அனுப்புனர் பெறுனர்
தலைவர்
. பொது செயலாளர் ஆணையாளர்
அவர்கள்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
பந்தலூர், பந்தலூர் (Po & Tk) நுகர்வோர் பாதுகாப்பு
துறை
நீலகிரி, மாவட்டம் 643 233 சேப்பாக்கம்
சென்னை, 5
பொருள்: மாநில தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான உணவுப்பொருள்
வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அவர்களின் தலைமையில் நடைபெறும்
3 வது நுகர்வோர் காலாண்டு கூட்டம் மாசுக் கட்டுபாட்டு வாரியம் சார்ந்த விவாத பொருட்கள்
அனுப்புதல் சார்பாக.
வணக்கம், எங்களது
அமைப்பு சார்பாக கீழ்கண்ட கருத்துருக்களை அடுத்து நடைபெற உள்ள நுகர்வோர் அமைப்புகளுடனான
காலாண்டு கூட்டத்தில் விவாதப்பொருளில் (Agenda) சேர்த்துக்கொண்டு விவாதம் செய்வதற்கு
அனுமதி அளிக்க கோருகின்றோம்.
வ.
எண்
|
விவாதபொருள்
|
விவாத விளக்கம்
|
1.
|
குன்னூர்
குன்னூர்
நகராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி
குப்பைகளால்
மக்களுக்கு தொல்லை
|
குன்னூர் நகராட்சி சார்பில் உபதலை செல்லும்
சாலையில் ஓட்டுப்பட்டரை பகுதியில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இந்த குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து
வருவதோடு அப்பகுதியை சார்ந்த குடியிருப்புகள் அனைத்துக்கும் புகை மண்டலமாக காட்சி
தருகின்றது. இதனால் பலருக்கும் பல்வேறு சுவாசம்
சம்பந்த நோய்கள் பரவுவதோடு, காற்று மாசும் ஏற்பட்டு வருகின்றது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டுக்கொள்கின்றோம்.
அதுபோல நெலாக்கோட்டை ஊராட்சியில் நெலாக்கோட்டை
அருகே உள்ள சாலையோரப்பகுதியில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்தபகுதி மாசுப்படுவதோடு மக்களுக்கு வன
விலங்குகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
|
2.
|
மினிபேருந்துகள்
சுற்றுலா வாகணங்களில் பாட்டு சத்தம் அதிகமாக ஒலிப்பது மற்றும் புகை அதிகமாக வருவது
மற்றும் ஏர் ஹாரன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்க்கொள்ள கேட்டல்
|
நீலகிரி மாவட்டத்தில் மினி பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில்
அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்புவது என அதிக ஒலி எழுப்பி தொல்லை தருகின்றனர். மேலும் மினி பேருந்துகள் மற்றும் தனியார் வாகணங்கள்
சுற்றுலா வாகணங்களிலும் ஏர் ஆர்ன்கள் பயன்படுத்தும் நிலையும் உள்ளது. இதுகுறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்க்கொள்ள வேண்டும்
எனவும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக இருப்பதால்
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக சுற்றுலா வாகணங்கள் வந்து
செல்கின்றன. இதில் பெரும்பாலான வாகணங்கள்
அதிக புகையுடன் இயக்கப்படுகின்றது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்
மாவட்ட எல்லை பகுதியான கல்லாறு, கீழ்நாடுகானி,
பாட்டவயல், சேரம்பாடி சோலாடி, தாளூர், கக்கநல்லா சோதனை சாவடிகளில் புகை பரிசோதனை
மற்றும் ஏர் ஹாரன் பரிசோதனைகள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை ஆகியவற்றுடன்
இணைந்து மேற்க்கொண்டால் இதுபோன்ற மாசுக்களை தவிர்க்கலாம்
|
3.
|
உதகை
சன்டிநல்லா ஸ்டெர்லைட் தொழிற்சாலை கழிவுகளால்
பாதிப்பு
|
உதகை அருகே சண்டிநல்லா பகுதியில் செயல்படும்
ஸ்டெர்லைட் எனும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் மிகவும் துர்நாற்றத்துடன்
திறந்தவெளி கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகின்றது. இந்த கழிவுகள் குடிநீர் மற்றும்
வனப்பகுதியில் கலந்து மாசினை ஏற்படுத்து வருகின்றது. வனஉயிரினங்களும் பாதிக்கப்படுகின்றது.
இதனால் அந்த பகுதியில் வசிக்க கூடிய தோடர்மந்து பகுதி மக்கள் வளர்க்கும் எருதுகள்
அடிக்கடி இறந்துவிடுவதால் அவர்களால் எருதுகள் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து
பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
4.
|
காமராஜர்
அணையில் கழிவுகள் தேங்கி பாதிப்பு அதுபோல தெரப்பள்ளி கோழி பண்ணை கழிவுகள் மாயாறு
ஆற்றில் கலந்து உள்ளதால் பாதிப்பு
|
உதகையில் மிகச்சிறந்த அணைகளில் காமராஜர்
அனை சிறப்பு மிக்கதாக உள்ளது. ஆனால் இந்த
அணையில் நீர் மாசுபட்டு மக்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு ஏற்படுத்தி வருகின்றது. ஹில்பங்க், மற்றும் காந்தல் வழியாக செல்லும் கால்வாய்
குப்பைகள் நிறைந்து கழிவுகள் கலந்து, இந்தபகுதியில் உதகையின் பாதாள சக்கடையும் இதனுடன்
இணைந்து இந்த அணையின் நீரில் கலந்து மாசு ஏற்படுத்துகின்றது. மேலும் உதகை கோடப்பமந்து கால்வாய் கழிவுகள் மிகுந்த
கால்வாயாக மாறி வருகின்றது. இதனால் பல்வேறு
பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதன் கழிவு
நீரும் மேற்படி காமராஜர் அணைக்கு செல்கின்றது. மேலும் சுற்றுலா பயணிகள் பிளாஷ்டிக்
பாட்டில்கள் மற்றும் உணவு கழிவகளை இந்த அணையின் ஒருசில பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனால் அணையின் நீர் மாசுபாட்டு உள்ளது. இதனை குடிக்கும் வனவிலங்குகள் வளர்ப்பு கால்நடைகள்
உயிரிழந்து வருகின்றது.
அதுபோல கூடலூர் அருகே தெரப்பள்ளி பகுதியில்
உள்ள கோழிப்பண்னை மற்றும் ஆடுகள் வளர்ப்பு பண்ணையின் கழிவுகளை வனஉயிரினங்கள் முக்கியமாக
பயன்படுத்தும் மாயாறு ஆற்றில் கலந்து விடுகின்றனர். இந்த ஆறு முதுமலையின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த ஆறு கழிவுகளை தாங்கி வருவதால் முதுமலையின் வன விலங்குகள் அனைத்தும் இந்த ஆற்று
நீரை குடித்து நோய் தாக்கி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டும். மேற்படி பண்ணையின் கழிவுகள் கொட்ட அவர்களின்
நிலத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
|
5.
|
தேவாலா
தார் கலவை நிறுவனம் மூலம் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக
|
தேவாலா பகுதியில் தார்கலவை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு புறம்பாக மக்கள் அதிகம் குடியிருக்கும்
பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து
வெளியேறும் மாசு மற்றும் புகை அந்த பகுதியில் குடியிருப்போரை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளிகள்
மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தனியார் உயர்நிலைப்பள்ளி என சுமார் 2000த்திற்கு மேற்பட்ட
மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களும்
பாதிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய
ஆய்வு மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
|
6.
|
கூம்பு
வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்க்கொள்ள கேட்டல்
|
கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடைசெய்ய உயர்நீதிமன்றம்
ஆணைபிறப்பித்து அதன்படி பல்வேறு வழிபாட்டு தளங்களில் அகற்றபட்டுள்ளன. ஆனால் இன்னும் சில வழிபாட்டு தளங்களில் அவை பயன்பாட்டில்
உள்ளன. இதுகுறித்து ஆய்வுகள் மேற்க்கொள்ள
வேண்டும்
|
7.
|
மாவட்ட
அளவில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்தவும் மாசு கட்டுபாடு குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தும்போது நுகர்வோர் அமைப்புகளை இணைக்கவும் கேட்டல்
|
மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் மாவட்டத்தில்
நுகர்வோர் காலாண்டு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனை நடைமுறைபடுத்த வேண்டும். மேலும் மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் காற்று
மாசு, நீர்மாசு, இயற்கை மாசு என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது விழிப்புணர்வு பணிகள் மேற்க்கொள்ளப்படுவதில்லை. எனவே இனிவரும் காலங்களில் விழிப்புணர்வு பணிகள்
அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அதுபோன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்க்கொள்ளும்போது மாநில முகவரிபட்டியலில்
உள்ள நுகர்வோர் அமைப்புகளை இணைத்து கொள்ளவும் கேட்டுக்கொள்கின்றோம்.
|
தவிர்க்க இயலாத காரணத்தினால் 5 கோரிக்கை எனுமிடத்தில்
7 கோரிக்கையாக அனுப்பியுள்ளோம். கடைசி 2 பொருட்கள்
வேறு அமைப்புகள் முன்வைத்திருப்பின் அவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடன்
சு. சிவசுப்பிரமணியம் சி.
காளிமுத்து
பொதுசெயலாளர் தலைவர்
No comments:
Post a Comment