ஆரம்ப சுகாதார நிலைய சேவைகள் குறித்த விழிப்புணர்வு



ஊட்டி, ஜூன் 24:
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வு மூகாம் நடந்தது.
ஊட்டியில் நடந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி, ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொது சுகாதார துறை மகளிர் நலன் மற்றும் குடும்ப நல அலுவலர் மாலைணி பேசுகையில், அரசின் சார்பில் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் உரிய மருத்துவ வசதிகள் உள்ளன. இதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுத்தி வருகின்றன. 24 மணி நேரம் ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
இங்கு அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு உரிய பருவத்தில் மற்றும் காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வருடத்திற்கு மூன்று முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதோடு வளர் இளம் பெண்களுக்கு உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு உதவியாக ஊக்க தொகை ரூ.12 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறது.
பிறப்பு சான்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்கப்படுகிறது என்றார். பயிற்சி மைய இயக்குநர் கிருஷ்ணன், பயிற்றுனர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...