பெறுனர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகை
பொருள் : பந்தலூரிலேயே இலவச மிக்சி கிரைண்டர் சரிசெய்யும் சேவை
மையத்தினை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அய்யா அவர்களுக்கு வணக்கம்
பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வந்த இலவச மிக்சி கிரைண்டர் பழுது நீக்கும் சேவை மையத்தினைகூடலூருக்கு மாற்றபப்பட உள்ளதாக அறிகின்றோம்.
இதனால் பந்தலூர் வட்டத்திற்குட்பட்ட சேரம்பாடி, உப்பட்டி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி,பாட்டவயல், குந்தலாடி, உப்பட்டி, பொன்னானி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் சிறிய பழுதுஏற்பட்டாலும் சுமார் 30 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள கூடலூர் சென்று பழுது நீக்க வேண்டியநிலை ஏற்படுகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் இரண்டு மூன்று நாட்கள் வேலை இழந்து இலவச மிக்சிகிரைண்டர்களின் பழுது சரிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாற்று ஏற்பாடுகள் செய்து பந்தலூரிலேயே இலவச மிக்சி கிரைண்டர் சரிசெய்யும் மையத்தினைதொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
No comments:
Post a Comment