போக்குவரத்து கழகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு உதகை மண்டல பொது மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசால் அங்கிகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்வைத்த கோரிக்கைகளும் பொது மேலாளர் நடராஜன் அளித்த பதில்களும்
கேள்வி: அரசு போருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். பல கண்ணாடிகளில் கிளிப்புகள் உடைந்துள்ளது அதனால் கண்ணாடி மேலே நிற்பதில்லை.
பதில் : தற்போது கூடுதல் கண்ணாடிகள் கோவையிலிருந்து பெற்று பேருந்துகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளது கண்ணாடிகள் உடைந்திருப்பின் அதனை குறிப்பிட்டு செல்லும் பட்சத்தில் உடனடியாக கண்ணாடிகள் பொருத்தி தரப்படும்.
கேள்வி : மழைகாலம் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. தற்போது பெய்யும் மழைக்கே பல பேருந்துகள் ஒழுகுகின்றன. விரைவில் தார்சீட்டுகள் ஒட்டவேண்டும். பக்கவாட்டில் ஒழுகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதில் : தற்போது தார்சீட்டுகள் ஒட்டும் பணி நடைபெறுகின்றது. பதிவு புதுபிக்க வரும் போருந்துகள் தார்சீட்டு ஒட்டியே அனுப்பபடுகின்றது.
கேள்வி : தொடர்ந்து ஓய்வின்றி ஒருசில ஓட்டுனர்கள் பேருந்தினை இயக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓய்வின்றி ஒட்டுனர்கள் பேருந்துகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே தொடர்ந்து ஓய்வின்றி ஓட்டுனர்கள் பேருந்தினை இயக்குவதை தடுக்க வேண்டும்.
பதில் : தற்போது ஓட்டுனர் பணியிடம் பெரும்பாலும் நிரப்பபட்டுவிட்டது. ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பதால் ஓட்டுனர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனினும் பயணிகள் பாதுகாப்பு கருதி ஓய்வின்றி ஓட்டுனர் இயக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
கேள்வி : இயக்கப்படும் பல பேருந்துகள் மிகவும் பழையனவாக உள்ளதால் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றது. இதனால் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் விரைவில் பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் பேருந்து இயக்குவதை உறுதிபடுத்த வேண்டும்.
பதில் : பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படும். புதிய பேருந்துகள் பெறபட்டவுடன் அரசின் ஒப்புதல் கிடைத்தபின் அனைத்து கிளைகளுக்கும் தலா 15 பேருந்துகள் வரை புதிய பேருந்துகள் வரை வழங்கப்பட உள்ளது. இதனால் பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்படும். பழுது ஏற்படும் பேருந்துகளை விரைவில் சா¢செய்து தர வசதியாக கூடலூர் கிளைக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கம் குறித்து அவ்வப்போது போன்மூலம் தகவல் பெற்று கண்காணிக்கப்படுகின்றது.
கேள்வி : அடிக்கடி டிக்கெட் கொடுக்கும் இயந்திரம் பழுதடைந்து விடுவதால் டிக்கெட் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. இதனால் சில நேரங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல இயலாத நிலையும் ஏற்படுகின்றது. பழைய டிக்கெட் இயந்திரங்களை மாற்ற வேண்டும்.
பதில் : படிப்படியாக புதிய டிக்கெட் இயந்திரம் வழங்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. உதகை கிளைகளில் புதிய டிக்கெட் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் கிளையில் பழைய டிக்கெட் இயந்திரங்கள் மாற்றும் பணி நடைபெறுகின்றது. அடுத்தகட்டமாக கூடலூர் கிளையில் டிக்கெட் இயந்திரங்கள் மாற்றப்படும். தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் டிக்கெட் இயந்திரங்கள் மாற்றபடும்.
கேள்வி : பந்தலூர் கூடலுர் வழித்தடத்திலும், கூடலூர் தேவர்சோலை பாட்டவயல் குந்தலாடி உப்பட்டி கூடலூர் வழித்தடத்திலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.
பதில் : தற்போது புதிய வழித்தடம் பேருந்து இயக்க இயலா. அரசின் சார்பில் கூடுதல் வழித்தடத்தில் இயக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் கூடுதல்பேருந்துகள் இயக்கப்படும்
புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன் முன்வைத்த கோரிக்கைகள் அதற்கான பதில்கள் விவரம்
கேள்வி : மேட்டுப்பாளையம் கோத்தகிரி இடையே இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேருந்தினை இயக்கியதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ஆய்வு செய்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பதில் : சம்பந்தபட்ட ஓட்டுனர் தற்போது தான் கோத்தகின்¢ கிளைக்கு மாற்றலாகி வந்துள்ளார். இவர் மலைப்பகுதி பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாததினால் மெதுவாக பேருந்தினை இயக்கியுள்ளார். அவர் தற்போது பயிற்சிக்கு அனுப்பபட்டுள்ளார்.
கேள்வி : பேருந்து நிறுத்தத்தில் கைகாட்டியும் பேருந்தினை நிறுத்தாமல் போவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும் பயணிகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. இதுபோன்று செயல்படும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதில் : பேருந்தினை கைகாட்டியும் நிறுத்தாமல் இயக்ககூடாது என பலமுறை ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட ஓட்டுனருக்கு விளக்கம் கேட்டு நோட்டிசு அனுப்பபடும் தொடர்ந்து இதுபோன்ற இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி : பேருந்துகளில் பக்கவாட்டில் உள்ள வழித்தட பெயர்களும் இயங்கும் வழித்தடமும் மாறி உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைவதோடு பயணிகள் நடத்தனர்களுக்கிடையே மோதல் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே பேருந்துகளில் பக்கவாட்டு வழித்தட பெயர்களை அழித்துவிட வேண்டும்.
பதில் : படிப்படியாக பேருந்துகளில் பக்கவாட்டு பெயர்களை அழிக்கப்பட்டு வருகின்றது. பேருந்து பதிவு புதுபிக்கும் போது வழித்தட பெயர்கள் அழிக்கப்படுகின்றது.
கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் முன் வைத்த கோரிக்கைகள்
கேள்வி : அரசு போருந்துகள் டிப்போவில் இருந்து வெளியில் வரும்போது சுத்தப்படுத்தி இயக்க வேண்டும்.
பதில் : நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் கண்காணிக்கப்படும்.
கேள்வி : கோத்தகிரி -- குன்னூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கட்டபெட்டு பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் இரவு நடையை தாமதமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதில் : ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஓய்வு அளிக்கும் நிலையை கருத்தில் கொண்டும், பயணிகள் நலனை கருத்தில் கொண்டும் சோதனை அடிப்படையில் இயக்கப்படும் யாருக்கும் பாதிப்பு இல்லாத பட்சத்தில் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேள்வி : ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படுவதாக அறிந்தோம் சிலர் இன்னும் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பதில் : அனைத்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கும் பயணிகளிடம் கணிவாக நடந்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிலர் இன்னும் மாறமல் இருக்கின்றனர். அவர்கள் மீது அவ்வப்போது புகார் பெறப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எழுத்துமூல புகார் இருந்தால் மட்டுமே தக்க நடவடிக்கை எடுக்க முடியும் பலரும் எழுத்துமூல புகார் அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிட தக்கது.
கூட்டத்தில் துணை மேலாளர் கனேசன், உதகை கிளை மேலாளர் பீமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment