தேவாலா மூச்சுக்குன்னு மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டல் சார்பாக.

பெறுனர்

            உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
            மனு நீதி முகாம் பந்தலூர்

பொருள்: கூடலூர் வட்டம் நெல்லியாளம் நகராட்சி தேவாலா மூச்சுக்குன்னு
      மக்களின் அடிப்படை வசதிகள் சாலை வசதி, மின் இணைப்பு பெற   
      தடையில்லா சான்று தெருவிளக்கு வசதிகள் செய்து தர கேட்டல் சார்பாக.

மதிப்பிற்குரிய அம்மையீர் அவர்களுக்கு
பணிவான வணக்கங்கள்

கூடலூர் வட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா அருகேயுள்ள மூச்சுக்குன்னு பகுதியில் 40 ஆதிவாசி குடும்பங்கள் இதர பிரிவினர் உட்பட 100.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சாலை வசதி இன்றி உயிரிழக்கும் அபாயம்
இந்த பகுதியில் சுமார்  50 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு சாலை வசதி ஏதும் இல்லாமல் நாங்கள் நடந்துதான் செல்லவேண்டியுள்ளது.  இப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான சாலையை கடந்து தான்   தங்கள் அத்தியாவசிய தேவையான உணவுப்பொருட்கள் வாங்க, பள்ளி கல்லூரி செல்ல மருத்துவ வசதி பெற இதர தேவைகள் அனைத்திற்கும் இந்த சாலையை கடந்து தான் வர வேண்டிய நிலை உள்ளது.
இந்த சாலையானது சில ஆண்டுகளுக்கு முன்னதாக மக்களால் அகலப்படுத்தி வெட்டி பயன்படுத்தினாலும், மண் மற்றும் கற்கள் உள்ளதால் கரடு முரடாகவே உள்ளது.  மழை காலங்களில் சேரும் சகதியுமாக உள்ளது.  இதனால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும்போது விழுந்து அடிப்படும் நிலையும் உள்ளதால் அடிக்கடி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
மருத்துவ வசதி பெற இயலாமல் அவதி
அதுபோல் மருத்துவ வசதிக்கும் இந்த சாலையை கடந்து தான் வர வேண்டியுள்ளதால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.   ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பினிகள், வயதானவர்கள்,  கை கால்கள் அடிப்பட்டவர்கள் என பலரும் மருத்துவ சிகிச்சை பெற தொட்டில் கட்டிதான் தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது. 
பாம்பு கடித்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் மாணவன் இறப்பு
ஜுலை மாதம் 1.ம் தேதி இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற மாணவனை கட்டுவிரியன் பாம்பு கடித்தது.  அவனை மருத்துவ சிகிச்சைக்கு உரிய நேரத்தில் கொண்டு வர இயலாத நிலையினால் விசத்தின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தான் என்பதும் குறிப்பிடதக்கது.
இது போல பலரும் உரிய காலத்தில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு இறந்தும் போய் விட்டனர்.  தற்போதும் படுக்கை நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி, முக்கிய தேவையான மின் வசதி ஆகியன கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றோம்.
மின் வசதிஇன்றி பள்ளி கல்லூரி மாணவர்கள்  படிக்க சிரம்மப்படும் நிலை
மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று வருவாய் துறை மூலம் வழங்கினால் மின் இணைப்பு தருவதாக மின்சார வாரியம் கூறுகின்றனர்.   இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு கூடலூர் ஜென்ம நில பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை கொடுத்து தற்போது விசாரணையில் உள்ள நிலங்கள் ஆகும்.  இந்த நிலங்களில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருக்கின்றோம்.  எனினும் இதுவரை பட்டா கிடைக்காவிட்டாலும்  இப்பகுதி விவசாயம் மட்டுமே எங்களின வாழ்வாதரமாக உள்ளது.
எனவே அம்மா அவர்கள் கருணை கூர்ந்து இப்பகுதி மக்கள் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கி உதவுமாறும்,  இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தெருவிளக்குகள் அமைத்து தர அனுமதி வழங்கி உதவுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

ஊர் பொது மக்கள்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...