மின் இணைப்பு வழங்க கேட்டல் சார்பாக.

 பெறுனர்

 

மான்புமிகு தமிழக முதலமைச்சா் அவர்கள்

தமிழ்நாடு அரசு

 

உயர்திரு. மின் நுகர்வோர் குறைதீர்ப்பாளர்  அவர்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம்

சென்னை

 

உயர்திரு முதன்மை பொறியாளர் அவர்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

சென்னை

 

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்

மாவட்ட ஆட்சியரகம் உதகை

 

உயர்திரு. மேற்பார்வை பொறியாளர் அவர்கள்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்

நீலகிரி  மாவட்டம்

 

பொருள்        தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் வட்டத்தில் வசிக்க கூடிய

மக்கள் மின் இணைப்பு பெற இயலாமை  / மின்சாரம் பெறுவது மனித உரிமை என்ற சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க கேட்டல் சார்பாக.

 

பார்வை         மின்சார சட்டம் 2004 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை சட்ட விதிகள்

மின் பகிர்மான விதிகள்

 

                                    2.  சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு  வழக்கு எண் W.PNo 17608 of 2013 

M.P.No 1 of 2013 Dated 27.09.2013.

 

                                    3. சென்னை காஞ்சிபுரம் மறைமலைநகர்  ஆக்கிரமிப்பு நிலம் மின் இணைப்பு

    வழங்கல்  மின் நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் ஆணை  வழக்கு     

   முறையீட்டு  மனு எண் 132.2011 / ஆணை வழங்கிய நாள் 23,05,2012.

 

4. பட்டியலில் இணைத்துள்ள மின் இணைப்பு கோரும் மனுதாரர்கள்

 

              

 

அய்யா / அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்

 

            நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் மற்றும் கூடலூர் வட்டத்தில் கடந்த  70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

 

கூடலூர் வட்டம் தேவாலா நீர்மட்டம் பகுதி மற்றும் நாடுகானி பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.  பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது

 

இவர்களுக்கு  மின் இணைப்பு கிடைத்த நிலையில் சிலருக்கு மின் இணைப்பு கிடைக்க பெறுவதில்லை.  இதனால்  இங்கு வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி இன்றி பல்வேறு சிரம்மங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

பார்வை 2ல் உள்ள  சென்னை உயர்நீதி மன்ற வழக்கு உயர்நீதி மன்ற தீர்ப்பு  வழக்கு எண் W.PNo 17608 of 2013 M.P.No 1 of 2013  Dated 27.09.2013 மக்கள் மின் இணைப்பு பெறுவது சட்டபூர்வ உரிமை உள்ளது எனவும் மின் இணைப்பு தர மறுப்பது மனித உரிமை மீறல் என்றும்.  கூறியுள்ளது. 

 

அதுபோல  பார்வை 3ல் உள்ள மின்நுகர்வோர் குறைதீர்ப்பாளர் ஆணையில்  அரசு தடையில்லா சான்றுபெற இயலாத நிலையில் அரசுக்கு இடம் தேவைப்பட்டால் மின் இணைப்பை துண்டித்துகொள்ள மறுப்பேதும் செய்ய மாட்டேன்  மின் இணப்பு பெறுவதால்  நிலத்தின் உரிமைய நான் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்கி நடப்பேன் என்று உறுதி மொழி  ஏற்புறுதி பெற்று நுகர்வோருக்கு மின் இணைப்பு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

இதனடிப்படையில்  இப்பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக  வசிக்கும் மக்கள் வசிப்பதற்கான ஆதாரங்கள் என்கிற அடிப்படையில்  வீட்டு வரி மற்றும் ரேசன் கார்டு. ஆதார் கார்டு  ஆகியன உள்ளன.  இவர்களால் வறுமை காரணமாக மின் இணைப்பு பெற முன்னரே முயற்சிக்காமல் வசித்து விட்டனர்.  ஆனால் தற்போது வளர்ந்துள்ள தொழில் நுட்பம் மற்றும் இதர வசதிகள் அடிப்படையில் இவர்களுக்கு மின் இணைப்பு அவசியம் ஆகிறது.

 

இவர்கள் வசிக்கும் இந்த காலகட்டத்தில் இவர்களால் வனத்துக்கோ வன விலங்குகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

 

ஆனால்  மின் இணைப்பு கிடைக்காமல் பலரும் மிகவும் சிரம்ப்பபடுகின்றனர். 

குறிப்பாக     

Ø    இரவு நேரங்களில் வன விலங்குகள் மூலம் பாதுகாப்பற்ற சூழல் நிலவுதல்

Ø    பாம்பு உள்ளிட்ட விச பூச்சிகள் கடி ப்பட்டு உயிரை இழக்கும் அபாயம்,

Ø    பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்க இயலாமை

Ø    வனவிலங்குகள் வருவதை அறிய முடியாத நிலை

Ø    செய்திகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட இதர தகவல்கள் அறிந்து கொள்ள இயலாத நிலை

Ø    தகவல் தொடர்பு கிடைக்காமை என்கிற பல்வேறு சிரம்மங்களுக்கு ஆளாகின்றனர்.

Ø    தற்போது பள்ளி மாணவர்கள் இணைய வழி கல்வி கற்க இயலா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Ø    போட்டி தேர்வுகள் மற்றும் இதர வேலை வாய்ப்புகளில்  பங்கேற்க  இயலாமை

என்பன உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி சிரம்மத்திறகுட்பட்டு வாழும் நிலை

 

தொடர்ந்து சில மக்கள் மட்டும் புறக்கனிக்கப்பட்டு வருவது மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பது வேதனை அளிக்க கூடியதாக மாறுகின்றது.

 

இப்பகுதியில் வசிக்கும் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் யாருக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

 

இப்பகுதியில் வசிப்பவர்களால் அரசுக்கோ, அரசு சார் துறைகளுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவர்களால் எந்த சிரம்மங்களையும் அரசு மற்றும் அரசுசார் துறைகள் அடைவதில்லை. 

 

இவர்கள் வாழ்வாதரத்திற்கான அடிப்படை வசதியான மின் இணைப்பை வழங்க மறுப்பது மட்டும் இவர்களின் உரிமையை பறிப்பதாகவே உள்ளது.

 

மின் இணைப்பு மட்டும் அவர்களின் சொத்துக்கான உரிமையை தந்துவிடாது.  அதனால் மின் இணைப்பு பெற்றவுடன் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் குறிப்பிடதக்கது.

 

மின்சாரம் இணைப்பு வழங்கிய  பின்னும் அவர்கள் வீடுகளை காலி செய்ய சொன்னால் அப்போது மின் இணைப்பை துண்டிக்கலாமே, 

 

மின்இணைப்பு வழங்குவதற்கு அவர்கள் இன்டிமினிட்டி பான்ட் மூலம் உறுதிமொழி அளிக்கவும் தயாராக உள்ளனர்.

 

மின் இணைப்பு கேட்டு ஆதார்அட்டை மற்றும் வீட்டு வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் மின்வாரியத்திடம் விண்ணப்பித்தால் வருவாய் துறையிடம் தடையில்லா சான்று வேண்டும் என்கின்றனர்.  தற்போது பல்வேறு ஆவணங்கள் கேட்கின்றனர்.

 

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இவர்களுககு மாற்று இடம் இன்றி அன்றாட வாழ்வை மிகவும் சிரம்மத்துடன் கழித்து வருகின்றனர்.,  இவர்களுக்கு அரசு மூலம் இதர சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் போது மின்சார வசதி மட்டும் வழங்க மறுப்பது எந்தவகையில் நியாயம் ஆகும்.

 

எனவே வருவாய் துறை மூலம் மேற்படி நாடுகானி மற்றும் தேவாலா பகுதியில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்கி உதவுமாறும்

 

மின் வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கி உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

 

எனவே இணைப்பில் உள்ள நபர்கள் தங்கள் வீடுகளில் வசித்து வருவதை ஆதாராமாக கொண்டு அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கி உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

இப்படிக்கு


சி. காளிமுத்து  (தலைவர்) சு. சிவசுப்பிரமணியம்  (பொ துசெயலாளர்)

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...