கல்வி முக்கியத்துவம் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை

பந்தலூர் : "கல்வியில் கவனம் செலுத்த, மாணவர்களுக்கு வழிகாட்டினால் தீயபழக்கங்களிலிருந்து விடுபடுவர்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையம்; 

பந்தலூர் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து, 
கல்லிச்சால் ஜி.டி.ஆர். பள்ளி வளாகத்தில்

கல்வி  முக்கியத்துவம்   புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.


















மகளிர் குழு நிர்வாகியும்  நுகர்வோர் மைய நிர்வாகியுமான  இந்திராணி வரவேற்றார் 

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,"பள்ளிகளில் கல்வி நிலையை உயர்த்திடும் வகையில், பி.டி.ஏ., நிர்வாகம் மட்டுமின்றி, பள்ளி மேலாண்மை குழுவும் செயல்படுகிறது. இதில், 25 சதவீதம் பெண்கள் இடம்பெற்றிருப்பதால், பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளின் மீது மட்டும் நாட்டம் செலுத்தாமல், அரசு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பினால் எதிர்காலத்தில் திறமை மிக்கவர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கல்வியில் சிறந்தவர்களாக, மாணவர்களுக்கு வழிகாட்டினால், தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவர்,''என்றார்.

சேரன் அறக்கட்டளை இயக்குனர் தங்கராஜ், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். 

நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஷ், நேரத்தின் அவசியம் குறித்து பேசினார்.



நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகி சுப்ரமணி, மகளிர் குழு நிர்வாகிகள் சீதா, லீலா, ஷீலா, ஓமணா, நாராயணி, சதீ, வனஜா, ÷ஷாபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


தாமரை மகளிர் குழு பிரதிநிதி சாரதா நன்றி கூறினார்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...