காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு

ந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தேசிய பசுமை படை ஆகியன சார்பில் மாணவியர்கள் மூலம் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எட்வின்மேரி    தலைமை தாங்கினார்.  குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மார்ட்டின்,  தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் ரோஸ்மேரி  மற்றும் ஆசிரியர் மார்ட்டின் பிரகாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,   மகாத்மா காந்தி பொது சேவை மையம் துணை தலைவர் கபீர் ஆகியோர்   சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பு குறித்து பேசினார்கள். 

மாணவிகள் மூலம் பள்ளி வளாகத்தில் பழ வகை மரகன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...