பறவைகள் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

 தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு சோலாடி அரசு உணடு உறைவிட நடுநிலை பள்ளியில் பறவைகள் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி ஆல் த சில்ரன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஷ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம்

பேசும்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுமார் 200க்கு மேற்பட்ட வகை பறவைகள் வாழ்வதாக கண்டறிய பட்டுள்ளது. பறவைகள் இயற்கை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.  பறவைகள் பழங்கள் தின்று அவை பர்ப்பும் எச்சங்கள் மூலம் மரக்கன்றுகள் விரைவாக வளர்கின்றன. இதனால் மரம் வளர்ப்பில் ஒரு நாளைக்கு சுமார் 30 முதல் 50 வரை தனது பங்கினை ஆற்றுகிறது. பறவைகள் அதிகம் ஆக்சிஜன் தர கூடிய மரங்களில் மட்டுமே வசிக்கும் தன்மையுடையது. வீடுகளை சுற்றி பழங்கள் தரகூடிய மரங்களை வளர்க்க வேண்டும். டைக்குலோபினாலிக் இரசாயன கலந்த வலி நிவாரண மாத்திரைகள், மருந்துகள் பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றையும் பசையுடைய பொருட்களையும் திறந்த வெளியில் போடகூடாது. வீடுகளில் வெயில் காலங்களில் தண்ணீர் தாகம் தீர்க்க தண்ணீர் வைக்க வேண்டும். பறவைகளை வீடுகளில் வளர்ப்பது, அவற்றை சித்ரவதை படுத்துவது சட்டபடி தவறு என்றார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது பறவைகள் விவசாயிகளின் நண்பர்கள் ஆக உள்ளது. விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்கும் இவற்றால் பயிர்கள் பாதுகாக்க படுகிறது. பறவைகளை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றார். 

தொடர்ந்து சீனிவாசன் சேவைகள் அறக்கட்டள பணியாளர் பினு, முனீஸ்வரர் ஆகியோர் பறவைகள் பாதுகாப்பதன் அவசியங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். 

தொடர்ந்து மாணவர்களுக்கு பறவைகள் தங்க கூடுகள் அமைக்க வலியுறுத்த பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...