*நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்*

 *நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்* 


நீதிமன்றத்தில் ஒரு வழக்கை வாதி தாக்கல் செய்கிறார் அந்த வழக்கை எதிர்த்து பிரதிவாதி வழக்கு நடத்துகிறார் இரு பக்க வழக்கு விசாரணையும் நடைபெற்று முடிந்த பிறகு அந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பை நீதிபதி வழங்குகிறார் அந்த வழக்கின் தீர்ப்பை எப்படி பெறுவது அந்த தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்ற மக்களின் பல கேள்விகளுக்கு பதிலை இந்த கட்டுரையில் விபரமாக தெரிந்துகொள்ளலாம்.


 *நீதிமன்ற தீர்ப்பு என்றால் என்ன?* 


ஒரு சர்ச்சையைத் தீர்த்து, கட்சிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தீர்மானிக்கும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் வழக்கின் விசாரணை முடிந்த இறுதிப் பகுதியாகும் இதை நீதிமன்ற இறுதி உத்தரவு எனலாம். ஒரு செல்லுபடியாகும் தீர்ப்பு அனைத்து போட்டியிட்ட சிக்கல்களையும் தீர்க்கிறது மற்றும் வழக்கிற்கு முடிவுக்குக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நடவடிக்கை குறித்த சட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதப்படுகிறது. வழக்கில் யார் வெற்றி பெறுகிறார்கள் மற்றும் வெற்றியாளருக்கு என்ன தீர்வுகள் வழங்கப்படும் என்று அது குறிப்பிடுகிறது. பரிகாரங்களில் பண சேதங்கள், தடை நிவாரணம் அல்லது இரண்டும் இருக்கலாம். 


ஒரு தீர்ப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் முடிவையும் குறிக்கிறது. சிவில் நடைமுறையின் கூட்டாட்சி விதிகள் மற்றும் சிவில் நடைமுறையின் பெரும்பாலான மாநில விதிகள் இறுதித் தீர்ப்புகளிலிருந்து மட்டுமே மேல்முறையீடுகளை அனுமதிக்கின்றன. 


ஒரு தீர்ப்பு எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து சிக்கல்களும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்ட வேண்டும். அது குறிப்பாக யாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொடுக்கப்பட்டுள்ளது என கட்சிகளைக் குறிக்க வேண்டும். பணவியல் தீர்ப்புகள் திட்டவட்டமானதாகவும், உறுதியுடன் குறிப்பிடப்பட்டதாகவும், புள்ளிவிவரங்களைக் காட்டிலும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உண்மையான சொத்துக்களின் வழக்குகளில் தீர்ப்புகள் நிலத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், நிலத்தின் வெளிப்படையான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


 *நீதிமன்ற தீர்ப்பை எப்பொழுது பெற முடியும்?* 


நீதிமன்ற தீர்ப்பை அன்றைய தினமே நீதிமன்றத்தில் தெரிந்து கொள்ள முடியும். நீதிமன்ற தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கும்போது அந்த நீதிமன்றத்தில் அந்த தீர்ப்பை பற்றி சொல்லித்தான் தீர்ப்பை வழங்குவார், ஒருவேளை அதை நாம் கவனிக்க தவறினால் அந்த தீர்ப்பை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீதிமன்றங்களில் கோர்ட் டைரி என்ற நடைமுறையின் மூலமாக தினம் நடைபெறும் நீதிமன்ற நடைமுறைகளை பதிவிட்டு பதிவேடுகள் மூலமாக பாதுகாத்து வருவார்கள் அந்த கோட்டையில் நீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை உங்கள் வழக்கறிஞர் மூலமாக படித்து தெரிந்து கொள்ள முடியும். நீதிமன்ற வாதியோ அல்லது பிரதிவாதியோ நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக தெரிந்து கொள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கு என்னை பதிவிட்டு மனு கொடுத்து நகலை பெற்று தான் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.


 *நீதிமன்ற தீர்ப்பை பாதுகாக்கும் முறை?* 


நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், அது நீதிமன்ற நிர்வாகி அலுவலகத்துடன் தேதியிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். நவீன கணினி தரவுத்தளங்களுக்கு முன், அகர வரிசைப்படி தீர்ப்புகள் ஒரு டாக்கெட் docketed புத்தகத்தில் உள்ளிடப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் அறியும் படி அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். பதிவு செய்தல் மற்றும் அறிவிப்பு நோக்கங்களுக்காக நீதிமன்ற நிர்வாகியால் தீர்ப்புகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டு தீர்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது நீதிமன்றங்கள் இப்போது தங்கள் தீர்ப்புகளை மின்னணு முறையில் பதிவு செய்து கணினியில் ஆவணப்படுத்தி தகவல்களைப் பராமரிக்கின்றன. தகவல்களைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் வேறுபட்டாலும், அடிப்படை செயல்முறை அப்படியே உள்ளது.


 *நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நகல் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?* 


நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று அந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கிய பிறகு அந்த தீர்ப்பின் முழு விபரத்தை தெரிந்து கொள்ள அந்த தீர்ப்புக்கான நகலை நீதிமன்றத்தில் பெறுவதற்காக நகல் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற அலுவலகம் அந்த நகல் மனுவை சரி பார்த்து மனு அளித்தது வாதியாகவோ பிரதிவாதியாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் நகலை கொடுப்பார்கள்.


மனுவை சரிபார்க்கும் போது வாதி மற்றும் பிரதிவாதியை தவிர்த்து வழக்கிற்கு சம்மிந்தமில்லாத மூன்றாம் நபர் நகல் மனுவை தாக்கல் செய்திருந்தால் அந்த மனு நிராகரிக்கப்படும்.


 *வழக்கின் தீர்ப்பின் நகல் மூன்றாம் நபருக்கு வழங்கப்படுமா?* 


ஒரு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியவுடன் அந்த வழக்கிற்கு சம்மந்தமில்லாத மூன்றாம் நபருக்கு அந்த வழக்கின் தீர்ப்பு வேண்டுமென்றால், அந்த மூன்றாம் நபர் நீதிமன்றத்தில் நகல் வேண்டும் என்று மனு செய்து நீதிமன்ற விசாரணையில் எதற்காக தனக்கு தீர்ப்பு நகல் தேவை என்ற காரணத்தை சொல்லி நீதிமன்ற உத்தரவு பெற்றால் மட்டுமே அவருக்கு வழக்கின் தீர்ப்பு நகல் வழங்கப்படும்.


மூன்றாம் நபர் சொல்லும் காரணத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றால் அவரது மனு நிராகரிக்கப்படும் அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின் நகல் வழங்கப்படாது.


 *நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் உண்டா?* 


ஆம் நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உடனடியாக நகல் வேண்டுமென்றால் (urgent) சாதாரணமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் செலுத்தினால் வேகமாக நீதிமன்ற உத்தரவு நகல் (urgent copy) உடனடியாக வழங்குவார்கள்.


 *நீதிமன்ற தீர்ப்பு நகலின் கட்டணம் விபரம் மற்றும் மனு செய்யும் முறை?* 


நீதிமன்ற தீர்ப்பு நகலின் மனுவை தயார் செய்து அதில் 2. ரூபாய்க்கான நீதிமன்ற ஸ்டாம் கட்டணமாக ஒட்ட வேண்டும். பின் அந்த மனுவை சரி பார்த்து எவ்வளவு காகிதங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு வேண்டுமென்று குறிப்பிட்டு நோட்டிஸ் ஒட்டப்படும் பின்னர் அதன் படி அதற்க்கான தனி மனுவில் தேவைப்படும் காகிதங்களை இணைத்து திரும்பவும் மனு கொடுக்க வேண்டும். குறிப்பு பக்கங்களை பெறுத்து கட்டணங்கள் கூறப்பட்டிருக்கும் அந்த கட்டணத்தை செலுத்திய பிறகு நீதிமன்ற உத்தரவை உங்களுக்கு நகல் எடுத்து வழங்கப்படும்.


இந்த நகலை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நகல் (certified judgement copy) என்று கூறலாம். இது ஒரிஜினல் (original) நீதிமன்ற உத்தரவு இதை தான் வழக்கு முடிந்த பிறகு நாம் அனைத்து சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்.


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...