ஆஷா பணியாளர்களுக்கு அயோடின் பயிற்சி உதகை

உதகையில் சுகாதார துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு அயோடின் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை மற்றும் நியுட்ரிசியன் இந்தியா, கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற பயிற்சிக்கு  பொதுசுகாதாரம் மற்றும் நேய்தடுப்பு துறை துணை இயக்குனர் பொற்கொடி தலைமை தாங்கினார்.
மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ரமேஷ், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நியுட்ரிசன் இந்தியா 
திட்ட மேலாளர் சையது அகமது பேசும்போது
அயோடின் சத்து என்பது அனைவருக்கும் தேவையான  நுண்ணூட்ட சத்தாகும். புவியின் மேற்பரப்பில் இருந்த அயோடின் தாது  இயற்கை சீற்றங்களால் இந்த சத்து பூமியில் குறைந்து கடலில் சேர்ந்தது. இதனால் இம்மண்ணில் வளரும் தாவரங்களிலும், தாவரங்கள் உண்டு வாழும் விலங்குகளிலும், தேவையான அளவு அயோடின் சத்து இருப்பதில்லை. மனிதன் தனது உணவு தேவைக்காக இந்த விலங்குகளையும் தாவரங்களையும் சார்ந்து இருக்கின்றார்கள்.  இவற்றில் போதுமான அளவு அயோடின் இல்லாததினால் இந்த உணவுகளில் இருந்து கிடைப்பதில்லை.  இதனால்தான் அயோடின் உப்பில் கலக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகின்றது.  அனைவரும் உப்பை பயின்படுத்துவதால் அயோடினை உப்பில் கலந்து தரப்படுகின்றது.
தொடர்ந்து அயோடின் குறைபாட்டினை களையப்பட்டிருந்தாலும்,  பல கிராம பகுதிகளில் இன்னும் அயோடின் குறைபாடு உள்ளது.  அயோடின் குறைபாட்டினால்  கர்ப்பினிகளுக்கு குறை பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், உடல் மற்றும் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது.  குழந்தைகளின் அறிவு திறன் மிக குறைவாக இருப்பதற்கும், மந்ததன்மையுடைய குழந்தையாக இருப்பதற்கும் முக்கிய காரணம் அயோடின் சத்து குறைபாடே. அயோடின் சத்துலகுறைப்பாட்டினால் 15 புள்ளிகள் ஐகியூ IQ திறன் குறைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவருக்கும் அயோடின் சத்துடைய உப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு உப்பு ஆலோசகர் சரவணன் பேசும்போது  அயோடின் அளவு நமக்கு தினசரி நமக்கு 150 மைக்ரோகிராம் அளவு தேவை இருக்கிறது. கர்ப்பினி பெண்களுக்கு 200 மைக்ரோகிராம் அளவு தினசரி தேவை உள்ளது.  இது நாம் பயன்படுத்தும் தரமான உப்பு பயன்படுத்துவதன் மூலம் பெறலம். குறிப்பாக தமிழகத்தில கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் 64 சதவீதம் அயோடின் அளவு உள்ளது. 
உப்பு வாங்கும் போது தரமான உப்பாக பார்த்து வாங்க வேண்டும்.  தூள் உப்பில் அதிக அளவு இருந்தாலும், கல் உப்பில் அதிக அளவு இல்லை என்பது குறிப்பிடதக்கது,  அரசு வழங்கும் 3 வகையான உப்பை அதிக அளவு பயன்படுத்தலாம். உப்பில் அயோடின் இல்லாமலே, தரமானதாக இல்லாமல் விற்பனை செய்தாலோ போலி முகவரி இட்ட முழு முகவரி இல்லாத உப்பு பாக்கெட் விற்பனை செய்யப்பட்டாலோ, பதப்படுத்தும் உப்பினை உணவிற்காக விற்பனை செய்தாலோ உணவுதுறை வாட்சப் 94440 42322 எண்ணில் புகைப்படம் எடுத்து குறைபாடு நடைபெறும் இடத்தை சுட்டிகாட்டி புகாரினை தெரிவிக்கலாம் இதன்முலம் அயோடின் இல்லாத உப்பினை விற்பனை செய்வதை தடுக்கலாம்.  ஆஷா பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் உள்ள உப்பு ஆய்வு செய்து தரமான உப்பை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
அயோடின் குறைப்பாட்டினால் தைராய்டு சுரப்பியை சுரக்க வைக்கும், இதனால் உடலும் மனமும் வளர்ச்சி பெறும்.  நீலகிரியில் இதுவரை மேற்கொண்ட மாதிரிகளில் தற்போது 52 சதவீதம் மட்டுமே அயோடின் அளவு உள்ளது. உப்பில் அயோடின் அளவு 48 சதவீதம் அயோடின் இல்லாத உப்பு பயன்பாட்டில் உள்ளது.  உப்பு வாங்கும்போது கடைக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளதை வாங்க கூடாது,  அதுபோல சேதமான உப்பு பாக்கொட்டுகளை தவிர்க்க வேண்டும்.   என்றார்.
நிகழ்ச்சியில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் பணிபுரியும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சந்திரயான்-1 மூலம் நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி இருப்பது உறுதி: நாசா

சந்திரயான்-1 மூலம் நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி இருப்பது உறுதி: நாசா

http://cchepnlg.blogspot.com/?m=1

நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாக சந்திராயன் -1 விண்கலம் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது என நாசா தெரித்துள்ளது.

இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது.

இந்நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தெரிவித்தனர்.

தற்போது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவைக் குறித்து பல தகவல்களை அனுப்பி வருகிறது. அதன் தகவலின்படி நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாகவும், அவை சூரிய வெளிசத்திற்கு அப்பாற்ப்பட்ட இடத்தில் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து ஆராய இருப்பதாக நாசா நிர்வாகம் கூறியுள்ளது.

இரண்டாவது நிலவுப் பயணத்திட்டமான சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

பூமியை போன்று மூன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!

பூமியை போன்று மூன்று புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு..!

அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் உயிர் வாழ தகுதியான 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வானது கெப்ளர் வானியல் தொலைநோக்கி பயன்படுத்தி நடத்தப்பட்டது. அதன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பூமியை விட ஒன்றரை முதல் இரண்டரை மடங்கு வரை பெரிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கிரகங்களில் உலகின் எந்த ஒரு உயிரினமும், உயிர்வாழ தேவையான நீர் ஆதாரம் இருப்பதும், அந்த கிரகங்களின் மேற்பகுதியில் நீராவி நிரம்பிய மேகங்கள் கூட்டம் இருப்பதையும், அவர்கள் கெப்ளர் வானியல் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

http://cchepnlg.blogspot.com.

காத்தாடிமட்டம் பள்ளியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு

காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி திசைகாட்டி மையம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு

தலைமை தாங்கிய
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் முத்துராமன் பேசும்போது

மாணவர்கள் படிக்கும்போது கவனத்துடன் படிப்பது அவசியம்,  மேற்படிப்புகள் வேலை வாய்ப்பை உருவாக்கி தர கூடிய படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். 

சுய தொழில் சார்ந்தோ, வேலை வாய்ப்பு நல்க கூடிய படிப்பை தேர்வு செய்தால் படிப்பிற்கு பின் வருவாய் பெற முடியும், 

பலரும் சரியான பாடபிரிவை தேர்வு செய்யவில்லை இதனால் படித்த பின்னரும் வேலையின்றி அவதிபடுகின்றனர் என்றார்.

கூடலூர் நுகர்வோர் மைய செயலாளரும், திசைகாட்டி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது

கல்வி மூலம் முன்னேற்றமடைந்தவர்கள் பலர் உள்ளனர்.  பலரும் சரியான வழிகாட்டல் இல்லாமல் பள்ளி படிப்பை மட்டும் படித்துவிட்டு பின்னர் சிரம்மப்படுகின்றனர். 

திறமையின் அடிப்படையிலேயே  வேலை என்ற நிலை தற்போது உள்ளது.  எனவே பாடபுத்தக படிப்போடு பொது அறிவு, கணிணி அறிவு, மொழி அறிவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ளுதல் அவசியம். 

அரசு பள்ளிகளில் படித்த பலரு நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர்.  தற்போதும் சாதனையாளர்களாக பலர் உள்ளனர்.

புரிந்து படித்து மனதில் உள்வாங்கி கொண்டால் போட்டி தேர்வுகளை எளிதில் வெல்ல கூடிய திறமை பெற முடியும். 

குறிக்கோளை நிர்ணயித்து படித்தாலும் அதை அடையாவிட்டால் அடுத்த வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்கும் துணிவு மாணவர்களுக்கு அவசியம் என்றார்

பள்ளி ஆசிரியர் சிவகுமார் பேசும்போது

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக தற்போதைய கல்வி முறை மாறி வருகின்றது. 

பள்ளிகளில் நூலகம், அறிவியல் கண்காட்சி, இலக்கிய மன்ற செயல்பாடுகள், சேவை வாய்ப்புகள் என அனைத்தும் தரப்படுகின்றது.

மாணவர்களிடம் ஆர்வம் இருந்தால் மட்டுமே ஆசிரியரின் உழைப்புக்கு பலன் கிடைக்கும்.  மாணவர்கள் சாதிக்கும் எண்ணம் கொண்டு தங்களின் லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்

மாணவர்களின் எதிர்கால லட்சியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  மருத்துவம், காவல்துறை, பொறியியல், ஆசிரியர்,  ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புவதாக கூறினர். 

மாணவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டல்கள் வழங்கபடும் என தெரிவிக்கப்பட்டது  நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

குரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி?

குரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி?

முயற்சி திருவினையாக்கும்...

ஓய்வில்லாத அலைகளே பாறைகளை மணல் துகள்களாக மாற்றுகின்றன.

முடியும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கான சரியான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டால் ஒழிய வெற்றி சாத்தியப்படாது.

நம்மால் முடியாது என்று பின் வாங்கும் ஒவ்வெரு விஷயமும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செயல்படுத்திகொண்டுதான் இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள்.

முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

வயது வரம்பு முடியப்போகிறது.

அரசு வேலை உடனே வேண்டும் ?
என்ன செய்வது?

பலமுறை முறை தேர்வு எழுதியும் வேலை வாங்க முடியவில்லை,

சொற்ப மதிப்பெண்களில் வெற்றிகான வாசல் கதவு அடைக்கப்படுகிறது என்று கவலை கொள்பவரா?

கவலையை விடுங்கள் அடுத்து வரும் முதல் முயற்சியிலேயை வெற்றி பெறுவதற்கான எளிதான வழிமுறைகளைக் காண்போம்.

தீர்மானம்:

போட்டித் தேர்வென்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவதே.

மனதை ஒரு நிலைப்படுத்தி நாம் என்னவாக வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தீர்மானித்த பின்பு, அதற்கான செயல்களில் இறங்க வேணடும். முழுமனதோடு படிக்க தொடங்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக நான் அரசு அலுவலராக விரும்புகிறேன் என்று நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். யார் வீட்டில்தான் பிரச்னை இல்லை. குழப்பங்களில், பிரச்னைகளில் மனதை தளர விடக்கூடாது.

கணிப்பு:

வெற்றி பெற்றால் மட்டுமே இந்த உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். ஒரு மதிப்பெண்ணில் கோட்டை விட்டவரை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.

ஒரு மதிப்பெண் பெற்றிருந்தால் இப்போ நான் எங்க இருப்பேன் தெரியுமா? என்று நாம் மட்டும்தான் புலம்ப முடியும் கேட்பதற்கு எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள்.

"வெற்றி பெறும் வரை குதிரையை போல் ஓடு . வெற்றி பெற்ற பின் குதிரையை விடவும் வேகமாக ஓடு" என்பது பழமொழி. ஓடிக்கொண்டே இருங்கள்.

படிக்காமல் விடையளிக்கலாம்:

ஒரு சாதாரணமான போட்டி தேர்வாளரால் படிக்காமல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 200க்கு 100 முதல் 120 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும்.

தேர்வுக்கு படித்து வரும் தேர்வாளரால் 140 கேள்விகள் வரை விடையளிக்க முடியும்.

ஏனென்றால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல, எல்லாமே நேரடி வினாக்கள்.

அனைத்து கேள்விகளுமே நம் பள்ளி பருவத்தில் படித்தது. கணித வினாக்களுக்கு படிக்காமலேயே 25க்கு 15 வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

கணித வினாக்களுக்கு விடையளிப்பது எப்படி?

குரூப் 2 தேர்வில் கணித வினாக்களை பொறுத்த வரை 15 வினாக்கள் படிக்காமல் விடையளிக்க முடியும்.

பயிற்சியின் மூலம் கூடுதலாக 5 வினாக்கள் விடையளிக்க இயலும். மீதமுள்ள 5 வினாக்கள் கடினமாக இருக்கும். கூடுதல் பயிற்சி, அனுபத்தின் மூலம் அந்த 5 மதிப்பெண்களை பெற முடியும்.

மொழிப்பாடங்களுக்கு ஏன் முக்கியத்துவம்?

மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை 100 கேள்விகள் என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நேரடியாக பதில் அளிக்கும் வண்ணம் கேள்விகள் அமையும். எனவே உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் அந்த நூறு மதிப்பெண்களை எளிமையாக பெற்று விடலாம்.

பொருத்துக வினாக்களை பொறுத்தவரை நான்கில் ஒன்றோ அல்லது இரண்டோ நமக்கு தெரிந்து இருக்கும்.

எனவே இதனை எளிமையாக பொருத்தி பார்த்து விடையளிக்க முடியும்.

படிக்காமல் ஒருவரால் மொழிப்பாடத்தில் 50 முதல் 60 வினா வரை விடையளிக்க முடியும்.

இது எப்படி சாத்தியம் என்றால், அவருக்கு தீர்க்கமாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க போகிறார் எனவே எந்த வித குழப்பமும் இல்லாமல் விடையளிக்க முடியும்.

அரைகுறையாக படித்தவர் சரியான பயிற்சி இன்மையால் இதுவா அதுவா என குழம்பி தவறாக விடையளிக்கிறார்.

இப்படி விடும் ஒரு மதிப்பெண்தான் அவரின் தலை எழுத்தை தீர்மானிக்கிறது. பயிற்சி மற்றும் குழுவாக படிப்பதன் மூலமாக இவற்றை சரி செய்ய இயலும்.

எவ்வளவு மதிப்பெண் வெற்றியை தீர்மானிக்கிறது?

இந்த கேள்விக்கு சரியான பதில் கேள்வித்தாளின் கடினத்தன்மையினைப் பொறுத்தது.

 கேள்வித்தாள் கடினமாக இருக்கும் பட்சத்தில் 160 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தால் வெற்றிவாய்ப்பினை பெறலாம்.

கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் பட்சத்தில், விடையளிக்க வேண்டிய கேள்விகளின் எண்ணிக்கை 180 ஆக உயருகிறது.

நாம் இப்போது கேள்விகளின் அடிப்படையில் மட்டும் விளக்கி வருகிறோம். மதிப்பெண் அடிப்படையில் குழம்ப வேண்டாம்.

200 கேள்விகளுக்கு எத்தனை கேள்விகள் சரியாக விடையளிக்க முடியும் என்பதை விரிவாக காண்போம்:

சராசரியாக 100 மொழிப்பாட கேள்விகளுக்கு 60 முதல் 70 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்கலாம்.

இதுவே 90க்கு மேல் அதிகரிக்குமானால் வெற்றியை எளிதாக தட்டிப்பறிக்க முடியும்.

உங்களின் வெற்றியானது பொது வினாக்களுக்கு எப்படி விடையளிக்க போகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.

தேர்வு கடினமோ, எளிதோ பொது அறிவுப்பகுதியில் 80 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும்.

இந்த யுக்தி சாத்தியமானால்,90 80=170 ஒரு நல்ல மதிப்பெண்ணை பெற முடியும் இதன் மூலம் அரசு வேலைக்கனவு சாத்தியமாகும்.

இதுவே கேள்வி எளிமையாக கேட்கப்பட்டுள்ளது என்றால் 95 85=180 இது வெற்றியை மேலும் எளிமையாக்கும். 170 என்பது போதுமான ஒன்று.

போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது.

தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

அப்புறம் என்ன தேர்வில் வெற்றிவாகை சூட வேண்டியது மட்டுமே பாக்கி,
நன்றே செய்
இன்றே அதுவும் செய்,
 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,

திசைகாட்டி நீலகிரி

http://cchepnlg.blogspot.com/?m=1

குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட திசைகாட்டி, 
குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, 
கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் 

இணைந்து கல்லூரியில் 

திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாமினை நடத்தின

இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் சகோதரி ஷிலா தலைமை தாங்கினார்,

குன்னூர் திசைகாட்டி மைய அமைப்பாளர் டேவிட் முன்னிலை வகித்தார்,

திசைகாட்டி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சித்திரவேல் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பேசும்போது

கல்வியில் சரியான தேர்வை மாணவ பருவத்தில் தேர்வு செய்யாமல் போவதால் பலரும் படித்தபின் தன்னுடைய குறிக்கோளை எட்ட முடியாவில்லை,

ஒரு பிரிவை எடுத்து படிக்கும்போது அதற்கான வாய்ப்புகளையும் அறியவேண்டும்,
ஆசிரியர் படிப்பை தேர்வு செய்தால் அதில் எந்த வகை ஆசிரியர், எந்த பிரிவு ஆசிரியர் என தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதுபோல சமூகபணிகள், பட்ட படிப்பு போன்றவற்றில் தன்னுடைய படிப்பை தேர்வு செய்யும் போது அடுத்த நிலை என்ன வாய்ப்பு என்பதை அறிய வேண்டும்,

எந்த வகை தேர்வு என்பதை அறிந்துகொள்ளவும்,  அடுத்த கட்ட படிப்பை தேர்வு செய்யவும்  இந்த திசைகாட்டி மையம் வழிகாட்டியாக செயல்படும் என்றார்,

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளரும், திசைகாட்டி மையத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சிவசுப்பிரமணியம் பேசும்போது

பட்ட படிப்பு முடித்தவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.  அதற்கு பொது அறிவு அவசியம், பத்திரிக்கைகள் வாசிப்பு மற்றும்  பாட புத்தகங்களை படித்தல் அவசியம், 

இன்று அரசு பணிகளில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 70 சதவீதம் பேர் வெளிமாவட்டத்தை சாரந்தவர்கள்  இந்த மாவட்டத்தில் பட்டம் படித்தவர்கள் மீண்டும் பெற்றோருடன் கூலிவேலைக்கே செல்லும் நிலை உள்ளது,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் மூலம்  குருப் 1, குருப் 2, குருப் 4 மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தி அதில் வெற்றிபெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகின்றது.

அரசு துறை பணியிடங்களை பெற போட்டி தேர்வுகளுக்கு படிக்கும்போதே தயாராக வேண்டும் என்றார்.

குன்னூர் உதவி மின் பொறியாளர் நிர்மல்குமார் பேசும்போது

கல்வியில் நாம் முன்னேறினாலும், வேலை  வாய்ப்பில் பின்தங்கியுள்ளோம்,  இன்று வேலை வாய்ப்புகள் பல துறைகளில் உள்ளது, 

எந்த பட்டம் படித்தாலும் ரெயில்வே, வங்கி பணிகள், அஞ்சல்துறை,  காவல் துறை பணிகள் என பல துறைகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்பபடுகின்றது. 

பொறியியல் படிப்புகளிலும் வேலைவாய்ப்பு உள்ள துறைகள், சுயமான தொழில் தொடங்கும் துறைகள் உள்ளன.

அதனை பயன்படுத்திட நாம் படிக்க வேண்டியது அவசியம்.

தாழ்வு மனபான்மையை அகற்றிவிட்டு  தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். 

பலரும் கிராமத்தில் வாய்ப்புகள் இல்லாத இடத்தில் இருந்துதான் சிரம்மப்பட்டு உருவாகியுள்ளார்கள் அதனால் வாய்ப்பு கிடைக்காது என்ற மனநிலையை மாற்றி முயற்சிக்க வேண்டும் என்றார்.

குன்னூர் ஜேசிஐ பயிற்றுனர் அமிர்தராஜ் பேசும்போது

படிப்பு சமூகத்தில் உயர்வை தரும்,  ஆனால் எதற்கான படிப்பு என்பதை பொறுத்து வாழ்வில் மாற்றம் உருவாகும்.  

அதுபோல நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் முன்னேறியுள்ளனர். 

அடிப்படையில் சில தகுதிகள் இல்லாவிட்டாலும்,  கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அதன் மூலம் தன்னுடைய திறமையை மேம்படுத்தி மாற்றங்களை உருவாக்குவதும் தம்முடைய முயற்சியால் சாதிக்க முடியும் என்றார்.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் பேசும்போது

பொது அறிவு மற்றும் வாழ்க்கை கல்வியை கற்றுக் கொள்வது முக்கியம்,  பட்டம் பெறுவது சாதாரன படிப்பு  அதன்பின் பொது அறிவும், பல அறிவு சார் புத்தகங்களில் வழிகாட்டலும் மாணவர்களை மேம்படுத்தும்,

மற்றவருக்காக படிப்பதைவிட.
தனக்கு பிடித்ததை படிக்க வேண்டும் .

எல்லாரும் தேர்வு செய்யும் படிப்பை நாமும் தேர்வு செய்வது பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும்
படித்த படிப்புக்கு வேலை என்ற நிலை மாறிவிட்டது

எனவே மாணவ பருவத்தில் சிந்தனை செய்து சரியான வழியை கண்டறிதல் அவசியம் என்றார்,

கல்லூரி போராசிரியர் சிந்தியா பேசும்போது 

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதே நமது வெற்றிக்கு வழியாக அமையும்,   கால்பந்து வீரரான டோனி கிரிகெட்டில் சாதித்தார்,  அறிவியலில் ஆர்வம் கொண்ட அம்பேத்கார் சட்டத்தை வடிவமைத்தார்.

அதுபோல லட்சியம் நிறைவேறாவிட்டாலும், துவண்டுவிடாமல்,  அடுத்த கட்ட முயற்சியை தொடர்ந்து வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பிரென்ச் பிரிவு மாணவர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பங்கேற்ற மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கிராம சபை கூட்டம்

தமிழக கிராம சபை கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறை விதிகள், 1999.    
கிராம சபை கூட்டத்தின் அறிவிப்பு, நிகழ்ச்சிநிரல், தீர்மானத்தின் மாற்றம் அல்லது இரத்து செய்தல்
தமிழக கிராம சபை (குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999.
தமிழ்நாடு கிராம சபை (ஏற்பாடு மற்றும் நடத்துவதற்கான நடைமுறை கூட்டம்) விதிகள், 1999 (The Tamil Nadu Grama Sabha (Procedure for convening and conducting of meeting) Rules, 1999)
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தின் பிரிவு 242(1) ன் துணை பிரிவு 3, (5) வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் கவர்னர் பின்வரும் விதிகள் அமைக்கிறார்:
அரசாணை (நிலை) 167 எண்.150 உள்ளாட்சித் (C-4) துறை நாள், 17 ஜூலை,1998 (G.O. (Ms) No. 167 Rural Development (C-4) Department, dated 9th August, 1999) இன் படி இந்த விதிகள் தமிழக கிராம சபை
(குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999.
(Tamil Nadu Grama Sabha (Quorum and Procedure for Convening and Conducting of Meetings) Rules, 1999 சொல்லப்படுகிறது.
1. குறுகிய தலைப்பு -
இந்த விதிகள் தமிழக கிராம சபை (குறைவெண் உறுப்பினர்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் மற்றும் நடத்துவதற்கான நடைமுறைகள்) விதிகள், 1999.
2. வரையறைகள் (Definitions)
(a) "சட்டம்" என்பது தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 (1994 ன் தமிழ்நாடு சட்டம் 21):
(b) இந்த விதிகளில் பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் வெளிப்பாடுகள்,  இதில் வரையறுக்கப்படாதவைகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள அர்த்தங்களுக்கு பொருந்தும்.
3. கூட்டங்களுக்கு இடையே காலம் (Duration between the meetings)
(1) கிராம பஞ்சாயத்து ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது ஒரு முறை கூட்டப்பட்டு, அலுவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
(2) அரசு விடுமுறை நாட்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த உள்ளூர் விடுமுறை நாட்கள் கூட்டம் நடைபெறாது
4. கூட்டத்தின் அறிவிப்பு( Notice of the meeting)
(1) கூட்டம் நடத்தப்படும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறிப்பாக தேதி மற்றும் நேரம் கூட்டம் நடைபெறும் இடம், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் உள்ளிட்டவை  குறித்து  குறிப்பிடப்பட  வேண்டும்.
(2) அவசரகாலத்தில், தலைவர் 24 மணி நேரத்திற்குக் குறையாமல் தேதி மற்றும் நேரம் கூட்டத்தின் இடம் மற்றும் அங்கே நடக்கவுள்ள அலுவல்கள், அத்தகைய அவசரத்தன்மைக்கான காரணங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு கூட்டத்தை கூட்டலாம்.
5. சிறப்பு கூட்டம் (Special meeting)
சிறப்புக் கூட்டத்தில் சட்டத்தின் விதிகளின் படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும், அத்தகைய கூட்டத்தில் வேறு எந்த விஷயமும்  முன் வைக்கப்படாமல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட விஷயத்தைக் குறித்து மட்டுமே முடிவு செய்யப்படும்.
6. நிகழ்ச்சிநிரல் (Agenda)
(1) கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் தலைவரால் தயாரிக்கப்படும். உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சிநிரலைக் கொண்டு வரலாம் மற்றும்
தலைவருக்கு விபரங்களை கூட்ட தேதிக்கு ஏறக்குறைய ஏழு நாட்களுக்கு முன் வழங்க வேண்டும். தலைவர், அதன்படி தனது கருத்துக்களை கொண்டு, கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நிரலை வகுக்கலாம்.
(2) தலைவர், சாதாரண கூட்டத்திற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்கும் போது, அவைகளுக்கிடையில், பின்வரும் விசயங்களைத் தவிர்க்க இயலாது.
(a) கிராம ஊராட்சியின் அனைத்து கணக்குகளின் கீழ் மாதாந்திர ரசீதுகள் மற்றும் செலவுகளைக் காட்டும் ஒரு அறிக்கை
(b) மாதாந்திர அனைத்து திட்டங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வேலைகளில் முன்னேற்றம்;
(c) ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் அடுத்த ஆண்டில்   மூன்று மாதங்களுக்குள் கிராம பஞ்சாயத்து நிர்வாக அறிக்கை.
(d) கிராம பஞ்சாயத்து விளக்கக் குறிப்புகளுடன் கூடிய தணிக்கை அறிக்கையின் முதல் அறிக்கை பெறப்பட்டவுடன் கிராம பஞ்சாயத்தின் முதல் கூட்டத்தில் அதைத் தாக்கல் செய்யவேண்டும்.
(e) கிராம பஞ்சாயத்துகளின் முதல் கூட்டத்தில் கிராம பஞ்சாயத்துத் திட்டங்களின் திட்டங்கள், திட்டங்கள் மற்றும் பணிகளை ஆய்வு செய்த ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் சுற்றுப்பயண அறிக்கைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் கிராமப்புற பஞ்சாயத்துக்கான திட்டத்தை உருவாக்குதல்.
(3) கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் உறுப்பினர்கள் வெற்றிகரமாக பங்கேற்பதை உறுதி செய்வதற்காக, தலைவர், தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு இயக்குனர் அந்தந்த காலகட்டத்தில் வழங்கும் கிராம பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட பல்வேறு வழிமுறைகள் நிகழ்ச்சி நிரலில்  சேர்க்க வேண்டும்
8. கூட்டத்தின் செல்லுநிலை(Validity of meeting)
கிராமப் பஞ்சாயத்து எந்தவொரு உறுப்பினருக்கும் கூட்ட அறிவிப்புடன் நிகழ்ச்சி நிரலை சேர்த்து சார்பு செய்யவில்லையெனில் முழு நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது.
9. வேண்டுகோள் கூட்டம் (Requisition meeting)
(1) தலைவர், எழுத்துப்பூர்வ வேண்டுகோளின் பேரில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவில்லாத உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து கூட்டம் தேவை என்று விடுத்த கோரிக்கை, தேதி மற்றும் கூட்டம் நடத்தப்பட வேண்டிய காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.
அந்த வேண்டுகோள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் விடுக்கப்படும். தலைவர், அல்லது பொறுப்பில் உள்ள வேறு எந்த நபரிடம்  இந்த வேண்டுகோளானது கூட்டத்தின் ஏழு தெளிவான நாட்களுக்கு முன் கொடுக்கப்பட வேண்டும்.
(2) தலைவர் அத்தகைய வேண்டுகோளை நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் அதில் குறிப்பிடப்பட்ட நாளில் ஒரு கூட்டத்தை அழைக்கத் தவறினால், அதன்பிறகு மூன்று நாட்களுக்குள் கூட்டம் கூடும் என்று கோரிக்கையை அனைத்து உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அறிக்கையுடன் விதி 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி அறிவிப்பு அழைப்பு வழங்கலாம்.
10. பொதுமக்களுக்கான கூட்டம் (Meeting open to public)
அனைத்துக் கூட்டங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி உண்டு, வரம்புரையாக, தலைவர் அவரது விருப்பப்படி அல்லது கிராம பஞ்சாயத்து கோரிக்கையுடன் எந்தவொரு இடத்திலும், நடவடிக்கை குறிப்பில் காரணத்தை பதிவு செய்து, பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட நபருக்கான அனுமதியை திரும்பப் பெறலாம்.
11. கூட்டம் வருகை பதிவு (Attendance of the meeting)
கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தங்களது வருகையை,  வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். கூட்டத்தின் நிறைவில், தலைமை நிர்வாகி வருகை பதிவு செய்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, முடிவில் கையெழுத்திட வேண்டும்.
12. குறைவெண் உறுப்பினர்கள் (Quorum)
(1) குறைந்தது மூன்று உறுப்பினர்கள் அல்லது கிராமப்புற பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு, இதில் எது அதிகமோ, இல்லாவிட்டால் ஒரு கூட்டத்தில் எந்த அலுவல்களும் கையாளப்படுவதில்லை.
(2) ஒரு கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்குள், ஒரு குறைவெண் உறுப்பினர்கள் இல்லை என்றால், அனைத்து உறுப்பினர்களும் நீண்ட காலம் காத்திருக்க ஒப்புக்கொண்டால் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
(3) கூட்டம் குறைவெண் உறுப்பினர்கள் தேவையினால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தால்,
தலைவர் புதிதாக அத்தகைய ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கான அறிவிப்பு, விதி 4 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு,  கொடுக்க வேண்டும்.
13. பிற காரணங்களுக்காக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது (Adjourned of the meeting )
(1) கூட்டத்தில் அலுவல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தலைமை தாங்கும் உறுப்பினர், கிராமப்புற பஞ்சாயத்துகளின் கூட்டம் நடவடிக்கை குறிப்பில் (Minutes)  சரியான காரணங்களை பதிவு செய்து,
பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஒத்திவைக்கலாம். சரியான காரணங்களுக்காக ஒரு கூட்டம்,  நாள் குறிப்பிடாமல் (sine die) ஒத்திவைக்கப்படும் போது, அந்தக் கூட்டம் தொடரக்கூடாது
(2) அலுவல்களை கையாளும் போது, ஒரு கூட்டம் செல்லுபடிநிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் தலைமை உறுப்பினர் ஒத்திவைக்கும் போது,
ஒத்திவைக்கப்பட்ட தேதியில் நடைபெற்ற கூட்டம் எல்லா நோக்கங்களுக்கும், தொடர்ச்சியாக இருக்கும், அத்தகைய ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கு புதிய அறிவிப்பு அவசியமில்லை.
(3) தலைவர், பெரும்பான்மை உறுப்பினர்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டத்தினை ஒத்திவைத்து,  குறுக்கிடுவதன் மூலம் அல்லது கூட்டத்தை முடிக்கப்படாமல் விட்டால், எந்த நோக்கத்திற்காக கூட்டம் நடத்தப்பட்டதோ, மீதமுள்ள உறுப்பினர்கள் கூட்ட அலுவல்களை சட்டப்பூர்வமாகத் தொடரலாம்.
தலைவர் இல்லாத நிலையில், துணைத் தலைவர் அல்லது தங்களுக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் தலைவராகவும் தொடரக் கூடும்.
எந்த அலுவலுக்காக முறையாக அறிவிக்கப்பட்டதோ, அந்த அலுவல் மட்டுமே முடிக்கப்பட வேண்டும், அது நடைபெற்றால், அது செல்லுபடியாகும்.
14. தீர்மானத்தை நிறைவேற்றுதல்( Passing of resolution)
கிராம பஞ்சாயத்துக்கு முன்னால் வரும் ஒவ்வொரு கேள்விக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களால் பதில் அளிக்கப்பட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
ஒவ்வொரு வாக்குகளிலும் சமமான வாக்குகள், இருக்கும் போது, தலைவர் இரண்டாவதாக வாக்களிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படாவிட்டால், அதற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களின் பெயர்கள் நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்யப்படும்.
15. தீர்மானத்தின் மாற்றம் அல்லது இரத்து செய்தல்(Modification or cancellation of resolution)
எந்தவொரு தீர்மானமும் அது நிறைவேற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குள் மாற்றப்படாது. அல்லது ரத்து செய்யப்படாது. 
சிறப்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த உறுப்பினர்களில் ஒரு பங்கிற்கு குறைவாகவும் ஆதரித்தால் ஒழிய மாற்றப்படாது அல்லது ரத்து செய்யப்படாது. 
16. நடவடிக்கை குறிப்பு (Minutes)
ஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு விஷயத்தின் மீதான விவாதங்கள் முடிந்தவுடன் நடைமுறைகள் வரையப்பட்டு, கிராம பஞ்சாயத்துத் தீர்மானங்கள் நடவடிக்கை குறிப்பில் எழுதப்படும்.
மேலும் அங்கு உரையை வாசித்து விசேட குழு உறுப்பினர்கள்  மற்றும் தலைவர் உடனடியாக கடைசி வரி கீழே கையெழுத்து இட வேண்டும்.
கூட்டத்தின் முடிவில், அனைத்து தீர்மானங்களும் அந்த நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டு, திறந்த கூட்டத்தில் வாசிப்பு செய்து, பின்னர் அவர் இறுதியில் கூட்டத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் கையெழுத்துக்களை பெற வேண்டும்.
17. பதிவுகள் காப்பில் வைத்துக் கொள்ளல்( Custody of records)
கிராம பஞ்சாயத்தின் நடவடிக்கைகள் மற்றும் பதிவேடுகளை தலைவர் காப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்,
கிராம பஞ்சாயத்து கூட்டங்களின் பதிவுகள் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளின் பிரதிகளை வழங்கலாம்.
கிராம பஞ்சாயத்து போன்ற பொது அல்லது விசேட ஆணை மூலம் கட்டணங்களை, தீர்மானித்துக் கொள்ளலாம்.
வழங்கப்பட்ட இந்திய சான்று சட்டம், 1872 , 76 வது பிரிவின் படி  (மத்திய சட்டம் I இன் 1872), மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை நிரூபிக்க பயன்படுத்தலாம்’
பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலர் திரு. A.N.P. சின்கா, தன் கடித எண்.M-11011/66/2008-P&C/P&J, 27th ஏப்ரல், 2009 குறிப்பிட்டுள்ள கிராம சபை அதிகாரங்கள் பிரிவு 288 இன் படி சிவில் நீதிமன்றங்களுக்கு கிராம சபையின் மேல் எந்த அதிகாரங்களும் கிடையாது.
பிரிவு 360 இன் படி இரு கிராமங்களுக்கிடையே தகராறு ஏற்படும் பட்சத்தில் அரசுக்கு தகவல் சொல்லப்படும். அரசின் முடிவே இறுதியானதும் ஆகும்.
குறைவெண் உறுப்பினர்கள்
வரிசை எண்    கிராமத்தின் மக்கள் தொகை    குறைவெண் உறுப்பினர்கள்
1                            500 வரை                                             50
2                            501-3,000                                               100
3                            3,001-10,000                                          200
4                           10,000 க்கு மேல்                                 300

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...