பந்தலூரில் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் லஞ்சம் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், காந்தி பெண்கள் சேவை மையம், பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நடைப்பெற்றது.
லஞ்ச ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், பேச்சு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா மற்றும் நேர்மைக்கான குடிமக்கள் உறுதிமொழி ஏற்றல் என நடைப்பெற்ற முப்பெரும் விழாவிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலின் வரவேற்றார்.
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், மகளீர் சேவை மைய தலைவர் ஜெயலட்சுமி, நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா, செல்வநாயகம், ஆசிரியர் மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவாலா பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது லஞ்சம் என்பது எல்லா மட்டத்திலும் ஊறி பேய் விட்டது. இன்று அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், நேற்றைய மாணவர்கள், இன்றைய மாணவர்கள் நாளைய அரசு அலுவலர்கள், இன்றே லஞ்சம் வாங்காமல் லஞ்சம் கொடுக்காமல் அரசு பணிகளை மேற்க்கொள்ளுவேன் என உறுதிஎடுத்து அதன்படி நடக்க வேண்டும். நன்கு படித்து சிறந்த நேர்மையான அதிகாரிகளாக வர வேண்டும்.
லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிகளை முன்பு ஆதரித்து பாராட்டினார்கள் காமராஜர் போன்ற நேர்மையான ஆட்சியாளர்கள். ஆனால் இன்று பல்வகையில் பழிவாங்குகின்றனர் என்பது வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. இதனால் நேர்மையாக இருப்பவர்கள் மிகவும் குறைந்து வருகின்றனர். லஞ்சத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிகொண்டு நேர்மையான சமுதாயம் படைக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
ஒவ்வொரு அரசு பணியை செய்து முடிக்க உரிய கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சாசனம் என்ற ஒன்றுள்ளது அதனை அறிந்து அதற்கேற்ப சான்றுகள் உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளலாம், அரசு வழங்கும் சலுகைகள் உண்மையான பயனாளிக்க சென்று சேருவதில் லஞ்சமும், ஊழலும் தடையாகவே உள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. பல லஞ்ச ஊழல்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் வெளி கொண்டு வந்திருக்கின்றது. மக்களும் அரசு வரிபணத்தில் மேற்க்கொள்ளும் பணிகளை கண்காணிக்க வேண்டும். தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும் முன்பெல்லாம் தகுதியற்ற பயனாளி அரசு சலுகையை முறைகேடாக பெற லஞ்சம் கொடுத்த நிலை போய் உண்மையான பயனாளியே இன்று அரசு சலுகை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலை மாற மாணவ சமூதாயம் முன்வர வேண்டும் என்றார்.
மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர், மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பிரிதா மேருனிதாசன், சுமித்திரா, 9 10 ம் வகுப்புகள் பிரிவில் முதல் மு்ன்று இடங்களை பிடித்த சந்தியா, செல்வபிரியா, ஹரிபிரியா ஆகியோர் பேசினார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நேர்மைக்கான குடிமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மானவி சந்தியா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment