கல்வி முக்கியத்துவம் புகையிலை தீமை கருத்தரங்கம்


கல்வி முக்கியத்துவம் புகையிலை தீமை கருத்தரங்கம்

பதிவு செய்த நேரம்:2012-07-18 10:47:53

பந்தலூர், :  பந்தலூரை அடுத்து கள்ளிச்சால் அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் கல்வி முக்கியத்துவம் மற்றும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கம் 

கூடலூர் நுகர்வோர் மனித வள  சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  சாலோம் அறக்கட்டளை தரப்பில் நடத்தப்பட்டது. 

விழாவிற்கு நுகர்வோர் நல மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 

கிரேசி பெண்கள் சுய உதவிக்குழு ஊக்குனர் இந்திராணி வரவேற்றார்.

 சேரன் அறக்கட்டளை நிர்வாகி தங்கராஜ், சாலோம் அறக்கட்டளை நிர்வாகி சுப்ரமணியம் மற்றும் தணிசுலாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், 

‘மாணவர்களின் கல்விக்காக அரசு பல சலுகைகளை செய்கிறது. எனவே பள்ளிச் செல்லாக் குழந்தைகளை சுய உதவிகுழு பெண்கள் கண்டறிந்து அக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் புகையிலை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் தீமைகள் புகைபிடிப்போருக்குத் தெரிவதில்லை. ஒரு காலத்தில் மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட புகையிலை தற்போது போதைக்காக பயன்படுகிறது. உங்கள் வீட்டில் புகைப்பிடிப்பவர்கள் இருந்தால் அவர்களை அதிலிருந்து விடுபட வைக்க வேண்டும்’ என்றனர். 

இதில், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தாமரை சுய உதவிக்குழு  நிர்வாகி ஷீலா லீலா, சூர்யா குழுவில் ஓமனா நாராயணி, குறிஞ்சி மலர் சதிவனஜா, சினேகா குழுவில் ஷோபா ஆகியோர் செய்திருந்தனர்


Tobacco harm Seminar



The importance of education about the evils of tobacco held a seminar for women's self group member at kallichal Government tribal residential  School 
.

 Center for consumer Environmental protection & Citizen center and shalom charitable  
trust  held.

Sivacupramaniyam ceremony was chaired by Chairman of Consumer Affairs Center.

Crazy women SHG Indrani welcomed pins. Cheran Thangaraj Trust Administrator, Trust Administrator calom attended by Subramaniam and taniculas speaking,

'Government incentives for the students' academic performance. The school users to send their children to school children to detect and take action to self-utavikulu women. Tobacco use is increasing in the country. Smokers are not aware of its evils. Currently used for drug, tobacco and drugs used for a time. If you have smokers in your house to get rid of them, it said.

The SHG women for women over 50
Participated.

Administrative arrangements for the SHG Sheila Lotus Leela, omana Narayani's group, hilly cativanaja flower, and Shobha group had more

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...