பந்தலூர்
புனித
சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் புனித
சேவியர் பெண்கள் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது
சேவை மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தேசிய பசுமை படை ஆகியன சார்பில் மாணவியர்கள்
மூலம் மரகன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு
பள்ளி தாளாளர் எட்வின்மேரி தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மார்ட்டின், தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் ரோஸ்மேரி மற்றும் ஆசிரியர் மார்ட்டின் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் துணை தலைவர் கபீர்
ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
மரம் வளர்ப்பு குறித்து பேசினார்கள்.
மாணவிகள்
மூலம் பள்ளி வளாகத்தில் பழ வகை மரகன்றுகள் நடப்பட்டது.
பந்தலூர்
அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர்
பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை
ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பாக்கியராஜ், பிடிஏ ஆசிரியர் கோமதி, சத்துணவு அமைப்பாளர்
யசோதராவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு
போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டப்பட்டது. காமராஜர்
குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
மாணவர்களுக்கு இணிப்புகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.
பந்தலூர்
டியூஸ் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மகாத்மா காந்தி
பொது சேவை மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி முதல்வர் சுதீந்திரநாத் தலைமை தாங்கினார்.
கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இயற்கை நமக்கு பல்வேறு
நன்மைகளை அளித்து நாம் வாழ அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நாம் அதை தவிர்த்து ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு
இயற்கையை அழித்துகொண்டு இருக்கின்றோம். தற்போது
1000 மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 560 மரங்களே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலை குறையும் போது இன்னும் உடல் நலன்கள் பாதிக்ககூடிய
வாய்ப்புகள் அதிகரிப்பதோடு ஊட்டச்சத்துகள் குறைந்து நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கின்றது.
இவற்றை தடுக்க மரங்கள் அதிக அளவு நட்டு வளர்க்க வேண்டும். மேலும் இயற்க்கைக்கு எதிரான இரசாயனம் கலந்து உபயோக
பொருட்கள், மக்காத குப்பை பொருட்களை தவிர்க்கவேண்டும் என்றார்.
தேவாலா
ஜீடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது மாணவர்கள் இளமை பருவத்திலேயே இயற்கையை நேசிக்க
பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் ஆண்டிற்கு ஒரு
மரமாவது நட்டு வளர்த்தால் அதன் மூலம் எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வளமான வாழ்க்கை
அமைய உதவும். இயற்கை வளம் குறைவதால் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்பது
வேதனை அளிக்ககூடியதாக உள்ளது. எதிர்காலத்தில்
தண்ணீருக்கு போராடும் நிலை உருவாகமால் தடுக்க தற்போதே மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க
வேண்டும் என்றார்.
தொடர்ந்து
பள்ளி வளாகத்தில் பழவகை மரகன்றுகள் நடப்பட்டது.
மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர், பள்ளி ஆசிரியர்கள்,
மாணவர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர்
சேகர் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment