மின்சார வாரியம் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் கோரிக்கைகள்

பெறுனர்

    திருமிகு. மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நீலகிரி வட்டம்,
உதகை.

    பொருள் : மின்சார வாரியம் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
    கோரிக்கைகள் அனுப்புதல் தொடர்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

மின்வாரியத்தின் தற்போதைய குறைகளை இதன் மூலம் சுட்டிகாட்டியுள்ளோம் அவற்றை சரிசெய்து தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மின்வாரியத்திற்கு கடந்த காலங்களில் இருந்த நற்பெயர் தற்போது மங்கி வருகின்றது. ஒரு சில மின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றனர்.   இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் நிலையை மின்வாரியம் மாற்றி விரைவான நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பந்தலூர் கூடலூர் பகுதியில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரை அலைகழிப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்படுகின்றது.  உரிய ஆவணம் கொடுத்தாலும் அது இல்லை இது இல்லை என கூறி திருப்பி அனுப்பபடுவதாகவும் உதகையில் இருந்து விண்ணப்பம் வரவில்லை எனவும் கூறி அலைகழிப்பதகவும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  உடனடியாக உரிய காலக்கொடுவுக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்இணைப்பு பெயர் மாற்றத்திற்கும் அலைகழிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.  மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் பெறவே இவ்வாறு அலைகழிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும்.

மின் இணைப்பு பெற செலுத்த வேண்டிய கட்டணம் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான கட்டணம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் குறித்த தகவல்கள் அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் ஒட்டப்பட வேண்டும்.

மின்நுகர்வோர் குறை தீர்மன்றம் குறித்த தகவல் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,

நெலாக்கோட்டை அருகே கூவசோலை பகுதியில் மின் கம்பம் உடைந்துள்ளது.  இது குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.  விரைவில் மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின்கம்பங்கள் பல சேதமடைந்துள்ளது இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுத்து மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவாலா திருவள்ளூவர் நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் சார்பில் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஏற்கனவே பந்தலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளரிடம் தகவல் ரிவிக்கப்பட்டது.  இது குறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் அப்பகுதி மின் அழுத்த குறைபாட்டினை சரிசெய்ய வேண்டும்.



புதிய மின் மீட்டரில் அதிக அளவு மின்அளவீடு காட்டுவதாக பரவலாக புகார்கள் வருகின்றது.  பழைய மீட்டரில் ரூ.600 வரை கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது புதிய மின் மீட்டர்களில் காட்டும் அளவிற்கு ரூபாய் 2,500 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். சிலர் வீடுகளுக்கு 100 ரூபாய்க்குள் கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் ஏற்படுவதால் மின் மீட்டரில் குறைபாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

கூடலூர் பந்தலூர் இரு உதவி மின் கோட்டங்களுக்கு தற்போது பெறுப்பு உதவி மின் கோட்ட பொறியாளரே உள்ளார்.  இதனால் மின் வினியோக பணி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது அதனால் இப்பகுதிக்கு காலியாக உள்ள மின் கோட்ட பொறியாளர் மற்றும் இதர பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்பாலா மரப்பாலம் புளியம்பாரை பகுதியில் சிறு மழை மற்றும் காற்றில் மின் தடை ஏற்படுகின்றது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றது.  மின் வினியோகம் பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இப்பகுதியில் மின் வழித்தடத்தில் மின் கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து சீரான மின் வினியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித்தடத்தில் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் வழித்தடங்கள், மின் கம்பங்கள் புதிதாக அமைக்கும்போது மின்வாரிய ஊழியர்கள் எளிதாக சென்று மின் வினியோக குறைபாடுகளை களையும் வகையில் மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதனால் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை எளிதில் விரைவில் சரிசெய்ய முடியும்.  மின் வழித்தடம் அமைக்கும்போதே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர பகுதிகளில் தற்போது பழைய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுகின்றது.  நகர பகுதியில் ஏற்படும் மின் தடைகளை உடனடியாக சரிசெய்ய உரிய நபர்கள் உள்ளனர் ஆனால் கிராம பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் சரிசெய்ய நகர பகுதியில் இருந்துதான் மின் ஊழியர்கள் வரவேண்டிய நிலை உள்ளது.  எனவே கிராம புற பகுதிகளில் ஏற்கனவே உள்ள பழைய கம்பிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுக்க முடியும்.

ஊர் மக்களிடம் முன்னரே தகவல் தெரிவித்தால் மின் கம்பங்களில் உள்ள செடிகொடிகளை அகற்றவோ, கம்பிகளில் உரசும் மரங்களை வெட்டவோ உதவுவார்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பகுதியில் மின் தடை ஏற்படும் போது மற்ற பகுதியில் மின் வினியோகம் அளிக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின் பாரமரிப்பு பணி மேற்கொள்ளும் போது பணி மேற் கொள்ளும் பகுதியை தவிர மற்ற பகுதியில் மின் வினியோகம் செய்யலாம்.

மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது முன்கூட்டியே மக்களுக்கு செய்திதாள்களில் தகவல் தெரிவிக்கலாம் மின்தடைசெய்யும் நாளுக்கு முன்னதாக தகவல் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.





பந்தலூர் கொளப்பள்ளி டேன்டீ 4வது டிவிசன் பகுதியில் மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிமுதல் 10 மணி வரையும் காலை 5 மணிமுதல் 7 மணிவரையும் மின் விளக்குகள் பயன்படுத்த முடியாமலும் இதர மின் உபயோக பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.  இப்பகுதியில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பகுதிக்கு புதிய டிராண்ஸ்பார்ம் அமைக்க வேண்டும்.

எருமாடு மணல் வயல் பகுதியில் தற்போது கப்பாலா பகுதியில் உள்ள டிராண்ஸ்பார்ம் மூலம் மின்சாரம் வழங்கபட்டு வருகின்றது.  இதனால் மணல்வயல் பகுதியில் மின்அழுத்தம் குறைவாக உள்ளது.  இப்பகுதிக்கு தனி டிராண்ஸ்பார்ம் அமைக்க வேண்டும்.

வெட்டுவாடி பகுதியிலும் மின் அழுத்த குறைபாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஏற்கனவே மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இப்பகுதி மின்அழுத்த குறைபாட்டினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பனஞ்சிறா புலியனூர் பகுதியில் திரு நாராயணன் என்பவர் தோட்டம் வழியாக செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது.  இப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியினால் தேயிலை தோட்டத்தில் இழைபறித்து தூக்கி செல்ல இயலாத நிலை உள்ளதாகவும் இதனை சரிசெய்ய ஏற்கனவே புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் இந்திரா நகர் மின் கம்பி செல்லும் வழித்தடம் பகுதியில் நீsவீ சர்ச் அருகில் மிக பெரிய வாகை மரம் காய்ந்து உள்ளது.  மழை காலத்தில் அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.  இந்த மரம் பாரி ஆக்ரோ இரண்டாம் பிரிவு பகுதியில் உள்ளது.  இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இம்மரம் மழையில் சாய்ந்து விழுந்தால் இரண்டு மின் கம்பங்கள் பாதிப்பதோடு அப்பகுதியல் வசிக்கும் 40 குடும்பங்களின் மின் இணைப்பு பாதிக்கப்படுவதோடு மக்கள் குடிநீர் வினியோகமும் பாதிக்கும் என்பது குறிப்பிட தக்கது.


இப்படிக்கு           
சு. சிவசுப்பிரமணியம்.   தலைவர் 

இந்தியன் வங்கியின் மண்டல ம முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை

பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை குறைபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இன்று பந்தலூர் இந்தியன் வங்கியின் மண்டல ம முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை குறைபாடுகள் ஏடிஎம் சேவை பாதிப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்ய வலியுறுத்தி இந்தியன் வங்கி தலைவர், மண்டல மேலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பபட்டது.  இதன் அடிப்படையில் இந்தியன் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது, 
இதில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  ஆலோசகர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ் பந்தலூர் வியாபாரிகள் சங்க தலைவர் அசரப் பொருளாளர் கிருஸ்ணகுமார் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நொளசாத், செயலாளர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதில் பந்தலூர் ஏடிஎம் இயந்திரம் அடிக்கடி பழுதாகி இருப்பதால் வாடிக்கையாளர்கள் மிகப்பெரும் பாதிப்படை கின்றனர்.  இந்த இயந்திரத்தை சரிசெய்ய வேண்டும் மேலும் கூடுதல் இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் தாகதமுறையில் நடந்து கொள்ள கூடாது, கடன் கேட்டு வருவோரை அலைகழிக்க கூடாது,  ஓய்வூதியம் பெற வருவோருக்கு விண்ணப்பங்கள் எழுதிகொடுக்க ஒருவரை நியமிக்க வேண்டும்.  ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற எளிய நடைமுறையை கையாள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோன்¢க்கைகள் முன் வைக்கப்பட்டன. 
இவற்றுக்கு பதிலளித்த முதுநிலை மேலாளர் சிவகுமார் கூறும்போது வங்கியின் வாடிக்கையாளர்களை மதிக்காமல் நடந்துகொள்வது வருத்தம் அளிக்க கூடியது பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும்.  இவ்வங்கியின் ஏடிஎம் இயந்திரம் தொழிற்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரிசெய்யபடும் கூடுதல் ஏடிஎம் இயந்திரம் பணம் போடும் வசதியுடன் அமைக்க தலைமையகத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போது 52000 ஓய்வூதியதாரர்கள் இங்கு கணக்கு வைத்து உள்ளனர். அவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் நலன் கருதி ஓய்வூதியம் வழங்க தனிநபர் நியமனம் செய்ய அவர் மூலம் தனியாக வழங்கப்படும். இதனால் வங்கிக்கு வரும் கூட்டம் குறையும்.  வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  வங்கியின் வராக்கடன் தற்போது 13 சதவீதமாக உள்ளது.  பெரும்பாலும் கல்வி கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.  இதனால் புதிதாக கடன் கேட்போருக்கு கடன் வழங்குவதில் சிரமம் நீடிக்கிறது.  கடன் வழங்க சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் கடன் உடனடியாக வழங்கப்பட இயலவில்லை.  தலைமையகத்தில் பேசி கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க உரிய முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்றார். 

மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும்.

ாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மவட்டம்

ொருள்  நீலகிரி  மாவட்டத்தில் போலி மருத்துவர்கள்
ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும்.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

நீலகிரி  மாவட்டத்தில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டம்.  இங்கு போதிய மருத்துவர்கள்இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கூட சரியான சிகிச்சை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுஇந்நிலையில்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டதுஆனால் நீலகிரி  மாவட்டத்தில் இதுபோன்ற எந்த வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை
பலரும் தற்போது ஆயுர்வேதம்சித்தாயுனானிஓமியோபதி மற்றும் மாற்றுமுறை மருத்துவம் என்பனஉள்ளிட்ட பல்வேறு  பெயர்களில் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறுகின்றனர்.  ஆனால் இவர்கள்உண்மையாளுமே மருத்துவம் படித்து சிகிச்சை அளிக்கின்றனராஎன்பதுடி கேள்வி குறியாக உள்ளது.  பலமாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது உரி படிப்பு இல்லாமல் மருத்துவர் என கூறி ஆங்கில மருத்துவம்மற்றும் மாற்றுமுறை மருத்துவம் என பலரும் சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் மாற்றுமுறை மருத்துவத்திற்கான படிப்புநர்சிங் படிப்பு என கூறிபோலி சான்றிதழ்கள் வழங்கியதும் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிட தக்கது.
இதுபோன்ற பலரும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உண்மையானவரா என ியமாலே சிகிச்சைபெறுகின்றனர்இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலையில் தனியார்மருத்துவமனைகளுக்கு கொண்டாட்டமாக உள்ளது.   தனியார் மருத்துவனைகளில் சிறப்பு மருத்துவர்வருவதாக கூறி அவ்வப்போது வெளி மாவட்டத்தில் இருந்து சிறப்பு மருத்துவர் என கூறி ஒருவரைவரவழைத்து அவரிடம் பரிசோதனை செய்ய கூடுதல் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர்.  இதில்குறிப்பாக கர்ப்பினி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை ஸ்கேன் என கூறி மூன்று மடங்கு கட்டணம்வசூலிக்கின்றனர்
அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் ஸ்கேன்களுக்கு உரி அறிக்கை தரப்படுவதில்லை.  அரசுமருத்துவமனைகளில்ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பினிகளிடம் தனியார்மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க அறிவுரை வழங்கப்படுகின்றது.  இதனால் தனியார் மருத்துவமனைகளில்பிரசவங்களும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது
தனியார் மருத்துவமனைகளில் வரும் மருத்துவர்கள் உண்மையாளும் சிறப்பு மருத்துவர்களாஅல்லதுஅவர்களும் சாதாரன மருத்துவம் படித்துவிட்டு இங்கு வரும்போது மட்டும் சிறப்பு மருத்துவர் என கூறி அதிககட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு மேற்க்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது
தற்போது குழந்தை இல்லா தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர்.  உணவு பழக்கம்போதை பழக்கம் எனபல்வேறு காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக்கி தருவதாக விளம்பரம்செய்து அதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதாக கூறியும் பன்மடங்கு கட்டணம்வசூலிக்கப்படுகின்றதுசமிபத்தில் கோவை திருப்பூர் பகுதிகளில் இதுபோன்று குழந்தை உண்டாக்கி தருவதாககூறி போலியாக சிகிச்சை அளித்தவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.  எனவே இதுபோன்று போலிமருத்துவர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் இதுகுறித்து எந்தவித ஆய்வும் மேற்க்கொள்ளப்படாமல்இருப்பதால் இவர்கள் எந்தவித பயமுமின்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்
தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் காவல் துறை மருத்துவ துறை ஆகியனஇணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு இங்கு மருத்துவம் கிளினிக் நடத்துபவர்கள் உண்மையானமருத்துவர்களா என ஆய்வு செய்து போலி மருத்துவர்கள் இருப்பின் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

அரசு பேருந்துகள் ஒழுகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொது மேலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம்
உதகை.

பொருள் : அரசு பேருந்துகள் ஒழுகாமல் இருக்க முன்னெச்சரிக்கை
     நடவடிக்கை  எடுக்க கேட்டல் சார்பாக

அய்யா அவர்களுக்கு வணக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் சில அதிகமாக ஓழுகுகின்றன.  இதனால் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பாதிக்கின்றனர்.  இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

அரசு பேருந்துகள் பலவும் வெளி மாவட்டங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் இடமாற்ற (ரீ-பிளேஸ்மென்ட்) அடிப்படையில் இயக்கப்படுகின்றன.  அவை மலைபிரதேசத்திற்கான வடிவமைப்பினை பெற வில்லை.  மேலும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக உள்ளன.  அவற்றில் மேற்கூரைகள் விரிசல் ஏற்படுவதால் மழை காலங்களில் பேருந்திற்குள் ஒழுகும் நிலை ஏற்படுகின்றது.  மக்கள் பெரிதும் பயனிக்கும் அரசு பேருந்துகள் ஒழுகுவதால் பொதுமக்கள் மழை காலங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதில் சிரம்மப்படுகின்றனர்.

அரசு பேருந்துகளில் ஒழுகும் நிலையை மாற்ற ஆண்டிற்கு ஒருமுறை அனைத்து பேருந்திற்கும் தார் சீட்டுகள் ஒட்டும் பணி நடைபெறும்.  தார் சீட்டுகள் ஒட்டும் பணி மழை காலங்களிலேயே ஆரம்பிக்கபடுவதால் அவை முழுமையாக பயன் அளிப்பதில்லை.  அவற்றை வெயில் காலமான தற்போது ஒட்ட வேண்டும்.  தற்போது தார் சீட்டுகள் ஒட்டும் போது வெயிலில் உருகி மேற்கூரைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்  அடைபடும் இதனால் மழை காலங்களில் ஒழுகும் நிலை குறையும்.

எனினும் சில பேருந்துகள் ஒழுகும் நிலை மாறுவதில்லை.  சில பேருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடிகள் அதை ஒட்டிய பீடீங் பகுதிகளில் உடைந்துள்ளதால் அவற்றில் நீர் கசிவு ஏற்பட்டு பக்கவாட்டு கண்ணாடி பகுதியில் உள்ள இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல முடியவில்லை.

பக்கவாட்டு காண்ணாடிகள் அதனை சார்ந்த  பகுதிகளில் உள்ள பீடிங்களில் உள்ள வின்¢சல்களில் நீர் கசிவு ஏற்படுவதால் அவற்றை தடுக்க பீடிங் பகுதியில்  புட்டி போல் பசையை ஒட்டுவதன் மூலம் பீடிங் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை குறைக்கலாம்.  இதனால் பக்கவாட்டில் ஏற்படும் நீர்கசிவு மற்றும் ஓழுகும் நிலையை போக்க முடியும் எனவே தற்போதே முன்னேற்பாடுகள் மேற்கொண்டு மழை காலங்களில் அரசு பேருந்துகளில் ஓழுகுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.


இப்படிக்கு

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...