அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்

பந்தலூர்மே. 11:  

பந்தலூர் அருகே சேரம்பாடி மகளீர் தையல் பயிற்சி மையத்தில்   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியனசார்பில் அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஷாலோம் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி தலைமைதாங்கினார்.

கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் பேசும்போது

அயோடின் குறைபாட்டினால் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுமுன் கழுத்து கழலைமூளைவளர்ச்சி  குறைபாடுமந்த தன்மைஊனமான குழந்தை பிறப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.  

இவற்றை தடுக்க தற்போது அயோடின் கலந்தஉப்பினை பயன்படுத்த வேண்டும்அயோடின் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக உப்பில் கலந்து தரப்படுகின்றது.

அயோடின் பற்றாக்குறை தடுப்பதில் மக்களும் பங்கேற்று தரமான உப்பினை வாங்கி,முறையான பராமரிப்போடுபயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் ஒரு நுண்ணூட்டசத்தாகும்

 இது குறையும்போதுஉடல் வளர்ச்சி குறைபாடுகுழந்தைகளின் நினைவு திறன்குறைபாடு ஏற்படுகிறது

கடைகளில் வெளியேவைத்திருக்கும் உப்புகளில்அயோடின் சத்து குறைவாகஇருக்கும் அவற்றை தவிர்க்கவேண்டும்.  

வீடுகளில் அயோடின்பரிசோதணை மேற்க்கொள்ளஉருளைகிழங்கினை வெட்டி அதில்உப்பை வைத்து அதில் எலுமிச்சைசாற்றினை பிழிந்தால் உப்பின்நிறம் மாறும்  அதில் அயோடின்கலப்பு குறித்து அறியலாம் என்றார்.

அயோடின் உப்பு பரிசோதனைசெய்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மகளீர்கள் பலர்கலந்து கொண்டனர்.  முன்னதாகதையல் பயிற்சி மைய ஆசிரியர்மேரி வரவேற்றார்முடிவில்(பெட்காட்தமிழ்நாடு நுகர்வோர்அமைப்புகள் கூட்டமைப்புதாலுக்கா அமைப்பாளர்சத்தியசீலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...