போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் ஆகியன சார்பில் தேவாலா அரசு மேல் நிலைப்பள்ளியில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் வே. கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். 

கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பேசும்போது  

பந்தலூர் கூடலூர் பகுதியில் ஏழை எளிய தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே அதிகம் உள்ளனர்.  இவர்கள் அரசு பணிக்கு வருவது மிகவும் குறைவாக உள்ளது.  அதுபோல அரசு துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகின்றது.  இப்பகுதியை சார்ந்தவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மூலம் இலவசமாக போட்டிதேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது 

போட்டி தேர்வுகள் இன்றி தற்போது வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.  வேலைவாய்ப்பு பதிவுகள் அடிப்படையில் அரசு வேலை வழங்கும் முறை தற்போது இல்லை.  எனவே அனைத்து விதமான வேலையை மேற்க்கொள்ள தேர்வாணையங்களை அரசு உருவாக்கி திறமை அடிப்படையில்  பணி நியமனங்கள் வழங்கப்படுகின்றன.  திறமை இருந்தால்தான் போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெற்று அரசு வேலைகளை பெறமுடியும்.என்ற நிலையில் பள்ளியில் படிக்கும் வயதிலேயே, போட்டி தேர்வுகளில் தயாராக வேண்டும்  இதன்மூலம் விரைவாக அரசுபணி பெறமுடியும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது 

போட்டி தேர்வுகளுக்கு அழைப்பு வந்தவுடன், தேர்வுக்கு தயாராகும் நிலை போட்டி தேர்வில் வெற்றி பெற இயலாத நிலையே உருவாகும்.  தொடர்பயிற்சி பெற்று அதன்மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பணிகள் பெற முடியும், ஒவ்வொரு தேர்விற்க்கும் போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனர்.  எனவே கடின உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்றார்.
போட்டி தேர்வுக்கான துண்டு பிரசுரங்கள் மாணவர்களிடையே வினியோகிக்கப்பட்டன.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். 

இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

கூடலூரில் இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர்  ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.   தொழிற்பயிற்சி மைய முதன்மை பயிற்றுனர் மாதையன் வரவேற்றார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்  மு. திராவிடமணி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்த கொடையாளர்களுக்கு பராட்டு சான்று வழங்கி சிறப்புரையாற்றியபோது

இரத்த தானம் கண் தானம் என்பது தற்போது மிகவும் அவசியமானதாகும்.  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கப்பட்டு அதன் மூலம் இப்பகுதி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.  

தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  ஊட்டசத்தான உணவு உட்கொள்ளாமலும், அட்டை உன்னி போன்ற பூச்சி கடிகளாலும் இரத்ததை இழந்து இரத்த சோகை போன்ற நோய்களுக்கு ஆட்படுவதோடு,  இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டினால் புற்று நோய்க்கும், சிறுநீரக கோளறுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

எனவே இதுபோன்ற ஏழை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்  இரத்த தானம் வழங்கியது பராட்ட கூடியதாகும். அடுத்தவருக்கு உதவும் ஈகை குணம் மாணவ பருவத்திலேயே உருவாகி தொடரவேண்டும்.  

இரத்த தானம் வழங்க மனம் இருப்பது போல் மன வலிமையும், உடல் வலிமையும் அவசியம்.  இளைஞர்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகாமல்   கல்வியை முறையாக கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏட்டு படிப்பை விட செயல்முறை படிப்பு மிகவும் முக்கியமானது.  இதன் மூலம் சுயமான தொழிலை கற்றுக்கொள்ள முடியும்.   

கூடலூர் வட்டாரத்தில் போதுமான தொழில் நிறுவனங்கள் இல்லாத நிலையே உள்ளது.  இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகள் கார்மென்ட்ஸ் போன்றவை கொண்டு வர முயற்சிகள் மேற்க்கொண்டோம்.  இங்குள்ள பருவநிலை சமவெளி பகுதிகளில் உள்ள தொழில்கள் செய்ய இயலாத நிலையினால் வேறு தொழில்கள் இப்பகுதிக்கு கொண்டு வர இயலவில்லை.  

அரசு மூலம் உதவிப்பெறும் தொழிற்பயிற்சி மையமாக இதனை மாற்ற முயற்சிகள் மேற்க்கொள்ளகின்றேன்.  தோட்ட தொழிலாளர்களாகிய மாணவர்கள் பெற்றோர்களின் சிரம்மத்தை கருத்தில் கொண்டு கல்வியின் கவனம் செலுத்த வேண்டும்.  கல்வியே மிக சிறந்த மூலதனம் என்பதை உணர்ந்து போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் கற்று மேன்மையடைய வேண்டும் என்றார்.

தொடர்ந்து இரத்த தானம் வழங்கிய மாணவர்கள் மற்றும் கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் காளிமுத்து,கூட்டுறவு சங்க பணியாளர்கள் கனேசன், சினு, பாப்பன்னன் ஆகியோருக்கும் மரத்தான் ஓட்டபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிறைவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார். 

பிறப்பு சான்று கட்டண உயர்வை திரும்ப பெற


பெறுனர்

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்            
தலைமைசெயலகம், 
தமிழ்நாடு சென்னை

பொருள்: தமிழ்நாடு அரசு சார்பில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பதிவிற்கான கட்டணத்தை
உயர்த்தியதை  குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்,
தமிழக அரசு சார்பில் பிறப்பு இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ. 10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.  மேலும் இறப்பு சான்று ரூபாய் 10 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் தீடிரென இந்த கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பெரும்பாலான ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாக உள்ளது. 
பலரும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்து அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற்றே பிரசவ காலத்தில் வாழ்கின்ற நிலையும் பலருக்கு  உள்ளது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஏற்கனவே  உள்ள கட்டணங்களை பண்மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக   பிறப்பு அல்லது இறப்பு ஆகியவற்றிற்கு சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் இலவசம் என்ற நிலையும்,  21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை தாமத கட்டணம் ரூபாய் 2 நீதிமன்ற வில்லை ஒட்டி கட்டணம் செலுத்தும் நிலை இருந்ததை தற்போது ரூபாய் 100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல30 நாட்களுக்கு மேல் ஓரு ஆண்டு வரையில் தாமத கட்டணம் 5 ரூபாயாக இருந்ததை தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்கு மேல் பதிவு செய்யாதவர்களுக்கு தாமத கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 500 எனவும் உயர்த்தப்பட்டள்ளது.

மேலும் பிறப்பு சான்றிதழில் பெயரின்றி உள்ள சான்றில் பெயரை சேர்த்து  சான்று பெற 5 ரூபாயில் இருந்து 200 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல இறப்பு சான்றிதழ் பெற  கட்டணமாக வசூலிக்கப்பட்ட 5 ரூபாய் கட்டணத்தை ரூபாய்  200 ஆகவும் கூடுதல் நகல்களுக்கு ரூபாய் 200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பெறுவதில் பலரும் அக்கறை காட்டுவதில்லை என்ற நிலையும் ஏற்படுகின்றது.  
பிறப்பு இறப்பு சான்றுகள் முக்கியம் என்ற நிலையில் இச்சான்றுகளுக்கான கட்டணம் ஒரே நேரத்தில் பண்மடங்கு உயர்தியுள்ளது அடிதட்டு ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.

அத்தியாவசிய அடிப்படை தேவையான  பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளின் கட்டணத்தை தீடிரென பன்மடங்கு உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அதுபோல ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்களாக உள்ளது போல் மற்ற மருத்துவமனைகளிலும்   இலவசமாகவே பிறப்பு இறப்பு சான்றுகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                         இப்படிக்கு
சி. காளிமுத்து  (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்   
(பொது செயலாளர்)                                                                                                                                                                                 

TNPSC பயிற்சி மைய ஆலோசணை கூட்டம்



பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.  
கூட்டத்திற்கு  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்,
தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர் தண்டபாணி,
கூடலூர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன்,  
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், 
மகளீர் திட்ட சுய உதவி குழு பயிற்றுனர் செலின்,  பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் பூபாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தினை மேம்படுத்தும் விதமாக கல்லூரியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டதும், தொடர் துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப் பட்டதும், பயிற்சிகள் குறித்த தகவல் வழங்கியும் மாணவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள இளைஞர்களிடையே போட்டி தேர்வுக்கான பங்கேற்புக்கு தயாராகும் விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது என்ற கருத்தையும்
பலர் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்து அதன்பின் பயிற்சி பெறுவதும், படிக்க ஆரம்பிப்பதும் வழக்கமாக கொண்டிருக்கின்றர்,
போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு  போட்டி தேர்வு அழைப்பு வரும்போது விண்ணப்பித்து தேர்வெழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணராமல் இருப்பது குறித்தும்  வேதணை தெரிவிக்கப்பட்டது
அதனால், இந்த பயிற்சி மையம் மூலம் இன்னும் பயிற்சி பெற மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது மற்றும் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 க்கான தேர்வு குறித்தும் அதற்கான பயிற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் அதிகரிக்க மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, கையுன்னி, தேவாலா, பிதிர்காடு,எருமாடு  பள்ளிகளிலும், பந்தலூர் பகுதிகளில் உள்ள  உயர்நிலை பள்ளிகளிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  அவர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவது என தீர்மாணிக்கப்பட்டது.
எருமாடு மற்றும் சேரம்பாடி பகுதிகளில் மகளீர் குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை வரும் டிசம்பர் 3 ஞாயிற்றுகிழமை நடத்த திட்டமிடப்பட்டது. 
மத வழிபாட்டு தளங்களில், மதகுருமார்கள்,  மக்கள் ஒருங்கிணையும் தலைவர்கள், நிர்வாகிகள், மூலம்   கிராமபுற மக்களிடையே போட்டி தேர்வு குறித்தும் அதன் அவசியங்கள் மற்றும், பயிற்சி மையம் குறித்தும் விழிப்புணர்வு  ஏற்படுத்துதல் எனவும் தீர்மாணிக்கப்படும்.
பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் குறித்த தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
போட்டிதேர்வுக்கான புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கி வைத்தல் எனவும்,  அதன்மூலம் போட்டி தேர்வுக்கான மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாய்வுகள் மேற்கொள்ளவும் உதவுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
வாகண பிரச்சாரம் மூலம் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த இளையோர்களை ஒருங்கிணைத்து பயிற்சி வழங்க முயற்சிகள் மேம்படுத்துதல் எனவும்,  தீர்மாணிக்கப்பட்டது.
 சி. காளிமுத்து (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்
(பொது செயலாளர்)
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.

நவுசாத் (தலைவர்)
மகாத்மா காந்தி பொது சேவை மையம

Consumer Grievance Redressal Forum

Consumer Grievance Redressal Forum

Guidelines
  • Consumer can register the petition through 'Petition Entry' menu.

  • Once the petition has been registered a petitionID will be created. The complainant shall track the petition using this petition ID and the status can be viewed using 'Petition Status'menu.

  • In order to view the orders issued by the CGRF of concerned circle, Click the 'Latest Orders' menu. In that page select your circle.

  • All the CGRF petitions(received via online/manual) for which order has been passed will be listed out.

  • Click the petition of your interest to download the orders passed.

உணவு விளம்பரங்களில் சில கட்டுப்பாடு

உணவு விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'புதிய', 'அசல்' உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி,
''ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள்  கடைபிடிக்கப்பட்டால்  'புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது' (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.
'இயற்கையான' (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.
அத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு 'இயற்கையான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் 'இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது' என்று விளம்பரப்படுத்தலாம்.
'பாரம்பரியமான' (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
'அசலான' (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது''.
இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது

*
உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது* . 

உதகை நகர விழிப்புணர்வு சங்கம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சட்டதின நிகழ்ச்சிக்கு பள்ளி *உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ண குமார் தலைமை* தாங்கினார்.

பள்ளி மாணவி *குணசியா* வரவேற்றார்

 *உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன்* பேசும்போது நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்க்கு எதிராக அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுகின்றனர். வாகன ஓட்டிகளின் விதிமீறியமாக பெறப்படும் ஓட்டுனர் உரிமம் உட்பட பறிமுதல் செய்யப்படும் ஆவணங்கள் திரும்ப பெற அழைகழிக்கப்படுகின்றது.
மக்களுக்கான சட்டத்தின் மூலம் மக்கள் அழைகழிக்கப்படுவது வேதனையானது என்றார்

 *வழக்கறிஞர் நஜூமா பாய் நசீர* ் பேசும்போது
சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசியலமைப்பு கூறுகின்றது.  அனைவரும் சட்டம் கற்க வேண்டியது அவசியம் ஆகும்.  குறிப்பாக பொண்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்,  தன் தாய் மொழியில் வழக்காட நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றார்.

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம்* பேசும்போது
அனைவரையும் சட்டத்தால் சமமப்படுத்தும் நோக்கில் சட்டம் உருவாக்கபட்டுள்ளது.  சட்டத்தை மீறுவோர் இன்று சுதந்திரமாகவும், சட்டத்தை மதிப்பவர்கள் கட்டபாட்டில் வழ்வது போலவும் நிலை காணப்படுகின்றது.  சட்டத்தின் பயன்கள் பெற சட்டத்தையும் வெளிவரும் தீர்ப்புகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.  சாட்சிகளும், ஆவணங்களும்ழ வாதங்களுமே சட்டத்தின் பயனை பெறமுடியுமெ என்றார்.

தமிழாசிரியர் *நாகராஜ்* பேசும்போது
முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான சட்டங்கள் மற்றும் வன்கொடுமை சட்டங்களின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும்.  சட்டத்தை மீறுவோர் மீது சட்னரீதியான நடவடிக்கை இல்லாததினால் சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றார்.

சட்டதின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டதினம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள் *ரோசினி, குணசியா, தீக்க்ஷா, சுஜித், தீபக், யோசிதா, சிமைலீ, சைந்தவி* ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முடிவில் மாணவி *யோசிதா* நன்றி கூறினார்.

உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு


பந்தலூர் அருகே உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

நடைப்பெற்றது.  உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள்

நுகர்வோர் மன்றம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன
சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜேந்திரன்

வரவேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பள்ளி
உதவி தலைமை ஆசிரியர்  பிஜோ தலைமை தாங்கி பேசும்போது
இன்று கலப்படம் அதிகமாக உள்ளது,  உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதால்
பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே மாணவர்கள்
விழிப்பபோடு இருப்பது அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி காளிமுத்து பேசும்போது

மாணவர்கள்  கல்வியோடு பொது அறிவையும் பெறவேண்டும்,  

சந்தையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் நல்லது எது, கெட்டது எது என்பதை பிரித்தறியும் தன்மை
அறிவு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.  தரமான பொருட்களை அறிந்து கொண்டு
கலப்படங்கள் மற்றும் போலி பொருட்களை கண்டறிந்து அது குறித்து பொது
மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்லவே மாணவர்கள் மத்தியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் செயல்படுத்த படுகின்றன என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது

நாம் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவையாகவோ, உடலுக்கு
தீங்கு விளைவிக்க கூடியவையாகவோ உள்ளது.  

தரமான பொருட்கள் குறித்து
அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்,  ஒவ்வொரு பொருளின் பொட்டலத்தின்
மேற்பகுதியில் பொருளின் சேர்மங்கள் குறித்து பார்க்க வேண்டும்,  பொருளின்
உபயோகம், பொருளினை பயன்படுத்தும் விதம், பொருளின் காலவதி தேதி, தயாரிப்பு
நிறுவனம் போன்றவை பார்த்து வாங்க வேண்டும்,  

காலையில் பயன்படுத்தும்
பற்பசை முதல் இரவு தூங்கும் வரை பயன்படுத்தும் பொருட்களின் தன்மைகள்
பயன்கள் குறித்து பகுத்தறிந்து பயன்படுத்துவது நுகர்வோரின் கடமையாகும்
என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் மனோஜ் நன்றி கூறினார்.

Labourer loses Rs 1L

Labourer loses Rs 1L after sharing OTP over phone to stranger

Covai Post Network



November 22, 2017



Image credit : Illustrative Image

Unidentified cyber criminals cheated a daily wage labourer in Pandalur district of Rs 1 lakh by collecting his one-time password (OTP) number over the phone, posing as bank officials.

According to sources, Viswanathan of Ambedkhar Colony in Pandalur taluk was working as a daily wage labourer in a tea estate. He has kept his Employee’s Provident Fund (EPF) amount in his personal account in Indian Bank in Pandalur.

 *Viswanathan* received a call from an unidentified person stating he was from the bank’s head office in Chennai and wanted the OTP number he would receive on his mobile phone.

Initially, *Viswanathan* had doubts but shared the OTP after the person mentioned the address and account number correctly.

But later he found that Rs 1 lakh had been withdrawn from his account, the money from his EPF.

A case has been registered at the cyber crime police station.

 *S Sivasubramaniam, general secretary of the Consumer Protection Centre Gudalur* , said though there was growing awareness among the public, many were still falling a prey to cyber crimes. People know they are not to share their ATM pin number with anybody calling from mobile number, but are not so clear about OTP number

To avoid cyber thefts, people should be made aware that no personal details, be it bank account or Aadhaar numbers or any type of passwords, are not to be shared with strangers, especially over the phone.

He also wanted people to go directly to their bank in case they are to share their personal details

https://www.covaipost.com/coimbatore/labourer-loses-rs-1l-after-sharing-otp-over-phone-to-stranger/

மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது

மளிகைக் கடையில் மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது, எப்போதுமே கடந்த மாதத்தைவிட பில் அதிகமாகவே வரும். விலைவாசி உயர்வு மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் தேவைக்கு அதிகமான பொருட்களை நம்மை அறியாமலேயே நாம் வாங்குவதும் அதற்கு ஒரு காரணம்.
அப்படி வாங்க நம்மைத் தூண்டுவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கு விளம்பரங்கள், கண்கவர் ஆஃபர் அறிவிப்புகள், கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள்.
அப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.
ஆனால், அப்படி ஆஃபர்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது சற்று கவனமாகவே இருங்கள். ஏனென்றால், அந்த பொருட்கள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் காலாவதியாகப் போவதாகவே இருக்கும். அல்லது முற்றிலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறியிருக்கும். எனவே, அவற்றை வாங்குவதில் அதிக கவனம் தேவை.
கடந்த ஆண்டு, சென்னை நகர் முழுவதும் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை மாநில உணவுப் பாதுகாப்பு நிறுவனம் பறிமுதல் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள்கூட காலாவதியான பொருட்களை ஆஃபர் போர்வையில் விற்பனை செய்கின்றன. வடசென்னையில், இப்படிப்பட்ட விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது" என்றார்
ஆனால் 10, 15 நாட்கள் வரை காலாவதி தேதி இருக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது அல்ல என கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்.
காலாவதிப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை புரிதலையாவது பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன்படி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது சுகாதரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. உணவுப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாளும் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விரைவில் கெட்டுப்போகும் பிரெட், பால் போன்ற உணவுப் பதார்த்தங்களிலும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மட்டுமே பெரும்பாலும் இந்தத் தேதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இயக்குநர் ஜி.சந்தனராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது சட்ட விரோதமானது. தண்டனைக்குரியது. அப்படிப்பட்ட விற்பனை நடைபெற்றால், அது குறித்து நுகர்வோர் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் நிச்சயமாக புகார் செய்யலாம். அதுபோல், காலாவதி பொருளை உட்கொண்டதால் நுகர்வோர் பாதிப்படையும் போது, அந்த பொருள் விற்கப்பட்டது கிரிமினல் குற்றமாகிவிடுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரூ.5 லட்சம் வரை அபாராதம் விதிக்க வழி இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் விற்பனையாளர்களை மட்டும் முழுமையாக குற்றம்சாட்ட முடியாது. நுகர்வோரும் மலிவு விலை, சலுகை விலை, ஆஃபர் விற்பனை பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
காலாவதி தேதி வரும் வரை உணவுப் பொருட்களை கடைகளில் தேக்கி வைப்பதில் தவறில்லை, ஆனால், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு காலாவதியான பொருட்களை உடனடியாக அலமாரியில் இருந்து அகற்ற முறையான பயிற்சி அளித்தல் அவசியம் என கூறுகிறார் பிரபல சூப்பர் மார்க்கெட் அதிபர் ஒருவர்.

உணவை வாங்கும் டிப்ஸ்

உணவை வாங்கும் டிப்ஸ்
மாதம் முதல் தேதியானதும் மளிகைக் கடைக்குப்போய் அண்ணாச்சியிடம் லிஸ்ட்டைக் கொடுத்துவிட்டு, அந்த லிஸ்ட்டில் உள்ளதை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய காலம் மலையேறிவிட்டது. இது சூப்பர் மார்க்கெட் காலம். சிறு நகரங்களில் மட்டும் அல்ல, சிற்றூர்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகிவிட்டன. மக்கள் நேரடியாகப் பொருட்களைப் பார்த்து, தங்கள் கைகளாலேயே ரேக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து பில் போடும் சுதந்திரம் வந்துவிட்டது.

`உண்மையில் இது சுதந்திரமா அல்லது, வாடிக்கையாளர்களுக்கு விரிக்கப்படும் வலையா?’ என்றொரு கேள்வி எழுகிறது. இப்படி, சந்தையில் நிறைந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையே நம்மை உலவ வைப்பது, நமது வாங்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறது.வண்ணமயமான, பளபளப்பான பேக்கிங்கைப் பார்த்ததும் அதில் மயங்கி, தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி வந்துவிடுகிறோம். தேவையற்ற பொருள்கள் வீட்டுக்குள் நுழைவதால் காசுக்குக் கேடு. அதுவே, வயிற்றுக்குள் நுழைவதால் நம் உடல் நலனுக்குக் கேடாகிறது.

ஒருகாலத்தில், நாம் வாங்கும் உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், தற்போது பாக்கெட் உணவுகளில் கட்டாயம் அதில் உள்ள மூலப்பொருட்கள், ஊட்டச்சத்துப் பட்டியல் இடம்பெற வேண்டும் என்று சட்டமே உள்ளது. வாங்கும் உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்துவாங்க வேண்டியது அவசியம் என்ற விழிப்புஉணர்வு மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. நியூட்ரீஷியன் லேபிளில் பொடி எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைப் படித்துப் பார்த்து வாங்க, யாருக்கும் பொறுமை இருப்பது இல்லை. அப்படியே பார்த்தாலும், பலருக்கு அது புரியாது. உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்கும் விழிப்புஉணர்வே இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியுள்ளது.பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

லேபிளில் என்னென்ன இருக்கும்?
பொதுவாக, ஒவ்வொரு பொருளிலும் மேற்பகுதியில் பரிமாரப்படும் உணவின் அளவு, கலோரி, ஊட்டச்சத்து மதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இவை, பொருளுக்குப் பொருள் மாறுபடும். கீழ்ப் பகுதியில், ஒரு நாளைக்கு தேவையான கலோரிக்கு (தோராயமாக 2,000 கலோரி) இந்த உணவின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு  குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், கொழுப்பு, சோடியம், நார்ச்சத்து ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். 

எதில் தயாரிக்கப்பட்டது?
ஒரு தயாரிப்புப் பொருளில் என்னென்ன சேர்மானங்கள் (Ingredients) உள்ளன என்பது கொடுக்கப்பட்டிருக்கும். அதை முதலில் பார்க்க வேண்டும். பொதுவாக, எது அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளதோ, அதுதான் அந்தப் பட்டியலின் முதலில் இடம்பெற்றிருக்கும். சேர்க்கப்பட்டுள்ள விகிதத்துக்கு ஏற்பவே பட்டியல் வரிசை இருக்கும். உங்களால் உச்சரிக்க முடியாத, உங்களுக்குத் தெரியாத பொருட்கள் ஆரம்ப இடங்களில் இருந்தால், அந்தப் பொருளை வாங்குவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள்.

சர்க்கரை அளவு
`ஷுகர்’ என்று எழுதப்பட்டிருப்பது மட்டுமே சர்க்கரை அல்ல. ஹை ஃபிரக்டோஸ் கார்ன் சிரப், கார்ன் சிரப், ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், சுக்ரோஸ், தேன், மொலாசஸ் (Molasses), கரும்புச்சாறு (Evaporated cane juice) என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளே. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரு பொருளில் இருந்தால் , அதைத் தவிர்ப்பது நல்லது.

சோடியம் அளவு
சோடியம் உப்பின் அளவைக் கவனிப்பது நல்லது. உப்பு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  ஒருநாளைக்கு 5-8 கிராம் என்ற அளவில் உப்பை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, சோடியமும் கலோரியும் 1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, 1,000 கலோரி உணவில் 1,000 மி.கி சோடியம் இருக்க வேண்டும். அதற்கு சற்றுக் குறைவாக இருந்தாலும் தவறு இல்லை; அதிகமாக இருக்கக் கூடாது.

கொழுப்பின் அளவு
எல்லா வகைக் கொழுப்புகளுமே உடலுக்கு அவசியம் என்றாலும், அவை தேவைக்கு அதிகமாக உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரி அளவை மட்டும் அல்ல, கொழுப்பில் இருந்து கிடைக்கும் கலோரி அளவையும் கவனிக்க வேண்டும். `ஒரு பொருளில் கிடைக்கும் கலோரி அளவில் 30 சதவிகிதத்துக்கு மேல் கொழுப்பில் இருந்து கிடைப்பதாக இருந்தால், அது உடலுக்கு நல்லது அல்ல. பேக்கிங் ரேப்பரின் முன்புறம் ‘99 சதவிகிதம் ஃபேட் ஃப்ரீ’’ என எழுதி இருப்பதை நம்பி ஏமாறாதீர்கள். அது எடையை அடிப்படையாகக் கொண்ட சதவிகிதம். கலோரியை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

சர்விங் சைஸ்
ஒவ்வொரு பொருளிலும் அதன் சர்விங் சைஸ் எவ்வளவு என்பதும், உணவு எத்தனை சர்விங் சைஸ் வரும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். சர்விங் சைஸ் என்பது கப் மற்றும் எண்ணிக்கையில் இருக்கும். அதனைத் தொடர்ந்து எத்தனை கிராம் அல்லது லிட்டர் என மெட்ரிக் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வெண்ணெய் கலந்த மக்காச்சோள பாக்கெட் ஒன்றில் ‘சர்விங் சைஸ் ஒன் கப் (228 கி) – சர்விங்ஸ் பெர் கன்டெய்னர் 2’ என்று எழுதி இருந்தால் அந்த பாக்கெட்டில் இருக்கும் மக்காச்சோளம் முழுவதையும் உண்டால், நீங்கள் இரண்டு கப் மக்காச்சோளம் உண்டதாக அர்த்தம். எனவே, அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விகிதங்கள், கலோரிகளை இரண்டு மடங்காக உட்கொண்டிருப்பீர்கள். சர்விங் சைஸின் அளவு என்பது அந்த உணவின் கலோரிகள், ஊட்டச்சத்து மதிப்பு போன்றவற்றையும் தீர்மானிக்கும். எனவே, ஒரு பொருளை உண்ணுவதற்கு முன்பு `எவ்வளவு சர்விங் சைஸ் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். 

கலோரி
ஒரு சர்விங்கில் எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதை இந்த கலோரி அளவு குறிக்கிறது மேலும், எத்தனை கலோரிகள் கொழுப்பில் இருந்து கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருப்பார்கள். கலோரி அளவு ஒரு நாள் தேவைக்கு அதிகமாகக் கூடும்போது, உடல் அதைக் கொழுப்பாக மாற்றிச் சேமித்துவைக்கும். இதனால், தொப்பை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கலோரியைக் கவனித்து வாங்குவது நல்லது.

ஒரு லேபிளில் கலோரி பகுதியில் ‘அமெளன்ட் பெர் சேவிங்: கலோரி – 250, ஃபேட் கலோரி – 125’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரியில் பாதி கொழுப்பில் இருந்து கிடைக்கிறது என்று அர்த்தம்.

ஊட்டச்சத்துக்கள்
இந்தப் பகுதியில் மொத்தக் கொழுப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை மேற்பகுதியில் இருக்கும். அதைத் தொடர்ந்து நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் எவ்வளவு உள்ளன என்பன குறிப்பிடப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தினசரித் தேவையில் எவ்வளவு பங்களிப்பு என சதவிகிதத்தில் கொடுத்திருப்பார்கள்.

தினசரி மதிப்பு (Daily value)
இது ஒரு நாளைக்குத் தேவையான ஊட்டச்சத்து அளவில் எவ்வளவு அந்தப் பொருளில் உள்ளது என்பதைக் குறிக்கும். இவை, பெரும்பாலும் மைக்ரோகிராம், மில்லிகிராம், கிராம் என மெட்ரிக் அளவுகளில் இருக்கும். இது, பொருளுக்குப் பொருள் மாறுபடும். ஏனெனில், ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விகிதத்தில் ஊட்டச்சத்து மதிப்பு இருக்கும்.

ஆர்கானிக் அறிவோம்!
டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும்போது, சில பொருட்களில் `ஆர்கானிக்’ என்றும், சில பொருட்களில் `மேட் வித் ஆர்கானிக்’ என்றும், சிலவற்றில் `ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியாது.  

100 சதவிகிதம் ஆர்கானிக்:
முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆர்கானிக்:
இவற்றில் 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில்  (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் பொருட்கள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்:
இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு. அதாவது, ஊறுகாய் என்றால், அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்கும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கும்.

ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்:
இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடியென்ட்ஸ் உள்ளதெனக் குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்ட்டுகள்.

நேச்சுரல்:
இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவை போலியானவையாகவும் இருக்கக்கூடும்.

ஃபேர் ட்ரேடு:
என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள், சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள். 

ஆர்கானிக் பை ட்ரஸ்ட்:
சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குச் சான்றிதழ் பெறுவது, பெரிய அளவில் சந்தைப்படுத்துவதெல்லாம் சாத்தியம் இல்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ-க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது சுய சான்றிதழ் என்பதால், இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையைச் சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ இறைச்சி:
இறைச்சி உணவில், கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறிக் குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை `கேஜ் ஃப்ரீ’ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்:
தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் பால் பொருட்களில் `கிராஸ் ஃபெட்’  என குறிப்பிடப்பட்டிருக்கும். 

நோ ஆடட் ஹார்மோன்ஸ்
(No Added Harmones):
ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் `நோ ஆடட் ஹார்மோன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில்  முறையாக இந்தச் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.

யார் சான்று தருவது? 
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது. தற்போது, ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரம் கட்டாயம். மற்றவர்கள் விரும்பினால், இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர் பொருட்களுக்கு ஏற்கெனவே அக்மார்க் அங்கீகாரம் உள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயம் அல்ல. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ என்பதுதான் பொதுவான சந்தை அங்கீகாரமாக பெரும் அளவு உள்ளது.

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை

http://cchepnlg.blogspot.in/?m=1

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 181936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

 அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்பிள்ளை
வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம்பிள்ளை 1872–1936வேறு பெயர்(கள்):வ.உ.சிபிறப்பு:செப்டம்பர் 5, 1872பிறந்த இடம்:ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியாஇறப்பு:நவம்பர் 18, 1936(அகவை 64)

வாழ்க்கைச் சுருக்கம்

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.

இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின்அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

பிறப்பு

வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்[2].

கல்வி

ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியாரிடம் சிவபுராணக்கதைகளையும் பாட்டனாரிடமிருந்து இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.

வழக்கறிஞர் தொழில்

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர்தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார்.

சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானதால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார்.

இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார்.


திருமணம்

வ. உ. சிதம்பரம் பிள்ளையின் திருமண அழைப்பிதழ்

வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.

பாரதியாருடன் நட்பு

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.

பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தாக்கம்

தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு வித்திட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருஷ்ணானந்தருடனான’(சசி மகராஜ்) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவரை வ.உ.சி. சென்னை ஐஸ் ஹவுஸில் தான் சந்தித்திருக்க வேண்டும். ’சசி மகராஜ் என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார்.

அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’ என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை’யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி[3]


தொடங்கப்பட்ட தேசிய நிறுவனங்கள்தொகு

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906தொகு

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள்.

வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள்.

 அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

அரசியல் பணி

நீதிமன்றத் தீர்ப்பும் சிறைத் தண்டனையும்-1908

விடுதலைக்குப் பின்னர் (1913–1936)

தமிழறிஞர் வ.உ.சி.

http://cchepnlg.blogspot.in/?m=1

இலவச மருத்துவ முகாம்

அகில இந்திய 64 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு  நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை, கூடலூர் அரசு மருத்துவமனை, 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அம்மா மருந்தகம் ஆகியன சார்பில்  
இலவச மருத்துவ முகாம், இரத்த பரிசோதனை முகாம், இரத்த தான முகாம் நடைப்பெற்றது.  

கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில்  நடைப்பெற்ற முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.  

தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளர் செல்வராஜ், கூட்டுறவு பண்டக கிடங்கு காப்பாளர் சுரேஷ், தொடக்க வேளான்மை கடன் சங்க பொ செயலாளர் அம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிஎஸ்என்எல் கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து  கொண்டு முகாமினை துவக்கி  வைத்தார்.

கூடலூர் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் மயில்சாமி, அனிதா, ஹெர்பின் பினு ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் இதர சிகிசசை அளித்தனர்,  தொடர்ந்து இரத்த தான முகாம் நடைப்பெற்றது,

முகாமில் 184 பேர் பங்கேற்று பயன்பபெற்றனர்,  10 பேர் இரத்த தானம் செய்தனர்.

கூட்டுறவு துறை பணியாளர்கள், தொழிற்பயிற்சி மைய பயிற்றுனர்கள் மாணவா்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


S. Sivasubramaniam  General Secretary 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 88 315 600  94 88 315 600   -  944 29 740 75  -

செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள்


பெறுனர்
            மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
            தமிழக அரசு, சென்னை.

            ஆணையாளர் அவர்கள்
            உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
            சென்னை.

பொருள்   நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் 
      செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள் நடைப்பெற்றது. 
      தக்க நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு கூட்டம் பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.      அமைப்பின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு தந்து உதவிய அனைத்து அரசு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பள்ளி கல்லூரி நிர்வாகங்களுக்கும். அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்தல்

2.      கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகள் பெரிய வாகணங்களாக இயக்கப்பட்டது.  அவை தற்போது சிறிய உயரம் குறைந்த வாகணங்களாக இயக்கப்படுவதால் கர்ப்பினி பெண்கள் மற்றும் இதர நோயாளிகள் இந்த வாகணத்தில் கொண்டு செல்வது சிரம்மப்படும் நிலை உள்ளது.  வாகணங்களில் திடீரென பிரசவம் ஆகும் நிலையில் அவர்களுக்கு பிரசவம் பார்க்கவோ,  மற்ற நோயளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.  எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் பெரிய வாகணத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.      பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தகுதியில்லாத ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் தகுதி குறித்து போலி விளம்பரம் வருவதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  அதுகுறித்து கல்வித்துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

4.      பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.  இதனை தேர்வுக்கு முன்னதாக வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      உப்பட்டி பழங்குடியினர் தொழிற்நுட்ப பயிற்சி மையத்தின் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்திற்கு தற்போது பழங்குடியின மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவதால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  எனவே இதர பிரிவு மாணவர்கள் 50 சதவீதம் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  
6.      தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர் சோ்க்கைக்கு ஒவ்வெரு வட்டத்திலும் வாரிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் முகாம் நடத்தப்பட்டது.  இது பல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பயனளித்தது.  அதுபோல் மீண்டும் முகாம்கள் நடத்த வேண்டும்.

7.      மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சில பழுதடைந்து உள்ளது.  இவற்றை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் எனவும், பேருந்துகள் உரிய நேரங்களில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து கழகத்தினை கேட்டல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

8.      மாவட்ட ஆட்சியர் மற்றும் குழுவினர் சுகாதாரம் காக்க பிரச்சாரம் மற்றும் ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகின்றனர்.  ஆனால் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் கழிப்பிடங்களை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து கழிப்பிடங்களையும் இலவசமாக அனுமதிக்க வேண்டும்.  வெளியிடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.  இது நேர்மாறாக உள்ளது.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து இலவச சிறுநீர் கழிப்பிடத்தை அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதம் ஒரு முறையேனும் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.  உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவா்கள் உரிமம் பெறும் வகையில் முக்கிய இடங்களில் முகாம்கள் நடத்த வேண்டும்.

கூட்டத்தில் அமைப்பின் பொருளாளர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் மஞ்சுளா, கணேசன்,  இணை செயலாளர்கள் இந்திராணி, செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இப்படிக்கு


சு. சிவசுப்பிரமணியம்                                                                                 சி காளிமுத்து
பொது செயலாளர்                                                                                      தலைவர்



போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...