காவல் நிலை ஆணைகள்

‬:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?

-மூன்று தொகுதிகளாக.

2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?

-856 ஆணைகள்

3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?

-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.

4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண்  262

5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?

-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி

6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.

-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)

7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.

-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.

8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?

- காவல் நிலை ஆணை எண் 566

9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 567

10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி

-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.

11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?

-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.

12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 574

13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண் 576

14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....

-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.

15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?

- காவல் நிலை ஆணை எண் 622

16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?

-பொது நாட்குறிப்பு (general dairy)

17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?

- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.

18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?

-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.

19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?

-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?

- மூன்றாவது கட்டத்தில்

21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.

-படிவம் எண் 103

22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?

-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.

23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...

-716

24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?

-அலுவல் பட்டியல் (Duty Roaster)

25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?

-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.

27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....

-சராசரிக்கு மேல்

‘A’

சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’

28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?

-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை

29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?

-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)

30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?

31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?

-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?

-PSO 735

33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?

-பத்து ஆண்டுகள் வரை

34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?

-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.

35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?

-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி

36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?

-பாகம் – V

37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?

-PSO 777

38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்

-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.

39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்

-மாவட்ட ஆட்சியர்

40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?

-அரையாண்டுக்கு ஒருமுறை

41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...

- 1999

42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு

- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...

-படிவங்கள்

44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 1

45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 46

46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு

- ரூபாய் பத்தாயிரம்

47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது

- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்

48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது

- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்

49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்

-PSO 55

50.PSO 56 விளக்குவது

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)

- இ.சா.ச. பிரிவு 45

52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?

- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.

54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

- பிரிவு 57

57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?

- செவிவழி சாட்சியம்

58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61

60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

61. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

62. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?


- பிரிவு 159 IEA

‬: இந்திய தண்டனை சட்டம்

81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 120 ஆ

82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-12 th chapter

83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?

-பிரிவு 117 இதச

84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 103

85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-அத்தியாயம் ஆறு

86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்

87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 111

88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 119

89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 117

90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?

-பிரிவு 304 (A) IPC

91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?

--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்

92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 141 IPC

93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 145 IPC

94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?

-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...

-பிரிவு 160 IPC

96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 170

97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?

-பிரிவு 170 & 171

98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?

-பிரிவு 147 IPC

99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?

-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.

100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?


-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

: குற்ற விசாரணை முறை சட்டம்

101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.

(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)

-அபராதம் மட்டும்.

102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு

_மூன்று வருடம்

103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...

-468 CrPC

104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக

-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.

105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?

-469 CrPC

106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-470 CrPC

107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---

-360 CrPC

108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?

-சரியானது.

109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

-358 CrPC

110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...

-320 CrPC

111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

-317 CrPC

112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்

-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.

113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...

-நிர்வாக நடுவர்

114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...

-சரியானது

115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்

-நிர்வாக நடுவர்

116. 151 CrPC  கைது நடவடிக்கை என்பது

-ஒரு தடுப்பு நடவடிக்கை

117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்

-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.

118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது

-சரியானது

119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது

-சரியானது.

120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது

காவல் நிலை ஆணைகள்

121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண்  எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

-பதினெட்டாவது அத்தியாயம்

122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?

-PSO 328

124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?

-ஒரு மைல்

125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?

-இரண்டு வகைகளாக

126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?

-PSO 350

127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?

-PSO 312.

128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

-காலாண்டுக்கொருமுறை

129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?

-ஒரு வருடம் வரை

130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?

-326

131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?

-படிவ எண் 50

132.PSO 366 கூறுவது?

-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்

133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்

-385

134.PSO 416 கூறுவது ...

-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்

135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?

- Form No.63

No comments:

Post a Comment

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...