போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் ஆகியன சார்பில் தேவாலா அரசு மேல் நிலைப்பள்ளியில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் வே. கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். 

கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பேசும்போது  

பந்தலூர் கூடலூர் பகுதியில் ஏழை எளிய தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே அதிகம் உள்ளனர்.  இவர்கள் அரசு பணிக்கு வருவது மிகவும் குறைவாக உள்ளது.  அதுபோல அரசு துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகின்றது.  இப்பகுதியை சார்ந்தவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மூலம் இலவசமாக போட்டிதேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது 

போட்டி தேர்வுகள் இன்றி தற்போது வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.  வேலைவாய்ப்பு பதிவுகள் அடிப்படையில் அரசு வேலை வழங்கும் முறை தற்போது இல்லை.  எனவே அனைத்து விதமான வேலையை மேற்க்கொள்ள தேர்வாணையங்களை அரசு உருவாக்கி திறமை அடிப்படையில்  பணி நியமனங்கள் வழங்கப்படுகின்றன.  திறமை இருந்தால்தான் போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெற்று அரசு வேலைகளை பெறமுடியும்.என்ற நிலையில் பள்ளியில் படிக்கும் வயதிலேயே, போட்டி தேர்வுகளில் தயாராக வேண்டும்  இதன்மூலம் விரைவாக அரசுபணி பெறமுடியும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது 

போட்டி தேர்வுகளுக்கு அழைப்பு வந்தவுடன், தேர்வுக்கு தயாராகும் நிலை போட்டி தேர்வில் வெற்றி பெற இயலாத நிலையே உருவாகும்.  தொடர்பயிற்சி பெற்று அதன்மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பணிகள் பெற முடியும், ஒவ்வொரு தேர்விற்க்கும் போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனர்.  எனவே கடின உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்றார்.
போட்டி தேர்வுக்கான துண்டு பிரசுரங்கள் மாணவர்களிடையே வினியோகிக்கப்பட்டன.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...