விவசாய கடன்பெற்றவர்களின் ஆவணங்கள் திரும்ப வழங்காமல்

பெறுனர்

        உயர்திரு. மண்டல இணைப்பதிவாளர் அவர்கள்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலம்,
உதகை.

பொருள் : நீலகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்
       விவசாய கடன்பெற்றவர்களின்  ஆவணங்கள் திரும்ப  வழங்காமல்
அழைக்கழிக்கப்படுவதை தடுத்து விரைவில் அனைவருக்கும் ஆவணங்களை
       திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடனுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஈட்டு தொகையை திரும்ப வழங்க வேண்டும் என
கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  இச்சங்கங்களில்  அந்தந்த பகுதியை
சேர்ந்த பலரும்   பல்வேறு பகுதியை சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக
உள்ளனர்.  மேலும் பல பகுதியை சார்ந்தவர்களும் கடன் பெற்றும் சேமிப்பு
கணக்கு தொடங்கியும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பலரும் விவசாய கடன்கள்
பெற்றனர்.  கடனுக்கு ஆவணமாக பலர் விவசாய நில பட்டா மற்றும் நகைகள், இதர
ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் செலுத்தி கடன் பெற்று உள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழக முதல்வராக பெறுப்பேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
அவர்கள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார்.  அதன்அடிப்படையில் பலரும்
பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி ஆனது.  ஆனால் கடன் பெற்றவார்கள்
கொடுத்த ஆவணங்களை திரும்ப கேட்டால் இன்று போய் நாளை வா என அலை
கழிக்கின்றனர்.

 ஓர் ஆண்டிற்கு மேலாக பலரும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுபோல கூட்டுப்பொறுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பலரும்
பயன்பெற்றுள்ளனர்,  இந்த குழுக்களுக்கும் பல முறை கடன்கள் ஒரு லட்சம்
முதல் 3 லட்சம் வரையும் கடன் பெற்றுள்ளனர்.   இதற்கு பங்கு தொகையாக 10
சதவீதம் வங்கியில் பிடித்தம் செய்தனர்.  கூட்டுப்பொறுப்பு குழுக்கள்
பெற்ற கடனை முறையாக அடைத்தவர்களுக்கு  கடன் வழங்கும்போது பிடித்தம்
செய்து வைத்த பங்கு தொகை 10 சதவீதத்தையும் இதுவரை திரும்ப வழங்கவில்லை.

இதனால் கூட்டுப்பெறுப்பு குழு நிர்வாகிகளும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்படி வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஈடாக பெறப்பட்ட ஆவணங்களை
திரும்ப வழங்கவேண்டும் எனவும்

கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கடன் வழங்கும்போது பிடித்தம் செய்துள்ள
10 சத பங்கு தொகையையும் திரும்ப வழங்க

 நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.


நன்றி                                                                                   இப்படிக்கு


சு. சிவசுப்பிரமணியம் தலைவர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள
சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...