மின்சார வாரியம் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் கோரிக்கைகள்

பெறுனர்

    திருமிகு. மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நீலகிரி வட்டம்,
உதகை.

    பொருள் : மின்சார வாரியம் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
    கோரிக்கைகள் அனுப்புதல் தொடர்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

மின்வாரியத்தின் தற்போதைய குறைகளை இதன் மூலம் சுட்டிகாட்டியுள்ளோம் அவற்றை சரிசெய்து தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மின்வாரியத்திற்கு கடந்த காலங்களில் இருந்த நற்பெயர் தற்போது மங்கி வருகின்றது. ஒரு சில மின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றனர்.   இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் நிலையை மின்வாரியம் மாற்றி விரைவான நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பந்தலூர் கூடலூர் பகுதியில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரை அலைகழிப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்படுகின்றது.  உரிய ஆவணம் கொடுத்தாலும் அது இல்லை இது இல்லை என கூறி திருப்பி அனுப்பபடுவதாகவும் உதகையில் இருந்து விண்ணப்பம் வரவில்லை எனவும் கூறி அலைகழிப்பதகவும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  உடனடியாக உரிய காலக்கொடுவுக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்இணைப்பு பெயர் மாற்றத்திற்கும் அலைகழிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.  மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் பெறவே இவ்வாறு அலைகழிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும்.

மின் இணைப்பு பெற செலுத்த வேண்டிய கட்டணம் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான கட்டணம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் குறித்த தகவல்கள் அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் ஒட்டப்பட வேண்டும்.

மின்நுகர்வோர் குறை தீர்மன்றம் குறித்த தகவல் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,

நெலாக்கோட்டை அருகே கூவசோலை பகுதியில் மின் கம்பம் உடைந்துள்ளது.  இது குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.  விரைவில் மின்கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின்கம்பங்கள் பல சேதமடைந்துள்ளது இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுத்து மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவாலா திருவள்ளூவர் நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் சார்பில் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஏற்கனவே பந்தலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளரிடம் தகவல் ரிவிக்கப்பட்டது.  இது குறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் அப்பகுதி மின் அழுத்த குறைபாட்டினை சரிசெய்ய வேண்டும்.



புதிய மின் மீட்டரில் அதிக அளவு மின்அளவீடு காட்டுவதாக பரவலாக புகார்கள் வருகின்றது.  பழைய மீட்டரில் ரூ.600 வரை கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது புதிய மின் மீட்டர்களில் காட்டும் அளவிற்கு ரூபாய் 2,500 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். சிலர் வீடுகளுக்கு 100 ரூபாய்க்குள் கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் ஏற்படுவதால் மின் மீட்டரில் குறைபாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

கூடலூர் பந்தலூர் இரு உதவி மின் கோட்டங்களுக்கு தற்போது பெறுப்பு உதவி மின் கோட்ட பொறியாளரே உள்ளார்.  இதனால் மின் வினியோக பணி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது அதனால் இப்பகுதிக்கு காலியாக உள்ள மின் கோட்ட பொறியாளர் மற்றும் இதர பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்பாலா மரப்பாலம் புளியம்பாரை பகுதியில் சிறு மழை மற்றும் காற்றில் மின் தடை ஏற்படுகின்றது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றது.  மின் வினியோகம் பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இப்பகுதியில் மின் வழித்தடத்தில் மின் கம்பிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து சீரான மின் வினியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித்தடத்தில் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் வழித்தடங்கள், மின் கம்பங்கள் புதிதாக அமைக்கும்போது மின்வாரிய ஊழியர்கள் எளிதாக சென்று மின் வினியோக குறைபாடுகளை களையும் வகையில் மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதனால் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை எளிதில் விரைவில் சரிசெய்ய முடியும்.  மின் வழித்தடம் அமைக்கும்போதே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர பகுதிகளில் தற்போது பழைய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுகின்றது.  நகர பகுதியில் ஏற்படும் மின் தடைகளை உடனடியாக சரிசெய்ய உரிய நபர்கள் உள்ளனர் ஆனால் கிராம பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் சரிசெய்ய நகர பகுதியில் இருந்துதான் மின் ஊழியர்கள் வரவேண்டிய நிலை உள்ளது.  எனவே கிராம புற பகுதிகளில் ஏற்கனவே உள்ள பழைய கம்பிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுக்க முடியும்.

ஊர் மக்களிடம் முன்னரே தகவல் தெரிவித்தால் மின் கம்பங்களில் உள்ள செடிகொடிகளை அகற்றவோ, கம்பிகளில் உரசும் மரங்களை வெட்டவோ உதவுவார்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பகுதியில் மின் தடை ஏற்படும் போது மற்ற பகுதியில் மின் வினியோகம் அளிக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மின் பாரமரிப்பு பணி மேற்கொள்ளும் போது பணி மேற் கொள்ளும் பகுதியை தவிர மற்ற பகுதியில் மின் வினியோகம் செய்யலாம்.

மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது முன்கூட்டியே மக்களுக்கு செய்திதாள்களில் தகவல் தெரிவிக்கலாம் மின்தடைசெய்யும் நாளுக்கு முன்னதாக தகவல் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.





பந்தலூர் கொளப்பள்ளி டேன்டீ 4வது டிவிசன் பகுதியில் மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிமுதல் 10 மணி வரையும் காலை 5 மணிமுதல் 7 மணிவரையும் மின் விளக்குகள் பயன்படுத்த முடியாமலும் இதர மின் உபயோக பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.  இப்பகுதியில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பகுதிக்கு புதிய டிராண்ஸ்பார்ம் அமைக்க வேண்டும்.

எருமாடு மணல் வயல் பகுதியில் தற்போது கப்பாலா பகுதியில் உள்ள டிராண்ஸ்பார்ம் மூலம் மின்சாரம் வழங்கபட்டு வருகின்றது.  இதனால் மணல்வயல் பகுதியில் மின்அழுத்தம் குறைவாக உள்ளது.  இப்பகுதிக்கு தனி டிராண்ஸ்பார்ம் அமைக்க வேண்டும்.

வெட்டுவாடி பகுதியிலும் மின் அழுத்த குறைபாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஏற்கனவே மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  இப்பகுதி மின்அழுத்த குறைபாட்டினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பனஞ்சிறா புலியனூர் பகுதியில் திரு நாராயணன் என்பவர் தோட்டம் வழியாக செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது.  இப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியினால் தேயிலை தோட்டத்தில் இழைபறித்து தூக்கி செல்ல இயலாத நிலை உள்ளதாகவும் இதனை சரிசெய்ய ஏற்கனவே புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலூர் இந்திரா நகர் மின் கம்பி செல்லும் வழித்தடம் பகுதியில் நீsவீ சர்ச் அருகில் மிக பெரிய வாகை மரம் காய்ந்து உள்ளது.  மழை காலத்தில் அந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.  இந்த மரம் பாரி ஆக்ரோ இரண்டாம் பிரிவு பகுதியில் உள்ளது.  இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இம்மரம் மழையில் சாய்ந்து விழுந்தால் இரண்டு மின் கம்பங்கள் பாதிப்பதோடு அப்பகுதியல் வசிக்கும் 40 குடும்பங்களின் மின் இணைப்பு பாதிக்கப்படுவதோடு மக்கள் குடிநீர் வினியோகமும் பாதிக்கும் என்பது குறிப்பிட தக்கது.


இப்படிக்கு           
சு. சிவசுப்பிரமணியம்.   தலைவர் 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...