பெறுனர்
தொழிலாளர் நல ஆணையாளர் அவர்கள்
தொழிலாளர் நலத்துறை
சென்னை.
பொருள் : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் / துப்புரவு பணியாளர்
சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படாமை
அய்யா அவர்களுக்கு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான தொகுப்பூதியம் வழங்கப்படுவதில்லை இதர சலுகைகள் வழங்கப்படுவதில்லை நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் சுகாதார பணிகளுக்காக துப்புரவு பணியாளர்கள் 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது ரூ,5,140/- மட்டுமே மாத சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 5 ஆண்டுகளி்ல் பல முறை சம்பந்தபட்டவர்களால் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்த ஊதியமான ரூ.13,500 மாதாந்திர சம்பளமாக வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆனால் அதனை இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.13,500 வழங்க வேண்டும் எனவும்,
அவர்களுக்கு இதர பிடித்தமான வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர பிடித்தங்களை செய்து அவர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்க செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி இப்படிக்கு
S. Sivasubramaniam President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk) THE NILGIRIS 643 233.
94 88 520 800 - 94 88 315 600 94 88 315 600 - 944 29 740 75 -
No comments:
Post a Comment