டியூஸ் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

பந்தலூர் டியூஸ் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்  மகாத்மா காந்தி பொது சேவை மையம்  ஆகியன சார்பில் நடைப்பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி முதல்வர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இயற்கை நமக்கு பல்வேறு நன்மைகளை அளித்து நாம் வாழ அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  நாம் அதை தவிர்த்து ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழித்துகொண்டு இருக்கின்றோம்.  தற்போது 1000 மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 560 மரங்களே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இந்நிலை குறையும் போது இன்னும் உடல் நலன்கள் பாதிக்ககூடிய வாய்ப்புகள் அதிகரிப்பதோடு ஊட்டச்சத்துகள் குறைந்து நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. இவற்றை தடுக்க மரங்கள் அதிக அளவு நட்டு வளர்க்க வேண்டும்.  மேலும் இயற்க்கைக்கு எதிரான இரசாயனம் கலந்து உபயோக பொருட்கள், மக்காத குப்பை பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றார்.
தேவாலா ஜீடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது   மாணவர்கள் இளமை பருவத்திலேயே இயற்கையை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.  ஒருவர் ஆண்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்த்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வளமான வாழ்க்கை அமைய உதவும். இயற்கை வளம் குறைவதால் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்பது வேதனை அளிக்ககூடியதாக உள்ளது.  எதிர்காலத்தில் தண்ணீருக்கு போராடும் நிலை உருவாகமால் தடுக்க தற்போதே மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பழவகை மரகன்றுகள் நடப்பட்டது.  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.  முடிவில் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...