கருப்பையில் நீர்க்கட்டி

 *கருப்பையில் நீர்க்கட்டி இருக்கும் போது உடலில் சில அறிகுறிகள் தென்படும்.*

கருப்பை அல்லது கருப்பை பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் ஒரு முக்கிய பகுதியாகும். கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் கருவுற்ற பிறகு, கருப்பையில் கரு உருவாகிறது. இருப்பினும், தற்போது பெண்கள் கருப்பை தொடர்பான பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஒன்று கருப்பையில் நீர்க்கட்டி, அதாவது கருப்பையில் கட்டி போன்ற பிரச்சனை. இந்தக் கட்டிகள் பெண்ணின் கருப்பையில் அல்லது அதைச் சுற்றி ஏற்படும்.


இவை தசைகள் மற்றும் நார்ச்சத்து திசுக்களால் ஆனவை. கருப்பையில் நீர்க்கட்டி ஏற்படும் போது பெண்கள் பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக, பெண்களுக்கு கருவுறாமை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. கருப்பையில் நீர்க்கட்டி உருவாவதற்குப் பின்னால் வயது அதிகரிப்பு, கர்ப்பம், உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு காரணங்கள் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.


*அடிக்கடி சிறுநீர் கழித்தல்*

கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால், சிறுநீர் கழிக்கும்போது சிரமத்தை உணரலாம். இதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி ஏற்படலாம். இருப்பினும், சிறுநீர் கழிப்பதில் சிரமத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம்.


*மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்*

கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இது தவிர, மாதவிடாய் வழக்கத்தை விட அதிக நாட்கள் நீடிப்பதும் ஒரு அறிகுறியாகும். மாதவிடாய் காலத்தில் அல்லது இடைப்பட்ட காலத்தில் அதிக இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலி இருந்தால்.



*வயிற்றின் கீழ் பகுதியில் வலி மற்றும் வீக்கம்*

அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் வீக்கம் இருந்தால், அது கருப்பை நீர்க்கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால், ஒருவருக்கு அடிவயிற்றில் அழுத்தம் மற்றும் கனத்தன்மையும் ஏற்படலாம்.


*வாந்தி*

அடிக்கடி பதட்டம் அல்லது வாந்தியெடுத்தல் கருப்பை நீர்க்கட்டியின் அறிகுறியாகவும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பலவீனத்தையும் உணரலாம்.


*இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்*

கருப்பையில் நீர்க்கட்டி உருவாவதால், உங்களுக்கு இரத்தப்போக்கு அல்லது அந்தரங்க பாகங்களில் இருந்து வெளியேறும் பிரச்சனை ஏற்படலாம்.


*கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனையை அலட்சியம் செய்வது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.*


*திருமூலர் ஹெர்பல்ஸ்**

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்


கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்

 *வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால்* கையாளப்படும் அ. *பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி*

கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்

கிராமக் கணக்குகள் பராமரித்தல் பற்றி அரசானை எண். 581 – நாள் 3-04-1987-இன் படி பணிகள் அட்டவணை உருவாக்கப்பட்டது.இக்கணக்குகள் அனைத்தும் நிலம் சம்பந்தப்பட்டது ஆகும்.புல எண் (Survey Number):ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.


 கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன. 


1. பதிவுத்துறை


 2. வருவாய்த்துறைஅதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.


1. பதிவுத்துறை:


நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.


2. வருவாய்த்துறை:


இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.பட்டா (Patta)சிட்டா (Chitta)அடங்கல் (Adangal)அ’ பதிவேடு (‘A’ Register)நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)


பட்டா (Patta) :


நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்


 :-1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்


2. பட்டா எண்


3. உரிமையாளர் பெயர்


4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)


5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை


சிட்டா (Chitta) :


ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.


அடங்கல் (Adangal) :


ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.


அ’ பதிவேடு (‘A’ Register) :


இப்பதிவேட்டில்

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)

2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),

3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,

4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,

5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.


நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :


நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .


கிரயப் பத்திரம் (Sale Deed) :


சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.


1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி

2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி

3. எவ்வளவு அளவு

4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது

5. சொத்து விவரம்சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.


 கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.


1. பதிவு எண் மற்றும் வருடம்

2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்

5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை

6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி

7. மொத்தம் எத்தனை பக்கங்கள்

8. மொத்தம் எத்தனை தாள்கள்

9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.


Land document


01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்.


 இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.


நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். 


ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். 


அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.


பதிவு செய்யும் முறை:


நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 


முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். 


அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.


 இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும்.


 பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். 


புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.


 அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். 


அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். 


அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். 


அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். 


இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்


நிலையான ‘அ’ பதிவேடு:


இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.


பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு(Descrptive Memoir) வழங்கப்பட்டுள்ளது.


இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.


நிலையான ‘அ’ பதிவேட்டின் விபரம்


கிராமத்தின் பெயரும், உரிமை முறையும்.அமைவிடம்,பரப்பும் எல்லையும்.வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு.எல்லை வரையறுத்தல்.மக்கள்தொகை.நில உடைமைகள்.புன்செய் தொகுதிகள்.பாசன விவரங்கள்.குடி மரமாத்து.கிணறுகள்.வகைப்பாடும், வரிவிதிப்பும்.மீன்வளம்.பொதுக்குறிப்பு.’அ’ பதிவேடு நடைமுறையில் கீழ்க்கண்ட 11-கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.-புல எண், உட்பிரிவு எண்.-பழைய புல எண், உட்பிரிவு எண்-ரயத்துவாரி(ர) அல்லது இனாம்(இ)-வகைப்பாடு(நன்செய்/புன்செய்)-இருபோக நன்செய் எனில் மொத்தத் தீர்வை வீதம்.-மண் வளமும், ரகமும்.-தரம்.-ஹெக்டேர் ஒன்றுக்கு தீர்வை வீதம்.-பரப்பளவு.-பட்டா எண் மற்றும் பதிவுபெற்ற நில உடைமையாளரின் பெயர்.-குறிப்பு


’அ’ பதிவேட்டைப் பராமரிப்பது


இப்பதிவேடு இரண்டு பிரதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றும், VAO விடம் ஒன்றும் பராமரிக்கப்படும்.


’அ’ பதிவேட்டினை மாற்றம் செய்யும்போது


இப்பதிவேட்டில் நிலையாக மாற்றம் செய்யும் புல உட்பிரிவு மாறுதல்கள், நில எடுப்பு, நில ஒப்படைப்பு, நில மாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் போது வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள பிரதியிலும் பதிய வேண்டும்.மேற்கண்ட மாறுதல்களை ‘அ’ பதிவேட்டில் பதியும் போது அம்மாறுதலுக்கு – உண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது அல்லது கீழ்நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு சாட்சியாய் ‘அ’ பதிவேட்டில் – சுருக்கொப்பம் செய்ய வேண்டும்.


எக்காரணத்தை கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றம் செய்யக்கூடாது.தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடும் என ஒரு கிராம்த்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.


நகரங்களில் ‘அ’ பதிவெடு பராமரிப்பு:


நகர நிலை அளவைக் கணக்கெடுக்கப்பட்ட நகராட்சியில் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கிராமங்களின் பகுதி வார்டு வாரியாகவும், நில அளவை வாரியாகவும் நிலை பதிவேடு “அ“- வில் எழுதப்பட வேண்டும்.’அ’ பதிவேட்டில் ஒவ்வொரு நகர நில அளவை எண், அதனுடைய உரிமை முறை, பரப்பளவு ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.’அ’ பதிவேட்டில் நகர்ப் பகுதியாக இருந்தால் நகர்ப் பகுதி என்றும், கிராமப் பகுதியாக இருந்தால் கிராமப் பகுதி என்று குறிப்பிட வேண்டும்.


தமிழ்நாடு அரசினால் இராணுவப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தால் – அத்தகைய நிலஅளவை எண் எதிரே குறிப்பு கலத்தில் “இராணுவ நிலம்” என்று குறிப்பிட வேண்டும் இதே போன்று ‘ இரவில்வேக்கு‘ சொந்தம் ஊராட்சிக்கு சொந்தம் என்பது குறிப்பிட வேண்டும்.


 ஜமாபந்தியின் போது ‘அ’ பதிவேடு சோதனைஜமாபந்தியின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ‘அ’ பதிவேட்டுடன் கிராமத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை ஒப்பிட்டுப் பார்த்து அதற்குண்டான சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.இதனை ஜமாபந்தி அலுவலர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.


’A’ பதிவெட்டின் உள்ளடக்கம்


இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பயும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவெட்டின் தொகுப்பாகும்.அரசு நிலம்(வகைப்பாடு)அரசின் கட்டுபாட்டில் உள்ளவைஅரசின் கட்டுபாட்டில் இல்லாதவைஎன தனித்தனியே காட்ட வேண்டும். இவற்றை ஆண்டுதோறும் ஜமாபந்தியின் போது காட்ட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும்.


‘B’ பதிவேடு


இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும்.பல்வேறு வகை இனாம்களின் கீழ் அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமை பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக் நேராக ஒவ்வோர் உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களையும் இதன் கீழ் காட்ட வேண்டும்.1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் மூலன்=ம் இவை நீக்கப்பட்டது.இவை 1963-க்கு பிறகு இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முடிந்துவிட்டன.


நிலப்பதிவேடு B1:


இது நில உரிமை பட்டயத்திற்கான நிலப்பதிவேடு – ‘B’ பதிவேட்டிலிருந்து வேறுபட்டது ஆகும்.தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம் சட்டம் 1948 – இன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும்.இவை இரண்டு பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.


பாகம் 1


தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு – மற்றும் ரயத்துவாரியாக மாற்றம் சட்டம் – 1948(1948 – ஆம் வருட XXVI ஆவது சட்டம்)-இன் கீழ் பிரிவு 17(1) (பி) மற்றும் (2) இன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களைக் கொண்டதாகும்.


பாகம் 2


இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் 1951(1951 ஆம் வருட XIX ஆவது சட்டம்)-இன் பிரிவு 34(2)-இன் கீழ் உரிமை அளிக்கப்பட்ட தேவதாசி இனாம்களைக் கொண்டதாகும்.


பாகம் 1:


கீழ்க்கண்டவாறு ஐந்து பிரிவுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது:சமயக் கொடைகள்அறக் கொடைகள்கிராம பணிக்கொடைகள்தசபந்தம் கொடைகள்மேற்கண்ட 4-லிலும் அடங்காத ஏனைய கொடைகள்.


பாகம் 2:


1951 – தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டப் பிரிவு 34(2)-இன் கீழ் விவரிக்கப்பட்ட தேவதாசி இனாம்கள் சம்பந்தப்பட்டதாகும்.கிராமத்தில் பராமரிக்கப்படும் இப்பதிவேட்டை ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.


*நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள்(Cowles) பதிவேடு*


இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.


பிரிவு – 1 :


 “Shedule Caste” – இனத்தவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.


பிரிவு – 2 : 


இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.


பிரிவு – 3 :


 நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளை பற்றியதாகும்.(இவை வருவாய்த் துறை ஆணை நிலை எண் 15-22(3) இன் கீழ் கூறப்பட்டுள்ளது)பிரிவு –


 4 : சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடையைக் குறிக்கும்


.பிரிவு – 5 : நீண்டகால குத்தகை மற்றும் இதர நிபந்தனைகளுக்கு உட்பட்ட கொடைகளுக்கு உரியதாகும்.(வருவாய்த் துறை நிலை ஆணை எண். 19 பத்தி 1- இன் கீழ் கூறப்பட்டுள்ளது)பிரிவு –


 6 : அரசியல் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஒப்படைக்குரியதாகும். (அரசு ஆணை எண், 3102 வருவாய்த் துறை, நாள் 23-12-1947 – இன் படி)


பிரிவு – 7 : நீண்டகால நிலக்குத்தகை நிலங்களைக் குறிக்கும்.


பிரிவு – 8 : SC –இனத்தவருக்கு நில எடுப்பு செய்து ஒப்படை செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு உரியதாகும்.


பட்டா:


கிராமக் கணக்கு எண் 3:


புலங்களின் பதிவுகளின் மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு ஆகும். இவை நான்கு பிரிவுகளைக் கொண்டவை.


பிரிவு – 1 : 


உரிமையை விட்டுவிடுதல்(Relinquishment


)பிரிவு – 2 : ஒப்படை(Assignment)


பிரிவு – 3 : பட்டா மாறுதல்


பிரிவு – 4 : இதர மாறுதல்கள்ஒவ்வொரு பிரிவு சம்பந்தப்பட்ட மாறுதல்களை அந்தந்தப் பிரிவின் படிவத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் எழுத வேண்டும்.மாறுதலுக்கான உத்தரவு விவரங்களைக் கலம் 8-இல் குறிப்பிட வேண்டும்.


பிரிவு – 3 : பட்டா மாறுதல்கள் சம்பந்தமான விவரத்தைப் பொருத்தமட்டில் பதிவு பெற்ற கைப்பற்றுதாரரின் பட்டா எண், பெயர் முன்னும், பின்னும் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.பிரிவு – 3 – இல் கீழ்க்கண்ட 5 உட்பிரிவுகள் அடங்கும்.


வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டவை

(A) அரசால் வாங்கப்பட்டவை

(B) தனி நபரால் வாங்கப்பட்டவைநீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யபட்டது.தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.வாரிசு முறையினரால் மாற்றப்பட்டது.12 – ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பட்டாதாரர் காணப்படாது போனாதினாலும் மாற்றப்பட்டவை.வாரிசு இன்றி அரசினை சேர்ந்த நிலங்கள்ஜமாபந்தியின் போதும், ‘அ’ பதிவேடு,அடங்கல்,10-இல் 1-சிட்டாவில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.


சிட்டா:


பட்டாவாரியான நிலவரி திட்டத்தினை காண்பிக்கும் சிட்டாவாகும்.நிலவரித் திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு வருவாய்த்துறைக்கு பராமரிப்புக்காக இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.முதல் பிரதி VAO – விடமும்2 – ஆம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்பட வேண்டும்.இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.


ஒரு பட்டாவில் அடங்கிய கைப்பற்றுதாரர்கள் பெயர்கள், சர்வே எண், புன்செய், நன்செய், விஸ்தீரணம், தீர்வை ஆகியவற்றை தொகுத்து அந்தப் பட்டாவில் ஒரு கைப்பற்றில் உள்ள மொத்த புன்செய், நன்செய்ப் பரப்புகள் மற்றும் மொத்தத் தீர்வை ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.கிராம நிலங்களில் ஏற்படும் மாறுதல்களாவன நில ஒப்படை, நில எடுப்பு, நில எடுப்பு, பதிவு மாற்றம் ஆகிய விவரங்களை கிராமக் கணக்கு எண் 3-இல் குறிப்பிட்டுள்ளபடி, இதில் அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டும்.


இந்தத் மாற்றம் எந்த ஆணையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதற்கு ஆணை எண் மற்றும் நாள் முதலிய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.இதனை சோதனை செய்ததின் அடையாளமாக வருவாய் ஆய்வாளர் அல்லது நில அளவர் கையொப்பம் பெற வேண்டும்.


பொதுவாக பட்டா மாற்றங்கள் செய்யும் போது எந்த பட்டாவில் இருந்து வரவு வைக்கப்பட்டது மற்றும் எந்த பட்டாவில் தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.இப்பதிவேட்டின் மாறுதல்களின் படி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும்.


இவை தற்போது கணினி மயமாக்கப்பட்டதால் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களை கணினியிலும் பதிவு செய்ய வேண்டும்.இந்த கணக்கு 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.


கிராமக் கணக்கு எண் 1:


இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும்.VAO பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும்.


கிராம கணக்கு எண் 1-A:


இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.நீர் பாய்ச்சப்பட்ட, நீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம் 2 முதல் 10 வரை குறிக்க வேண்டும்.இந்தக் கணக்கை கணக்கு எண்1 உடன் பிரதி மாதம் 25-ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும்.


கிராம கணக்கு எண் 2:


இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும்.அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும், மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆகும்.ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கு இக்கணக்கை பராமரிக்க வேண்டும்.


கிராமக் கணக்கு எண் 2-க்கு C உள்ளடக்கம்


வருவாய்த் துறையின் பொறுப்பின் கீழ் உள்ள அரசு புறப்போக்கில் உள்ள மர விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.இது நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும்.


அரசுத் தோட்டங்கள்குடிகளுடைய சொந்தத் தோப்புகள்(வருவாய் நில எண். 19-இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீண்ட கால நிலக் குத்தகைகள், குடிமக்களுடைய சொந்தத் தோப்புகளில்ன் கீழ் வரும்)அரசால் வரிவிதிக்கப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டு, ஆனால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனி மரங்கள்உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆனால் உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்.


*குறு வட்டம்....*


குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா (ஆங்கிலம்:


 FIRKA) என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறு வட்டம் (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன.[1][2] வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[மண்டல துணை வட்டாட்சியர்] இருப்பார்.


 இவர் பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.


பணிகள்வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், பரிந்துரைகளின்படி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.மாவட்ட அளவில், வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க நியமிக்கப்படும் மேல் அலுவலருக்கு உதவி செய்வதும், அதுகுறித்த தகவல்கள், அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.


மாவட்ட ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள கிராமநிருவாக அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.


நில அளவை


சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறுவட்டம் (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன. இந்த வருவாய் குறுவட்டம் நில அளவைத் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக குறுவட்ட அளவர் இருப்பார். 


இவரால் நில அளவை குறித்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து நில அளவைப் பணிகளையும் செய்து வரைபடம் தயாரித்து, அறிக்கையுடன் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.


பணிகள்வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளின் இடத்தணிக்கைக்கு உதவுவார். அவசியமேற்பட்டால் வரைபடம் தயாரித்து வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.ஒவ்வொரு வருவாய் கிராமத்திலுள்ள நில உடைமையாளர்கள் பெற்ற கிரைய ஆவணத்தின் அடிப்படையிலும், உரிய வரைபடம் தயாரித்து அறிக்கைகளுடன் பட்டா மாறுதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அரசு சார்ந்த நில பரிவர்த்தனை, நில எடுப்பு, நில ஒப்படை போன்ற பணிகளை செய்து வரைபடத்துடன் அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.


 *சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்....*


கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சாதிச்சான்று (Community Certificate)


மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது.


சாதிச்சான்றின் பயன்:


மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும்.அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும்.பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காகவும்மத்திய / மாநில பொதுத்துறையில் பணியில் சேர்வதற்கும்.தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இந்த சாதிச்சான்றுகள் பெரிதும் உதவியாக உள்ளன.


OBC சான்றிதழ்


மத்திய அரசு அலுவலகங்களில் அல்லது துறைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு, இதர பிற்பட்ட வகுப்பு (OBC) சாதி சான்றிதழ் வரையறுக்கப்பட்டு அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. (அரசாணை எண். 12 பிற்பட்ட வகுப்பு, மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை நாள் 28-03-1994)-இல் உள்ளது.


சாதிச்சான்று வழங்குவதற்காக அனுப்பப்படும் மனுக்கல் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :-


சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு சாதிப்பிரிவைப் பொறுத்து VAO தனித்தனி அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வார்.


வகுப்புஅதிகாரம் பெற்ற அலுவலர்பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினார்தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர்கள்ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்புவட்டாட்சியர்பழங்குடியினர்வருவாய்க் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிட அலுவலர்


சாதிச்சான்று கோரும் மனு மற்றும் விசாரணை


சாதிச்சான்று வழங்கக் கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டியதில்லை (அரசாணை (நிலை) எண் 97, வருவாய் – நாள் 15-2-1994).


அரசாணை (நிலை) எண் 2240, வருவாய்த் துறை, நாள் 30-11-1988-இல் கூறியபடி :-


அரசால் வரையறுக்கப்பட்டுள்ள 14 கலங்கள் கொண்ட ஒரு பதிவேட்டினை, கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து அப்பதிவேட்டில் விசாரணை மேற்கொண்ட விவரங்களைப் பதிந்த பின் தனது அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) மூலம் அனுப்புதல் வேண்டும்.


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு சான்று வழங்குமாறு கோரப்படும் மனுக்களை தொகுத்து, அதன் பட்டியல் நகல்களை ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் கிராமச் சாவடிகளில் விளம்பரப்படுத்தி மேற்காணும் சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் விசாரணைக்கு முன் கண்டறியலாம்.


சாதிச்சான்று வழங்கும் முன் விசாரணையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:


மனுதாரரின் சாதியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட சான்றாவணங்களைச் சரிபார்த்தல்.


i) நிரந்தர முகவரி மற்றும் இடம்


ii) பெற்றோரின் சாதிச்சான்றை சரிபார்த்தல்


பெற்றோர்கள் இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதர / சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றின் மெய்த்தன்மையை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.


அரசுப் பணியில் பணிபுரியும், பெற்றோர்களின் பணிப்பதிவேட்டின் சாதிக்குறிப்பு கொண்ட முதல் பக்க நகல், உரிய அலுவலர்களால் மேலொப்பம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


சான்றுகளுக்கு பழைய பத்திரம் அல்லது பெற்றோர்கள் / உறவினர்களின் பள்ளிச்சான்று, பெற்றோர், மற்றும் மூதாதையர் வாழ்ந்த இடம், நிலையானச் சொத்துகள் உள்ள இடம், தாய்மொழி, திருமணம், கல்வி, பயிலும் இடம் அல்லது பயின்ற இடம் ஆகியவைகளை பரிசீலிக்கலாம். (அரசாணை (பல்வகை) எண் 2510, சமூக நலத்துறை, நாள் 23-09-1986)


உள்ளூர் விசாரணை, செய்யும் தொழில், பெறுகின்ற வருமானம்.


பழக்கவழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படுகின்ற சாதிக்குரிய வம்சாமுறை, கலாச்சாரம் போன்றவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல், தகவலளிக்கக்கூடிய ஏனையோரையும் முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும்.


மனுதாரரிடம் நேரடி விசாரணை மற்றும் தாக்கல் செய்யும் சான்றாவணங்களைப் பரிசீலித்தல்.


நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றின் ஒப்படை தொடர்பான ஆவணங்களில் மனுதாரர் அல்லது பெற்றோர்கள் வகுப்பு குறிப்பிடப்பட்டிருக்கும், இதனையும் சரிபார்க்கலாம்.


பெற்றோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கிறார்களா அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறார்களா?


கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்ட முறையில் விசாரணை (Independent Enquiry)மேற்கொள்ள வேண்டும். சாதிச் சங்கங்கள் வழங்குகின்ற சான்றுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பழங்குடியினர் / அட்டவணை வகுப்பு / மிகப் பிற்பட்ட வகுப்பு / சீர் மரபினர் பட்டியலில் இடம் பெறாத எந்த சாதியினருக்கும் சான்றுகள் வழங்கக் கூடாது. (அரசு கடித எண் 11832 / பி.வ. / 92-5, பிற்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை, நாள் 29-10-1992).


சாதிச்சான்று வழங்கும் போது


பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.


சாதி மற்றும் சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்க்கும் விழிப்புக் குழுக்கள்:


மாவட்ட விழிப்புக் குழு:இதன் தலைவர் - மாவட்ட ஆட்சியர்உறுப்பினர் - மானிடவியல் நிபுணர்செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு) (பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்)மாநில விழிப்புக் குழு:மாவட்ட விழிப்புக் குழு ஆணைக்கெதிராக மாநில விழிப்புக் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம். 


மாநில விழிப்புக்குழு உறுப்பினர்கள்.தலைவர் – அரசு செயலர், ஆதி திராவிடர் நலத்துறை.உறுப்பினர் – இயக்குநர், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை.செயல் உறுப்பினர்(ஆதி திராவிடர் வகுப்பு) – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்


.(பழங்குடியினர் வகுப்பு) – பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்(அரசாணை எண். 19, ஆதி திராவிடர் நலத்துறை, நாள் 24-01-2005)பிற்பட்ட வகுப்பு, பிற்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பு : சாதிச்சான்று ஆய்வுதலைவர் : அரசு செயலர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.செயல் உறுப்பினர்கள் : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்.


சாதிச்சான்று தவறுதலாக வழங்கும் நிலையில் VAO:


ஒரு கிராமத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து சாதிச்சான்று வழங்க VAO முழு பொறுப்பு உள்ளவர் ஆகிறார்.தவறுதலாக சாதிச்சான்று பரிந்துரைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு VAO ஆட்படுவார்.


பிறப்பிட/இருப்பிடச் சான்று (Nativity Residential Certificate)


பிறப்பிடம் : பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தைக் குறிக்கும். (அரசாணை (பல்வகை) எண் 111ம், ஆதி திராவிடர் நலத்துறை, நாள் :06-07-2005)


இருப்பிடம் : இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தைக் குறிக்கும்.


இச்சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:


இச்சான்று வேண்டுபவர் ரூ.2க்கான கட்டண வில்லையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்.இருப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் வசிக்க வேண்டும்.வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ செலுத்தி இச்சான்றை பெறலாம்.


வருமானச் சான்று (Income Certificate)


இச்சான்று கல்வி உதவித்தொகை பெறவும், பள்ளி & கல்லூரிகளிலும் மாணவர் விடுதியில் சேரவும் இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


வருமானச் சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:


வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ கட்டணம் செலுத்தி இச்சான்றை பெற வேண்டும்.உள்ளூர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்குடும்ப அட்டையில் காண்பிக்கப்பட்டுள்ள வருமானம்வாடகை வாயிலாக ஈட்டும் வருமானம்பணிபுரியும் நிறுவனம், அல்லது பணி வழங்கியவர் தரும் வருமானச் சான்றுகுடும்பச் சொத்தாக வைத்திருக்கும் நிலச்சொத்துக்கள் மற்றும் அதன் வாயிலான வருமானம்.வருமான வரி / வேளாண்மை வருமான வரி விதிப்பு / விற்பனை வரி விதிப்பு ஆணை.இதர வருமானம் ஏதேனும் இருப்பின்


வருமானச் சான்று வழங்கும் காலம் & செல்லுபடி ஆகும் காலம்:


இச்சான்று 15-நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.


இவை 6-மாத கால அளவு மட்டுமே செல்லத்தக்கது ஆகும். (அரசாணை (பல்வகை) 1509 – வருவாய்த் துறை நாள் 27-11-1991 படி ஆகும்)


நாட்டினச் சான்று (Nationality Certificate)


ஒருவர் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்று வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப் பின் வழங்கப்படும் சான்றாகும்.


இச்சான்று கடவுச்சீட்டு (Passport) மற்றும் நுழைவு இசைவு (Visa) ஆகியவற்றை பெற பயன்படும்.


நாட்டினச் சான்று வழங்கும் போது VAO கவனிக்க வேண்டியவைகள்:


மனுதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? கிராமத்தில் நிரந்தர குடியிருப்பு கொண்டுள்ளாரா? என்று தேவையான சான்றாவணங்கள் மற்றும் உள்ளூர் விசாரணை மூலம் உறுதி அறிக்கை செய்ய வேண்டும்.


குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிரந்தர சொத்துகள் இருக்கும் இடம், வரி கட்டிய ரசீது போன்றாவணங்களைப் சரிபார்த்து VAO அறிக்கை வழங்க வேண்டும்.


VAOவின் பரிந்துரை, RI-யின் பரிந்துரையின் படி – வட்டாட்சியர் இச்சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பதாரருக்கு வழங்குவார்.


வாரிசுச் சான்று(Legal Certificate)


ஒரு குடும்பத்தின் தலைவரோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினரோ எவரேனும் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பு, வீட்டு வரி, தொலைபேசி இணைப்பு, பட்டா, வங்கி கணக்கு ஆகியவற்றை மாற்றம் செய்ய வழங்கப்படுகிறது.


 இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின் அவரது வாரிசுதாரர் கருணை – அடிப்படையில் பணிநியமனம் பெறவும், குடும்ப ஓய்வூதியம் பெறவும், இறந்தவரின் நேரடி வாரிசுகளுக்கு அல்லது கணவர், மகன், மகள், தாய் ஆகியோருக்கு விசாரணைக்கு பின் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


வாரிசுச் சான்று வழங்குவதில் VAOவின் பங்கு :


விண்ணப்ப மனுவில் ரூ.2-க்கு – வில்லை ஒட்ட வேண்டும்.உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்றுகுடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்இறந்த நபர் குடியிருந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரணை.


சந்தேகம் ஏற்படின் இறப்புச் சான்றின் மெய்த்தன்மையை, எந்த அலுவலகத்தால் வழங்கப்பட்டதோ அங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.வாரிசுச் சான்று அரசாணை (பல்வகை) 2906-இன் படி (04-11-1981) வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொருத்தவரை, வாரிசுச் சான்றிதழ் வழங்குவதைத் தவிர்த்து, உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள மனுதாரர்களை அறிவுறுத்தவும் என வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.


இறந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன் இருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக தெரிய வரும் போதும்.ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாக கருதி சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போதும்.


வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும், வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்குமூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்இறந்தவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில் அரசுக் கடித (நிலை) எண் 1534, வருவாய்த்துறை நாள் 28.11.1991-இன் படி, வாரிசுச்சான்று வட்டாட்சியரால் 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணையை VAO-காலதாமதம் செய்யக்கூடாது.


சொத்து மதிப்புச் சான்று


ஒப்பந்தக்காரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலங்களில் பங்கு பெறவும் இச்சன்று தேவைப்படும்.


சொத்து மதிப்புச் சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு:


இம்மனுவில் ரூ.10க்கான கட்டண வில்லை ஒட்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.சொத்து மதிப்பு ரூ.50,000 வரையில் ரூ.100/-ம் அதற்கு மேல் ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200 வீதம் கட்டணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும்.மனுதாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா?


 சொத்து மதிப்பு கோரும் மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துகள் கிராமக் கணக்குகளில் மனுதாரரின் பெயரில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.இம்மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பும்போது, அடங்கல், சிட்டா, A-பதிவேடு நகல்களை பரிசீலனை செய்து அவற்றை மேலொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.


மனுதாரர் சொத்தை தனியாக பயன்படுத்துபவரா அல்லது கூட்டாக அனுபவிப்பவரா என்பதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.கூட்டாக அனுபவித்தால் அவருடைய ஈவுக்கு மட்டுமே, சிட்டா, அடங்கல், A-பதிவேடு ஆகியவற்றில் வழியாக குறிப்பிட வேண்டும்.சொத்து, கட்டடமாக இருந்தால் – தகுதி பெற்ற பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அறியப்படவேண்டும்.


 வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.சொத்துகளுக்கான பத்திரத்தின் மெய்த்தன்மையை சரிபார்க்க வேண்டும்.சமீபத்திய 13-ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று அல்லது வேறு வில்லங்கம் இருக்கிறதா எனக் காண வேண்டும்.


அடமான பத்திரங்களை சரிபார்த்தல், மற்றும் விசாரணை செய்யப்படும் சொத்தின் பேரில் அடமானம் இருப்பின் அந்த மதிப்பினை சொத்து மதிப்பிலிருந்து கழித்துக் கணக்கிட வேண்டும்.சொத்துவரி ரசீதுகள் மற்றும் நிலவரி ரசீதுகள்.மனுதாரரின் வாக்குமூலம்.சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டில் வழங்கப்பட வேண்டும். 


அசையும் சொத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது.விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு, சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு இவற்றை பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும்.


இச்சான்று வழங்கும் காலம், செல்லுபடி காலம் :


இவை 15 நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்படும்.


இவற்றின் செல்லுபடி காலம் வழங்கிய நாளிருந்து 6-மாதங்கள் மட்டும்.


ஆதரவற்ற குழந்தைச் சான்று


ஆதரவற்ற குழந்தைகள் கருணை/காப்பு இல்லங்களில் சேர்வதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்று வழங்குவதில் VAOவின் பங்கு:


குழந்தையின் தாய், தந்தை பற்றிய முழு விபரங்கள். எப்பொழுது காலமானார்கள் என்பதனை இறப்புச் சான்று அல்லது பதிவேடு மூலம் சரிபார்த்தல்.


குழந்தை உண்மையில் ஆதரவற்றதா – என முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.


குழந்தைக்கு பாதுகாவலர் உள்ளனரா? என விசாரணை செய்து வட்டாட்சியருக்கு VAO தெரிவிக்க இச்சான்று 7 நாள்களுக்குள் வழங்கப்படும் (வட்டாட்சியரால்).


ஆதரவற்ற விதவைச் சான்று


ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு இச்சான்று கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்றின் மீதான விசாரணை மேற்கொள்ளும் போது VAO-வின் பங்கு


மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா?விண்ணப்பதாரரின் மனைவியின் இறப்புச் சான்று சரிபார்த்தல் இறப்பு – விபரம்.மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா?உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா?கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார், 


அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம்


.சுயமாய் செய்யும் தொழில், வேலை போன்றவற்றால் கிடைக்கும் வருமானம் போன்றவைகளை பரிசீலனை செய்து, உள்ளுர் விசாரணைமற்றும் கிராமப் பிரமுகர்களின் விசாரணை செய்து மனுதாரர் தகுதியுள்ளவரா என்பதனை VAO உறுதி செய்தல் வேண்டும்.


இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் காலம்:


இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.


இச்சான்று வழங்கும் கால அளவு – 30 நாள்கள் ஆகும்.


கலப்புத் திருமணச் சான்று


கலப்புத் திருமணம் என்றால் என்ன?


இரண்டு மாறுபட்ட சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனமாகவும் – மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்து புரிந்துகொள்ளும் திருமணம் கலப்புத் திருமணம் எனப்படும்.


கலப்புத் திருமணச் சான்றின் பயன்கள்


அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும்இவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும்அரசின் சலுகைகளைப் பெறவும் இவை பயன்படுகிறது.இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு


மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கின்றாரா? அதற்கான சான்றாவணங்களை சரிபார்த்தல்.இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் தானா?


 சாதிச்சான்று ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை சரிபார்த்தல்.திருமணச் சான்று, திருமணம் நடைபெற்ற இடம், முறையாக சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா என்று சரிபார்த்தல்.


மேற்கண்ட தகவல்களை சரிபார்த்து, ஆதிதிராவிடர் வாழும் பகுதியிலுள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மற்றும் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை VAO-வழங்கிய பின் வட்டாட்சியர் வழங்குவார்.


இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் கால அளவு:


இச்சான்றை வட்டாட்சியர் வழங்குவார்.


மனுசெய்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.


பள்ளிச்சான்று தொலைந்ததற்கான வழங்கப்படும் சான்று


பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்படும் அசல் சான்று தொலைந்துவிட்டால் அச்சான்றின் நகலைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வட்டாட்சியரால் மேற்படி சான்று தொலைந்தது உண்மை என்று சான்று வழங்கப்படுகிறது.


இச்சான்றை வழங்குவதில் VAOவின் பங்கு:


காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி (FIR Copy)


இச்சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற காவல்நிலையத்தின் அறிக்கை.


மனுதாரரிடம் நேரடி விசாரணை எவ்வாறு சான்று தொலைந்தது என்பதை மனுதாரரிடம் விளக்கம் பெற்று VAO அறிக்கை அனுப்ப வேண்டும்.


இச்சான்று வழங்கும் அதிகாரி & காலம்:


வட்டாட்சியர் இச்சான்றை வழங்குவார்.


15 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.


கணவனால் கைவிடப்பட்டவர்


இது வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்று ஆகும்.


இச்சான்று வழங்கும் போது VAOவின் பங்கு :


மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கிறாரா?


மனுதாரருக்கும், அவர் கணவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது, அதற்கான சான்றாவணத்தை சரிபார்த்தல், உள்ளூர் விசாரணை மூலமும் உறுதிப்படுத்தல்.


மனுதாரர் ஏன் கணவனால் கைவிடப்பட்டுள்ளார் என்ற விசாரணை, கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனுதாரரை கைவிட்டு விட்டாரா? அப்படியானால் எப்போது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார்? கணவருடன் வாழ்ந்து, மனுதாரருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?


பிரிந்து சென்ற கணவர், எங்கே சென்று விட்டார் என்பதையும் விசாரணை வாயிலாக அறிய வேண்டும்.


தற்காலிகமாக பிரிந்திருத்தலை சான்று வழங்குவதற்கு பரிசீலிக்கலாகாது.


இச்சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டியவைள்:


மனுதாரர் கணவனை விட்டுப்பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5-ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா?


அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.


இச்சான்றை வழங்கும் அதிகாரி & காலம்


இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.


இச்சான்று விண்ணப்பித்த நாளிருந்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.


*கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன விதிகள்*


தமிழ்நாடு அமைச்சுப்பணி விதி 38(பி) (ii) பிற்சேர்க்கை X


1. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான பணி நியமனம், நேரடி நியமனம் மூலமாக அமைந்திருக்கும்.


2. இப்பதவிக்கான நியமன அலுவலர் சமபந்தப்பட்ட கிராமத்தின் அதிகார வரம்பு பெற்றிருக்கின்ற வருவாய் கோட்ட அலுவலராகும்.


3. பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு(பொது விதி 22) இப்பதவிக்கான நேரடி நியமனத்திற்கும் பொருந்தும். 

இந்த நேரடி நியமனத்திற்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தனி அலகாகக் கருதப்படும்.


வயது வரம்பு:


நேரடி நியமனத்திற்கு தேர்வு செய்யப்படுகின்ற நபர் தேர்வு செய்யப்படுகின்ற ஆண்டின் ஜூலை மாதம் முதல் நாள் 21வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

நேரடி நியமனத்திற்கு தேர்வு செய்யப்படுகின்ற ஆண்டின் ஜூலை மாதம் முதல் நாளென்று 30 வயது முடிவுற்ற (அல்லது) 30வயது முடிவுறக்கூடிய எந்த ஒரு நபரும் இப்பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தகுதியற்றவராவார்.


பிற்படுத்த்ப்பட்டோர் வகுப்பு அல்லது அட்டவணை வகுப்பு மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாகும்.

மேற்சொன்ன வயது வரம்புகள் நேரடி நியமனம் செய்யப்படுகின்ற முன்னாள் கிராம அலுவலர்க்கோ (அல்லது) உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர்களாக ஈர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் கிராம அலுவலர்களுக்கோ பொருந்தாது. 


கல்வித் தகுதி:


தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதி 12 (அ) (1) மற்றும் பகுதி இரண்டிலுள்ள அட்டவணை ஒன்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பொதுக்கல்வி. 


பிணைத்தொகை:


இப்பதவிக்கு நிர்ணயிக்கப்படும் ஒவ்வொருவரும் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒரு மாதத்திற்குள் பிணைத்தொகையாக ரூ.2000 செலுத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் ரூ. 1000 பிணைத்தொகையாக செலுத்த வேண்டும்.


பிணைத்தொகை அஞ்சல் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, கணக்கை மாவட்ட ஆட்சியர் பெயரில் ஈடு காட்ட வேண்டும்.

கிராம நிர்வாக அலுவர் ஒய்வு பெறும் போது, பணியிறவு (அ) பணி நீக்கம் செய்யப்படும்போது, ராஜினாமா செய்யும் போது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அந்தத் தொகை விடுவிக்கப்படும்.


அலுவலர் மரணமடைந்தால், அரசுக்கு அவர் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ஏதுமிருப்பின், அதை பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை குடும்பத்தாரிடம் வழங்கப்படும். 


பயிற்சிகள்:


இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நிர்ணயிக்கப்பட்ட காலங்களுள்(3 ஆண்டுகள்) அரசு அளிக்கும் கீழ்க்கண்ட பயிற்சிகளில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.


நில அளவைப் பயிற்சி

கிராம நிர்வாக அலுவலர் பயிற்சி

கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரங்களும் கடமைகளும்

கிராம சுகாதாரம்

கிராமக் கணக்குகள் நடைமுறை நூல்

பயிற்சி முடிந்தபின்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், பணியிலிருந்து விடுவிக்கப்படும் நிலையில், பயிற்சிக்குண்டான செலவுகள், பயிற்சிக் காலத்தில் பெற்ற சம்பளம், படிகள் போன்றவற்றை திருப்பிச் செலுத்த வேண்டும்.


தமிழ்மொழி தவிர்த்து பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்த 2 வருடங்களுள் அரசுப் பணியாளர் தேர்வானைக் குழு மூலம் நடத்தப்படும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாவிடின், அவர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

பதவிக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் அவரது பொறுப்பு கிராமத்தில் குடியிருக்க வேண்டும். 


பணியிட மாற்றங்கள்....


கோட்டாட்சித் தலைவரால் கோட்டத்திற்குள்ளும்

மாவட்ட ஆட்சியரால் அந்த மாவட்டத்திற்குள்ளும்

நிர்வாகக் காரணங்களுக்காக, வருவாய் நிர்வாக ஆணையரால், அந்த மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிடத்திற்கு உட்பட்டவராவார். 


*கிராம நிர்வாக அலுவலகர்களின் பணிகள் மற்றும் கடமைகள்*


பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலகர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581. நாள்: 3-4-1987-இல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.


கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி பார்த்தல்


நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல்


சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்


பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.


பிறப்பு, இறப்புப் பத்வேடுகளைப் பராமரித்தல்


தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும்போது உதவி செய்தல்.


கொலை,தற்கொலை,அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைகளுக்கு உதவி புரிதல்.

காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.

இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.


கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

கால்நடைப் பட்டி மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்

கட்டடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துகளைப் பாதுகாத்தல்.

புதையல்கள் பற்று மேல் அலுவலகர்களுக்குத் தகவல் கொடுத்தல்.


முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனித்தல்.

பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.

முதியோர் ஒய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல்.

வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.


இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிகளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்.

கிராம பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.

நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலகர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.


சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புதல்.

கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.


குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையையும் தெரிவிப்பது.

வருவாய்த்துறை அலுவலகர்களுக்கும் மற்ற துறை அலுவலகர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.


சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட – ஒழுங்கு பேணுதற்காகக் கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.


கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.

தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.

கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.


அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல், நிலப் பட்டா / வீட்டுமனைப் பட்டா / முதியோர் உதவித் தொகை வழங்குதல் / மனுக்கள் மீது அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.


பாசன் ஆதாரங்களைக் கண்காணித்தல் – ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது – அவற்றை முறையாகப் பராமரித்தல்.


கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள்(Sale Statistic Register) எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.


பதிவு மாற்றம்(Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.


நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதலுக்குண்டான(Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.


அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-இன் படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.


கிராம அளவில் கடன் பதிவேடு(Loan Ledgers) மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக் காலாண்டுக்கு ஒருமுறை வட்ட கணக்குகளுடன் சரிபார்த்தல்.


கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.


உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்....


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.


கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 


பணிகள்


1. பட்டா பெயர் மாற்றுதல்.


2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.


3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.


5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.


6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.


7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.


8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.


9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.


10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.


11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.


12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.


13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.


14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.


15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.


16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.


17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.


18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.


19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.


20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.


21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.


22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.


23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.


24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.


25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


"கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 

தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும்.


 கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றிய முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


நன்றி 

 என்றென்றும் மக்கள் பணியில்

இரா.கணேசன்

அருப்புக்கோட்டை


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம்

கண்தானம் செய்வது எப்படி?

 கண்தானம் செய்வது எப்படி?


1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.


2. மின்விசிறியை இயக்கக்கூடாது.


3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.


4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.


5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.


யார் கண்தானம் செய்ய முடியாது?


நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.


கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:


1. ஒருவர் இறந்த 4&6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.


2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.


3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.


4. கண்தானம் செய்ய 20&30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.


5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.


6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

 

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்✍


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

*வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்*

 *வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்*


🌹🌹🍓🍓🏀


1. பயிராய்வு

2. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.


3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.


5. “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.


6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.


7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.


8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.


9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.


10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.


11. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.


12. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.


13. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.


14. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.


15. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.


16. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.


17. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.


18. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.


19. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.


20. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.


21. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.


22. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.


23. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.


24. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.


25. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.


26. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்


27. பல்வேறு பிற பணிகள்:-


அ) மர மதிப்பு நிர்ணயம் செய்தல்


ஆ) நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.


இ) கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.


ஈ) வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.


உ) சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.


ஊ) தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.


எ) மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.


ஏ) கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.


ஐ) கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.


28. பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.


29. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.


30. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.


சரக வருவாய் ஆய்வாளர் மேற்பார்வை பணிகள்


வ.எண்.

ஆய்வு பொருள்

விவரம்

தொடர்புடைய கிராமக் கணக்குகள் / வருவாய் நிலை ஆணை / அரசு ஆணை விவரம்

(1)

(2)

(3)

(4)


1.

பயிராய்வு

கிராம நிர்வாக அலுவலர் பிரதிமாதம் பயிராய்வு மேற்கொண்டு அடங்கலில் பதிவு செய்தல்

எண்.2(அடங்கல்)


2.

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்கள்

அரசு-குடிகள் ஆகியோருடைய தோட்டம் மற்றும் தோப்புகள் மரத்தீர்வைக்குட் பட்டவை, மரத்தீர்வை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை, மரத்தீர்வைக்குட்படாத மரங்களின் பலன்களை பசலிதோறும் ஏலம் விடுதல், மரங்கள் நடுவதற்கு உரிமம் வழங்குதல்.


3.

ஆக்ரமணங்கள்

ஆக்ரமணங்கள் பார்வையிட்டு அடங்கலில் பதிவு செய்தல்

ஆட்சேபணையற்ற ஆக்ரமணங்கள் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தல் ஆக்ரமணங்கள் பேரில் சாதாரண தீர்வை தண்டத்தண்ணீர் தீர்வை விதித்தல்.

ஆக்ரமணங்கள் காலி செய்ய நடவடிக்கை எடுத்தல்,. ஆக்கிரமிப்பு சட்டம் 5,7,6வது பிரிவின் கீழ் அறிவிப்பு நடவடிக்கை

2 (அடங்கல்)

ஏ.மெமோ

வ.நி.ஆ.26(5)


பி.மெமோ

வ.நி.ஆ.26(2)

நில ஆக்ரமணச்சட்டம்1905


4.

நிபந்தனைமீறப்பட்ட இனங்கள்

நிலமாற்றம்

நிலஉரிமை

நிலஉரிமை விட்டுவிடல்

நில ஒப்படை(சாகுபடி நிலம்)

தாழ்த்தப்பட்டோருக்கு ஓதுக்கீடு

செய்யப்பட்டவை

வீட்டுமனை ஒப்படை

குறுகிய மற்றும் நீண்டகால

குத்தகைக்குவிடப்பட்ட இனங்கள்

ஆய்வுபோது நிபந்தனைகள்

மீறப் பட்டுள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.

வ.நி.ஆ.23

வ.நி.ஆ.24

வ.நி.ஆ.33

வ.நி.ஆ.15

அ பதிவேடு (செட்டில்

மெண்டு பதிவேடு)

வ.நி.ஆ.21

வ.நி.ஆ.24(அ)

வ.நி.ஆ.17


5.

மாதாந்திர சாகுபடி கணக்கு பராமரித்தல்

பிரதிமமாதம் பயிர் சாகுபடி விபரம். வட்ட அலுவலகத்திற்கு வருவாய் ஆய்வாளர் மூலம் 25ம். தேதி அனுப்பிவைத்தல்.

எண் 1,1ஏ


6.

அரசு பாசன ஆதாரங்களிலிருந்து நீர்; பாய்ச்சப்பட்ட சாகுபடி பரப்பிற்கு தண்ணீர் தீர்வை விதித்தல்

பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி மற்றும் முறையற்ற விதமாக சாகுபடிக்கு நீர்பாய்ச்சப்பட்டமைக்கு அபராத தண்ணீர் தீர்வை விதித்தல், வட்ட அலுவலகத்திற்கு தண்ணீர் தீர்வை பட்டி அனுப்பி ஆணை பெறுதல்

எண்.6

வ.நி.ஆ.4


7.

பருவ நிலை கோளாறு காரணமாக ஏற்படும் தரிசு மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு அரசால் வழங்கப்படும் வழக்கத்திற்கு மாறான தள்ளுபடி.

தள்ளுபடி குறித்து அரசாணை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல்

எண்.5-1,5ஐஐஐ

வ.நி.ஆ.13,14


8.

நிலையான தள்ளுபடிகள்

இறவை, நில உரிமை மாற்றம் (அலியநேஷன்), நில உரிமை பெறல்(நில ஆர்ஜிதம்) நீண்ட நாள் குத்தகை வஜாக்கள் (தள்ளுபடி தொடர்ந்து தேவையா என ஆய்வு செய்யப்பட வேண்டும்)

செட்டில்மெண்ட் பதிவேடு

வ.நி.ஆ-24

நில உரிமை பெறல்

சட்டம் 1894

வ.நி.ஆ.17


9.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதல் நடவடிக்கைகள், முழுபுலங்கள் மற்றும் உட்பிரிவு இனங்கள் (பதிவுகள் சரிபார்த்து ஒப்புதல் செய்யப்பட வேண்டும்

எண.3

2(அடங்கல்)10-ஐ

(சிட்டா)அ பதிவேடு

வ.நி.ஆ.தொகுதி-ஐ

நி.ஆ.31


10.

வசூல் கணக்குகள்

நிலவரி, அபராதம், கடன் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய தொகை வசூலித்தல், தாமதித்த இருசால் மற்றும் கையாடல் இனங்கள் கண்டு பிடித்தல்

13,14,14சி, 15,16, 17,18


11.

தடையாணை புத்தகத்தில் பதிவுகளை செய்தல்

திட்டமிடப்பட்ட அல்லது எதிர்கால திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்கள்.

பள்ளிகள், சாலைகள், ரயில் நிலையம் முதலானவற்றின் எதிர் காலத்தேவைக்கு தேவைப்படும் நிலங்கள்

பெருமளவில் கனிமவளம் கொண்டுள்ள நிலங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அளிக்கக்கூடாத நிலங்கள்

இவ்வகையான நிலங்களை தகுந்த ஆணைபேரில் தடையானண புத்தகத்தில் பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல்.

தொடர்புடைய அரசாணை மற்றும் நில நிர்வாக ஆணைகள்

வ.நி.ஆ.15-2(2)

தடையாணை புத்தகம்

அ பதிவேடு அடங்கல்


12.

பாசன ஆதாரங்கள்

வருடம் முழுவதும் நீர் அளிக்கக்கூடிய காவிரிபோன்ற ஆறுகள் (முதல் வகுப்பு)

8 முதல் 10 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (இரண்டாம் வகுப்பு)

5முதல் 8 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (மூன்றாம் வகுப்பு)

3 முதல் 5 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (நான்காம் வகுப்பு)


3 மாதங்களுக்கு குறைவாக நீர் கிடைக்கக் கூடியது (ஐந்தாம் வகுப்பு)

இந்த பாசன ஆதாரங்களில் பழுது, சேதம் போன்றவற்றினை வருவாய்த்துறை கண்காணித்தல்.

பாசன ஆதாரங்களில் பொதுப்பணித் துறையினரால் மாற்றம் செய்ய உத்தேசிக்கும் போதும் மற்றும் சிறுபாசன திட்டம் செயலாக்கத்தின்போதும் மற்றும் புது திட்டங்கள் திட்டமிடும்போதும் ஒத்திசைவு கோரும் போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல்.

மேம்பாட்டு வரிவிதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்


பாசன ஆதாரத்தின் வகுப்பு உயர்த்துதல் நடவடிக்கை எடுத்தல்


13.

பிறப்பு இறப்பு பதிவேடுகள்

கிராம நிர்வாக அலுவலக பதிவாளர் என்ற முறையில் மேற்கொள்ளும் பணிகள்

படிவம்-1(பிறப்பு)

படிவம்-2(இறப்பு)

படிவம்-3 (இறந்து பிறத்தல்)

இதுஇரண்டு பகுதிகளாகக் கொண்டது


1.சட்ட ரீதியான பகுதி (டுநபயட Pயசவ)


2.புள்ளிவிபரப்பகுதி (ளுவயவளைவiஉயட Pயசவ)

முதல் பகுதி - பதிவாளர் பராமரிப்பில் உள்ளது.

இரண்டாவது பகுதி - பிரித்தெடுத்து சுகாதார துணை இயக்குநருக்கு அனுப்பி வைத்தல்;

பதிவுகள் குறித்து வாய்மொழி விசாரணை செய்து சரிபார்த்தமைக்கான ஒப்புதல் செய்யப்பட வேண்டும்.


த.நா.பிறப்பு இறப்பு விதிகள் 2000

எண்.19-பதிவேடுகள் (மேற்படி விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்டது)


14.

கால்நடைவியாதி மற்றும் இறப்பு அம்மை குத்திய பாதுகாப்பு பெற்றிராத குழந்தைகள் பற்றிய பதிவேடு

இம்மாதிரியாக நிகழ்வுகள் குறித்து ஆய்வுபோது விசாரணை மேற்கொண்டு சரிபார்த்தல்

எண்.19


15.

மழை மற்றும் நீர்; வழங்கு விவரப்பட்டி

மழையளவு மற்றும் நீர் வழங்கு ஆதாரத்தின் தண்ணீர்வரத்து பதிவு செய்தல் முகாம் போது வருவாய் ஆய்வாளர் பதிவுகள் சரிபார்த்து சோதனை முடிவினை குறிப்புரை கலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

எண்.20


16.

கிராமச் சாவடிகள்

கிராமச் சாவடிகள் பராமரிப்பு,

பழுதுபட்டிருப்பின் சீரமைக்க முன்மொழிவுகள் அனுப்பி வைத்தல்

தனி நிதிகள் விதி

தொகுப்பு


17

கால்நடைப்பட்டிகள்

கிராம நிர்வாக அலுவலர்களால் கால்நடைப்பட்டிகள் நிர்வாகம், கால்நடை அடைப்பு, கட்டணம் வசூலித்தல், விடுவித்தல் மற்றும் விடுவித்துச் செல்லாத கால்நடைகளை ஏலத்திற்கு கொண்டு வருதல் முதலான நடவடிக்கைகள் ஆய்வு செய்தல். 


கட்டிடம் பழுதுபட்டிருப்பின் சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் தனிநிதிகள் விதித் தொகுப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்கள் 34,35,36,37,38,39 ஆகியவை பராமரித்தல்

தமிழ்நாடு கால்நடைகள் உரிமையில்லாத இடத்தில் நுழைதல் சட்டம் 1871

தனி நிதிகள் விதி தொகுப்பு கூறு 86


18.

கடன் பதிவேடுகள்

விவசாயி கடன் மற்றும் விவசாய நில அபிவிருத்தி கடன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்பாக்கி, நில உச்சவரம்புச் சட்டம் உபரிநில அடமான விதிகளின் கீழ் அடமானம் செய்யப்பட்ட நிலங்களுக்கு நில மதிப்பு தொகை வசூல் செய்தல்.

தொடர்புடைய சட்டங்கள் அரசாணைகள் த.நா.நில உச்சவரம்பு சட்டம் உபரி நிலம் அடமானம் விதிகள்


19.

கல் டிப்போக்கள்

கல் டிப்போவில் கற்கள் இருப்பு சரிபார்த்தல்

ஏ ரூ பி கற்கள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள்


20.

குவாரிகள்

குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்ட இனங்களில், குத்தகைக்கு விடப்பட்ட பகுதிக்கு அப்பாலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு கீழும் கனிமங்கள் தோண்டாமலிருப்பதை கண்காணித்தல் மற்றும் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.

தமிழ்நாடு சுரங்கம் மற்றும் கனிமங்கள் (டி ரூ ஆர்) சட்டம் 1957


21.

திருமணப் பதிவேடு

குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவரின் திருமணத்தை மட்டும் இப்பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்பட வேண்டும். படிவத்தில் உள்ள எல்லா தகவல்களும் பெற்று பூர்த்தி செய்யப்படவேண்டும் மணமகன் - மணமகள் பிறந்த தேதி பிறப்பு சான்று, மருத்துவமனை பிறப்பு சான்று, பள்ளி சான்றுடன் சரிபார்க்கப்பட வேண்டும்

குழந்தைகள் திருமணம் தடை (திருத்தம்) சட்டம் 2/1978


22.

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

1.நிலவரி வசூல் காலத்தில் (கிஸ்தி சீசன் போது ) நடப்பு கேட்புக்குமட்டும் வருவாய் ஆய்வாளர் நெ.1 டிமாண்டு (ஜப்தி ஆணை) ஒப்புதல் செய்தல்

2.நிலுவை கேட்புக்கு வட்டாட்சியர் ஒப்புதல் பெறுதல்.

3.அரசுக்கு சேர வேண்டிய வருவாய் வசூலித்தல்.

4.அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்தல்:

படிவம் - 1 ஜப்தி ஆணை சார்வு செய்தல்

படிவம் - 2 (ஜப்தி பொருட்கள் பட்டியலிட்டு) நோட்டீஸ் சார்வு செய்தல்

படிவம் - 3 ஏல நோட்டீஸ் சார்வு

செய்தல் மற்றும் ஏல நடவடிக்கைகள்.


5.அசையா சொத்துக்கள் ஜப்தி செய்தல்:

படிவம் - 4 டிமாண்டு நோட்டீஸ் சார்வு செய்தல்.

படிவம் - 5 ஜப்தி செய்யப்பட்டமைக்கான நோட்டிஸ் சார்வு செய்தல்

படிவம் -6 சொத்தின் நிர்வாகத்தினை பெற்றுக்கொண்டதற்குரிய அறிவிப்பு

படிவம் - 7 ஏல நோட்டீஸ் சார்வு செய்தல் மற்றும் ஏல நடவடிக்கைகள்.

படிவம் - 10 நிலத்தை ஏல விற்பனையில் வாங்கியதைப் பற்றிய அரசாங்க அறிவிப்பு.


சூரிய உதயத்திற்கு பின்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் ஜப்தி செய்யப்படவேண்டும்.


இச்சட்டப்பிரிவுகள்படி நடவடிக்கை எடுக்கும்போது ஏதேனும் முறைகேடுகள் மற்றும் சட்ட மீறல்கள் நிகழாமல் தவிர்ப்பதற்கான அறிவுரைகள் வருவாய் நிலை ஆணை - பாகம் - 2ல் (நிலை ஆணை 41 பத்தி 26-ன் கீழ் இணைப்பு - ஐஐஐ) அளிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 வருவாய் நிலை ஆணை

தொகுதி ஐஐ

வ.நி.ஆ. 41-6


23.

முதியோர் உதவித்தொகை (65வயது)

ஆதரவற்ற விதவை உதவித்தொகை (வயது வரம்பு இல்லை) ஊனமுற்றோர் உதவித் தொகை(45வயது) கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை (30 வயது) நலிவடைந்த விவசாய தொழிலாளர் உதவித்தொகை

(60 வயது)

கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் பதிவேடு முகாமின் போது ஆய்வு செய்தல், உதவித்தொகை பெறுபவர்களை நேரில் சந்தித்து பதிவேட்டில் குறிப்பு எழுதப்பட வேண்டும்.

தொடர்புடைய அரசாணைகள்


24.

சாதிச் சான்று வழங்குதல்

தனிப்பதிவேடு கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது. வட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மனுக்களை பதிவு செய்து அறிக்கை அனுப்புவதை சரி பார்க்கப்பட வேண்டும.

தொடர்புடைய அரசாணைகள்


25.

நில உரிமை விட்டு விடுதல்

வட்டாட்சியர் ஏற்பு செய்யலாம். பாதை அமைத்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரயத்துக்கள் தங்கள் நிலங்களின் உரிமையினை விட்டு விடும் நேர்வுகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏற்பு செய்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

வருவாய் நிலை ஆணை எண்:33.


26.

நிபந்தனை மீறப்பட்ட இனங்களில் நிலத்தினை மீட்டல்

ஒப்படை செய்யப்பட்ட அரசு நிலங்களில் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து, மீண்டும் அரசு நிலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

வருவாய் நிலை ஆணை எண்:15-1 அரசாணை எண்:619, வருவாய் துறை நாள்:1.9.77


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

*பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது*

 *பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது* 


நம் நாட்டைப் பொறுத்தவரை எல்லா நிறுவனங்களின் பதிவுகளும் கம்பெனி சட்டம் 1956, பிரிவு 609ன் படி அமைக்கப்பட்ட ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனி (ஆர்ஓசி) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.


ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அமைப்பின் அலுவலகங்கள் உள்ளன.


நிறுவனப் பதிவுகளை மேற்பார்வையிடுவதும் அவை சட்ட ரீதியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பதும் இதன் வேலை.


முதலில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் DIN என்று அழைக்கப்படும் Director Identification No பெறவேண்டும்.


அடுத்ததாக நிறுவனத்தின் பெயரை ஆர்ஓசி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


குறைந்தபட்சம் நான்கிலிருந்து 6 விதமான பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.


ஆர்ஓசி ஏற்கெனவே அந்தப் பெயர்களில் ஏதேனும் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்துவிட்டு அனுமதியளிக்கும்.


நாம் வைக்கும் நிறுவனத்தின் பெயர்கள் ஏற்கெனவே சந்தையிலுள்ள பெரிய நிறுவனங்களின் பெயர்களை எந்த விதத்திலும் ஒற்றியிருக்கக்கூடாது.


அப்படி இருந்தால் அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படும்.


பெயர் அனுமதி பெற்றவுடன் எம்ஓஏ எனப்படும் Memorandom of Association மற்றும் ஏஓஏ எனப்படும் Articles of Association ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.


நிறுவனத்தின் பெயர், அந்த நிறுவனத்தின் தன்மை, குறிக்கோள், நிறுவன இயக்குனரின் முதலீடு (Authorised capital) போன்ற தகவல்களை அளிக்கவேண்டும்.


இவை மட்டுமல்லாமல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், வளர்ச்சியடைந்த பின்பு விரிவாக்க நினைக்கும் மற்ற துறைகள் (Allied Industries) போன்றவற்றையும் குறிப்பிடவேண்டும்.


மேலும், நிறுவன பங்குகளைப் பற்றிய தகவல்கள், நிறுவன இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, பங்குகளை விற்பது மற்றும் டிவிடண்ட் எனப்படும் நிகர லாபத்தின் குறிப்பிட்ட தொகை போன்ற தகவல்களும் அளிக்கவேண்டும்.


ஏஓஏவில் கொடுக்கப்படும் தகவல்களை மாற்றி அமைக்கும் உரிமை அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உண்டு.


இருப்பினும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் நிறுவனத்தின் எல்லா இயக்குனர்களையும் பங்குதாரர்களையும் முழுவதுமாகக் கட்டுப்படுத்தும்.


இவற்றை தீர்மானித்தப்பின்பு, இதன் நகல்களை ஆர்ஓசி எனப்படும் அரசாங்க அமைப்புக்கு அச்சிட்டு அனுப்பப்பட வேண்டும்.


கொடுத்துள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், இந்த அமைப்பு, நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தும்.


இத்தகைய தகவல்களைத் தொழில் முனைவோர் கம்பெனி செகரட்டரி மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் போன்றோரிடம் கொடுத்து வடிவமைத்துக்கொள்வர்.


கம்பெனி சீல் என்பதை உருவாக்கவேண்டும்.


அதே போல் நிறுவன இயக்குனர்கள் டிஜிட்டல் சிக்னேச்சர் பெறவேண்டும்.


வருமான வரித்துறையிடமிருந்து பேன் நம்பர் மற்றும் டேன் நம்பர் எனப்படும் டாக்ஸ் அக்கவுண்ட் நம்பர் கண்டிப்பாகப் பெற வேண்டும்.


இவைத்தவிர, மதிப்புக்கூட்டுவரி எனப்படும் வாட் பதிவு எண்ணை வருமான வரித்துறையிடமிருந்தும், சேவை வரி பதிவை சுங்க வரித்துறையிடமிருந்தும் பெற வேண்டும்.


பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தால், அந்தந்த துறைக்கு ஏற்றவாறு இன்னும் சில சட்டப் பதிவுகளை உற்பத்தி பொருட்களுக்கெனச் செய்ய வேண்டியது இன்றியமையாதது.


இன்று பெரும்பாலான நிறுவனப் பதிவுகளைக் கணினி மூலமாகச் செய்யும் வசதி இருக்கிறது.


இது இன்னமும் எளிமையானது.

Sole Properietorship எனப்படும் தனிநபர் நிறுவனங்களை உருவாக்குவது எளிது.


சட்ட விதிமுறைகள் மிகவும் குறைவு. தனி நபரும் நிறுவனமும் ஒன்று என்று கருதப்படுவதால் இவற்றை ஆர்ஓசி என்ற அமைப்பு தணிக்கை செய்யாது.


மற்றொரு வகை நிறுவன அமைப்பு பார்ட்னர்ஷிப் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இணைந்து உருவாக்கும் நிறுவனங்கள் ஆகும்.


இத்தகைய நிறுவனங்கள் சட்டம் 1932ன் படி கட்டுப்படுத்தப்படுகிறது.


வங்கிப் பணியல்லாத பிறதொழில்களுக்கு அதிகபட்சமாக 20 தனி நபர்கள் முதலீடு செய்து, ஒன்றிணைந்து நிறுவனத்தை உருவாக்க முடியும்.


இத்தகைய நிறுவனங்களுக்கும் பங்குதாரர்களிடையே ஒப்பந்தம் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டியது அவசியம்.


இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு உருவாக்கப்பட வேண்டும்.


இந்த நிறுவனங்களின் லாப நஷ்டத்துக்கு பங்குதாரர்களே பொறுப்பேற்க வேண்டும்.


2008ம் ஆண்டு எஎல்பிஏ எனப்படும் Limited Liability Partnership ஏற்படுத்தப்பட்டது.


இந்தப் புதிய சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் பார்ட்னர்ஷிப் சட்டம் 1932 ஆகிய இரண்டுக்கும் இடையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.


இது தொழில்முனைவோருக்குச் சாதகமானது.


இந்தச் சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்குகளின் அளவைப் பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படும்.


இத்தகைய நிறுவனங்கள் வங்கி கடன் பெற்று வியாபாரம் செய்யும்போது, அவர்கள் கொடுக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பை வங்கிகள் தேவைப்படும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


ஆனால் ஒரு நிறுவனர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரும் பொறுப்பாகமாட்டார்கள் என்பது கூடுதல் நன்மை.


அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் பணத்தின் பொறுப்பை அனைவரும் சமமாக ஏற்க வேண்டும். இதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வட்டார போக்குவரத்து துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கேத்தி லைட்லவ் நினைவு மேல்நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நெல்த்ராப் தலைமை தாங்கினார்.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசும்போது சாலை பாதுகாப்பு என்பது சாலைக்கு அல்ல நமக்கு, மனிதர்கள் சாலையில் செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் வழங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகனங்களில் செல்லும் போது மட்டுமல்ல நாம் சாலையில் நடக்கும் போதும் கவனமுடன் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது சாலையில் செல்லும்போது மெதுவாக நடந்து சாலையை கடப்பது நல்லது, வேகமாக ஓடுவதால் வாகனத்தில் மோதும் அபாயம் அதிகம் உள்ளது. விதிகளை மதித்து சென்றால் விபத்து தவிர்த்து உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கலாம் என்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் பேசும்போது

வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மலைபகுதியாகவும், வளைவுகள் அதிகம் உள்ளதாலும் மேடான பகுதியாக இருப்பதாலும் வாகனங்கள் அதிகபட்ச 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும்.   

வாகனங்களில் ஆர் சி புக், இன்சூரன்ஸ், மாசு சான்று உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

அதிவேகம், மற்றும் கவன சிதறல்கள், சாலையில் உள்ள குழிகள் போன்றவை விபத்திற்க்கான காரணங்கள் ஆகும். 

விபத்தில் சிக்கியவர்கள் தலை, கைக்கால், முதுகு அடிப்பட்டு, கிடப்பவர்களை பார்த்தால் வாகனங்கள் இயக்குவதில் தானாகவே கவனம் மற்றும்  பொறுப்பு ஏற்படும்.

தற்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வாகனங்களில் வேகத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் மற்றும் காட்டேரி ஆகிய இடங்களில் வேக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள பட உள்ளது. இது திருப்பதிக்கு அடுத்து நீலகிரியில் அறிமுக செய்யப்பட உள்ளது. இதன்மூலம் வேகமாக இயக்கும் வாகனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கபடும், மலை பகுதியில் வேகமாக இயக்குவது தடுக்கப்படும்.

லைசன்ஸ் இன்சூரன்ஸ் ஆகியன இல்லாவிட்டால் 1000, ஹெல்மெட் அணியாவிட்டால்  1000 அபராதமும், போதையில் வாகனங்கள் இயக்கினால் 10,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் இந்தியாவில் 16  முதல் 18 வயதுடையவர்கள் மிகஇலகு வாகனம் இயக்கலாம், ஆனால் மின்சாரம் மூலம் இயங்கும் 25 கிலோவாட்டுக்குள் திறன் உடைய வாகனம் லைசென்ஸ் இல்லாமல் ஒட்டலாம் ஆனால் அதற்கு மேல் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இயக்க உரிமம் கட்டாயம் வேண்டும். என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது சாலையில் செல்லும் போது இருபுறங்களிலும் கவனித்து சாலையை குறுக்கிட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்குவதால் கவனம் திசை மாறி விபத்து ஏற்படுகிறது. 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் அணிந்தும் 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தும் செல்லும் போது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்

18 வயதிற்கு குறைவான நபர்கள் வாகனங்கள் இயக்கும் போது அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். 

நிகழ்சசியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் பிரபாகரன் நன்றி கூறினார். 

நீதிமன்றத்தில் IA என்றால் என்ன*

 *நீதிமன்றத்தில் IA என்றால் என்ன*


*I.A பெட்டிஷன் அர்த்தம் என்ன*


இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தவர்கள் I.A என்ற வார்த்தையை பல முறை கேள்விப்பட்டு இருப்பீர்கள்,


 IA என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்றால் I. A" என்பது 


🌹Interlocutory Application,


🌹Interim Application,

and


🌹Impleading application


என்று அறியப்படுகிறது.

 

Interlocutory Application- என்றால் இடைநிலை விண்ணப்பம்.


 Interim Application- என்றால் இடைக்கால விண்ணப்பம்.


 Impleading application- என்றால் உள்வாங்கும் விண்ணப்பம்.


I.A பெட்டிஷன் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?


நீதிமன்ற வழக்குகளில் சூழ்நிலைக்கேற்ப இந்த I.A மனுக்கள் தாக்கல் செய்யபடுகிறது.  


இதை தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அனைத்து I.A மனுக்களும் இடைக்கால விண்ணப்பங்கள் (இடைச்சொருகல் விண்ணப்பங்கள்) என்றே வைத்துக் கொள்ளுங்கள். 


இனி இதை பற்றி இடைக்கால விண்ணப்பம் என்றே குறிப்பிடுகிறேன் எளிதாக புரிந்து கொள்வதற்காக, இந்த இடைக்கால விண்ணப்பம் என்பது முக்கிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது சில இடைக்கால நிவாரணம் அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கோரி சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் செய்யப்படும் கோரிக்கையாகும்.


இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது உடனடி கவனம் தேவைப்படும் உத்தரவைப் பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் போது செய்யப்படும் விண்ணப்பமாகும்


*எடுத்துக்காட்டாக*


ஒரு சொத்தில் உரிமை யாருக்கு என்று வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது *வாதியோ* அல்லது *பிரதிவாதியோ* அந்த வழக்கு சொத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தால் அதை தடை செய்ய உடனடியாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி தடை உத்தரவு பெற வேண்டும். 


இதற்காக வாய்மொழியாக சொல்லி உத்தரவு பெற முடியாது அதற்காக புதிய விண்ணப்பம் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் உத்தரவை நீதிமன்றத்தில் பெற வேண்டும். 


இந்த புதிய விண்ணப்பத்தை வழக்கு நடந்து கொண்டிருக்கும் இடையில் இடைக்காலத்தில் தாக்கல் செய்வதால் தான் இதை இடைக்கால விண்ணப்பம் I.A என்று அழைக்கப்படுகிறது.


இடைக்கால விண்ணப்பங்கள், தடை கோருதல், தற்காலிக தடை (temporary stay), பெறுநர்களை நியமனம் செய்தல்(appointment of receivers), மனுக்களில் திருத்தம் செய்தல் (amendment of pleadings), கூடுதல் ஆதாரங்களை சேர்க்க அனுமதி கோருதல் போன்ற பல்வேறு விஷயங்களைத் தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்படுகின்றன.


இடைக்கால விண்ணப்பங்கள் என்பது அடிப்படையில் இது இடைக்கால நிவாரணம் பெற அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் நடைமுறை சட்ட செயல்முறை ஆகும்.


I.A பெட்டிஷன் நீதிமன்ற நடைமுறை?

ஒரு தரப்பினர் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது, அது வழக்கமாக தனித்தனியாக எண்ணப்பட்டு, "IA எண். X இன் YYYY" போன்ற ஒரு தனித்துவமான தலைப்பு எண் வழங்கப்படுகிறது. 


வழக்கின் தகுதி மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பத்தை நீதிமன்றம் முடிவு செய்யும். 


நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட வழக்கை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சட்டங்களைப் பொறுத்து இடைநிலை விண்ணப்பங்கள் தொடர்பான குறிப்பிட்ட விதிகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற அதிகார வரம்பில் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட ஆலோசகர்களிடம் உடன் கலந்தாலோசிப்பது நல்லது.

ஓட்டுரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள

 *நமக்கு உள்ள ஓட்டுரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள உடனடியாக  அறிய வேண்டிய/ செய்ய வேண்டிய 8 விஷயங்கள்*


1.  'நான் போன முறை ஓட்டு போட்டேன். எனவே ஓட்டு உரிமை உள்ளது' என்று அசால்ட்டாக நினைக்க வேண்டாம். பல இடங்களில் ஏதாவது காரணம் சொல்லி,  ஓட்டு பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட சம்பவங்கள் உண்டு.


2.  ஓட்டு பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அரசு அலுவலகத்திற்குச் சென்று நான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே செய்யலாம். ஒவ்வொரு ஓட்டு அட்டையிலும் EPIC என்ற நம்பர் ஒன்று உண்டு.  

பின்வரும் வெப்சைட்டில் EPIC நம்பரும் உங்கள் மாநிலத்தையும் உள்ளீடு செய்தால் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்: https://electoralsearch.eci.gov.in/.

 இன்னும் சுலபமாக வேண்டும் என்றால் பின்வரும் எஸ்எம்எஸ்ஐ 1950  என்ற எண்ணிற்கு அனுப்பினால் அது தகவல் தரும்: ECI your EPIC number 


3.  உங்கள் பெயர் ஓட்டு பட்டியலில் இருந்தால் ஓட்டர் ஐடி தொலைந்து விட்டாலும் வேறு ஆவணங்களை காட்டி போட்டு போடலாம்.  ஓட்டர் ஐடி இல்லாவிட்டால் பின்வரும் வெப்சைட்டில் மாநிலம் மற்றும் EPIC நம்பர் அல்லது Phone number enter செய்து ஓட்டர் ஐடி காபியை பெற்றுக் கொள்ளலாம்: https://voters.eci.gov.in/login


4.  ஜனவரி 1 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓட்டர் ஐடிக்கு அப்ளை செய்யலாம்.  அதற்குப் பிறகு உதாரணத்திற்கு ஜனவரி 2 அன்று 18 வயதை பூர்த்தி செய்தாலும் ஓட்டர் ஐடி அப்ளிகேஷன் ரிஜெக்ட் செய்யப்படும்.  ஜனவரி ஒன்றுக்கு பிறகு) ஜனவரி இரண்டிலிருந்து) 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஏப்ரல் ஒன்றுக்கு பிறகு அப்ளை செய்யவும்.


5.  புதிதாக அப்ளை செய்வது மிக எளிதானது.  இந்த https://voters.eci.gov.in/login வெப்சைட்டுக்கு சென்று Form 6 "Application for including name in assembly constituency voters list.",  பட்டனை கிளிக் செய்து,  விவரங்களை பூர்த்தி செய்து அப்ளை செய்யவும்.  அட்ரஸிற்கான ஒரு ப்ரூப்,  பிறந்த தேதிக்கான ஒரு குரூப்,  இவைகளை சொந்த  கையெழுத்துட்டு (self attestation),  வெப்சைட்டில் அப்லோட் செய்யவும். 


சமீபமாக எடுத்த போட்டோ ஒன்றையும் அப்லோடு செய்யவும்.  பெயர் விவரங்கள் எல்லா ஐடியிலும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் இல்லாமல் இருந்தால் ஒரு வாரத்தில் கூட  ஸ்பீட் போஸ்ட் மூலமாக வந்துவிடும் என்கிறார்கள்.  


இதுவெல்லாம் நமக்கு செய்யத் தெரியாது என்பவர்கள், இ சர்வீஸ் சென்டர்களில் நூறிலிருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். அங்கே செய்து கொள்ளலாம். 


6.  இதுவே நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் அதே வெப்சைட்டில் ஃபார்ம் 6ஏ பூர்த்தி செய்து அப்ளை செய்யலாம்.   வெளிநாட்டில் இருந்து கொண்டு ஓட்டு அளிக்க முடியாது. ஆகவே ஓட்டர் ஐடி அப்ருவ செய்தவுடன், என்றைக்கு எலக்சன்  நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல உங்கள் விடுமுறை பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.


7.  இதுவெல்லாம் செய்த பிறகு  ஓட்டர் ஐடி உடன்,  வாக்குச்சாவடிக்கு செல்லுகிறீர்கள்.  உங்கள் ஓட்டு போடப்பட்டு விட்டது ( கள்ள ஓட்டு) என்று தடாரடியாக சொல்லுகிறார்கள்.  என்ன செய்வது? குழப்பம் வேண்டாம்.  அந்த வாக்குச்சாவடிக்கான Poll Officer இருப்பார். 

அவரிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பித்து நீங்கள் தான் அவர் என்று  நிரூபணம் செய்யுங்கள்.  அரசு விதி 49 பி படி அவர் உங்களை கண்டிப்பாக அனுமதிப்பார்.


8.  வெளியூர் சென்று வேலை செய்யும் பலர்,  'என்னுடைய ஓட்டு ஊரில் உள்ளது ஆகவே ஒன்றும் செய்ய இயலாது' என்று கையாளாகாதவர்கள் போல கவலைப்படுவார்கள்.  இதுவெல்லாம் சாக்குப் போக்கு.   ஒருவர் தன்னுடைய அட்ரஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  


உதாரணத்திற்கு திருநெல்வேலி இருந்து சென்னை வந்து வேலை செய்யும் ஒருவர் சென்னையில்  உள்ள வாக்கு சாவடிக்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  


பின்னர் திரும்பும்போது திருநெல்வேலிக்கு மாற்றிக் கொள்ளலாம். 2024 லோக்சபா தேர்தலை பொருத்தவரை அருகில் வந்து விட்டதால் இப்பொழுது அட்ரஸ் களை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதற்கு உண்டான  ஏற்பாடுகளை இப்போதே செய்து விடுங்கள்.


  நாம் ஒவ்வொருவரும் ஓட்டு போட வேண்டும் என்கிற ஒரு  உரிமைக்காக வேண்டி, பலர் தங்கள் உயிரைக் கொடுத்து விடுதலையை  பெற்றுத் தந்துள்ளார்கள்.  அந்த உரிமையை இழந்து விடாதீர்கள்.


Gudalur Consumer Human Resources

and Environment Protection Center

 The Nilgiris 

  *#கண்கள்* - 1

கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே .

வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

40 வயதிற்குப்பின் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. இதற்கு வெள்ளெழுத்து என்று பெயர்., இது வியாதி அல்ல, இயற்கையின் உடல்கூறுதான் . 

கண்பார்வை மட்டுமல்ல கண்ணின் நீர் அழுத்தம் , தோற்றப்பரப்பு, கண்ணின் உட்புறமாகிய விழித்திரையை காணல் –(VISION , TENSION ,FIELDS &FUNDUS) இந்த நான்கையும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக பரம்பரை வியாதிகளான நீரழிவு நோய் , கண் புரை, குளுகோமோ, இரத்த அழுத்தம் , ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருப்பின் தங்களுக்கும் இதனால் ஏதாவது பாதிப்புக்கள் உள்ளதா என்பதை 40 வயதிற்குள் அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். வயதான காலத்தில் இரத்த அழுத்தம், நீரழிவுநோய் , கண்ணின் நீர் அழுத்தம் ,கண்புரை, பார்வை நரம்பு கோளாறுகள், டி.பி, கிரந்தி நோய், ஆகியவைகள் மூலம் கண்பார்வை பாதிக்ககூடும். 

நமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண்களோடு தொடர்புள்ளாதாக அமைகிறது. நீரழிவு இரத்தக்கொதிப்பு , ஸிபிலிஸ், மேகநோய், எலும்புருக்கி, கக்குவான், இருமல், முதலிய நோய்களால் கண்களில் சில அறிகுறிகள் தோன்றும். 

கண்களை பரிசோதிக்கும்பொழுது கண்களின் ஒளித்திரையில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு அதனடிப்படையில் நோயாளி நீரழிவு நோய் (அ) இரத்த கொதிப்பால் துன்பப்படுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். 

நீரழிவு நோயால் ஒருவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டால் முக்கியமாக ஒளித்திரையில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணமாக இருக்கும் மற்றும் நீரழிவு நோயால் தசைநாருக்கு வரும் நரம்புகள் கெட்டு கண்விழி ஒரு பக்கம் போக முடியாத காரணத்தால் ஒரு பொருள் பலவாகத் தோன்றும்.

 இப்பிரச்சனை உள்ளவர்களின் சிறுநீரை ஆய்வு செய்து சர்க்கரையின் அளவை கண்டறியலாம். இந்த நீரழிவு நோய்களுக்கு அடிக்கடி கண் இமைகளில் கட்டி ஏற்படும், கண்புரை ஏற்படும். 

சொத்து :-


சொத்து :-

*********


சுய சம்பாத்தியம் என்றால் என்ன...?


சுய சம்பாத்தியம் என்றால், ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் யாருடைய தயவுமின்றி சுயமாக சம்பாதித்த அல்லது வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்துமே அவரது சுய சம்பாத்தியம் ஆகும்.


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு...?


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கு பங்கு கிடையாது. அதனை சம்பாதித்தவர் அதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


பூர்வீகச் சொத்து என்றால் என்ன...?


ஒருவர் தனது வாழ்நாளில் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பற்றி, எந்தவித ஏற்பாடும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் ஆகும். 


பூர்வீகச் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு...?


பூர்வூகச் சொத்துக்கள் பிரிக்கப்படாதவரை, அந்தப் பரம்பரையில் வருகின்ற வாரிசுகள் அனைவருக்குமே சொந்தமாகும். 


வாரிசுகள் என்றால் யார்...? 

இவர்களில் முன்னுரிமை உண்டா...?


திருமணமான ஒரு ஆணின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவரது வாரிசுகள்தான். இருந்தாலும், சட்டம் இவர்களில் சிலரை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.


முதல்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியவர்கள் முதல்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். 


இரண்டாம் நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது தந்தை இரண்டாம் நிலை வாரிசாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். 


மூன்றாம்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின்சொத்திற்கு அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரர்கள் மூன்றாம்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது பேரன் மற்றும் பேத்திகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது மகன் அல்லது அவரது மகள் ஏற்கனவே இறந்து போயிருந்தால் அந்த மகன் அல்லது மகளுக்குரிய பங்கு (அவர்களின் குழந்தைகளான) அவரது பேரன் பேத்திகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கப்படும்.


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு, அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது தந்தைக்குச் சேரும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்களுக்கு அவரது தந்தை உரிமை கொண்டாட முடியும். 


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும், தந்தையும் ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும். 


Half Brother, Half Sister என்று சட்டம் யாரைக் குறிப்பிடுகிறது...?


கோபால் என்ற ஒருவருக்கு இரண்டு மனைவிகள் என்று வைத்துக் கொள்வோம். கோபாலின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, கோபாலின் இரண்டாவது மனைவியின் மகன் Half Brother , மகள் Half Sister ஆவார். 


Half Brother, Half Sister-கள் எந்தச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். 


Half Brother Half Sister-கள் உரிமை கொண்டாட முடியாது. சட்டம் இங்கு ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கே உரிமையை வழங்கி இருக்கிறது.


சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமணம் எது...?


ஒரு ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கையிலேயே, அந்த முதல் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்யாமலேயே, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கவில்லை.


ஒரு ஆணின் சொத்தில் முறையாக திருமணம் செய்யாத இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டா...?


கிடையாது. ஆனால், அவரது குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு.


இரண்டாவது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை எப்போது கிடைக்கும்...?


ஒரு ஆண் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகோ அல்லது தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பிறகோ, இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தப் பெண்ணிற்கு அவரது சட்டப்படியான மனைவி என்ற அந்தஸ்தும், கணவனின் சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமையும் கிடைக்கும்.


இறந்து போன முதல் மனைவிக்கு ஒரு குழந்தையும், உயிருடன் உள்ள (சட்டபூர்வ) இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தையும் இருந்தால், ஒருவரின் சொத்தை எப்படி பிரிக்க வேண்டும்...?


இறந்து போன ஆணுக்கு சொந்தமாக ஒரே அளவுள்ள 4 வீடுகளும், வங்கியில் 40 லட்ச ரூபாய் ரொக்கமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 


இதனை அனைவரும் சமமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூத்த தாரத்து மகள்(1), இரண்டாவது மனைவி(2), இரண்டாவது மனைவியின் மகன்(3), இரண்டாவது மனைவியின் மகள்(4) ஆகிய நால்வரும் ஆளுக்கொரு வீடும், 10 லட்ச ரூபாயுமாக பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். 


ஒரு மனையை அல்லது ஒரு நிலத்தினை அண்ணன் தம்பிகள் எப்படி சண்டையில்லாமல் பிரித்துக் கொள்வது...? 


ஒரு வீடு அல்லது ஒரு நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதனை சண்டை போட்டுக் கொள்ளாமல் சகோதரர்கள் (இருவர் மட்டும் இருந்தால்) பிரித்துக் கொள்ள விரும்பினால், அண்ணனுக்கு மேற்கு திசையில் உள்ள இடமும், தம்பிக்கு கிழக்கு திசையில் உள்ள இடமும் என்று பிரித்துக் கொள்ளலாம். 


நான்கு பேர் இருந்தால், மூத்தவனுக்கு தென்மேற்கு, அடுத்தவன் வடமேற்கு, மூன்றாவது உள்ளவனுக்கு தென்கிழக்கு, கடைசியில் உள்ளவனுக்கு வடகிழக்கு என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்வாரிசுகள் இருந்தால் சகோதரர்கள் மேற்கு மற்றும் தெற்கு பக்க பங்குகளையும், சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பக்க பங்குகளையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், 

ஒரு மனையையோ அல்லது ஒரு வீட்டையோ நான்கு பாகமாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்றும், அந்தச் சொத்துக்கு அதிக வாரிசுகள் இருந்தால் நான்கு நபர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் பங்கிற்காக பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.


நன்றி....!


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள திருத்தங்கள்: சுருக்கம்

 மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள திருத்தங்கள்: சுருக்கம்

===============================================================


மோட்டார் வாகனச் சட்டம் என்பது இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஒரு சட்டமாகும், இது சாலை போக்குவரத்து வாகனங்களின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டம்.


 ஓட்டுநர்கள் / நடத்துனர்களுக்கு உரிமம் வழங்குதல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல், அனுமதி மூலம் மோட்டார் வாகனங்களை கட்டுப்படுத்துதல், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான சிறப்பு விதிகள் , போக்குவரத்து ஒழுங்குமுறை, காப்பீடு, பொறுப்பு, குற்றங்கள் மற்றும் அபராதம் போன்ற சட்ட விதிகளை இந்த சட்டம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019  ஆனது  இந்திய பாராளுமன்றத்தில்   9 ஆகஸ்ட், 2019 ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து    1 செப்டம்பர்  2019  முதல் நடைமுறைக்கு வந்தது .


http://egazette.nic.in/WriteReadData/2019/210413.pdf


உலக சுகாதார அமைப்பின் 2018 அறிக்கையின்படி, உலகளவில் இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா கூட நமக்கு பின்னால் உள்ளது . இதன் அடிப்படையில் பல்வேறு காரணங்களால், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.


https://www.jagranjosh.com/general-knowledge/features-of-motor-vehicles-amendment-bill-2019-1567410462-1


மோட்டார்  வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள  திருத்தங்கள்

===============================================================


சட்டப்பிரிவு -  138 

===============================================================

 https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28411§ionno=138&orderno=143


விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் 138 வது பிரிவில், சட்டத்தின் 138 வது பிரிவில் உட்ப்பிரிவு 1 (A ) ல் இணைக்கப்பட்டுள்ளது . 

புதிதாக  இணைக்கப்பட்டுள்ள உட்பிரிவு  - பொது இடங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இயந்திரம் அல்லாத வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பாக எந்தவொரு விதிகளும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரத்துடன் கலந்தாலோசித்த பின்னர் செயல்படுத்த  வேண்டும்.


சட்டப்பிரிவு - 194 B

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=49501§ionno=194B&orderno=207


இது சட்டத்தில் புதிதாக  இணைக்கப்பட்டுள்ள பிரிவு, இது பயணிகளின் பாதுகாப்பு குறித்து பேசுகிறது. பாதுகாப்பு பெல்ட் அணியாமல் மோட்டார் வாகனம் ஓட்டும் எந்தவொரு நபருக்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த பிரிவு கூறுகிறது.


மேலும், இந்த பிரிவு குறிப்பாக குழந்தைகளைப் பற்றி பேசுகிறது, மேலும் * சீட் பெல்ட் அணியாமல் அல்லது குழந்தை கட்டுப்பாட்டு முறை இல்லாமல் 14 வயதை பூர்த்தி செய்யாத குழந்தையுடன் மோட்டார் வாகனம் ஓட்டும் எந்தவொரு நபருக்கும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் * என்று கூறியுள்ளது.


சட்டப்பிரிவு  - 129 

===============================================================


http://egazette.nic.in/WriteReadData/2019/210413.pdf


சட்டத்தின் 129 வது பிரிவு பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது பற்றி பேசுகிறது. பிரிவு 129 இன் திருத்தம் நான்கு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குழந்தையும் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது  ஒரு ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முன்மொழிகிறது,  ஹெல்மெட் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் இந்திய தர நிர்ணய பணியகத்தின் தரங்களுக்கு இணைந்து இருக்க வேண்டும்.


சட்டப்பிரிவு - 137. 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28410§ionno=137&orderno=142


சட்டத்தின் 137 வது பிரிவு விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 137 இன் பிரிவு (அ) பாதுகாப்பு தலைக்கவசத்தின் தரங்களையும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளையும் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.


பிரிவு 110 B  மற்றும் 110 B 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகள் வாகனங்களை திரும்ப அழைப்பது பற்றி பேசுகின்றன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள  பிரிவுகள் 110 A மற்றும் 110 B  ஆகியவை தரங்களை பூர்த்தி செய்யாத வாகனங்களை நினைவுகூர மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன, மேலும் இது ஒப்புதல் சான்றிதழ்களை வழங்குவதற்காக சோதனை நிறுவனங்களை நிறுவுவதற்கும்  அதிகாரம் வழங்குகிறது.


சட்டப்பிரிவு - 198 A

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான தரங்களுக்கு இணங்கத் தவறியது பற்றி சட்டத்தின் பிரிவு 198 A பேசுகிறது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பிரிவு 198  A  சாலை ஒப்பந்தக்காரர்கள் / ஆலோசகர்கள் தவறான சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதமும் தவறான சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அபராதம் விதிக்கவும்  ஒரு பிரிவைச் சேர்ந்துள்ளது . இது சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு பொறுப்புக்கூறல் கட்டமைப்பையும் உறுதி செய்யும்.


உரிம அமைப்பு 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 9 (4) இன் படி, போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தவிர்க்கப்பட்டுள்ளது. பிரிவு 9 (3) க்கு இரண்டாவது விதிமுறையில் கொடுக்கப்பட்ட ஒரு நிறுவப்பட்ட பள்ளியிலிருந்து  ஒரு விண்ணப்பதாரர்  தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறுவதற்கான விலக்கு தவிர்க்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து வாகனத்தை ஓட்டும் முன் ஒரு கற்றவரின் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு  குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு இலகுவான மோட்டார் வாகனத்தை ஓட்ட உரிமம் வைத்திருப்பதன் அவசியத்தை நீக்கி சட்டத்தின் 12 வது பிரிவில்  உட்பிரிவு 5 சேர்க்கப்பட்டுள்ளது.


சட்டத்தின் 14 வது பிரிவில் உள்ள திருத்தம் போக்குவரத்து உரிமங்களை புதுப்பிப்பதை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கிறது, அதே நேரத்தில் அபாயகரமான பொருட்களுடன் வாகனங்களை ஓட்டுவதற்கான போக்குவரத்து உரிமங்களை புதுப்பிப்பது ஒரு வருடத்திலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது 


ஓட்டுநர் உரிமங்களின் தேசிய பதிவேட்டை நிறுவுவதற்கு வழிநடத்தும் புதிய பிரிவு 25A  இணைக்கப்பட்டுள்ளது. மாநில பதிவேடுகளை தேசிய பதிவேட்டில் சேர்க்கவும் இந்த ஏற்பாடு வழங்குகிறது. ஓட்டுநர் உரிமங்களின் தேசிய பதிவேட்டின் கீழ் தனித்துவமான ஓட்டுநர் உரிம எண் வழங்கப்படாவிட்டால் எந்த ஓட்டுநர் உரிமமும் செல்லுபடியாகாது என்று அது குறிப்பிடுகிறது.


உரிமத்தின் புதுப்பித்தல் காலம் முப்பது வயதுக்குப் பிறகு 10 வருட இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐம்பத்தைந்து வயதை எட்டிய பின் புதுப்பித்தல் காலம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிரிவு 19 இன் திருத்தம், ஒரு நபரை உரிமம் வைத்திருப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குற்றங்களுக்குப் பிறகு நிறுவப்பட்ட பள்ளியிலிருந்து ஓட்டுநர் புதுப்பித்தல் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக முடிக்காவிட்டால், அவரது பெயரை பொது களத்தில் வைப்பதற்கும் உரிமம் வழங்கும் அதிகாரத்தை வழங்குகிறது.


சட்டப்பிரிவு -  27

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28287§ionno=14&orderno=16


இதற்கான விதிகளை உருவாக்க சட்டத்தின் பிரிவு 27 மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது:


உரிமம் வழங்கும் அதிகாரம் உரிமங்களை வழங்கும் வடிவம் மற்றும் முறை


பிரிவு 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி தொகுதிகள் பற்றியும்.


ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குற்றங்கள் காரணமாக தகுதி நீக்கம் செய்ய உரிம உரிமையாளர்களின் பெயரை பொது களத்தில் வைக்கும் விதம் பற்றியும் 


இயக்கி புதுப்பித்தல் பயிற்சி வகுப்பின் தன்மை, பாடத்திட்டம் மற்றும் காலம் பற்றியும் 


பிரிவு 25 A இல் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், அதாவது ஓட்டுநர் உரிமங்களுக்கான தேசிய பதிவேடுகளை பராமரித்தல் பற்றியும் குறிப்பிடுகிறது.


சட்டப்பிரிவு -  41 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28314§ionno=41&orderno=43


சட்டத்தின் 41 வது பிரிவு புதிய வாகனங்களை பதிவு செய்வது பற்றி பேசுகிறது. இந்தத் திருத்தம் வாகனங்களின் விற்பனையாளர்களுக்கு புதிய வாகனங்களை பதிவு செய்ய உதவுகிறது. ஒரு வாகனத்தை முறையாக பதிவு செய்யத் தவறும் அல்லது கடமைகளில் தடுமாறும் வியாபாரிகளுக்கு நிலையான அபராதம் விதிக்கப்படுவதும் உண்டு. அத்தகைய வியாபாரிகளுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டப்பிரிவு - 72 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


சட்டத்தின் பிரிவு 72 மேடை வண்டி அனுமதி வழங்குவது பற்றி பேசுகிறது. பிரிவு 72 க்கு திருத்தம் கிராமப்புறங்களில் ஒரு மேடை வண்டிக்கு அனுமதி பெற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் தள்ளுபடி செய்வதற்கான பிராந்திய  அதிகார அதிகாரத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 72 இல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கும்


பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய சாமான்களின் அதிகபட்ச எடை.


வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தினசரி பயணங்கள்


அங்கீகரிக்கப்பட்ட உடல் குறியீடுகளின் விவரக்குறிப்புகள்


இந்த மசோதா போக்குவரத்து வாகனங்களுக்கான தானியங்கி உடற்பயிற்சி பரிசோதனையை மத்திய அரசு அறிவித்த தேதியிலிருந்து அமல்படுத்துகிறது.


சட்டப்பிரிவு -  117 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28390§ionno=117&orderno=122


சட்டத்தின் 117 வது பிரிவு பார்க்கிங் இடங்கள் மற்றும் நிலையங்களை நிறுத்துதல் பற்றி பேசுகிறது. பிரிவு 117 இன் திருத்தம் சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், பார்க்கிங் மண்டலங்களை நியமிக்கும் போது போக்குவரத்தின் இலவச ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் மாநில அரசுக்கு ஒரு கடமையை அளிக்கிறது.


பிரிவு 136A

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 136 A என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ள  பிரிவு இது மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பை அமல்படுத்துவது பற்றி பேசுகிறது. இது தொடர்பாக விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது, மேலும் அதை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த மாநில அரசை வழிநடத்துகிறது.


பிரிவு 215 D 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 215 D ஒரு தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவ முன்மொழிகிறது. சாலை வடிவமைப்பு, வாகன பராமரிப்பு, சாலை பராமரிப்பு, சாலை போக்குவரத்தின் நிலையான பயன்பாடு, பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களின் பாதுகாப்பு, சாலை கட்டுமான தொழில்நுட்பம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் வாரியம் யூனியன் மற்றும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும். , மோட்டார் வாகன தரநிலைகள் போன்றவை அடங்கும்.


பிரிவு 66 A மற்றும் 66 B

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


புதிதாக இணைக்கப்பட்டுள்ள பிரிவு 66 A  மற்றும் 66 B ஆகியவை தேசிய போக்குவரத்துக் கொள்கையை முன்மொழிகின்றன. புதிதாக  இணைக்கப்பட்டுள்ள  இந்த பிரிவுகள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து தேசிய போக்குவரத்துக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன.


பிரிவு 199A 

===============================================================


https://www.jagranjosh.com/general-knowledge/features-of-motor-vehicles-amendment-bill-2019-1567410462-1


சிறார்களின் குற்றம் ஒரு புதிய வகை என்றால்  அப்போது சிறார் பாதுகாவலர் / வாகனத்தின் உரிமையாளருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ 25,000  அபராதமும் மோட்டார் வாகனத்தின் பதிவும்  ரத்து செய்யப்படும்.சிறாருக்கு  சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்


அபராதங்கள் 

===============================================================


 குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ .2,000 இருந்து  ரூ .10,000 ஆகவும்  6 மாத சிறைத்தண்டனையுடன் உயர்த்தப்பட்டுள்ளது.


உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000.


ஒரு வாகன உற்பத்தியாளர் மோட்டார் வாகனத் தரங்களுக்கு இணங்கத் தவறினால், அபராதம் ரூ .100 கோடி வரை அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். 


ஒரு ஒப்பந்தக்காரர் சாலை வடிவமைப்பு தரத்திற்கு இணங்க அமைக்க  தவறினால், அபராதம் ரூ .1 லட்சம் வரை இருக்கும்.


மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 196 ன் கீழ், 2019 இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ .2000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டத்தின் 194  D  பிரிவின் கீழ்; ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களில்  சவாரி செய்தால்  ரூ .1000 அபராதமும் உரிமத்திற்கு 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படும்.


சட்டத்தின் 194 B  பிரிவின் கீழ் - சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டினால ரூ. 1000 அபராதம்  விதிக்கப்படும்.


வேகம் / பந்தயத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட  ரூ .500 க்கு பதிலாக ரூ .5,000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டத்தின் 194 E  பிரிவின் கீழ் -  அவசரகால வாகனங்களுக்கு ஒரு வழியை வழங்காவிட்டால் ரூ .10,000  அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரா.கணேசன் அருப்புக்கோட்டை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம் 

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...