பெறுனர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்
பொருள் : அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்
தொடங்கிட நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டல் சார்பாக.
அய்யா வணக்கம்
தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்று நீலகிரி மாவட்டத்தில் சிறப்புடன்
நுகர்வோர் விழிப்புணர்வு பணிகளை எங்களது கூடலூர் நுகர்வோர் மனிதவள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செய்து வருகின்றது.
நீலகிரி மாவட்டத்திலல் தற்போது 40 பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர்
மன்றங்களை செயல்படுத்தி வருகின்றது. எனினும் பல பள்ளிகளில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் நுகர்வோர்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
எனவே இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்
அமைக்க தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும்
வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடக்கும்போது தகவல் தெரிவித்தால்
எங்களது அமைப்பு மூலமாக குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள்
குறித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகளை
http://cccnlg.blogspot.in/ என்ற இணையதளத்தில் வெளியிடுவதற்கும்
நடவடிக்கை எடுத்துள்ளோம். குடிமக்கள் நுகர்வோர் மன்ற நடவடிக்கைகள்
மற்றும் செயல்பாடு அறிக்கைகளை ccc.nilgiris@gmail.com
cchepnlg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்.
உறுப்பினர் மின் நுகர்வோர் குறை தீர் மன்றம் நீலகிரி மின்வாரியம்.
நீலகிரி மாவட்டம் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் தொடங்கிட
கேட்டல் சார்பாக.
தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படுத்த
வேண்டும் என 2005ம் ஆண்டே ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பல
பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சிறப்பாக செயல்படுத்தி வந்தன.
தற்போது பல பள்ளிகளில் கடந்த ஆண்டு வரை குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்
செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும் இந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை சிறப்பாக
செயல்படுத்தவும், நுகர்வோர் விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் மக்களிடம்
கொண்டு செல்லவும் முயற்சிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மாணவர்களிடம் நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முன்மாதிரியாக
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் செயல்பட வேண்டியது அவசியம் ஆகின்றது.
பள்ளிகளில் நுகர்வோர் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளராகவும், குறைந்தபட்சம் 50 மாணவர்களை உறுப்பினர்களாகவும்
சேர்க்க வேண்டும். இந்த பட்டியல் மற்றும் மன்ற செயல்பாடுகளை
http://cccnlg.blogspot.in என்ற இணையதளத்தில் பள்ளிகளில் பெயர் மற்றும்
மாணவர்கள் பட்டியல் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து
வெளியிடப்பட உள்ளது.
எனவே பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை தொடங்கி அவற்றின்
முகவரிக்கு அல்லது 9488520800 என்ற மொபைல் எண்னிற்கு வாட்சப் மூலமோ
அனுப்பி வைக்கவும் அவை மேற்படி இணைய தளத்தில் வெளியிடப்படும்.
பள்ளிகள் ஒத்துழைப்பு வழங்கி நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்க உதவுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்.
No comments:
Post a Comment