மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மவட்டம்
பொருள் நீலகிரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள்
ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும்.
அய்யா அவர்களுக்கு வணக்கம்
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டம். இங்கு போதிய மருத்துவர்கள்இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கூட சரியான சிகிச்சை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற எந்த வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை.
பலரும் தற்போது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி மற்றும் மாற்றுமுறை மருத்துவம் என்பனஉள்ளிட்ட பல்வேறு பெயர்களில் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறுகின்றனர். ஆனால் இவர்கள்உண்மையாளுமே மருத்துவம் படித்து சிகிச்சை அளிக்கின்றனரா? என்பதுடி கேள்வி குறியாக உள்ளது. பலமாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது உரிய படிப்பு இல்லாமல் மருத்துவர் என கூறி ஆங்கில மருத்துவம்மற்றும் மாற்றுமுறை மருத்துவம் என பலரும் சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுமுறை மருத்துவத்திற்கான படிப்பு, நர்சிங் படிப்பு என கூறிபோலி சான்றிதழ்கள் வழங்கியதும் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிட தக்கது.
இதுபோன்ற பலரும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உண்மையானவரா என தெரியமாலே சிகிச்சைபெறுகின்றனர். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலையில் தனியார்மருத்துவமனைகளுக்கு கொண்டாட்டமாக உள்ளது. தனியார் மருத்துவனைகளில் சிறப்பு மருத்துவர்வருவதாக கூறி அவ்வப்போது வெளி மாவட்டத்தில் இருந்து சிறப்பு மருத்துவர் என கூறி ஒருவரைவரவழைத்து அவரிடம் பரிசோதனை செய்ய கூடுதல் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். இதில்குறிப்பாக கர்ப்பினி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை ஸ்கேன் என கூறி மூன்று மடங்கு கட்டணம்வசூலிக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் ஸ்கேன்களுக்கு உரிய அறிக்கை தரப்படுவதில்லை. அரசுமருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பினிகளிடம் தனியார்மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க அறிவுரை வழங்கப்படுகின்றது. இதனால் தனியார் மருத்துவமனைகளில்பிரசவங்களும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது
தனியார் மருத்துவமனைகளில் வரும் மருத்துவர்கள் உண்மையாளும் சிறப்பு மருத்துவர்களா, அல்லதுஅவர்களும் சாதாரன மருத்துவம் படித்துவிட்டு இங்கு வரும்போது மட்டும் சிறப்பு மருத்துவர் என கூறி அதிககட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு மேற்க்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
தற்போது குழந்தை இல்லா தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். உணவு பழக்கம், போதை பழக்கம் எனபல்வேறு காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக்கி தருவதாக விளம்பரம்செய்து அதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதாக கூறியும் பன்மடங்கு கட்டணம்வசூலிக்கப்படுகின்றது. சமிபத்தில் கோவை திருப்பூர் பகுதிகளில் இதுபோன்று குழந்தை உண்டாக்கி தருவதாககூறி போலியாக சிகிச்சை அளித்தவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று போலிமருத்துவர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் இதுகுறித்து எந்தவித ஆய்வும் மேற்க்கொள்ளப்படாமல்இருப்பதால் இவர்கள் எந்தவித பயமுமின்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் காவல் துறை மருத்துவ துறை ஆகியனஇணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு இங்கு மருத்துவம் கிளினிக் நடத்துபவர்கள் உண்மையானமருத்துவர்களா என ஆய்வு செய்து போலி மருத்துவர்கள் இருப்பின் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்
No comments:
Post a Comment