பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்,
தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி,
கூடலூர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத்,
மகளீர் திட்ட சுய உதவி குழு பயிற்றுனர் செலின், பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் பூபாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி,
கூடலூர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத்,
மகளீர் திட்ட சுய உதவி குழு பயிற்றுனர் செலின், பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் பூபாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தினை மேம்படுத்தும் விதமாக கல்லூரியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டதும், தொடர் துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப் பட்டதும், பயிற்சிகள் குறித்த தகவல் வழங்கியும் மாணவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள இளைஞர்களிடையே போட்டி தேர்வுக்கான பங்கேற்புக்கு தயாராகும் விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது என்ற கருத்தையும்
பலர் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்து அதன்பின் பயிற்சி பெறுவதும், படிக்க ஆரம்பிப்பதும் வழக்கமாக கொண்டிருக்கின்றர்,
போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு போட்டி தேர்வு அழைப்பு வரும்போது விண்ணப்பித்து தேர்வெழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணராமல் இருப்பது குறித்தும் வேதணை தெரிவிக்கப்பட்டது
அதனால், இந்த பயிற்சி மையம் மூலம் இன்னும் பயிற்சி பெற மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது மற்றும் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 க்கான தேர்வு குறித்தும் அதற்கான பயிற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் அதிகரிக்க மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, கையுன்னி, தேவாலா, பிதிர்காடு,எருமாடு பள்ளிகளிலும், பந்தலூர் பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளிகளிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவது என தீர்மாணிக்கப்பட்டது.
எருமாடு மற்றும் சேரம்பாடி பகுதிகளில் மகளீர் குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை வரும் டிசம்பர் 3 ஞாயிற்றுகிழமை நடத்த திட்டமிடப்பட்டது.
மத வழிபாட்டு தளங்களில், மதகுருமார்கள், மக்கள் ஒருங்கிணையும் தலைவர்கள், நிர்வாகிகள், மூலம் கிராமபுற மக்களிடையே போட்டி தேர்வு குறித்தும் அதன் அவசியங்கள் மற்றும், பயிற்சி மையம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனவும் தீர்மாணிக்கப்படும்.
பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் குறித்த தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
போட்டிதேர்வுக்கான புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கி வைத்தல் எனவும், அதன்மூலம் போட்டி தேர்வுக்கான மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாய்வுகள் மேற்கொள்ளவும் உதவுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
வாகண பிரச்சாரம் மூலம் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த இளையோர்களை ஒருங்கிணைத்து பயிற்சி வழங்க முயற்சிகள் மேம்படுத்துதல் எனவும், தீர்மாணிக்கப்பட்டது.
சி. காளிமுத்து (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்
(பொது செயலாளர்)
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.
சு. சிவசுப்பிரமணியம்
(பொது செயலாளர்)
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.
நவுசாத் (தலைவர்)
மகாத்மா காந்தி பொது சேவை மையம
மகாத்மா காந்தி பொது சேவை மையம
No comments:
Post a Comment