மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம் புதிய கட்டிடம் கட்டி


பெறுனர்

        திருமிகு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
        மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகமண்டலம்

பொருள்:         மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம் புதிய கட்டிடம் கட்டி செயல்படுத்திட
இடம் வழங்கி புதிய கட்டிடம் கட்ட கேட்டல் சார்பாக.
அம்மையீர் அவர்களுக்கு

                வணக்கம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக
பல்வேறு சேவைகள் மேற்க்கொண்டு வருகின்றோம்.  தற்போது மாநில உணவுப்பொருள்
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் பராமரிக்கப்படும்
மாநில நுகர்வோர் அமைப்புகள் முகவரி பட்டியிலில் இணைக்கப்பட்டு  மாநில
அரசு அங்கீகாரம் பெற்றுள்ளோம் என்பதை மகிழ்வுடன்
தெரிவித்துக்கொள்கின்றோம்.



                நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம் தற்போது உதகை
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை ஒட்டிய கட்டிடத்தில்
இயங்கி வருகின்றது.  இந்த கட்டிடம் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு
வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



                அனைத்து மாவட்டத்திலும் நுகர்வோர் குறை தீர் மன்றங்களுக்கு சொந்த
கட்டிடங்கள் கட்டி தர வேண்டும், காலியாக உள்ள நுகர்வோர் குறை தீர் மன்ற
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு
நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு (CAT) சார்பில் உணவுத்துறை அமைச்சர்
மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.



                இதற்கு பதில் அளித்துள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணைய பதிவாளர்
மத்திய அரசு சார்பில் நுகர்வோர் நல நிதி ஒதுக்கீடு செய்துள்ளதில் மாவட்ட
நுகர்வோர் குறை தீர் மன்றங்கள் சொந்த கட்டிடத்தில் கட்டி செயல்படுத்திட
ரூபாய் 40 லட்சங்கள் வரை ஒதுக்கீடு செய்துள்ளது 

சொந்த கட்டிடம் இல்லாத 10 
மாவட்டங்களில் அந்ததந்த மாவட்ட ஆட்சியருக்கு 20 சென்ட் நிலம் மாவட்ட  
நுகர்வோர் குறை தீர் மன்றத்திற்கு ஒதுக்கீடு செய்து தர
கேட்கப்பட்டுள்ளதாக மாநில நுகர்வோர் குறை தீர் ஆணைய பதிவாளர் அவர்கள்
தெரிவித்துள்ளார்.



                தற்போது நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்
மன்றமும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் 20 சென்ட் நிலத்தை
ஒதுக்கீடு செய்து தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  எதிர்காலங்களில்
நுகர்வோர் குறை தீர் மன்றம் சிறப்பாக செயல்பட விரைவான நடவடிக்கை எடுத்து
உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                தொடர்ந்து தங்களின் துறை சார்பான ஆதரவு உதவிகள் வழங்கி உதவுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.                                                                                                                                                                                          இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்.
மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...