கர்ப்பினி உதவித்தொகை வழங்காமை. பிரசவ உதவித்தொகை வழங்க கேட்டல் சார்பாக


பெறுனர்

உயர்திரு. துணை இயக்குனர்   
பொது சுகாதார  துறை,
உதகை.

பொருள் :      அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இக்கட்டான சூழலில் மருத்துவர்கள்
பரிந்துறையின் பேரில்  வெளியில் பிரசவம் பார்ப்போருக்கு,  கர்ப்பினி
உதவித்தொகை வழங்காமை.  பிரசவ உதவித்தொகை வழங்க கேட்டல்             சார்பாக

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்

கூடலூர் பந்தலூர் பகுதியில் நகர சுகாதார நிலையங்கள் இரண்டு உட்பட 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் தலைமையில் செயல்படுகின்றது.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்பதற்கு   செவிலியர்களும் மருத்துவர்களும் பாடுபாட்டு கொண்டிருக்கின்றனர்.  மாதம் தோறும் 15 முதல் 20 வரை பிரசவங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.  இருப்பினும்,

சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க இயலாமல் போகின்றது.  கடைசி நேரத்தில் வேறு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கும் நிலை ஏற்படுகின்றது.

பந்தலூர் அரசு மருத்துவமனை மற்றும் கூடலூர் அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆவதில் சிக்கல் இருப்பின் அவசர நிலையில் சிசேரியன் செய்வதற்கான வசதிகள் முறையாக இல்லை. அதனால் பிரசவத்திற்கு மேல் சிகிச்சை என்றால் தற்போது உதகை சேட் மருத்துவமனைக்கே பரிந்துரைக்க வேண்டிய நிலை உள்ளது.  உதகை பந்தலூர் பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளதால் அவசர சிகிச்சைக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகின்றது.

அதனால் அருகில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள பத்தேரி அரசு மருத்துவமனைஅல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பினிகள் பிரசவத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்க முடியாமல் தான் வெளியில் அனுப்புகின்றனர். 

ஆனால் வெளி மாநிலத்தில் பிரசவம் பார்த்தால் அரசின் உதவித்தொகை பெற இயலாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு இரண்டாம் தவனை மற்றும் மூன்றாம் தவனை பணம் வழங்கபடுவதில்லை சிலருக்கு முதல் தவனையாக 4000 ரூபாய் கூட பலருக்கு வழங்கப்படுவதில்லை. என்ற குற்றசாட்டு உள்ளது.

இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கயில் கைவிடப்பட்டு அதன் பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு செல்வது  கர்ப்பினியின் குடும்பத்தார் விருப்பம் அல்ல. மாறாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் கவணிப்பில் ஏற்பட்ட குறையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க இயலாத சூழலில் அருகில் உள்ள கேரளா மாநில சிகிச்சைக்கு செல்வோர்  விரும்பி செல்வதில்லை.  மாறாக உயிரை காக்கும் பொருட்டு கேரளா மாநிலம் பத்தேரி அரசு மருத்துவமனை அல்லது  தனியார் மருத்துவமனையை  நாடும் நிலை ஏற்படுகின்றது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மாதமும் முறையாக பிரசவ முன் கவணிப்பிற்கு வந்து சரியான கிசிச்சை கிடைக்கும் என்று கடைசிவரை நம்பி இருந்தபின்.  கடைசியில் வெளியே வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவிடும் நிலையில் தான் தனியார் மருத்துவமனைக்கோ கேரளா மாநிலத்திற்கோ பிரசவத்திற்கு செல்கின்றனர்.

மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாட்டிற்கு பொறுப்பேற்று பயனாளிக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகையை வழங்க வேண்டியது அவசியம் கூட,

உதவித்தொகை அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்ப்பவர்களுக்கு வழங்ககுவது சரியானது. ஆனால் மேற்படி சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவர்களால் வேறு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கும் போது  பயனாளியின் குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து 

பயனாளிக்கு முழு உதவித்தொகையும் பிரசவத்திற்கு பின் வழங்கப்படும் அம்மா பரிசு தொகுப்பினையும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
நகல்: வட்டார மருத்துவ அலுவலர்
           நெலாக்கோட்டை                                                               


   


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...