காலாவதி பொருட்களை கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது

காலாவதி பொருட்களை கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று, உணவு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.உணவுப்பொருள் உற்பத்தி, சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு, 
உணவுப்பொருள் பாதுகாப்பு துறை சார்பில், கடைகளில் சுகாதாரம் பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. 

மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

இதில் அளிக்கப்பட்ட அறிவுரைகள் வருமாறு:

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி, 

பொருட்கள் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, பேட்ச் எண், உற்பத்தி நிறுவனத்தின் முழு முகவரி உள்ள லேபிள்கள் பாக்கெட் மீது ஒட்ட வேண்டும். 

கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து, பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். 

கடை ஊழியர்கள் தன் சுத்தம் பேணும் வகையில், தலை மற்றும் கைகளுக்கு உறை, முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். 

உணவு பொருள் வைக்கும் அறை, காற்றோட்டமாக இருக்க வேண்டும். 

எலி, கரப்பான் போன்றவை இன்றி பாதுகாக்க வேண்டும். 

அவற்றுக்கான விஷ மருந்துகள் பயன்படுத்தக்கூடாது. காய்கறிகளை தனியாக வைக்க வேண்டும். 

எண்ணெய் ரகம் பாக்கெட்டின்றி விற்பனை செய்யக்கூடாது. 

உணவு பொருட்களுடன், சோப், சோப் பவுடர், அழகு சாதனங்கள் சேர்த்து வைக்கக்கூடாது. 

தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. 

சாயமேற்றிய உணவு பொருட்கள் விற்கக்கூடாது.

கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து உடனடியாக உரிமம் பெற வேண்டும். உணவுப் பொருட்கள் தூசு படியாமல் மூடி வைக்க வேண்டும். 

ஊழியர்களுக்கு மருத்துவச்சான்று கட்டாயம் இருக்க வேண்டும். 

மூலப் பொருட்கள், குளிர் பானங்கள் தேதி விவரங்கள் கொண்ட பில்லுடன் மட்டுமே விற்க வேண்டும்.

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், வெள்ளக்கோவிலை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...