பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட கேட்டல் சார்பாக.

பெறுனர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் 
நீலகிரி கல்வி மாவட்டம்

பொருள் :         பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த தகவல்களை 
பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த பள்ளிகளில் கடந்த மாதம் முதலே வீடுகளில் உள்ள பிள்ளைகளை சேர்க்க  விளம்பரபடுத்தி மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
பள்ளிகள் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளதா? அல்லது பெற்ற அங்கீகாரத்தை புதுபித்துள்ளதா என்பது குறித்து மக்களுக்கு தகவல் தெரிவதில்லை.  இதானல் மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் கூறும் ஆசை வார்த்தைகள் நம்பி சேர்ப்பதால் அவர்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாகி விடும் நிலை ஏற்படும்.   சில பள்ளிகள் அடிப்படை வசதி இன்றி உள்ளதால் அவற்றின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தால் அவற்றில் மாணவர்கள் சேர்க்கை தடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.  
பள்ளிகள் அங்கீகாரம் குறித்த தகவல்கள் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடதக்கது.  இதனால் நீலகிரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் விவரத்தினை வெளியிட வேண்டும்.   அங்கீகரம் பெற்ற பள்ளிகள் மட்டும் பட்டியல் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பத்திரிக்கைகள் மற்றும் பள்ளிகளில் தகவல் அறிக்கை மற்றும் அரசு துறைகளில் அறிவிப்புகள் மூலம் தெரியப்படுத்தலாம்
மேலும் கல்வி கட்டண நிர்ணய குழு  நிர்ணயித்துள்ள கட்டண விவரம்,   பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கைக்கு  ஒதுக்கியுள்ள இடங்கள்,   புகார் அளிக்க கூடிய அலுவலர்கள்,  முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர் மெட்ரிக பள்ளி ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விவரம்.  மற்றும் கல்வி துறை சார்பான தகவல்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகளில் ஒட்டி வைக்க அறிவுறுத்த வேண்டும்.  இவற்றையும் பத்திரிக்கைகள் மூலம் செய்தியாக வெளியிட்டால்  மக்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.
மேலும் பள்ளிகளில் தகவல் பலகைகளில் அங்கீகாரம் குறித்த தகவலும் இடம் பெற செய்ய வேண்டும். மேலும் கல்வி உரிமைச்சட்டப்படி தகுதியான ஆசிரியர்கள் தான் நியமணம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி இப்படிக்கு 


சு. சிவசுப்பிரமணியம் தலைவர்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...