ஓட்டல்களில் பல மடங்கு கட்டண உயர்வு

நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓட்டல்களில் பல மடங்கு கட்டண உயர்வு

பதிவு செய்த நாள்: மே 19,2018 01:05

குன்னுார்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் கட்டண உயர்வு அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உணவை எடுத்து வந்து, ஆங்காங்கே அமர்ந்து உண்ணும் நிலை அதிகரித்து வருகிறது.

நீலகிரியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னுார், கோத்தகிரி சாலைகள் வழியாகவும்;

கர்நாடகா, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கூடலுார் வழியாகவும் வருகின்றன.

இந்நிலையில், பல இடங்களில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொண்டு வருகின்றனர்.

மேலும், கர்நாடகாவில் இருந்து வருபவர்கள், சிலிண்டர் காஸ் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து, ஆங்காங்கே நிறுத்தி சமையல் செய்து செய்கின்றனர்.

இதற்கு, ஊட்டி, குன்னுார் உட்பட சுற்றுலா மையங்களில், உணவின் கட்டணம் திடீரென உயர்தப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 *சமூக ஆர்வலர் கூடலூர்   நுகர்வோர் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மைய பொது செயலாளர், சிவசுப்ரமணியம்* கூறுகையில், ''

 நீலகிரியில் சீசனை தொடர்ந்து, மூன்று மடங்கு வரை உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளிடம் மதிய உணவுக்கு குறைந்த பட்சம், 120 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

அதே உணவுக்கு, உள்ளூர் மக்கள் என்றால், 80 ரூபாய் மட்டுமே வசூலிக்கின்றனர்.

 பர்லியாரில் கழிப்பிடத்தின் அருகிலேயே அரசு போக்குவரத்து கழகத்தின் கேன்டீனில் துர்நாற்றத்துடன் உணவுகளை உட்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில்,

'இங்குள்ள பெரும்பாலான கடைகளில் உணவின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால்,வீடுகளில் இருந்தே உணவை எடுத்து வந்து, உட்கொள்கிறோம்,' என்றனர்

நன்றி தினமலர் குன்னூர்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...