*நமக்கு உள்ள ஓட்டுரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள உடனடியாக அறிய வேண்டிய/ செய்ய வேண்டிய 8 விஷயங்கள்*
1. 'நான் போன முறை ஓட்டு போட்டேன். எனவே ஓட்டு உரிமை உள்ளது' என்று அசால்ட்டாக நினைக்க வேண்டாம். பல இடங்களில் ஏதாவது காரணம் சொல்லி, ஓட்டு பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட சம்பவங்கள் உண்டு.
2. ஓட்டு பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அரசு அலுவலகத்திற்குச் சென்று நான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே செய்யலாம். ஒவ்வொரு ஓட்டு அட்டையிலும் EPIC என்ற நம்பர் ஒன்று உண்டு.
பின்வரும் வெப்சைட்டில் EPIC நம்பரும் உங்கள் மாநிலத்தையும் உள்ளீடு செய்தால் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்: https://electoralsearch.eci.gov.in/.
இன்னும் சுலபமாக வேண்டும் என்றால் பின்வரும் எஸ்எம்எஸ்ஐ 1950 என்ற எண்ணிற்கு அனுப்பினால் அது தகவல் தரும்: ECI your EPIC number
3. உங்கள் பெயர் ஓட்டு பட்டியலில் இருந்தால் ஓட்டர் ஐடி தொலைந்து விட்டாலும் வேறு ஆவணங்களை காட்டி போட்டு போடலாம். ஓட்டர் ஐடி இல்லாவிட்டால் பின்வரும் வெப்சைட்டில் மாநிலம் மற்றும் EPIC நம்பர் அல்லது Phone number enter செய்து ஓட்டர் ஐடி காபியை பெற்றுக் கொள்ளலாம்: https://voters.eci.gov.in/login
4. ஜனவரி 1 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓட்டர் ஐடிக்கு அப்ளை செய்யலாம். அதற்குப் பிறகு உதாரணத்திற்கு ஜனவரி 2 அன்று 18 வயதை பூர்த்தி செய்தாலும் ஓட்டர் ஐடி அப்ளிகேஷன் ரிஜெக்ட் செய்யப்படும். ஜனவரி ஒன்றுக்கு பிறகு) ஜனவரி இரண்டிலிருந்து) 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஏப்ரல் ஒன்றுக்கு பிறகு அப்ளை செய்யவும்.
5. புதிதாக அப்ளை செய்வது மிக எளிதானது. இந்த https://voters.eci.gov.in/login வெப்சைட்டுக்கு சென்று Form 6 "Application for including name in assembly constituency voters list.", பட்டனை கிளிக் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து அப்ளை செய்யவும். அட்ரஸிற்கான ஒரு ப்ரூப், பிறந்த தேதிக்கான ஒரு குரூப், இவைகளை சொந்த கையெழுத்துட்டு (self attestation), வெப்சைட்டில் அப்லோட் செய்யவும்.
சமீபமாக எடுத்த போட்டோ ஒன்றையும் அப்லோடு செய்யவும். பெயர் விவரங்கள் எல்லா ஐடியிலும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் இல்லாமல் இருந்தால் ஒரு வாரத்தில் கூட ஸ்பீட் போஸ்ட் மூலமாக வந்துவிடும் என்கிறார்கள்.
இதுவெல்லாம் நமக்கு செய்யத் தெரியாது என்பவர்கள், இ சர்வீஸ் சென்டர்களில் நூறிலிருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். அங்கே செய்து கொள்ளலாம்.
6. இதுவே நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் அதே வெப்சைட்டில் ஃபார்ம் 6ஏ பூர்த்தி செய்து அப்ளை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து கொண்டு ஓட்டு அளிக்க முடியாது. ஆகவே ஓட்டர் ஐடி அப்ருவ செய்தவுடன், என்றைக்கு எலக்சன் நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல உங்கள் விடுமுறை பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.
7. இதுவெல்லாம் செய்த பிறகு ஓட்டர் ஐடி உடன், வாக்குச்சாவடிக்கு செல்லுகிறீர்கள். உங்கள் ஓட்டு போடப்பட்டு விட்டது ( கள்ள ஓட்டு) என்று தடாரடியாக சொல்லுகிறார்கள். என்ன செய்வது? குழப்பம் வேண்டாம். அந்த வாக்குச்சாவடிக்கான Poll Officer இருப்பார்.
அவரிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பித்து நீங்கள் தான் அவர் என்று நிரூபணம் செய்யுங்கள். அரசு விதி 49 பி படி அவர் உங்களை கண்டிப்பாக அனுமதிப்பார்.
8. வெளியூர் சென்று வேலை செய்யும் பலர், 'என்னுடைய ஓட்டு ஊரில் உள்ளது ஆகவே ஒன்றும் செய்ய இயலாது' என்று கையாளாகாதவர்கள் போல கவலைப்படுவார்கள். இதுவெல்லாம் சாக்குப் போக்கு. ஒருவர் தன்னுடைய அட்ரஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு திருநெல்வேலி இருந்து சென்னை வந்து வேலை செய்யும் ஒருவர் சென்னையில் உள்ள வாக்கு சாவடிக்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
பின்னர் திரும்பும்போது திருநெல்வேலிக்கு மாற்றிக் கொள்ளலாம். 2024 லோக்சபா தேர்தலை பொருத்தவரை அருகில் வந்து விட்டதால் இப்பொழுது அட்ரஸ் களை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதற்கு உண்டான ஏற்பாடுகளை இப்போதே செய்து விடுங்கள்.
நாம் ஒவ்வொருவரும் ஓட்டு போட வேண்டும் என்கிற ஒரு உரிமைக்காக வேண்டி, பலர் தங்கள் உயிரைக் கொடுத்து விடுதலையை பெற்றுத் தந்துள்ளார்கள். அந்த உரிமையை இழந்து விடாதீர்கள்.
Gudalur Consumer Human Resources
and Environment Protection Center
The Nilgiris
No comments:
Post a Comment