செயற்குழு தீர்மானங்கள்

பெறுனர் 

உயர்திரு, ஆணையாளர் அவர்கள் 

உணவுப்பொருள் வழங்கல் மற்றும்  

நுகர்வோர் பாதுகாப்பு துறை

சென்னை.

 உயர்திரு, மாவட்ட ஆட்சியர் அவர்கள்வட்ட ஆட்சியரகம்

உதகமண்டலம்

பொருள் :  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் 

செயற்குழு கூட்டம்  06.02.2021  பந்தலூரில் நடைப்பெற்றது  

தீர்மாணங்கள் அனுப்புதல் சார்பாக,

ஐயா, அம்மையீர் வணக்கம்,

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு கூட்டம் பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு  மையத்தின் தலைவர்   தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  

1. அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து அமைப்பினர் சிறந்த செயல்பாட்டை ஊக்கப்படுத்திடும் வகையில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியத்தை  தேர்வு செய்து மறைந்த நுகர்வோர் காவலர்கள் பேராசிரியர் பிறை அறிவழகன் மற்றும் நுகர்வோர் பேராளி நிஜாமுதின் ஆகியோர் நினைவாக சிறந்த நுகர்வோர் காவலன் விருது அளித்து கவுரபடுத்திய தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு அமைப்புக்கும்

2. சிறந்த தன்னார்வ இரத்த தான அமைப்பிற்கான விருதினை 15வது முறையாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்கு வழங்கி  சிறந்த சேவையை ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட இரத்த பரிமாற்று குழுமம் மாவட்ட சுகாதார துறை அரசு இரத்த வங்கி நிர்வாகத்திற்கும் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், தொடர் ஆதரவுகளை வழங்கி உதவவும் கேட்டு கொள்ள தீர்மாணிக்கபட்டது.

3. அமைப்பின் கோரிக்கையை ஏற்று கொரனா தொற்று காரணமாக திறக்காமல் இருந்து உதகை அரசு மருத்துவகல்லூரி கண் அறுவை சிகிச்சை அரங்கை திறக்க வைத்த மாவட்ட ஆட்சியர், இணை இயக்குனர் சுகாதார துறை, மருத்துவகல்லூரி நிர்வாகம் ஆகியோருக்கும்,  நன்றியை தெரிவித்து கொள்ளுதல்,   

4. மேலும் அமைப்பின் கோரிக்கையை ஏற்று பந்தலூர் அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

5. கூடலூா் அரசு மருத்துவமனையில் டயாலிசீஸ் பிரிவு தொடங்க வேண்டும் என்ற அமைப்பின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று டயாலிசீஸ் பிரிவு தொடங்குவதற்கு  அனுமதி அளித்து நிதிஉதவி அளித்துள்ள அரசிற்கும் சுகாதார துறைக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ளுதல் 

6. அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்திற்கு இயக்கபட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்  கொரனா முடக்கத்தால்  நிறுத்தப்பட்டிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட சென்னை, கண்ணியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தட பேருந்துகளை மீண்டும் இயக்கப்பட்டது,  கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பொது மேலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுதல் 

பந்தலூர் பகுதி இளையோர்கள் பயன்பபெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாமினை நடத்திட கேட்டுகொண்டதற்கு இணங்க பந்தலூர் பகுதியில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியதற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ளுதல்

7. மேலும் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி கொடுத்த அனைத்து அரசு துறைகள் மற்றும் இதர அமைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுதல் 

8. அமைப்பின் மூலம் எழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை  முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.  கடந்த மார்ச் மாதம் முதல் கொரனா முடக்கத்தினால் நிறுத்து வைக்கப்பட்டு இருந்தது.  எனவே பொதுமக்கள் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மறறும் சுகாதார துறை கவணத்திற்கு எடுத்து சென்றதால் தற்போது மீண்டும் கண் அறுவை  தொடங்கப்பட்டது.  எனவே மீண்டும் மாதம் ஒரு கிராமம் வீதம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  சுகாதார துறையினா்  நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தோடு இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துவது எனவும்,  உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து நடத்திடவும் தீர்மாணிக்கப்பட்டது.

9. பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில்  தஞ்சாவூர், பட்டுகோட்டை, புதுகோட்டை  உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.  அதுபோல சாத்தான்குளம், திருநெல்வேலி, திருச்செந்தூர்   அதனை சுற்றுயுள்ள பகுதிகளை சார்ந்தவர்களும் அதிகம் வசித்து வருகின்றனர்.  இவர்கள் சொந்த ஊருக்கு சென்று வரவும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பல்வேறு வழித்தட பேருந்துகளை எதிர்நோக்கி செல்ல வேண்டியுள்ளது.  எனவே கூடலூர் பட்டுகோட்டை மற்றும் கூடலூர் திருச்செந்தூர்   ஆகிய வழித்தடங்களில் புதிய விரைவு பேருந்துகள் இயக்க வேண்டும் என தமிழக அரசையும் விரைவு போக்குவரத்து கழத்தையும் கேட்டுகொள்கின்றோம்.

10. பந்தலூர் மற்றும் சுற்றுப்பகுதி படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்லும் வகையில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள போட்டி தேர்வுக்கான பயிற்சியினை மீண்டும் பந்தலூர் பகுதியில் ஆரம்பித்து நடத்துதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

11. நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க வழங்கபட்ட ஸ்மார்ட் கார்டுகளில் அலைபேசி எண்கள் மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.  அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இன்னும் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள் முடியாமல் பல்வேறு உதவிகள் பெற இயலாமலும் பாதிகப்படுகின்றனர்.  

எனவே மாவட்ட அளவில் தொலைபேசி எண்கள் இணைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் விரைவில் தொலைபேசி எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொள்ளல்

12. பந்தலூர் அரசு மருத்துவமனை பழைய கட்டிடங்களை உடைத்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டவும் நவீன உபகரணங்கள் வழங்கவும் அரசிடம் வலியுறுத்துதல் எனவும்,  பந்தலூர் அரச மருத்துவமனையில் கூடுதல் பிரசவம் பார்க்கவும் இதர நவீன சிகிச்சைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க சுகாதார துறையை வலியுறுத்துதல்,

13. கூடலூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்  சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஹீமோ தெரபி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அரசை வலியுறுத்துதல்.

14. நூலகங்களில் தினசரி செய்திதாள்கள் வழங்கி அதன் மூலம் தொடர்ந்து வாசகர்கள் படிக்க உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்ளல்

15. பெட்ரோல் டீசல் விலை வீடடு உபயோக சிலிண்டா் விலை உயர்வு ஆகியன மக்களை வெகுவாக   பாதிக்கிறது எனவே  இவற்றின் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துதல்,

16. எரிவாயு நுகர்வோர்  குறை தீர் கூட்டம் வட்டங்கள் தோறும் நடத்தப்பட்டது தற்போது நடைபெறுவதில்லை.  அதனை மீண்டும் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்

17. அரசு உதவி பொறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் சேரும் மாணவர்களுக்கும் இலவச பாட நூல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

18. பொன்னானி கோவை வழித்தடத்தில் பொன்னானியில் இருந்து 8,30 மணியளவில் புறப்படும் வகையில் புதிய வழித்தடம் உருவாக்கி புதிய பேருந்து இயக்க போக்குவரத்தை கேட்டுகொள்ளல்.

19. நுகர்வோர் அமைப்புகளை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் முகவரி பட்டியலில் இணைக்க வேண்டும். வட்ட வழங்கல்அலுவலர் பரிந்துறை பேரில் முகவரி பட்டியலில் இணைக்கலாம்.  காவல் துறை சார்பில் அமைப்பபின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அல்லது நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் குறித்து அறிக்கை கேட்கலாம்.  ஆனால் அனைத்து உறுப்பினர்கள் குறித்து 500 ருபாய் செலுத்தி காவல்துறை சான்று பெற வேண்டும் என்று கூறி தேவையின்றி அலைகழிப்பை உருவாக்கி மன உளைச்சலை ஏற்படுத்துவதை நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் கவைிட வேண்டும் அமைப்பு நிர்வாகிகளின் கட்டுபாட்டில்தான் இயங்குகிறது.  உறுப்பினர்கள் அதிகாரத்தை எடுத்து செல்வதில்லை.  இதனால் நிர்வாக குழு குறித்த தகவல் அறிக்கை பெற்றுகொள்ளலாம்.

தற்போதைய சூழலில் தன்னார்வ சேவைக்கு வருவோர் மிகவும் குறைவு,  விழிப்புணர்வு கூட்டத்திற்கே ஆட்களை பிடிப்பது எவ்வளவு சிரமம் என்பது அலுவலர்களுக்கு தெரிந்திருக்கும்.  இந்நிலையில் தன்னார்வு சேவையில் தங்களுடைய சொந்த பணத்தில் செலவு செய்து ஈடுபட்டு வரும் நுகர்வோர் அமைப்புகளை எந்தவித நிதிஉதவியும் அளிக்காத நிலையில் அவர்களின் சேவகை்கு ஆதரவளிக்காமல் அலைகழிக்கபடுவது வேதனை அளிக்க கூடியதாக அமைகிறது.  

எனவே தேவையின்றி அழைகழிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.  நுகர்வோர் அமைப்புகளை ஆதரவளித்த நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைப்பின் செயலாளர் சிவசுப்பிரமணியம், பொருளாளர் ஜெயசந்திரன், துணை தலைவர் மஞ்சுளா துணை செயலாளர் ஜெயலட்சுமி, ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


இப்படிக்கு

சு, சிவசுப்பிரமணியம் 

பொது செயலாளர்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...