15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் -

15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் !!

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:


கே.பொன்முடி (திமுக):அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செயல் படுத்தப்பட்டுவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத் தில் (சிபிஎஸ்) ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அரசு தன் பங்காக 10 சதவீதம் செலுத்துகிறது. சிபிஎஸ் திட்ட நிதியை, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெற முடியாத நிலை உள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:அரசு ஊழி யர்களுக்கு தற்போது நடைமுறை யில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள்என்றார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...