தேவாலா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஏகம் பவுண்டேஷன், ஆல் த சில்ரன், தி ஹோப் டிரஸ்ட் ஆகியன சார்பில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது
மனநலன் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் சிறுதானிய உணவுகள் பழங்கள் கீரைகள் உள்ளிட்டவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியதாக அமைகிறது எனக்கு கூறினார்
தொடர்ந்து மருத்துவ அலுவலர் கார்த்திகா பேசும்போது கர்ப்பிணிகளுக்கு
உடல் ரீதியாக மட்டுமே அதிகமாக கவனத்தை எடுத்துக் கொள்கின்றோம் ஆனால் அதையும் தாண்டி மனதளவிலும் குழந்தைகளை அக்கறையோடு கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மீது வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வளர்ப்பது மூலம் ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்றார்
மனநல ஆலோசகர் சத்தியசீலன் பேசும்போது குடும்பத்தினர் இடையே ஏற்படும் சிறு சிறு சண்டைகளும் குழந்தைகளை மனதளவில் பாதிக்கப்படுகிறது எனவே குழந்தைகளிடம் அன்பாக இருப்பது போல் குழந்தைகள் எதிரே சண்டையிடுவதையும் தவிர்க்க வேண்டும் குழந்தைகளை அன்போடும் கண்டிப்புடனும் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றார் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் கலர் கலந்து கொண்டனர் ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார் ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment