உதகையில் குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டுகள் சேவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஆணையாளர் மதுமதி அவர்கள் ஸ்மார்ட் கார்டுகளின் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் நடைப்பெற்ற பயிற்சியில் கேட்டுக்கொண்டார்.
அதன்அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகளுக்கு இதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு பொருந்தலைவர் கிருஷ்ண சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுசெயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
உதகை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார்.
கூடலூர் நுகர்வோர் மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய குடும்ப அட்டை எளிய முறையில் கையாளும் வகையில் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டையில் உள்ள தவறுகளை சம்பந்தபட்ட நபர்களே கணினி மூலம் www.tnpds.gov.in. என்ற இனையதளம் வழியாக மாற்றிக்கொள்ளலாம். கார்டு சார்ந்த குறைகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது அவற்றை நிருபிக்கும் வகையில் உரிய ஆவணங்கள் ஸ்கேன் செய்து இணைத்து விண்ணப்பிக்கலாம்.
வட்டவழங்கல் அலுவலர் அதை உறுதிபடுத்துவார் அதன் பின் தேவைப்படின் அரசு இ சேவை மையங்களில் புதிய கார்டு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
செல்போன் எண்ணினை இணைக்காதவர்கள் இதுபோன்ற மாற்றங்கள் மேற்க்கொள்ள முடியாது.
www.tnpds.gov.in என்ற இனையதளத்தில் புதிய குடும்ப அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம்.
செல்போன் எண்களுக்கு பொருட்கள் வினியோகம் குறித்து செய்தி வழங்கப்படுகின்றது.
விரைவில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் பெற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தற்போது ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியன கொண்டும் பொருட்கள் பெறலாம். என்றார் தொடர்ந்து கணிணி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் .கூட்டமைப்பு நிர்வாகிகள் டேவிட் கிப்சன் விஐயகுமார் இந்திராணி சக்திவேல் கனேசன் ஜெயராசு முருகன் மற்றும் பல்வேறு பகுதியை சார்ந்த கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயபிரகாசு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment