பெறுனர்
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தலைமைசெயலகம்,
தமிழ்நாடு சென்னை
பொருள்: தமிழ்நாடு அரசு சார்பில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பதிவிற்கான கட்டணத்தை
உயர்த்தியதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்,
தமிழக அரசு சார்பில் பிறப்பு இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ. 10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேலும் இறப்பு சான்று ரூபாய் 10 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் தீடிரென இந்த கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பெரும்பாலான ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாக உள்ளது.
பலரும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்து அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற்றே பிரசவ காலத்தில் வாழ்கின்ற நிலையும் பலருக்கு உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள கட்டணங்களை பண்மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிறப்பு அல்லது இறப்பு ஆகியவற்றிற்கு சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் இலவசம் என்ற நிலையும், 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை தாமத கட்டணம் ரூபாய் 2 நீதிமன்ற வில்லை ஒட்டி கட்டணம் செலுத்தும் நிலை இருந்ததை தற்போது ரூபாய் 100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல30 நாட்களுக்கு மேல் ஓரு ஆண்டு வரையில் தாமத கட்டணம் 5 ரூபாயாக இருந்ததை தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்கு மேல் பதிவு செய்யாதவர்களுக்கு தாமத கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 500 எனவும் உயர்த்தப்பட்டள்ளது.
மேலும் பிறப்பு சான்றிதழில் பெயரின்றி உள்ள சான்றில் பெயரை சேர்த்து சான்று பெற 5 ரூபாயில் இருந்து 200 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல இறப்பு சான்றிதழ் பெற கட்டணமாக வசூலிக்கப்பட்ட 5 ரூபாய் கட்டணத்தை ரூபாய் 200 ஆகவும் கூடுதல் நகல்களுக்கு ரூபாய் 200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பெறுவதில் பலரும் அக்கறை காட்டுவதில்லை என்ற நிலையும் ஏற்படுகின்றது.
பிறப்பு இறப்பு சான்றுகள் முக்கியம் என்ற நிலையில் இச்சான்றுகளுக்கான கட்டணம் ஒரே நேரத்தில் பண்மடங்கு உயர்தியுள்ளது அடிதட்டு ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.
அத்தியாவசிய அடிப்படை தேவையான பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளின் கட்டணத்தை தீடிரென பன்மடங்கு உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அதுபோல ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்களாக உள்ளது போல் மற்ற மருத்துவமனைகளிலும் இலவசமாகவே பிறப்பு இறப்பு சான்றுகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
இப்படிக்கு
சி. காளிமுத்து (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்
(பொது செயலாளர்)
(பொது செயலாளர்)
No comments:
Post a Comment