அரசானையை மீறி மாணவர்களை விளம்பரதூதர்களாக்கிய

பெறுனர்
           
            முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
            நீலகிரி கல்வி மாவட்டம்

பொருள் :         அரசானையை மீறி  மாணவர்களை விளம்பரதூதர்களாக்கிய
                              பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

தனியார் பள்ளிகள் மாணவர்களை வைத்து விளம்பரம் தேடுவது தடை செய்யப்பட்ட நிலையில் பல பள்ளிகள் மீண்டும் மீண்டும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றன. 
மணவர்கள் மனதளவில் தாழ்வு மணபாண்மை ஏற்படகூடாது என்ற நிலையிலும்,  விளம்பர நோக்கில் மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது என கல்வித்துறை தேர்வு முடிவுகள் அறிவிக்கும் முதல் நாள் 11,05,2017 அன்று கல்விதுறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர்  ஆகியோர் ஆணைபிறப்பித்தனர்.  இது அனைத்து தரப்பினருக்கும் தெரியும்.
அதன் பின்னர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் அவர்களும் தெளிவாக மாணவர்களை வைத்து விளம்பரம் செய்ய கூடாது என அறிவுறுத்தி அனைத்து பள்ளிகளுக்கும் மின்அஞ்சல் மூலம் ஆணை அனுப்பட்டுள்ளது. 
இந்நிலையில்   பல தனியார் பள்ளிகள் 12 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை படம்போட்டு துண்டு பிரசுரம் வினியோகித்தர் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தல் போன்ற விளம்பரயுக்திகளை கையாண்டு மாணவர்களை விளம்பர தூதர்களாக்கியுள்ளனர்.
இதுபோன்ற அரசு ஆணையை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி                                                                                                                          இப்படிக்கு    



கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம் 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...