதியான விதிகளின் கீழ் அதன் கூற்றுக்கள் பூர்த்தி செய்ய இந்த பொருட்களை விற்க.
4. பவர் மாறுபாடு அல்லது விலகல்
ஒப்பந்தம் முடிந்தவுடன், அவசர அரிதான நிகழ்வுகளில் பதிவு சேவை ஒப்பந்தத்தால் வேண்டிய உள்ளடக்கங்களை இருந்து தேவையான மாற்றம் அல்லது விலகல் வர. அத்தகைய மாற்றங்கள் அனுமதி மட்டுமே, மாற்றங்கள் அல்லது விலகல்கள் கணிசமாக இருந்தால், ஒப்பந்தம் சேவை இருந்து ஒரு குறிப்பிடத்தக்க விலகல் வழிவகுக்கும் மற்றும் விலகல் ஒரு நியாயம் உள்ளது இல்லை.
ஒரு அல்லாத குறிப்பிடத்தக்க மற்றும் நியாயமான விலகல் எ.கா. ஆகிறது. பின்னர் வழக்கமாக, சேவை வழங்குநர் ஒரு விடுதி சேவை விருந்தினர் கிடைக்க போதுமான மாற்று வசதியை கொடுக்கிறது என்றால், வீட்டை வாடகைக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது அல்லது முக்கியமான செயல்பாட்டு காரணங்களுக்காக மீண்டும் வீட்டில் தேவைப்படும் என்பதால்,.
சுற்றுலா விடுதி அல்லது அவரது பிரதிநிதி கடமை வேண்டும், ஒப்பந்தம் தொடர்பான எந்த மாற்றங்கள் அல்லது விலகல்கள் உடனடியாக வாடிக்கையாளர் தெரிவிக்க. விருந்தினர் சாத்தியமான ஆகிறது. முன்பதிவு இலவசமாக அல்லது கொடுக்க வாய்ப்பு, இது போன்ற காரணங்களுக்காக முடியாது என்றால், விடுதி வசதி மூலம் குறிப்பிடப்படுகின்றன முடியாது, முன்பதிவு ஒரு இலவச ரத்து வழங்க.
விடுதி சேவை அவசர காரணங்களுக்காக சுற்றுலா விடுதி கட்டாயம் போது, என்றால், ஒரு பதிவு ரத்து, இந்த பிணைப்பு இருக்கிறது, உறுதி, என்று உடனடியாக மற்றொரு விருந்தினர், குறைந்தது அதே மாவட்டத்தில் பெறுகிறது. என்றால் வருகையை நாள் அல்லது ரத்து வருகையை மீது விருந்தினராக பயிற்சிக்கென ரத்து, , ஒரு காலத்தில் க்குள் வழங்குநர் 4 ஒரு சமமான ஹோட்டல் மணி நேரம் செய்ய.
ஒரு மாற்று விடுதி எந்த கூடுதல் செலவு அந்தந்த சேவை வழங்குநர் சுமக்க வேண்டும்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாற்றம், மற்ற உரிமைகள் நிகழ்வு (insbes. குறைப்பு மற்றும் இழப்பீடு) பாதிக்கப்படாத.
5. ஒப்பந்தம் ரத்து கிடையாது
5.1 விருந்தினர் ராஜினாமா
விருந்தினர் விடுதி வழங்குநர் அறிவிப்பு முன்பதிவு சேவை துவக்கம் எந்த நேரத்திலும் திரும்ப முடியும் ஒப்பந்தம். ராஜினாமா மூலம் எழுத்து தவறான தவிர்க்க ஆகிறது, தொலைநகல் மூலம் அல்லது வழியாக E-mail.
விருந்தினர் பதிவு ரத்து அல்லது இல்லை என்றால் முன்பதிவு சேவையை பயன்படுத்த முடியாது, அடிப்படையில் எஞ்சியுள்ள முன்பதிவு விலை / விடுதி விலை கொடுக்க விருந்தினர் பொறுப்பு.
விடுதி வணிக அதன் சாதாரண நிச்சயமாக பகுதியாக சொத்து மற்ற தொழில் தேடும், அவர் கட்டாயம் இல்லை இது, இல்லையெனில் வாடகை சிறப்பு முயற்சிகள் செய்ய.
கட்சிகள் தங்கும் வழக்கில், விடுதி நோக்கி எண்ணும். மற்ற தொழில் செய்ய முடியாது, வரவு சேமிக்கப்படும் செலவுகள் remarket சுற்றுலா விடுதி உள்ளது.
சட்டம் விடுதி சேவைகள் சேமிக்கப்படும் இந்த செலவுகள் வடிவமைப்பு பின்வரும், உறைவிடம் ஸ்தாபனத்தின் வேண்டிய தோராயமான உள்ள புரவலன் அங்கீகரிக்கப்பட்ட:
பதிவு செயல்திறன்: ஆனால்:
குடியிருப்புகள் மற்றும் சுய வழங்கல் விடுதி 90 %
படுக்கை மற்றும் காலை உணவு 80 %
அரை குழு 70 %
முழு பலகை 60 %
கூறினார் சதவீதம் அனைத்து பயன்பாடுகள் உட்பட முழு புக்கிங் விலை அடிப்படையாக கொண்டது, சுற்றுலா பங்களிப்பு மற்றும் வரிகளை எந்த பொது கடமைகளை கருதப்படுகிறது கொண்டு.
விருந்தினர் வெளிப்படையாக நிரூபிக்க ஒதுக்கப்பட்டுள்ளது, மற்ற தொழில் விடுதி வசதி மூலம் சேமிக்கப்படும் செலவுகள் கணிசமாக அதிகமாக இருப்பதாக ஏற்பட்டது அல்லது, மேலே பிளாட் விகிதங்களை கீழ் கணக்கில் எடுத்து அளவு விட. இந்த வழக்கில், விருந்தினர் மட்டுமே குறைந்த விலை கொடுக்க வேண்டிய கட்டாயம்.
அதை கடுமையாக தேவையற்ற செலவுகள் தவிர்க்க பயண காப்பீடு எடுத்து பரிந்துரைக்கப்படுகிறது என்றால் புறப்படும் எதிர்பாராத தடுப்பு.
5.2 ராஜிநாமா / சுற்றுலா விடுதி நிறுத்தம்
விருந்தினர் திரும்ப ஒரு இலவச வலது வழங்கப்பட்டது ஆகும், அதனால் ஒப்பு காலத்திற்குள் சுற்றுலா விடுதி ஒப்பந்த இருந்து விலக்கி உரிமை, ஒதுக்கப்பட்ட அறைகள் மற்றும் வாடிக்கையாளர் பின்னர் மற்ற விருந்தினர்கள் கோரிக்கைகளை உறுதியாக ஹோட்டல் ஹோட்டல் விசாரணை உறுதி இல்லை என்றால்,.
சுற்றுலா விடுதி ரத்து சரியான பிறகு கொண்டிருக்கிறது, ஒரு ஒப்பு முன்பணமாக அல்லது பாதுகாப்பு வைப்பு பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் என்றால் அவர்.
மேலும், விடுதி வழங்குநர் உரிமை, நல்ல காரணம் ஒப்பந்த இருந்து விலக்கி அல்லது. இந்த நிறுத்துவதற்காக. நல்ல காரணம் மற்ற மத்தியில், அடங்கிறது (ஆனால் இவை மட்டுமே அல்ல):
– ஒரு காரணமாக செயல்திறன் செய்ய தோல்வி
– காரணமாக மீறிய சூழ்நிலைகள் சக்தி majeure அல்லது விடுதி வசதி மற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாமையை
– ஒரு அங்கீகரிக்கப்படாத subletting அல்லது துணை, பொருள் உண்மைகள் பற்றி தவறான தகவல்களை அறையில் பதிவு செய்ய, z.B. அல்லது விடுதி வழங்குநர் விருந்தினர் அல்லது நோக்கம் நம்ப நியாயமான அடிப்படையில் இருந்தால், விடுதி சேவை சீராக செயல்பட என்று பயன்பாடு, பொது சுற்றுலா விடுதி அல்லது அவரது விருந்தினர்கள் பாதுகாப்பு அல்லது புகழ் பாதிக்கப்படும் மற்றும் சுற்றுலா விடுதி ஆபத்து பகுதியில் இருந்து இந்த அச்சுறுத்தல் ஏற்படும் இல்லை.
விடுதி திரும்ப உரிமையை உடனடியாக விருந்தினர் உள்ளது, சமீபத்திய 14 நாட்கள் அறிவு மொழிபெயர்க்கப்பட வேண்டும் எழுதி காரணம் பின்னர்.
ரத்தாகலாம் மேலே சந்தர்ப்பங்களில் சேதங்கள் விருந்தினர் கூறுகின்றனர் அல்லது மற்ற இழப்பீடு எழுகிறது இல்லை.
பாதிக்கப்பட்ட தீங்கு மற்றும் அவரது செலவுகள் இழப்பீடு சுற்றுலா விடுதி ஒரு முக்கிய கூற்று ஒப்பந்தம் நியாயமான ரத்து வழக்கு பாதிக்கப்படாமல் இருக்கிறது.
6. ஆரம்ப நீக்கம்
ஒப்பந்தம் ஒரு நிலையான நேரம் முடித்தார் என்றால், ஒப்பந்தம் கையெழுத்தாகி நேரம் காலாவதியாகும் முடிவடைகிறது.
இட ஒதுக்கீடு முழு அளவு சுற்றுலா விடுதி கூற்று விருந்தினராக மூலம் ஒப்பந்தம் ஆரம்ப முடிவு வழக்கில் பாதிக்கப்படாமல் இருக்கிறது. விடுதி வணிக அதன் சாதாரண நிச்சயமாக ஒரு பகுதியாக ஒப்பந்தம் வேறு எந்த பயன்பாடு, எனினும்,, முயற்சியை ஆனால் undrawn திறன், அவர் இதுவரை செய்யவில்லை எங்கே, சிறப்பு முயற்சிகள் செய்ய.
விருந்தினர் ஒப்பந்தம் மரணம் விடுதி வழங்குநர் முனைகள்.
7. கடமை
7.1 ஒப்பந்த கடமைகளை பொறுப்பு
விடுதி ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை ஒரு விவேகமான தொழிலதிபர் விடாமுயற்சி பொறுப்பு உள்ளது.
பாதிப்பு விருந்தினர் கூற்றுக்களை விலக்கப்பட்ட.
காயம் வாழ்க்கை பாதிப்பு ஆகியவை இல்லை, உடல் அல்லது உடல்நல, விடுதி வழங்குநர் கையிலிருந்தா பொறுப்பு என்று, மற்ற சேதங்கள், சுற்றுலா விடுதி மற்றும் சேதம் கடமை ஒரு வேண்டுமென்றே அல்லது பெரிதும் அலட்சியமாகவும் மீறி அடிப்படையில், சுற்றுலா விடுதி வழக்கமான ஒப்பந்த கடமைகளை ஒரு வேண்டுமென்றே அல்லது அலட்சியமாகவும் மீறி அடிப்படையில்.
இந்த தயாரிப்பு பொறுப்பு சட்டம் மற்றும் ஹோட்டல் கொடுத்த உத்தரவாதம் பொறுப்பு படி சுமை பாதிக்காது.
ஒரு சட்ட பிரதிநிதி அல்லது பிறர் முகவர் சுற்றுலா விடுதி கடமை மீறல்.
சுற்றுலா விடுதி செயல்திறன் உள்ள தவறுகளை அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், அறிவு மீது இந்த முயற்சியை அல்லது அதில் மீது ஒரு புகார் விருந்தினர் பெறும், சரிசெய்ய.
விருந்தினர் தேவைப்படுகிறது, நியாயமான என்று உதவி, இடையூறு தீர்க்க மற்றும் குறைந்தபட்சம் எந்த சேதம் வைக்க. கூடுதலாக, விருந்தினர் தேவைப்படுகிறது, சாத்தியம் தங்கும் வழங்குநர் எச்சரிக்கை நேரத்தில் அந்த வழக்கத்திற்கு மாறாக, அதிக பாதிப்பு.
7.2 கொண்டு சொத்து பொறுப்பு
சுற்றுலா விடுதி சட்டரீதியான ஏற்பாடுகளின் கீழ் கொண்டு சொத்து விருந்தினர் பொறுப்பாக இருக்கும், எனவே, வரை நூறு மடங்கு அறை விகிதம், € 3,500, மற்றும் பணம் அதிகபட்ச, € வரை பத்திரங்கள் மற்றும் சொத்துக்களை 800,.
பணம், € அதிகபட்சமாக வரை பத்திரங்கள் மற்றும் சொத்துக்களை 10.000,00 பாதுகாப்பான ஹோட்டலில் அல்லது € ஒரு மதிப்பு வரை 800,00 ஒரு பாதுகாப்பான வைக்க. விடுதி பரிந்துரைக்கப்படுகிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பொறுப்பு கூற்றுக்கள் காலாவதியாகிவிடகின்றன, என்றால் இழப்பு, கற்றல் பிறகு விருந்தினராக, அழிவு அல்லது விடுதி வழங்குநர் சேதம் உடனடியாக காட்ட செய்கிறது (§ 703 BGB). பத்தி விண்ணப்பிக்க மேலே சுற்றுலா விடுதி மேலும் பொறுப்பு. 7.1 ஏபிஎஸ். 2 செய்ய 4 படி.
7.3 பார்க்கிங் சேதம்
விருந்தினர் கொடுப்பனவு அல்லது கடையில் கிடைக்கும் அல்லது சுற்றுலா விடுதி ஒரு லாட் நிறுத்தும் இடத்தில் கேட்டு,, இந்த ஒரு பாதுகாப்பை ஒப்பந்தத்தை அமைக்கிறது இல்லை. சுற்றுலா விடுதி பகுதியில் ஒரு கண்காணிப்பு பொறுப்பு எழுவதில்லை.
இழப்பு அல்லது சுற்றுலா நிறுத்தப்பட்டுள்ள விடுதி அல்லது மோட்டார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா விடுதி தங்கள் உள்ளடக்கங்களை நகரும் சொத்து சேதம் அவரது பங்கு நோக்கம் அல்லது மொத்த கவனக்குறைவு வழக்குகளில் இருக்கும் இடம். Ziff. 7.1 ஏபிஎஸ். 2 செய்ய 4 அதேபோன்றே விண்ணப்பிக்கும்.
7.4 எழுப்பும் அழைப்பு, மெயில் மற்றும் விற்பனை விநியோகம்
எழுப்பும் அழைப்பு கவனத்துடன் விடுதி வசதி நடத்தப்பட்ட.
செய்தி, விருந்தினர்கள் மெயில், மற்றும் விற்பனை விநியோகம் பாதுகாப்பு கையாளப்படுகிறது. விடுதி வழங்க வேண்டும், பிடி மற்றும் ஒரு கட்டணம், அதே முன்னோக்கி. மேலே எண்ணிக்கை 1 செட் 2 செய்ய 4 அதேபோன்றே விண்ணப்பிக்கும்.
8. வரையறை
8.1 சுற்றுலா விடுதி எதிராக விருந்தினர் கூற்றுக்களை, எதுவாக சட்ட காரணம் - அநீதி ஏற்படும் கூற்றுக்கள் தவிர - ஒரு ஆண்டு முடிவுறும். சட்டரீதியான விதிகளின் கீழ் வரம்புகள் அநீதி சட்ட இருந்து கோரிக்கைகள்.
8.2 காலம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது, இதில் கூற்று எழுந்து விருந்தினர் மொத்த அலட்சியம் இல்லாமல் கூற்று சூழ்நிலை மற்றும் கடனாளி அல்லது அறிவு விடுதி வழங்குநர் நியாயப்படுத்தும் இருந்து பெறும் என்று.
1. விருந்தினர் விடுதி வழங்குநர் கூற்றை அல்லது கோரிக்கை உயர்வு கொடுத்து சூழ்நிலைகளுக்கு இடையே நிலுவையில், அதனால் வரையறை நிறுத்தி உள்ளது, விருந்தினர் அல்லது விடுதி வழங்குநர் பேச்சுவார்த்தைகளை தொடர மறுக்கிறது. வரையறை காலம் இடைநீக்கம் முடிவில் முந்தைய மூன்று மாதங்களுக்கு மேல் முடிவுறும்.
2. தனியுரிமை கொள்கை
9.1 விடுதி விருந்தினர் முன்னேற்பாடு செயல்படுத்த தனிப்பட்ட தரவுகளை சேகரித்து செயல்படுத்தி. விருந்தினர்கள் அனைத்து தரவு மத்திய தகவல் பாதுகாப்பு சட்டத்தின் பொருத்தமான விதிமுறைகளுக்கு இணங்க இங்கே (BDSG) மற்றும் டெலிசர்வீசஸ் தரவு பாதுகாப்பு சட்டம் (TDDSG) சேமிக்கப்படும் மற்றும் செயல்படுத்தப்படும்.
9.2 விருந்தினர் எப்போதும் தகவல் விடுவிக்க ஒரு உரிமை உண்டு, திருத்தம், சேமிக்கப்படும் தரவு தடுப்பதை மற்றும் நீக்கல்.
9.3 தனது அறிவிப்பை அவரது தனிப்பட்ட தரவு மட்டுமே நிறுவுதல் மற்றும் செயல்படுத்த விடுதி சேவை மற்றும் பதிவு இதர சேவைகள் செய்ய பயன்படுத்தப்படும். இங்கே, விடுதி வழங்குநர் உரிமை, விசாரணைகள் செய்ய, மூன்றாம் இந்த தரவு முன்னேற்பாடு மற்றும் செயலாக்க கட்டணம் அனுப்ப.
9.4 விடுதி இரத்து வரை என்ற தலைப்பில், ஆலோசனை நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல், விளம்பர, சந்தை ஆராய்ச்சி, மற்றும் சலுகைகள் தையல் அல்லது. சேவைகள் உயர்த்த, செயல்படுத்த மற்றும் பயன்படுத்த. ரத்தாகலாம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படாத விடுதி வழங்குநர் கூறினார்.
10. இறுதி விதிகள், அதிகார பொருந்துகின்ற சட்டம்
10.1 ஒப்பந்த மாற்றங்கள் அல்லது சேர்த்தல், இடவசதி ஒப்பந்தம் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று எழுத்து இருக்கும். வாடிக்கையாளர் ஒருதலைப்பட்ச திருத்தங்களை மற்றும் கூடுதல் செல்லாதவை.
10.2 சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் விடுதி வழங்குநர் மற்றும் விருந்தினர்கள் இடையே உள்ள ஒப்பந்த உறவே மொத்தத்தில், ஜெர்மனியில் எந்த பொது வாழ்க்கை அல்லது வணிக, ஜெர்மன் சட்டம் பிரத்தியேகமாக ஆட்சி. ஐ.நா. விற்பனை மாநாடு மற்றும் சட்ட பயன்பாடு விடுகிறது.
10.3 புகார்மற்றும்உறைவிடம் நடைமுறைக்கும் எதிராக N அதன் தலைமையகத்தில் தாக்கல்.
10.4 அதன் இடத்தில் வசிக்கும் தீர்க்கமான விருந்தினர் எதிராக ஹோட்டல் அமைத்தல் நடவடிக்கைகள், தவிர, வழக்கு தொழில் முனைவோர் எதிராக, பொது அல்லது தனியார் சட்டம் அல்லது நபர்கள் கீழ் சட்ட நபர்கள், ஒப்பந்த முடிவுக்கு பிறகு வெளிநாட்டில் தங்கள் குடியிருப்பு அல்லது இதனையடுத்து மாற்றப்பட்டது, அல்லது அதன் இருப்பிட அல்லது இதனையடுத்து நடவடிக்கை நேரத்தில் அறியப்படவில்லை. இந்த நிகழ்வுகளில், விடுதி இருக்கை ஏற்கப்படும்.
10.5 தங்குமிட இந்த பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனிப்பட்ட விதிகள் அல்லது தவறான அல்லது தவறான ஆக வேண்டும், எனவே மீதமுள்ள விதிகள் செல்லுபடியாகும் பாதிக்கப்பட்ட கூடாது. மேலும், சட்ட விதிகள் பொருந்தும்.

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...