பெறுனர்

            மான்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

            சென்னை.

 

பொருள் : கட்டுமான தொழிலாளர் நல வாரியம்  உதவித்தொகை பெற இணைய வழி

        விண்ணப்பிக்க இணைய இணைப்பு (link) பகிரவில்லை   விரைவில்

       இணைய link இணைப்பு வழங்க கேட்டல் சார்பாக.

 

அய்யா வணக்கம்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 17க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.  இதில் பதிவு செய்தோருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை,  திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி தொகை விபத்து காப்பீடு, ஈம சடங்கு உதவித்தொகை போன்ற உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது கொரனா தெற்று பரவுவதால் புதிய தொழிலாளர்களாக பதிவு செய்யவும், பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உதவி தொகைகள் பெறவும் இணையம் மூலம்  விண்ணப்பங்கள் பெற படுகின்றது.

இந்நிலையில் 60 வயதை அடைந்த தொழிலாளர்கள் முதியோர் விண்ணப்பங்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்க அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஆனால் இணைய இணைப்பு பகிரவில்லை.  இதனால் தொழிலாளர் வாரியத்தில் உதவி தொகை பெற பயனாளிகள் விண்ணப்பிக்க முடியாமல் இ சேவை மையங்களை நாடி அலைகழிக்கப்படுகின்றனர். 

விரைவாக இணைய இணைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி                                                                                                 இப்படிக்கு

                       

                        சி. காளிமுத்து                                                         சு. சிவசுப்பிரமணியம்

தலைவர்                                                                               செயலாளர்

 

 

 நீலகிரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையம் குன்னூர் மற்றும் உப்பட்டியில் செயல்படுகிறது.


ITI படித்தவர்கள் சுய தொழில் செய்து முன்னேற முடியும் என்கிற நிலையில் பல்வேறு மாணவர்கள் தொழிற்பயிற்சி கற்று வருகின்றனர்.

உப்பட்டி பகுதியில் கடந்த 2013-2014ம் கல்வி ஆண்டு பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் நிதியுதவியோடு தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

பழங்குடியின மாணவர்கள் பெரும்பாலும் இடைநிற்றல் அதிகரித்து கல்வியை முழுமை செய்யாத நிலையே உள்ளது.

எனவே பழங்குடியின மாணவர்கள் தொழில் செய்து வாழ்வில் முன்னேற இந்த பயிற்சி மையம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்  
5 பிரிவுகள் பயர்மென், பிட்டர், வெல்டர், பிளம்பர், மோட்டார் மென் ஆகிய பிரிவுகளில் 145 மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் துவங்கப்பட்டது. 

பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் சுமார் 300 பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. 

ஆனால் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

மாணவர்கள் தங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சி மிகவும் உதவியாக அமையும்.  இந்த பயிற்சி மையம் தோன்றிய காலம் முதல் இன்று வரை இந்த பயிற்சி மையத்திற்கு கொடுக்கப்பட்ட முழுமையான இடங்கள் நிரப்பப்படவில்லை 145க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு இருந்தும் சுமார் 70 மாணவர்கள் வரை மட்டுமே புதிதாக சேர்ந்து தொடர்ந்து படித்து வருகின்றனர்.  

மாணவர் சேர்க்கைக்கு தொழிற் பயிற்சி மைய நிர்வாகம் பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.  

கடந்த ஆண்டு கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முயற்சியில் பல்வேறு கிராமங்களில் தன்னார்வ அமைப்புகளும் பழங்குடியின மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டன.  எனினும் பல இடங்கள் காலியாகவே உள்ளன. 

இந்த நிலையில் பழங்குடியினர் மாணவர்கள் சேராத காலியாக உள்ள இடங்களை இதர பிரிவு மாணவர்கள் சேர்ந்து தொழில் கல்வி பயின்று பயன் பெற வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு மாநில அரசு இதர பிரிவு மாணவர்களை சேர்க்கலாம் என ஆணையிட்டது. இதனால் பல பகுதி மாணவர்களும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க விரும்பி விண்ணப்பித்தனர். 

ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் இதர பிரிவு மாணவர்கள் சேர்க்கவில்லை என தெரிவித்தனர். இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

இந்த  நிலையில் இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாகவே உள்ளது பழங்குடியின மாணவர்கள் தொழிற்பயிற்சியில் குறைந்த அளவே சேரும் நிலையே உள்ளது. 

இதனால்  காலியாக இருக்கும் இடத்தில் இதர பிரிவு மாணவர்கள் சேர்க்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தப் பயிற்சி உதவும். 

இது குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு இந்தாண்டு இதர பிரிவு மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்த பின் இதர பிரிவு மாணவர்கள் சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...