புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள்


பெறுனர்
உயர்திரு. ஆணையாளர் அவர்கள்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
எழிலகம் சேப்பாக்கம் சென்னை.

பொருள்: புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள்  இ சேவை மையங்களில்
      வழங்குவதில் முறையாக அச்சாகதகாரணத்தால் சேவை பாதிப்பு
      நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்
           
            நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அரசால் வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டுகள்  பயன்பாட்டில் செயல்பட்டு வருகின்றது.  எனினும்,  அரசால் புதிதாக குடும்ப  அட்டைக்கு விண்ணப்பித்து பெறும் புதிய குடும்ப அட்டை பெறும் நபர்கள் மற்றும்  இ சேவை மையங்களில் புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் பிரிண்ட் எடுத்து கொடுக்கின்றனர்.
           
            மேலும் பழைய குடும்ப அட்டைகள் தொலைந்து போனது, மற்றும் முகவரி மாற்றம் பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம் என ஏதேனும் திருத்தங்கள் மேற்க்கொண்டு இருப்பின் அவர்கள் புதிதாக இ சேவை மையங்களில் புதிதாக பணம் கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் பிரிண்ட் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

            இ சேவை மையங்களில் பிரிண்ட் எடுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் பின்பக்கம் கொடுக்கப்பட்டு உள்ள ரகசிய குறியீடு பிரிண்ட் ஆகும் பகுதியில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரிண்ட் எடுக்க பட முடியாமல்  உள்ளது. 

முன்பின் பக்கவாட்டுகளில் தள்ளி பிரிண்ட் எடுக்கப்படுவதால் இந்த கார்டுகள் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரங்களில் ஸ்கேன் செய்ய இயலாமல் அந்த கார்டுகள் சேவை பெற இயலாமல் பாதிக்கப் படுகின்றனர்.  

இ-சேவை மையங்களில் வழங்கப்படும் கார்டுகள் முறையாக பிரிண்ட் எடுத்து கொடுக்க உரிய ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                                                            இப்படிக்கு



                                                                                                  சு. சிவசுப்பிரமணியம்

FSSAI bans stapler pins in tea bags from January 2018

FSSAI bans stapler pins in tea bags from January 2018 

by SENTHIL
 
NEW DELHI, JULY 24:
The Food Safety and Standards Authority of India (FSSAI) on Monday said it is banning the use of stapler pins in tea bags effective January 1, 2018.
The move is expected to affect the fast growing packaged tea business in the country, as FSSAI has deemed the use of stapler pins in tea bag a serious health hazard.
It said in an order: “The use of stapler pins in tea bags poses potential hazard to consumers since any loose staple pin consumed inadvertently with tea may cause a serious health hazard.”
Currently, tea bags are either stapled or knotted.
“The Food Authority, in exercise of the power conferred under Section (15) FSS Act, 2006, hereby directs the concerned food business operators to discontinue the manufacture, storage, distribution, sale and import of stapled tea bags by January 1, 2018.”
It has also directed all food safety commissioners to take action to prevent the use of unsafe packaging materials by companies and take up measures for enforcement of its order.
According to industry estimates, the tea bag segment contributes 3-4 per cent by value of total tea sales but it is one of the fastest growing segments at 50-60 per cent year-on-year.
Posted by ADMN 
பந்தலூர் கிளை நூலகத்தில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

மைய தலைவர் காளிமுத்து
மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
நூலகர் சத்தியமூர்த்தி
காந்தி சேவை மைய தலைவர் நவுசாத்
மற்றும் வாசகர்கள் பலர் பங்கேற்றனர்











News





THE RICE AND FALL OF ‘PLASTIC’

THE RICE AND FALL OF ‘PLASTIC’

by SENTHIL
 
After rigorous testing, Centre dismisses reports of plastic rice and egg; calls it a case of adulteration
In an attempt to put an end to the long-drawn debate on “fake” eggs and rice, the Centre has stepped in. Now, the Ministry of Consumer Affairs, Food and Public Distribution, after testing samples from across the country, has concluded that there is no such thing as 'plastic' rice. It all boils down to adulteration.
The department of food and public distribution had collected samples from 29 states and 7 Union territories in the country and a total of 39,284 samples were analysed. The conclusion was that there was no plastic rice and the department stated that it was actually just poor quality rice.
CR Chaudhury, Minister of State for Consumer Affairs, Food and Public distribution, said: "While plastic rice rumours were doing the rounds on social media, the matter was taken up with the Kerala and Gujarat governments on the basis of an International Food Safety Authorities Network (INFOSAN) alert. The governments concerned have confirmed that there has been no such reports in their respective states. "
Random sampling was done and from Karnataka, 2,837 samples were received for testing and analysis. It was found that 341 samples were adulterated and the remaining proved that it was low quality rice. The department has launched 26 criminal cases and 112 civil cases on manufacturers and penalized them too. 112 manufacturers have been penalized and penalties totalling Rs. 21,95,900 were received. The sampling and testing was done by officials of the Food safety departments of the respective states to check compliance of standards laid down under the Food Safety and Standards Act, 2006, Rules and Regulations.
Speaking to Bangalore Mirror, YG Shadakshari, Director of Research, University of Agricultural Sciences, said, "It is very expensive to manufacture plastic rice. It is so expensive that it is not possible at all. I really wonder how these rumours came up. As per our testing based on samples received by Bangalore Mirror, we found it was only low quality rice. The government needs to probe whether adulteration is the main cause of all these plastic rumours." While the testing was headed by Prof KV Jamuna, UAS, she said, "When we did detailed research and testing, it was found out that this is totally a case of low quality rice. What residents of the city found was rice that had expired was being sold. Otherwise, something like 'plastic' is a bizarre thing to make."
No fake eggs either
Another grave issue that was making rounds on social media was 'plastic' eggs. Dr Murthy, Dean of the Karnataka Veterinary, Animal and Fisheries Science University, who did a complete test on eggs and said they were 'rotten' and 'spoiled'.
SENTHIL | 27,July, 2017 at 12:06 am

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார்.

அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.  அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..

http://cchepnlg.blogspot.in/?m=1

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு

ந்தலூர்
புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தேசிய பசுமை படை ஆகியன சார்பில் மாணவியர்கள் மூலம் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எட்வின்மேரி    தலைமை தாங்கினார்.  குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மார்ட்டின்,  தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் ரோஸ்மேரி  மற்றும் ஆசிரியர் மார்ட்டின் பிரகாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,   மகாத்மா காந்தி பொது சேவை மையம் துணை தலைவர் கபீர் ஆகியோர்   சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்து பேசினார்கள். 
மாணவிகள் மூலம் பள்ளி வளாகத்தில் பழ வகை மரகன்றுகள் நடப்பட்டது.

பந்தலூர் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை தாங்கினார்.  ஆசிரியர்  பாக்கியராஜ், பிடிஏ ஆசிரியர் கோமதி, சத்துணவு அமைப்பாளர் யசோதராவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டப்பட்டது.  காமராஜர் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.  மாணவர்களுக்கு இணிப்புகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.






பந்தலூர் டியூஸ் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்  மகாத்மா காந்தி பொது சேவை மையம்  ஆகியன சார்பில் நடைப்பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி முதல்வர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இயற்கை நமக்கு பல்வேறு நன்மைகளை அளித்து நாம் வாழ அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  நாம் அதை தவிர்த்து ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழித்துகொண்டு இருக்கின்றோம்.  தற்போது 1000 மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 560 மரங்களே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இந்நிலை குறையும் போது இன்னும் உடல் நலன்கள் பாதிக்ககூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதோடு ஊட்டச்சத்துகள் குறைந்து நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. இவற்றை தடுக்க மரங்கள் அதிக அளவு நட்டு வளர்க்க வேண்டும்.  மேலும் இயற்க்கைக்கு எதிரான இரசாயனம் கலந்து உபயோக பொருட்கள், மக்காத குப்பை பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றார்.
தேவாலா ஜீடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது   மாணவர்கள் இளமை பருவத்திலேயே இயற்கையை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.  ஒருவர் ஆண்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்த்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வளமான வாழ்க்கை அமைய உதவும். இயற்கை வளம் குறைவதால் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்பது வேதனை அளிக்ககூடியதாக உள்ளது.  எதிர்காலத்தில் தண்ணீருக்கு போராடும் நிலை உருவாகமால் தடுக்க தற்போதே மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பழவகை மரகன்றுகள் நடப்பட்டது.  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.







































 ந்தலூர்
புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தேசிய பசுமை படை ஆகியன சார்பில் மாணவியர்கள் மூலம் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எட்வின்மேரி    தலைமை தாங்கினார்.  குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மார்ட்டின்,  தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் ரோஸ்மேரி  மற்றும் ஆசிரியர் மார்ட்டின் பிரகாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,   மகாத்மா காந்தி பொது சேவை மையம் துணை தலைவர் கபீர் ஆகியோர்   சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்து பேசினார்கள். 
மாணவிகள் மூலம் பள்ளி வளாகத்தில் பழ வகை மரகன்றுகள் நடப்பட்டது.

பந்தலூர் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை தாங்கினார்.  ஆசிரியர்  பாக்கியராஜ், பிடிஏ ஆசிரியர் கோமதி, சத்துணவு அமைப்பாளர் யசோதராவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டப்பட்டது.  காமராஜர் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.  மாணவர்களுக்கு இணிப்புகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.






பந்தலூர் டியூஸ் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்  மகாத்மா காந்தி பொது சேவை மையம்  ஆகியன சார்பில் நடைப்பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி முதல்வர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இயற்கை நமக்கு பல்வேறு நன்மைகளை அளித்து நாம் வாழ அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  நாம் அதை தவிர்த்து ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழித்துகொண்டு இருக்கின்றோம்.  தற்போது 1000 மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 560 மரங்களே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இந்நிலை குறையும் போது இன்னும் உடல் நலன்கள் பாதிக்ககூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதோடு ஊட்டச்சத்துகள் குறைந்து நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. இவற்றை தடுக்க மரங்கள் அதிக அளவு நட்டு வளர்க்க வேண்டும்.  மேலும் இயற்க்கைக்கு எதிரான இரசாயனம் கலந்து உபயோக பொருட்கள், மக்காத குப்பை பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றார்.
தேவாலா ஜீடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது   மாணவர்கள் இளமை பருவத்திலேயே இயற்கையை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.  ஒருவர் ஆண்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்த்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வளமான வாழ்க்கை அமைய உதவும். இயற்கை வளம் குறைவதால் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்பது வேதனை அளிக்ககூடியதாக உள்ளது.  எதிர்காலத்தில் தண்ணீருக்கு போராடும் நிலை உருவாகமால் தடுக்க தற்போதே மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பழவகை மரகன்றுகள் நடப்பட்டது.  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.



































































ஆவணங்கள் திரும்ப வழங்காமல் அழைக்- கழிக்கப்படுவதை


பெறுனர்
               
                உயர்திரு. மண்டல இணைப்பதிவாளர் அவர்கள்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலம்,
உதகை.
               
பொருள் : பந்தலூர் திருமுருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 
       விவசாய கடன்பெற்றவர்களின்  ஆவணங்கள் திரும்ப  வழங்காமல்  அழைக்- 
       கழிக்கப்படுவதை தடுத்து விரைவில் அனைவருக்கும் ஆவணங்களை  
       திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யா அவர்களுக்கு
பந்தலூர் பகுதியில் செயல்படும் திருமுருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பந்தலூர், உப்பட்டி, தேவாலா, என பல்வேறு பகுதியை சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.  மேலும் பல பகுதியை சார்ந்தவர்களும் கடன் பெற்றும் சேமிப்பு கணக்கு தொடங்கியும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பலரும் விவசாய கடன்கள் பெற்றனர்.  கடனுக்கு ஆவணமாக பலர் விவசாய நில பட்டா மற்றும் நகைகள், இதர ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் செலுத்தி கடன் பெற்று உள்ளனர்.  கடந்த ஆண்டு தமிழக முதல்வராக பெறுப்பேற்ற ஜெயலலிதா அவர்கள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார்.  அதன்அடிப்படையில் பலரும் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி ஆனது.  ஆனால் கடன் பெற்றவார்கள் கொடுத்த ஆவணங்களை திரும்ப கேட்டால் இன்று போய் நாளை வா என அலை கழிக்கின்றனர்.      ஓர் ஆண்டிற்கு மேலாக பலரும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுபோல கூட்டுப்பொறுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பலரும் பயன்பெற்றுள்ளனர்,  இந்த குழுக்களுக்கும் பல முறை கடன்கள் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரையும் கடன் பெற்றுள்ளனர்.   இதற்கு பங்கு தொகையாக 10 சதவீதம் வங்கியில் பிடித்தம் செய்தனர்.  கூட்டுப்பொறுப்பு குழுக்கள் பெற்ற கடனை முறையாக அடைத்தவர்களுக்கு  கடன் வழங்கும்போது பிடித்தம் செய்து வைத்த பங்கு தொகை 10 சதவீதத்தையும் இதுவரை திரும்ப வழங்கவில்லை.  இதனால் கூட்டுப்பெறுப்பு குழு நிர்வாகிகளும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்படி வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஈடாக பெறப்பட்ட ஆவணங்களை திரும்ப வழங்கவேண்டும் எனவும்
கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கடன் வழங்கும்போது பிடித்தம் செய்துள்ள 10 சத பங்கு தொகையையும் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி                                                                                                                                                                    இப்படிக்கு


சு. சிவசுப்பிரமணியம் தலைவர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம்.

அரசானையை மீறி மாணவர்களை விளம்பரதூதர்களாக்கிய

பெறுனர்
           
            முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
            நீலகிரி கல்வி மாவட்டம்

பொருள் :         அரசானையை மீறி  மாணவர்களை விளம்பரதூதர்களாக்கிய
                              பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

தனியார் பள்ளிகள் மாணவர்களை வைத்து விளம்பரம் தேடுவது தடை செய்யப்பட்ட நிலையில் பல பள்ளிகள் மீண்டும் மீண்டும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றன. 
மணவர்கள் மனதளவில் தாழ்வு மணபாண்மை ஏற்படகூடாது என்ற நிலையிலும்,  விளம்பர நோக்கில் மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது என கல்வித்துறை தேர்வு முடிவுகள் அறிவிக்கும் முதல் நாள் 11,05,2017 அன்று கல்விதுறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர்  ஆகியோர் ஆணைபிறப்பித்தனர்.  இது அனைத்து தரப்பினருக்கும் தெரியும்.
அதன் பின்னர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் அவர்களும் தெளிவாக மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது என அறிவுறுத்தி அனைத்து பள்ளிகளுக்கும் மின்அஞ்சல் மூலம் ஆணை அனுப்பட்டுள்ளது. 
இந்நிலையில்   பல தனியார் பள்ளிகள் 12 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை படம்போட்டு துண்டு பிரசுரம் வினியோகித்தர் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தல் போன்ற விளம்பரயுக்திகளை கையாண்டு மாணவர்களை விளம்பர தூதர்களாக்கியுள்ளனர்.
இதுபோன்ற அரசு ஆணையை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி                                                                                                                          இப்படிக்கு    



கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம் 

கூடலூர் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்ற கூட்டம்

ூடலூர்  கூடலூரில்  இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் கூடலூர் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்ற கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு கூடலூர் தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி தலைமை தாங்கினார்தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் பேசும்போது இளைஞர்கள்  வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் அவதிபடுவதை விட கிடைத்த வாய்ப்பை கொண்டு முன்னேற வேண்டும்இளைஞர்கள் இரத்த தானம் செய்வதால் பல உயிர்களை காக்க முடியும் தன்னார்வ சேவையில் அதிகம் நாட்டம் கொள்ள வேண்டும் என்றார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன் பேசும்போது  சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுஇளைஞர்களால் தான் எதிர்கால மாற்றத்தை உருவாக்க முடியும்அதுபோல சிறப்பான நாடு மற்றும் வீட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இளைஞர்கள் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பலருக்கும் அவர்களுக்கான அரசு தேவையை பெற வழிமுறையை தேர்வு செய்ய பெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர் அவற்றை தடுக்க இளைஞர்கள் கிராமங்களில் வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து  இளையோர் பாராளுமன்றம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சமூக ஆர்வலர் சத்தியசீலன் வரவேற்றார்.
முடிவில் செல்வகுமார் நன்றி கூறினார்,


போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...