"தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தலைமுடி வெட்டப்பட்டதை கண்டித்து, தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தால், பள்ளி மூடப்பட்டது. பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் வரை, போராட்டம் தொடரும்' என, ரிஷிகுமார் சுவாமிகள் அறிவித்துள்ளார். பெங்களூரு நந்தினி லே அவுட் ஆக்ஸ்போர்டு பள்ளியில் படிக்கும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தலை முடி வெட்டப்பட்டது. இது குறித்து, மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். கோபமடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற் றோர் கூறுகையில், "எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததிலிருந்து, மற்ற மாணவர்களுடன் உட்காரவும், பேசவும், விளையாடவும் விடுவதில்லை. சாப்பிடும் போதும், தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். வீட்டுப் பாடம் தருவதில்லை. வீட்டிலிருந்து கொண்டு வரும் சாப்பாட்டுப் பையை சோதனையிட்ட பின்னரே, பள்ளிக்குள் அனுப்புகின்றனர்' என்று குற்றம் சாட்டினர். பள்ளி மூடல் இதற்கு, பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. தங்களுக்கு எதுவும் தெரியாது. மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் நடந்திருக்கலாம் என்றனர். ஆனால், கன்னட அமைப்பினர், மாணவர்கள் வகுப்பில் சண்டையிடும் போது, ஆசிரியர் என்ன செய்து கொண்டிருந்தார். நீங்கள் சொல்வதை நம்ப முடியாது என்று, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், பள்ளியை மூடி விட்டு, நிர்வாகத்தினர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார், எம்.எல்.ஏ.,க்கள் தினேஷ் குண்டுராவ், நரேந்திர பாபு, ரிஷிகுமார் சுவாமிகள், தலித் அமைப்பினர், கன்னட அமைப்பினர் பள்ளி முன் கூடி, பள்ளி போர்டை கறுப்பு பெயின்டால் அழித்து, பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.தீண்டாமைஇச்சம்பவம் குறித்து, அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே ஹாகேரி கூறுகையில், ""இது குறித்து, ஏற்கனவே நேற்று (நேற்று முன்தினம்) எனக்கு தகவல் கிடைத்துள்ளது. நாகரிக சமுதாயத்தில், இத்தகைய மோசமான நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தீண்டாமை நடைமுறையில் இருப்பது போன்று, பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து, கல்வித் துறை இயக்குனரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், பொதுக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால், பள்ளி இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளது.ரத்து செய்ய கோரிக்கைஇதற்கிடையில், நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை அவமானப்படுத்தும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளையும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "தனியார் பள்ளிகளுக்கு என, நன்னடத்தை விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்த விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், குழந்தைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment