மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகம்



உப்பட்டி எம் எம் எஸ் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் மற்றும்  மேன்கோரன்ஜி    மருத்துவ மனை ஆகியன இணைந்து நடத்திய இம்முகமிற்கு கூடலூர்  நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா, பள்ளி கமிட்டி குழு நிர்வாகி ஐ முட்டி,சஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 
மேங்கோரஞ் மருத்துவ மனை மருத்துவ அலுவலர் ரெ மாபிரதாப்  தலைமையில் ருந்தளுனர் ரமேஷ் செவிலியர்கள் எலிசபெத் பீனா ஆய்வக நுட்புனர் ஷைனி உள்ளிட்ட குழுவினர் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர் 
பல பள்ளி மாணவர்களுக்கு ஊட்டசத்து குறைவு இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய உணவு  ட்கொள்ளவும் தினசரி சுகாதார பராமரிப்பு முறைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ருக்மணி பஷீலா ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக ஆசிரியர் சுசன் ஜோஸ் வரவேற்றார் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார். 

special programmes

                                                                                                                                                              
                                                                                                                                                   
                                                                                                                                                  
                                                                                                                                                                    
                                                                                                                                                            
                                                                                                                                                            

                                                                                                                                                                 


ரேஷன் கார்டு வழங்க புதிய நடைமுறை அமல்


புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சுற்றறிக்கை விவரம்:


புதிய ரேஷன் கார்டு பெற, உரிய படிவத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்த சான்று, பிற மாநிலத்தை சேர்ந்தவர் எனில், அங்கு பெற்ற கார்டு ஒப்புவிப்பு சான்று, முன்னர் வசித்த பகுதியில் கார்டு பெறாமல் இருந்தால், கார்டு பெறப்படவில்லை என்பதற்கான சான்று, விண்ணப்பிக்கும் முகவரியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால், இதுவரை கார்டு பெறாததற்கு தக்க ஆதாரத்துடன் காரணம்.முகவரியை உறுதிப்படுத்த, வீட்டு வரி ரசீது, வாரிய வீடு எனில் ஒதுக்கீடு உத்தரவு, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது வங்கிக் கணக்கு பாஸ் புக், போன் பில் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, அஞ்சல் துறை அடையாள அட்டை, அரசு அலுவலர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு சான்று இணைக்க வேண்டும். இதன்படி இல்லாத மனுக்கள் மீது குறிப்பு எழுதி, மேலொப்பம் இட்டு, திரும்ப வழங்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக இருந்து தனி குடித்தனம் வந்தால், தல தணிக்கை செய்து, தனி சமையல் அறையுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அட்டையில் மறைவுக்குறியீடு செய்து, கண்காணிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் திருமணமாகியிருந்தால், திருமணப் பதிவு சான்று வேண்டும்.

அனைத்து மனுக்களும், 100 சதவீதம் களப்பணியாளர் மூலம் தல தணிக்கை செய்ய வேண்டும். இதில், 20 சதவீத மனுக்களை உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மேல் தணிக்கை செய்ய வேண்டும். 10 சதவீத மனுக்களை, ஆர்.டி.ஓ., மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது துணை கலெக்டர் தணிக்கை செய்ய வேண்டும். தகுதியான நபர்களுக்கு 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும். எக்காரணத்துக்காகவும் இது தளர்த்தப்படக் கூடாது. கார்டு அச்சடித்து வந்தவுடன், அதன் விவரம், மனுதாரருக்கு "போஸ்ட் கார்டு' மூலம் தெரிவிக்க வேண்டும். புதிய அட்டை விபரங்களை உரிய ரேஷன் கடை, வட்ட வழங்கல் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். 

புதிதாக திருமணம் செய்தவர்கள், தங்கள் பெற்றோரின் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்ய இயலாத நிலையில், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, திருமண பதிவு சான்று, ரேஷன் கார்டு குறித்த விபரங்களுடன் மனு அளிக்க வேண்டும். சிறப்பு இனமாக கருதி, இந்த நீக்கல் விபரங்கள், ரேஷன் கார்டு தகவல் கம்ப்யூட்டர் பதிவில், மாற்றம் செய்து, பதிவேட்டில் பதியப்படும். 

விபரம், குடும்ப தலைவருக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாகரத்து பெற்றோருக்கு, கோர்ட் ஆணையின் அடிப்படையில் தனி கார்டு வழங்கலாம். அதைக் கொண்டே பெயர் நீக்கமும் செய்யலாம் என்பன உட்பட பல்வேறு நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.ரேஷன் கார்டு தொடர்பான பணிக்கு வருவோரிடம் அலுவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்ச மானியத்தில் பொருட்கள் வழங்கப்படுவதால், தகுதியற்றோருக்கு ரேஷன் கார்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும். உண்மையான நபர்களுக்கு சிரமமின்றி கார்டு கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலிந்த பிரிவு குழந்தைகளை அவமானப்படுத்தும் தனியார் பள்ளிகள் :அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுகோள்

 "தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தலைமுடி வெட்டப்பட்டதை கண்டித்து, தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தால், பள்ளி மூடப்பட்டது. பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் வரை, போராட்டம் தொடரும்' என, ரிஷிகுமார் சுவாமிகள் அறிவித்துள்ளார். பெங்களூரு நந்தினி லே அவுட் ஆக்ஸ்போர்டு பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தலை முடி வெட்டப்பட்டது. இது குறித்து, மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். கோபமடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற் றோர் கூறுகையில், "எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததிலிருந்து, மற்ற மாணவர்களுடன் உட்காரவும், பேசவும், விளையாடவும் விடுவதில்லை. சாப்பிடும் போதும், தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். வீட்டுப் பாடம் தருவதில்லை. வீட்டிலிருந்து கொண்டு வரும் சாப்பாட்டுப் பையை சோதனையிட்ட பின்னரே, பள்ளிக்குள் அனுப்புகின்றனர்' என்று குற்றம் சாட்டினர். பள்ளி மூடல் இதற்கு, பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. தங்களுக்கு எதுவும் தெரியாது. மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் நடந்திருக்கலாம் என்றனர். ஆனால், கன்னட அமைப்பினர், மாணவர்கள் வகுப்பில் சண்டையிடும் போது, ஆசிரியர் என்ன செய்து கொண்டிருந்தார். நீங்கள் சொல்வதை நம்ப முடியாது என்று, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், பள்ளியை மூடி விட்டு, நிர்வாகத்தினர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார், எம்.எல்.ஏ.,க்கள் தினேஷ் குண்டுராவ், நரேந்திர பாபு, ரிஷிகுமார் சுவாமிகள், தலித் அமைப்பினர், கன்னட அமைப்பினர் பள்ளி முன் கூடி, பள்ளி போர்டை கறுப்பு பெயின்டால் அழித்து, பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.தீண்டாமைஇச்சம்பவம் குறித்து, அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே ஹாகேரி கூறுகையில், ""இது குறித்து, ஏற்கனவே நேற்று (நேற்று முன்தினம்) எனக்கு தகவல் கிடைத்துள்ளது. நாகரிக சமுதாயத்தில், இத்தகைய மோசமான நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தீண்டாமை நடைமுறையில் இருப்பது போன்று, பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து, கல்வித் துறை இயக்குனரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், பொதுக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால், பள்ளி இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளது.ரத்து செய்ய கோரிக்கைஇதற்கிடையில், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை அவமானப்படுத்தும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளையும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "தனியார் பள்ளிகளுக்கு என, நன்னடத்தை விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்த விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், குழந்தைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளது.

DISTRICT CONSUMER FOURM MANIPUR


Manipur


1.             
Bishenpur
District Forum
Bishenpur
09862290838
2.             
Imphal
District Forum
Imphal
0385-24544875
3.             
Thoubal
District Forum
Thoubal
09852256977

Meghalaya


1.             
Baghmara
District Forum
South Garo Hills, Baghmara
 794102
03639-222292
2.             
Jowai
District Forum
Jaintia Hills, Jowai
 793150
03652-220721
3.             
Nongpoh
District Forum
Ri-Bhoi District, Nongpoh
 793102
03638-232221
4.             
Nongstoin
District Forum
West Khasi Hills, Nongstoin
 793119
03654-280221
5.             
Shillong
District Forum
East Khasi Hills, Shillong
 793001
0364-2504079
6.             
Tura
District Forum
West Garo Hills, Tura
 794001
03651-223835
7.             
Williamnagar
District Forum
East Garo Hills, Williamnagar
 794111
03658-220226

Mizoram


1.             
Aizawl
District Forum
Tuikhuahtlang
Aizawl 796001
0389-2327756
2.             
Champhai
District Forum
Office Of The Deputy Commissioner
Champhai
03831-34402, 34401
3.             
Kolasib
District Forum
Office Of The Deputy Commissioner
Kolasib
03837-21063
4.             
Lawngtlai
District Forum
Office Of The Deputy Commissioner
Lawngtlai
03835-232805, 232655
5.             
Lunglei
District Forum
Office Of The Deputy Commissioner
Lunglei
0372-2324020, 2324121
6.             
Mamit
District Forum
Office Of The Deputy Commissioner
Mamit
0389-2565221
7.             
Saiha
District Forum
Office Of The Deputy Commissioner
Saiha
0835-22024
8.             
Serchhip
District Forum
Office Of The Deputy Commissioner
Serchhip

States/District CONSUMER Forum Arunachal Pradesh


Arunachal Pradesh


1.             
Changlang
District Forum
C/O Deputy Commissioner
Changlang District
Changlang
03808-22221
2.             
Dibang Valley
District Forum
C/O Deputy Commissioner
Dibang Valley District
Anini
03801-222222
3.             
East Kameng
District Forum
C/O Deputy Commissioner
East Kameng District
Seppa
03787-222338
4.             
East Siang
District Forum
C/O Deputy Commissioner
East Siang District
Pasighat
0368-2222340
5.             
Kurung Kumey
District Forum
C/O Deputy Commissioner
Kurung Kumey District
Koloriang
03788-225512
6.             
Lohit
District Forum
C/O Deputy Commissioner
Lohit District
Tezu
03804-223666
7.             
Lower Dibang Valley
District Forum
C/O Deputy Commissioner
Lower Dibang Valley District
Roing
03803-222223
8.             
Lower Subansiri
District Forum
C/O Deputy Commissioner
Lower Subansiri District
Ziro
03788-224255
9.             
Papumpare
District Forum
C/O Deputy Commissioner
Papumpare District
Yupia
0360-2284900
10.          
Tawang
District Forum
C/O Deputy Commissioner
Tawang District
Tawang
03794-222221
11.          
Tirap
District Forum
C/O Deputy Commissioner
Tirap District
Khonsa
03786-222222
12.          
Upper Siang
District Forum
C/O Deputy Commissioner
Upper Siang District
Yuhgkiong
03777-222221
13.          
Upper Subansiri
District Forum
C/O Deputy Commissioner
Upper Subansiri District
Daporijo
03792-223223
14.          
West Kameng
District Forum
C/O Deputy Commissioner
West Kameng District
Bomdila
03782-222021
15.          
West Siang
District Forum
C/O Deputy Commissioner
West Siang District
Along
03783-222221

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...